வாசகர் வட்டம்

Wednesday, April 30, 2014

இன்னிசை பாடி வரும்,,,, AGENCYகாரானால் ஏமாற்றப்பட்டவர்-வீடியோ

Monday, April 28, 2014

கனடா தமிழ் பொண்ணு சிணுங்காதே....-வீடியோ

Saturday, April 26, 2014

காலனித்துவ காலத்து இலங்கை ..அரிதான புகைபடங்கள்-வீடியோ

Friday, April 25, 2014

பத்து நிமிடத்தில்...நூறு வருடங்கள் (1911-2011)-வீடியோ

Tuesday, April 22, 2014

பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்கவும் நடிகை லட்சுமியும் இலங்கையின் ரம்மியமான சூழலில்-வீடியோ

மேலே உள்ள முதலாவது வீடியோ துண்டத்தில் இருக்கும் காட்சி இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பான நங்கூரம் படத்துக்கானது

 இலங்கையின் பிரபல சிங்கள நடிகர் விஜயகுமாரதுங்காவும் தென்னிந்திய பிரபல நடிகை லட்சுமியும்

 விஜயகுமாரதுங்கா ,,முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திராக பண்டாரநாயக்காவின் கணவர் ஆவார்

 இரண்டாவது வீடியோ துண்டத்தில் இருக்கும் காட்சி எம்ஜிஆரூக்காக பிரபல ஹிந்தி பாடகர் மொகமட் ரபி பாடும் பாடல்

Saturday, April 19, 2014

மேடைக்கு வந்த கல்கியின் பொன்னியின் செல்வன்-வீடியோ

படித்ததில் பிடித்தது-எழுத்தாளர் ஜெயமோகன்-வீடியோ

Friday, April 18, 2014

RARE -1970 களில் ஒளிபரப்பிய செய்தி தொகுப்பு -வீடியோ

இந்த செய்தி தொகுப்பின் விளையாட்டு பகுதியில் 70 களில் இந்தியாவுக்கும் இங்கிலாந்து நடந்த இரண்டாவது கிரிக்கட் டெஸ்ட் பற்றிய சுருக்க தொகுப்பு முக்கிய பங்குவகிக்கிறது. அந்த கால இந்திய கிரிக்கட் நட்சத்திரங்களான கவாஸ்கர் ,விஸ்வநாத் , பேடி சந்திரசேகர் போன்றோர் விளையாடுவதை காணலாம் இந்த வீடியோவில்

Thursday, April 17, 2014

புத்தி கெட்ட இராசரெல்லாம் எம்மாடியோ...எனக்கு பூவுகொண்டு வாராயிலே எம்மாடியோ-வீடியோ

தமிழகத்து நாட்டுபுற பாடல்களை அந்த கால பேராசிரியர் வானமாமலை அவர்கள் சேகரித்து வைத்து இருந்தார்கள் என்று அறிந்திருந்தேன் . அந்த பாடல்களின் மூலத்தினை திரைபடங்களில் கூட இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் பாவித்திருக்கிறார்கள். மேலே உள்ள நாட்டு புற பாடல்களை பொதிகை டிவிக்காக அழகாக பாடுபவர் சக வலைபதிவரும் புதுச்சேரி பேராசிரியருமான முனைவர் மு இளங்கோவன் அவர்கள். நாற்று பாடல்கள் நன்றாகவே இருக்கிறது கேட்க தவறாதீர்கள்

Tuesday, April 15, 2014

கனடிய இளம் தமிழ் பெண்ணின் குமறல்-What the hell are these guys doing?-வீடியோ

Sunday, April 13, 2014

ஜெர்மனிய தமிழ் சிறுமியின் பாராட்டு பெற்ற LA ..LA..LA..LA..-

Saturday, April 12, 2014

சிகரம் தொட்ட பெண்கள் -விருது வைபவம்-வீடியோ

Thursday, April 10, 2014

1954 இல் நவரத்தினசாமியின் பேட்டி- வல்வையிலிருந்து வேதாரண்யம் வரை-வீடியோ

வல்வெட்டி துறையிலிருந்து வேதாரணியம் வரை உள்ள பாக்குநீரிணை கடல் பகுதியை முதல் முதல் 1954 ஆண்டு கடந்தவர் தான் இந்த நவரத்தினசாமி என்பவர் ,


 இவர் இலங்கை வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டி மேலே உள்ள லிங்கில் உள்ளது ,


அவரே பற்றிய மேலதிக தகவல்கள் தேவைபடின் கீழ் உள்ள லிங்கில் அழுத்தி பார்க்கவும் http://www.vadamarachi.com/articles/sports/navaratnasamy.pdf

Wednesday, April 09, 2014

1967-இலங்கை தவில் மேதைகள் தட்சாணமூர்த்தியும் பழனிமலையும் சேர்ந்து முழங்கும்-வீடியோ

70 களில் யாழின் பசுமை நிறைந்த நினைவுகள்- ஞாபகம் வருதே என்கிறார் ஒரு பழைய மாணவன்-வீடியோ

 70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது.

அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது.

மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது...

.சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது

 ...இந்த புகைபடங்களை தொகுத்து வீடியோ வாக்கின அந்த மத்திய கல்லூரி பழைய மாணவனுக்கு நன்றிகள்


இதில்  கிரிக்கட் வீரர்  மித்தரகுமார் ..இப்போதைய நாடு கடந்த தமிழீழ தலைவர் முன்னாள் யாழ் மேயர் விஸ்வநாதனின் மகன் உருத்திரகுமாரின்  போன்ற பல இப்போதைய பிரபலங்களின புகைபடங்களுமி இதில் இருக்கின்றன

Tuesday, April 08, 2014

சீர்காழி கோவிந்தராஜன்-70 களில் இலங்கை புன்னாலை கட்டுவனில் -வீடியோ

Sunday, April 06, 2014

20-20 கிரிக்கட் மட்ச் தான் ..ஆனால் இது நட்சத்திர கிரிக்கட் விளையாட்டு-வீடியோ

இப்பொழுது கிரிக்கட் ஜுரம் எங்கும் அடித்து கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கும் தொற்றி விட்டதோ என்னவோ எனக்கும் எழுத வேண்டி எண்ணம் வந்திருக்கு. வெள்ளைக்காரன் இந்திய உபகண்டத்துக்கு சொத்தாக கொடுத்து போன இந்த சோம்பேறி விளையாட்டு என்று கூறிக் கொண்டாலும் இதனோடு பயணித்து கொண்டு தான் இருந்திருக்கிறோம் முதலில் வயல் வெளிகளில் அமெரிக்க பாணியிலான கிரிக்கட் போல மூன்று கல்லை வைத்து முறைப்படி பந்தை வீசாமால் விளையாடி கொண்டிருந்து இருக்கிறோம்.பின் இப்பிடி இல்லையப்பா கிரிக்கட் என்று ஒன்று இருக்கு என்று அறிந்து கொண்டோம் முன்னாள் ஹாட்லி கல்லூரி பாடசாலை அதிபர் ராஜதுரை அவர்கள் பாடசாலைகளில் நடைபெறும் கிரிக்கட் போட்டியில் சற்குணசீலன் என்ற மாணவன் நூறு அடித்து விட்டான் என்ற சந்தோசத்தில் அடுத்த நாள் பள்ளிக்கே லீவு விட்டு கொண்டாடினார்...கிரிக்கட் திறமையாக விளையாடுபவர்களை ஹீரோ அந்தஸ்த்தில் கொண்டாடு கலச்சாரம் படிக்கும் காலத்திலையே ஊட்டப்பட்டு இருப்பதால் அதை பற்றி விரும்பியோ விரும்பாமாலோ தொடந்து அதை பற்றி பேசி கொண்டு தான் இருந்திருக்கிறோம்

. இலங்கை உத்தியோக பூர்வமாக சர்வதேச கிரிக்கட் போட்டிக்கு தேர்வாக முந்தி வெஸ்ட இண்டீஸ் ,இந்தியா ,நியூசிலந்து இங்கிலாந்து அவுஸ்திரேலியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டும் தான் ..ஆடிக்கொண்டு இருந்திருக்கு என்று நினைக்கிறன் தமிழர்களை இலங்கை அணியில் சேர்க்காத மாற்றந்தாய் மனப்பான்மையும் அந்த கால கள அரசியல் நிலமையும் பொதுவாக இந்திய அணியை தங்கள் ஆதரவு அணியாக கொண்ட ரசிகர் கூட்டம் இருக்கும்...இலங்கை அணியில் றோயல் டயஸ் மெண்டிஸ் இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று நிநினைக்கிறன் . அதே கால கட்டத்தில் இந்தியா அணியில் கவாஸ்கர் ,அவரது மைத்துனர் விஸ்வநாத் அப்பொழுது தான் அறிமுகமான ஆறாவதோ ஏழோவதோ வந்து கலக்கும் ஓல் றவுண்டர் கபில்தேவ் ஆதர்ச நாயகர்களாக இருந்தார்கள் .

 இந்தியாவில் இந்த கிரிக்கட் நடந்தால் பம்பாய் , டெல்லி ,கல்கத்தா பெங்களூர் சென்னை ,கான்பூர் போன்ற நகரங்களில் நடக்கும் , இந்த நிகழ்ச்சிகளை ஆகாஸ்வாணி நேரடி அஞ்சலி செய்யும் .என்ன கொடுமை என்னவென்றால் அரை மணித்தியாலத்துக்கு ஒரு முறை ஆங்கிலத்தில் இருந்து வர்ணனை ஹிந்திக்கு தாவி விடும், ஹிந்தியில் நடக்கும் பொழுது நேர்முக வர்ணணையாளிரின் ஏற்ற இறக்கத்திலும் சனங்களின் கோரஸ் சத்த்த்திலும் தான் ஏதோ நடந்து விட்டது ஊகித்து பின்னர் ஏக் தோ தீன் சாரங்கலியே என்ன கோதோரி எல்லாம் தெரிய விளங்க கத்து கொண்டோம் .


ஆனால் சென்னையில் கிரிக்கட் நடை பெறும் பொழுது தான் கொஞ்சம் சந்தோசமாக இருக்கும் முழுக்க முழுக்க தமிழில் வர்ண்ணை இருக்கும் ..இப்பவும் ஞாபகம் இருக்கிறது சேப்பாக்க மைதானத்தில் நடக்கும் கிரிக்கட்டை மணி என்ற வர்ண்ணை யாளர் கர்ச்சித்து கொண்டு இருப்பார் ஹரியானா பெற்றெடுத்த சிங்கம் கபில் தேவ் வால்ராஜா முனையிலிருந்து பந்து வீசுகிறார் என்று கொண்டு.

  வெங்கட் ராகவன் கப்டினாக இருந்த பொழுது என்று நினைக்கிறேன் மேற்கிந்தியதீவு டீம் சென்னை வந்த பொழுது அந்த டீமில் ஒரு தமிழர் விளையாடி இருந்தார்.அவரால் தமிழை முழுமையாக பேசமுடியாமால் இருந்த பொழுதும் அவரது சுத்த தமிழ் பெயராக இருந்த்து , கரும்பு தோட்டத்து வேலை செய்வதற்க்கு பிரிட்டிசரால் அழைத்து செல்லப்பட்டவர்கள் அவரின் மூதாதையினர்கள். அவரது பெயர் மறந்து விட்டது .மேற்கிந்திய டீமுக்கு காளிசரண் கப்டீனாக இருந்த பொழுது அவர் விக்கட் கீப்பராக வந்திருக்க வேணும் .அவரது படத்தை விகடனோ குமுதம் அட்டைபடமாக போட்டு பிரசுரித்து கெளவிரவித்த்து என்று நினைக்கிறன் .


 டெஸ்மச் நடக்கும் ஜந்து நாட்களில் காவஸ்கர் சொட்டி சொட்டி நூறை தொட்டும் தொடாமால் இருக்க அவரோட கூட வரும் ஓபினிங் மட்டை வீரர் வெங்கஸ்கார் சொட்டி கொட்டிருக்க ..விஸ்வநாத் ஒரு போர்முக்கு வந்திட்டால் அவுட்டாக்கிறது கஸ்டம் நாலு நாலாக வெழுத்து கொண்டு இருப்பார் இவை மூன்று பேருமே ஜந்துநாள் விளையாட்டில் மூன்று நாளை எடுத்து விடுவினம்... அதே கால கட்டத்தில் இங்கிலாந்தின் போத்தம் அவுஸ்திரேலியாவின் போர்டர் பாகிஸ்தானின் இம்ரான் கான் போன்றோர் ஆதர்ச நாயகர்களாகிருப்பர்


 யாழ் மத்திய கல்லூரி கிரிக்கட் வீரர் நகுலேஸ்வரனின் பந்து வீச்சு முறையை பாகிஸ்தான் வீரர் வாசிம் விக்ரமோடு ஒப்பிட்டு பேசுவர் , ஹாட்லி கல்லூரி மனோகரதாஸ் வசந்த நாதன் போன்றோர் தேசிய மட்டத்தில் விளையாட கூடியவர்கள் என்று பேச்சு அடிபட்டது அத்துடன் தமிழர்கள் என்றதாலையே புறக்கணிக்கபட்டதாக கூறுவர்...


 இப்ப கிரிக்கட்டே பார்த்து கனகாலம் ....இப்ப யார் இந்தியா கப்டின் இலங்கை கப்டின் உந்த கிரிக்கட் விளையாடுற நாடுகளின் கப்டின் ஒன்றும் தெரியாது ....


இப்ப எத்தனை நாடுகள் விளையாடுகுது சர்வதேச கிரிக்கட் போட்டியிலை? கனக்க இருக்குமென்று நினைக்கிறன்



 பிரபலங்கள் சிலவேளை ஸ்டார் கிரிக்கட் விளையாடுவினம் சிவாஜி ஜெமினி ஆட்கள் கூட விளையாடி இருக்கினம் ..அப்படி ஒரு ஸ்டார் கிரிக்கட் வீடியோ ஒன்று தான் கீழே இருக்கிறது https://www.youtube.com/watch?v=ql5ge_5bXcs

Thursday, April 03, 2014

இந்த ''ராஜஹம்ஸமே" சாதாரண தொழிலாள பெண்ணினது--வீடியோ

சமையலறையில் இந்த கைகுழந்தையை தூக்கி கொண்டு சந்திரலேகா என்ற பெண் சாதரணமாக பாடிய இந்த பாடலை ஒரு மொபலில் இவரது மைத்துனர் எடுத்து பரவலாக்கிய பின் சினிமா வாய்ப்பு தேடி வந்து இன்று மலையாள உலகில் பிரபலமாகி விட்டார் ... கீழ் இருக்கும் வீடியோ அவரை தேடி வந்த முதல் மலையாள படத்தில் பாடிய பாடல் கீழே நடிகர் தியாகராஜன் சந்திரலேகாவை தமிழிலும் அறிமுகபடுத்துகிறார் http://thillaiakathuchronicles.blogspot.com/2013_10_13_archive.html

Tuesday, April 01, 2014

நாசர் Vs மிஷ்கின் --குரு Vs சிஷ்யன்-வீடியோ