இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Tuesday, May 31, 2011
Monday, May 30, 2011
Saturday, May 28, 2011
Wednesday, May 25, 2011
வைரமுத்து ..புரட்சி பெண்ணில்லைதான் ..அதுக்கு என்ன இப்ப?
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றிய வைரமுத்து புரட்சி பெண்ணோ அல்லது புதுமை பெண்ணோ அல்ல, சாதாரணமான யதார்த்தமான பெண் தான்..அங்கு பங்கு பற்றிய வைரமுத்து திரைபடங்களில் உருவகபடுத்துகின்ற பெண்ணொன்று புயலாகிறது என்ற புரட்சி பாணியில் இல்லை தான்.மேலும் தொடர்புசாதனங்களினால் உருவகபடுத்தபட்டு உரு கொண்டு இருக்கும் நகர் புற பெண்களின் தங்களுக்குள் கொண்டிருந்த பொய்மையான ஆளுமையை அதில் உடைத்து எறிந்து இருக்கிறார் அவ்வளவு தான் அந்த நிகழ்ச்சியை மட்டும் பொருத்தவரையில் .அதை விட்டு விட்டு நகர் புற பெண்கள் இழந்த பண்பாடு கலாச்சாரம் அடக்கம் வெட்கம் அச்சம் போன்றவற்றை வைரமுத்து அதில் காட்டிவிட்டார்.அதனால் இந்த வைரமுத்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறை படும் பதிவுகள் அண்மையில் வெளியிடப் ப்ட்டிருந்தன.நிலபுரவுத்துவ அம்சமான வெட்கத்தை காட்டி விட்டார் ,,,அதனால் நிலபுரவுத்து மிச்ச சொச்ச அம்சங்களை காவி திரியும் வைரமுத்தை இந்த உள்ளூர் இளைஞர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு இளைஞர்களும் தூக்கி கொண்டாடுகிறார்கள் ...இவர்களுக்கு நிலபுரவுத்து அம்சமான ஆணாதிதக்க மனோபவம் தான் இவர்களையெல்லாம் இப்படி எல்லாம் ரசித்து கொண்டாட வைக்குது இன்னொரு குற்றச்சாட்டு வைரமுத்துக்கு எதிராக வைக்கப்பட்ட எதிர்வினை பதிவில்.
அந்த வைரமுத்துவில் நிலபுரத்துவ அம்சங்கள் நிரம்பி வழியுது என்று சொல்ல வந்த இந்த so call பெண்ணிய வாதிகள் ,மேற்கத்தைய கலாச்சரம் கூட ஒரு கட்டத்தில் முற்போக்கானது அதை தாண்டிய ஏகாதிபத்திய நசிவு கலாச்சாரத்தின் விம்பங்களாக அங்கு தோற்றமளித்து அதற்கும் ஆதரவாக பேசியவர்களை பற்றி எதுவும் அந்த பதிவுகள் எதையும் கூறவில்லை என்பது நல்ல வேடிக்கை . இந்த so call பெண்ணிய கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் நீண்ட காலத்துக்கு முன்னே இடம் பெற்று இருந்தன ..பெண்ணியவாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த சமூக அமைப்பிற்க்குள்ளையே ஒட்டு போட்டு சரி செய்து விட முடியும் என்று. ஆனால் வலுவான சரியான புரட்சிகர அரசியலுடன் இணைத்து ஒரு சமூக மாற்றத்துடன் தான் அவர்களின் முற்று முழுதான விடுதலையை பெற முடியும். ஆணாதிக்க சிந்தனை தனிப்பட்ட ஆணின் சிந்தனை அல்ல சமூக அமைப்பின் சிந்தனை ...இந்த விசயத்தை நீட்டி பேச விரும்பவில்லை இவை பற்றி நீண்ட காலமாக பலராலும் பேசிய விடயத்தை திரும்ப விவாதமாக மீண்டும் உருவாக்கி செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிக்க விரும்பவில்லை .
கறுப்பு வெள்ளை அழகு எல்லாம் இந்த மீடியாக்கள் மற்றும் ஆதிக்க சக்திகளின் உருவாக்கம்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் வாசித்த ஞாபகம் ஒரு கிராமத்து தேநீர் கடை ஒன்றின் வாங்கில் சிலர் அமர்ந்து இருக்கிறனர் அப்பொழுது நகர்புற இளம் பெண் ஒருத்தி வந்து பஸ் இலிருந்து இறங்குகிறா .அந்த வாங்கிலிருந்த ஒருவன் கூறுகிறான் மற்றவனிடம் பட்டணத்து பெண்கள் எல்லாம் எவ்வறவு அழகா சோக்கா இருக்கிறாங்கள் என்று ..அதுக்கு மற்றவன் கூறுகிறான் ,,,,எதுவுமே பார்க்க நல்லாகத்தான் இருக்கும் குட்டியிலே ....ஆடு மாடு கோழி இளமையில் வடிவாகத்தான் இருக்கு
அந்த வைரமுத்துவின் வீடியோவில் அழகு வெட்கம் வெகுளித்தனம் கறுப்பு எல்லாவற்றை பார்த்து எதிர்வினையாற்றிய பதிவர் அவர் அந்த வீடியோவில் தொடர்புசாதனங்களினால் வெளிச்சத்துக்கு கொண்டு வராத எங்கோ ஒரு மூலையில் வெளிச்சத்துக்கு வரமுடியாத பெண்களின் பிரநிதி ஒருவர் அந்த நிகழ்ச்சியை பொறுத்து வரையில் வெளிச்சமாக தெரியிறா என்பதை பார்க்க தவறி விடுகிறார்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார் என்று கேட்கலாம்...வராத படிப்பை வா வா என்று கூறுகிறார்கள் எனக்கு பேச வருகுது பேச விடமாட்டார்களே என்ற ஆதங்க படுகிறார்....என்னத்துக்கு maths பாடமாக எடுத்தேன் என்று தனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார் ....கிராம்த்துக்கு ஒரு வழிகாட்டல் இல்லை என்று ஒரு பொது குரலாக ஏங்குகிறார்...பிரிட்டிஸார் தங்களின் குமாஸ்தா தேவைகளுக்கு ஏற்பட்ட காலனித்துவ கல்விமுறையினால் ஏற்படும் சிக்கல் அது தனி ஒரு பெண்ணை அழுத்தி பாதிக்கப்படுவது தொனிப்பதை காணவில்லையா .. சமூக எதிர்பார்ப்பை நிறேவற்றுவதற்க்கு அல்லது பணம் உழைப்பதையே குறியாக கொண்டு பெற்றோர்கள் அவர் மேலை திணித்து அவருடைய மற்றைய தனிப்பட் திறமையை மழங்கடிப்பதை கூறுவதை காணவில்லையா?
நகர்புற ஒரு பெண்ணின் உடையை பார்த்து கூறுகிறார் நம்ம ஊரிலை என்றால் கொன்னே போடுவாங்கள் ...அரை நிலவுடமை மிச்ச சொச்ச தாக்கத்தைத்தானே கூறுகிறார்
வியாபார டிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் உங்களுக்கு விவாத வெளிப்பாடாக ஒரு புரட்சி புண்ணாக்கு எல்லாம் கை ஓங்க விட்டுடுவாங்கள் என்று எதிர்பார்ப்பது எல்லாம் கேலி கூத்தாகும் ..அந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஏதாவது முற்போக்கு அம்சங்களால் ஏற்படும் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அக மகிழ்வு தான் பலருக்கு அந்த வைரமுத்துவின் வீடியோவில் பிடித்ததுக்கு காரணம் என நினைக்கிறேன்( இந்த அக மகிழ்வு எல்லாம் மத்திய தரவர்க்க குணாம்சம் அல்லது குட்டி பூர்ஷ்வா சிந்தனை என்று அந்த பொல்லு மூலம் அடிக்க வருவீங்கள் என்றால் ..ஒன்று தான் இப்ப சொல்ல முடியும் வடிவேலு பாணியில் சொல்லுவது என்றால் ..ரொம்ப அடிச்சீங்கள் என்றால் தாங்க மாட்டேன் ..அழுது விடுவேன்
வைரமுத்து நீயா நானாவில் பேசிய விடயங்கள் பற்றிய தொகுப்பை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்
வைரமுத்து வீடியோவுக்கு எதிர் வினையாற்றிய பதிவிரின் இணைப்பை பார்க்க
Saturday, May 21, 2011
Thursday, May 19, 2011
Monday, May 16, 2011
Sunday, May 15, 2011
பொம்பளை வைரமுத்து -நீயா நானா நிகழ்ச்சியில்
இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றி பேசிய கிராமத்து பொண்ணு வைரமுத்துவை அங்கு பங்கு பற்றிய பலருக்கும் பிடித்திருந்தது. அதன் மூலம் அவர்கள் வழங்கும் பரிசையும் பெற்றார். அங்கு பங்குபெற்றிய வேறு ஒருவருக்கும் பரிசு வழங்கும் போது பரிசு வழங்கும் தகுதியையும் பெற்றார் . அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது ..இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அந்த பொம்பளை வைரமுத்துவை கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் ..அந்த கிராமத்து பொண்ணு வைரமுத்துக்கு ...வாழ்த்துக்கள்
Saturday, May 14, 2011
Friday, May 13, 2011
Tuesday, May 10, 2011
தாஜ்மஹாலை ஜால வித்தை மூலம் இல்லாமால் செய்த பொழுது -வீடியோ
There was "nothing supernatural" in this vanishing act, he said. "This is all science, the science of controlling the mind and the willpower to create a psychic balance with the environment."
இவை பற்றி பிபிசியில் கூறியவற்றை பார்க்க இங்கே அழுத்தவும்
Sunday, May 08, 2011
Saturday, May 07, 2011
Friday, May 06, 2011
Thursday, May 05, 2011
Monday, May 02, 2011
Subscribe to:
Posts (Atom)