வாசகர் வட்டம்

Wednesday, December 30, 2009

2010 இன் கரகாட்டம்-வீடியோ

Sunday, December 27, 2009

என் .எஸ் ,கிருஸ்ணனின் சங்கீத சிரிப்பு-வீடியோ

Saturday, December 19, 2009

Friday, December 18, 2009

வாழ்வின் அசைவு-வீடியோ

Passing Afternoon from Matthew McGlennen on Vimeo.

Wednesday, December 16, 2009

மூச்சு விடாமால் இசைக்கும் வயலின்-வீடியோ

Saturday, December 12, 2009

ரஜனி பற்றிய விவரணம்-வீடியோ




Sunday, December 06, 2009

MADRAS ஜ சுற்றி பார்க்க போனேன்-வீடியோ











Tuesday, December 01, 2009

சித்த வைத்தியம் பற்றிய ஒரு விவரணம் -வீடியோ













Tuesday, November 24, 2009

காயாத கானகத்தே-மேயாத மான் -டி.ஆர்.மகாலிங்கம்-வீடியோ

Monday, November 23, 2009

இது வேற்று கிரகத்து மனிதனுடையதா?

Saturday, November 21, 2009

உருது இசை மேதை நுஸ்ரத் அலி கான் அவர்களது பாடல்கள்-வீடியோ




மேலை உள்ளவை உருது இசை மேதை
நுஸ்ரத் அலி கான் அவர்களது பாடல்கள்

மேலோட்டமாகப் பார்த்தால் அவரை
இஸ்லாமிய பஜனைப் பாடல்களைப் பாடுபவராகத் தோன்றும்.
ஆனால் இந்தியாவினதும் மேலைத்தேயங்களினதும்
பல்வேறு இசைக் கோலங்களை அற்புதமாக இணைக்கும்
ஆற்றல் மிக்க ஒரு MUSIC COMPOSER அவர்

இதை கேட்கும் போது ஒரு வித சுகனூபாவத்தை தரும்.
போட்டு விட்டு அப்படியே படுத்திருக்கலாம் .
மனம் துள்ளுவதை உணர்வீர்கள்.

Friday, November 20, 2009

உணர்வுகள் .உறவுகள்-குமுதம் வீடியோ

Thursday, November 19, 2009

ஆறாவது உணர்வு-ஆச்சரிய பட வைக்கும் தொழில் நுட்பம் -வீடியோ



Tuesday, November 17, 2009

இது இதயத்தின் கதை-வீடியோ

Sunday, November 15, 2009

ஆங்கில பெண்மணி இப்படி என்று -யாரும் சொல்லாத வார்த்தை-வீடியோ

Thursday, November 12, 2009

தமிழ் வலை பதிவுகள்(blog) பற்றிய விவரணம்-வீடியோ



Tuesday, November 10, 2009

சமூக தொடர்பாடலில் ஒரு புரட்சியாம் -வீடியோ

Saturday, November 07, 2009

சீனத் தமிழில் - லூசுப்பெண்ணே -வீடியோ

Wednesday, October 28, 2009

திருமணம் பற்றி ரஜனியின் தத்துவமாம்-வீடியோ



Tuesday, October 27, 2009

நாலு நிமிடத்துக்குள் பிரமாதமான youtubeக்கள்- வீடியோ

Sunday, October 25, 2009

இந்த சிறுசுகளின் அசத்தலான தாண்டவம்-வீடியோ

1969 ஆண்டு இருந்த இணையம்-வீடியோ

Tuesday, October 20, 2009

ஜெயகாந்தனின் சிறுகதைகள் இணைய வடிவில்

Tamil Stories - Jayakanthan Sirukathaigal

Tuesday, October 13, 2009

GRAND EVENT-கமலஹாசன் -50-வீடியோ



















திரையுலகமே திரண்டு வந்து கமலை வாழ்த்திய விழா-2 -வீடியோ








Tuesday, October 06, 2009

மகிழ்ச்சி- வைரமுத்துவின் கவியரங்கம்-வீடியோ

Wednesday, September 30, 2009

Cat Stevens - பாட்டு கேட்போம்-வீடியோ

Wednesday, September 09, 2009

வலை பதிவர்கள்-புதிய எழுத்தாளர்கள்-பா.ராகவன் பேட்டி-வீடியோ

Monday, September 07, 2009

திரைப்படத்துக்கு இந்திய தேசிய விருது-காஞ்சிவரம்-வீடியோ



இந்தியாவில் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ''காஞ்சிவரம்'' என்னும் தமிழ் திரைப்படத்துக்கு இந்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இதனை பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது.






இந்த திரைபடத்தை பற்றி சிநேகதி தனது புளக்கில் கூறியதை பார்க்க
இங்கே அழுத்தவும்

Saturday, September 05, 2009

T20 CRICKET பார்க்க மைதானத்தில் புகுந்த நாய்-வீடியோ

Friday, September 04, 2009

அந்த நாள் ஞாபகத்தில் நடிகர்,நடிகைகள்-வீடியோ

Tuesday, September 01, 2009

கமலஹாசன் 50-CNN-IBN-விவரணம் -வீடியோ







Monday, August 31, 2009

YOUR CALL-கமலஹாசன்-NDTVயில்-வீடியோ

Tuesday, August 25, 2009

1958 இல் இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆர்- ஒலி வடிவம்




நன்றி-யாழ் சுதாகர்

Friday, August 21, 2009

கமலஹாசன் 50- வாழ்த்துக்கள்-வீடியோ






கமல் 50-ரசிகன் பட்டாளம்-வீடியோ







Monday, August 10, 2009

சுனாமி எச்சரிக்கையும்- இன்றைய பூமி அதிர்ச்சி-வீடியோ


அந்தமானில் நில நடுக்கம்



இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை

பிந்திய தகவலின் படி சுனாமி எச்சரிக்கையை மீள பெற்று கொண்டனர்

Friday, August 07, 2009

('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ


வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து அளியுங்கள்

படம் ஒரு வீட்டு தோட்டத்தில் தொடங்கிறது.புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்சில் வயதான அப்பாவும் மகனும் உட்காந்து இருக்கிறார்கள்.மகன் நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருக்கிறான்.அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம் புல்வெளியை பார்த்தபடி இருக்கிறார்.அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக்கிளையில் உட்காருகிறது.அதை அப்பா கவனமாக பார்க்கிறார்.குருவி தாவி பறக்கிறது.அது என்னவென்று மகனிடம் கேட்கறார்.அவன் குருவி என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்கிறான்.அவர் மறுபடியும் அதையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாக சொல்லுகிறான்.இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது.அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார்.மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவீப்பா. கு...ரு...வி'..என்று ஒவ்வோரு எழுத்தாக சொல்லுகிறான்.குருவி ஒரு கிளை நோக்கி பறக்கிறது.அப்பா மறுபடியும் கேட்கிறார...அது என்ன? மகன்..''குருவி..குருவி..எத்தனை தடவை சொல்லுவது? உங்களுக்கு அறிவு இல்லையா? என்று கோபத்தில் வெடிக்கிறான்.அப்பா மெளனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி ''உரக்கப்படி''என்கிறார்.அவன் சத்தமாக படிக்கிறார்.

என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்து போனேன்.அங்கே ஒரு குருவி வந்தது.அது என்ன என்று பையன் கேட்டான்.குருவி என்று பதில் சொன்னேன்.அவன் அதை உற்று பார்த்து விட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான்.நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன்.திருப்தி அடையாத என் மகன் 21 முறை அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.நான் எரிச்சல் அடையாமால் கோபம் கொள்ளாமால் ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டேன் என்று அந்த டைரியில் உள்ளது.


டைரியை படித்து முடித்த மகன்,அப்பா போல் ஏன் பொறுமையாகத் தன்னால் பதில சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல,அப்பாவின் தலையை கோதி அவரை கட்டி கொள்ளுகிறான்.அத்துடன் படம் முடிகிறது

முதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை.மாறாக ஆதங்கத்தில்,இயலாமாயில்,பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.

நன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி மேலுள்ளவை

Monday, August 03, 2009

பைத்தியக்கார இந்திய அரசியல்வாதிகள்-வீடியோ






அந்த கைக்கு உரியவர் கேரள கம்னியூஸ் கட்சி ஒன்றின் அரசியல் தலைவராமே....உண்மைங்களா?

எம்.ஆர்.ராதா-தமாஷாக சுட்டுக்கிட்டோம்-audio





Sunday, August 02, 2009

சும்மா தமாஷ் -வீடியோ

Friday, July 31, 2009

ஒரு பாடல்-வீடியோ

Monday, July 20, 2009

பத்மினியை நாட்டியத்தில் தோற்கடித்த எம்ஜிஆர்-வீடியோ


Padmini Bharatanatyam Dance - Click here for more blooper videos

Saturday, July 18, 2009

நாகேஷ் உடன் ஜெயலலிதா கூத்து -வீடியோ

Friday, July 17, 2009

மரம்தான் ,மறந்தான் எல்லாம் மரம்தான்..-வைரமுத்துவின கவிதை

Thursday, July 16, 2009

சுரதா யாழ்வாணன்-கனேடிய இலக்கிய தோட்ட விருதுகள்

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.


நன்றி- காலச்சுவடு

புலம் பெயர் தமிழ் இளைஞர்களும் -GANG கலாச்சாரமும்





கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஈளைஞன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு ரொறன்ரோவிலுள்ள தமிழ் சமூகத்திடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அங்கு 23 பேரடங்கிய மற்றொரு குழுவினரும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி பொலிஸ் சார்ஜன்ட் சாவாஸ்கிரியாகூ கூறியுள்ளார்.

இந்த இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள்