இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Wednesday, June 30, 2010
Tuesday, June 29, 2010
Monday, June 28, 2010
Friday, June 25, 2010
Thursday, June 24, 2010
Wednesday, June 23, 2010
Tuesday, June 22, 2010
Thursday, June 10, 2010
Wednesday, June 09, 2010
Haiti பூகம்ப நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது
ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டு அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கிய நேரடி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி, 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்நாட்டு அதிபர் மாளிகை உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்நிலையில் அதிபர் மாளிகை இடிந்து நொறுங்கியபோது, சிலர் உயிர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இக்காட்சிகளை வெளியிட்டுள்ள ஹைதி அரசு, நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த 10 லட்சம் மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
நன்றி -நக்கீரன்
Monday, June 07, 2010
அன்னமாக்கா பொன்னமாக்கா ஓடியாருங்கோ-வீடியோ
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி
அன்னம்மாக்கோய்.....அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......
கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி
அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ
தகவல் மூலம்: கானாபிரபா
Friday, June 04, 2010
ஒரு ஆணாதிக்கவாதியின் உளறல்-வீடியோ
ஒரு ஆணாதிக்காவாதியின் உளறலை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்
Tuesday, June 01, 2010
நீயா நானாவில் சாரு நிவேதிதாவின் மன்னிப்பும் பின் மறுப்பும் -வீடியோ
இந்த நிகழ்ச்சியில் சாருநிவேதிதாவும் எழுத்தாளர் பவாவும் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் நித்தியானந்தாவின் அந்த வீடியோவை பகிரங்க படுத்திய நித்தி-லெனினும் பங்கு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ...இந்த நிகழ்ச்சியில் கூனி குறுகி மன்னிப்பு கோரிய சாரு நிவேதிதா...மன்னிப்பு கேள் என்ற பாணியில் கேள்வியை செலுத்தி தன்னை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் .அந்த கட்டுரையை பார்க்க விரும்பின்
இங்கே அழுத்தவும்
Subscribe to:
Posts (Atom)