இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Saturday, April 30, 2011
Friday, April 29, 2011
Thursday, April 28, 2011
Sunday, April 24, 2011
ஹாட்லிக் கல்லூரியின் (UKகிளை)நாதவினோதம்(24.04.11)-வீடியோ
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது.
எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் ..தொடர்ந்து ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் லண்டன் ஜபிசி வானொலியில் அறிவிப்பாளருமான தினேஷ் தொடர்ந்து தனது மதுரக் குரலால் நெறிப்படுத்தினார்.மேலே உள்ள வீடியோ கிளிப் அந்த நிகழ்ச்சியின் இடைவேளையின் பொழுது எடுக்கப்பட்டது.
Thursday, April 21, 2011
துன்பம் துறந்தவன் நான் என்கிறார் -யாழ் சுதாகர்- விகடனில்
தமிழ்நாட்டூ சூரியன் எப்.எம் இரவு நேர அறிப்பாளர் யாழ் சுதாகரை பற்றி ஒரு கட்டுரையை கடைசியாக வந்த ஆனந்த விகடனில் கண்ணுற்றேன். ..யாழ் சுதாகர் எனது பால்ய கால்த்தில் எனக்கு தெரிந்த நண்பரில் ஒருவர். அறிவிப்பாளர் கவிஞர் கட்டுரையாளர் பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் மற்றும் தமிழ் எழுத்துரு விடயத்தில் ஒரு புரட்சியை செய்தவர்களில் ஒருவரான சுரதா யாழ்வாணனின் சகோதரருமாவார். இந்த கட்டுரையை வாசித்து முடித்தவுடன் என்னுள் ஏற்ப்பட்ட சோக இழை அகல நீண்ட நேரம் எடுத்தது. எனக்கு என்னுள் ஒரு கேள்வியும் எழுந்தது .மற்றவர்களை சந்தோசபடுத்துவர்களின் வாழ்க்கையின் ஏன் எப்போதுமே சோகம் சூழ்ந்து கொள்ளுகிறது என்று ..
யாழ் சுதாகர் சூரியன் பண்பலைத் தொகுப்பாளர் காதல் வயப்பட்டவர்களுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் இரவின் தனிமைப் பொழுதுகளைக் காதலால் நிரப்பி வரும் காற்றலை நண்பன். அனைவரின் சோகங்களுக்கும் மெல்லிசைத் தாலாட்டி ஆறுதல் அளிக்கும் யாழ் சுதாகரின் வாழ்க்கை அத்தியாயங்கள் அத்தனையும் சோகச் சுவடுகள் தான்
யாழ்ப்பாணம் எனது சொந்த ஊர் .தந்தை யாழ்வாணர் அங்கு பிரபலமான எழுத்தாளர்.யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராக பல வருடங்களாக இருந்தவர், அப்பொழுதெல்லாம் யாழ் தமிழர் வீடுகளில் இருக்கும் கிராம போன்களில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும் அவற்றை ஒரு தவம் போல கேட்டுக் கொண்டு இருப்பேன் இன்று நான் பண்பலை நிகழ்ச்சியில் பாடல்களை பற்றித் தரும் தகவல்களுக்கு அந்த கவனிப்புத்தான் காரணம் .வெடி குண்டுகள்,அலறல்கள் அழுகை ஒலிகள் பதுங்கு குழிகள், யுத்தம் ,,ரத்தம் எனக் கழிந்த இளமைக்காலம் சராசரி இளைஞக்கான சந்தோசங்கள் எதுவும் எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு வாய்க்கவில்லை. கொடுமைகளை கண்டு கொதித்தவர்கள் இயக்த்தில் சேர்ந்து கொண்டார்கள் நான் சேரவில்லை
1984 இல் மதுரை வந்தவன் அங்குள்ள தியேட்டர் கேன்டீன் ஒன்றில் வேலை பார்த்தேன் . பிறகு சென்னை வாசம் . பலப் பல பத்திரிகைகளில் பணி புரிந்தேன் .விளம்பரப் படங்களுக்கு பிண்ணணிக் குரல் கொடுத்தேன் எனது யாழ்ப்பாணத் தமிழைக் கேட்டு , '' இவன் வாயில் தர்ப்பை புல்லை வைக்க என்று ஒருவன் என் காது படவே கூறீனான்.
எந்த தமிழை வைத்து என்னை கேவலப்படுத்தனானோ அதே தமிழை வைத்து நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் . யாழ்சுதாகர் என்பவன் அப்போது தான் பிறந்தான். 2003 இல் சூரியன் பண்பலை துவக்கப்பட்டது முதல் இப்போது வரை இரவு நேரங்களில் மெல்லைசை ராகங்களை தொகுத்து வழங்கி வருகிறேன் என்றவர். சின்ன இடைவெளி விட்டு பேச தொடங்குகிறார் .என் மனைவி சாந்தி ,,மகன் அருண் பாலாஜீ . அவர்களை பார்க்கிறீர்களா என்று பக்கத்து அறைக்குள அழைத்துச் செல்லுகிறார்.
மலங்க மலங்க பார்த்தபடி அம்மாவின் மடியில் படுத்திருக்கிறான் அருண் பாலாஜி .மகனை தன் மடிக்கு இடம் மாற்றி அவனுடைய தலைமுடியை கோதியபடியே பேசுகிறார் . யாழ் சுதாகர். அருணுக்கு 15 வயசு .ஆனால் அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது . பிறந்தப்பே அவன் இதயத்தில் நாலு துவாரங்கள் இருந்தன . பிறந்த ஏழாவது மாசத்திலையே அவனுக்கு மேஜர் ஆபிரேசன் பண்ணினார்கள் . அதன் பக்கவிளைவின் காரணமாக சுய நினைவினை இழந்து விட்டான் .மூளை வளர்ச்சியும் இல்லாமால் போச்சு .சராசரி மனிதனுக்குரிய உணர்ச்சிகள் மற்றும் எதுவும் தெரியாமால் இருக்கிறான் .எதையும் உணரமுடியாமால் இருக்கிறான் . உடல் வளர்ச்சி மட்டும இருக்கு உள வளர்ச்சி ஏதுமில்லை..இப்ப எல்லாம் அப்பான்று வாயாரா அவன் என்னை கூப்பிடுவதை கேட்காமால் செத்து போயிடுவோனோன்று பயமாக இருக்கிறது. கண்ணீர் துளிர்க்கிறது யாழ் சுதாகருக்கு.
நான் ஒரு கவிதை சொல்லட்டுமா .கொஞ்சம் மனமும் சாந்தமாக இருக்கும் .மெலிதாக சிரித்துவிட்டு யாழ் தமிழில் கவிதை வாசிக்கிறார் சுதாகர்.
தன்னை துறந்தவன்
துன்பங்களை துறக்கிறான்
தன்னை திறந்தவன்
சொர்க்கத்தை திறக்கிறான்
Wednesday, April 20, 2011
Tuesday, April 19, 2011
Saturday, April 16, 2011
Wednesday, April 13, 2011
Friday, April 08, 2011
Thursday, April 07, 2011
Wednesday, April 06, 2011
Monday, April 04, 2011
Saturday, April 02, 2011
Friday, April 01, 2011
Subscribe to:
Posts (Atom)