இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Monday, October 27, 2014
Friday, October 24, 2014
மிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.
இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார்.
சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
நன்றி -உதயன்
சேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ
சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த
பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.
பரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -
நன்றி-தினகரன்
பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.
பரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -
நன்றி-தினகரன்
Thursday, October 23, 2014
Tuesday, October 21, 2014
அல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீடியோ
பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,
திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.
"வேருக்கு நீர்', "கரிப்பு மணிகள்', "குறிஞ்சி தேன்', "அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். "சாகித்ய அகாதெமி', "சரஸ்வதி சம்மான்', "பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
நன்றி -தினமணி
Sunday, October 19, 2014
யாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ
யாழ்தேவியில் காதல் செய்தால் என்ற பாடலில் முடிவில் குரல் வடிவில் வரும் வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர்....
பலரும் நன்கு அறிந்த தமிழ் நாட்டு சூரியன் எப்.எம் இரவு நேர வானொலி அறிவிப்பாளராகும்
இவர் இணைய தமிழ் எழுத்து உரு சம்பந்தமாக புரட்சி செய்த சுரதா தமிழ்வாணனின் சகோதரர் ஆவார்..பால்ய காலத்தில் பழகிய எனக்கும் தெரிந்த நண்பரும் கூட..
.இந்த பாடலை முன்பு ஒலி வடிவத்தில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது தான் ஒளிவடிவத்தில் இந்த பாடலை பார்க்கிறேன் .அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
பலரும் நன்கு அறிந்த தமிழ் நாட்டு சூரியன் எப்.எம் இரவு நேர வானொலி அறிவிப்பாளராகும்
இவர் இணைய தமிழ் எழுத்து உரு சம்பந்தமாக புரட்சி செய்த சுரதா தமிழ்வாணனின் சகோதரர் ஆவார்..பால்ய காலத்தில் பழகிய எனக்கும் தெரிந்த நண்பரும் கூட..
.இந்த பாடலை முன்பு ஒலி வடிவத்தில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது தான் ஒளிவடிவத்தில் இந்த பாடலை பார்க்கிறேன் .அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
Saturday, October 18, 2014
Thursday, October 16, 2014
லண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ
இந்த பேட்டியை பார்க்கும் பொழுது நல்ல தெளிவாகவும் கொஞ்சம் விவரமாகவும் தன்னடகத்துடனும் தானே பேசுகிறார் .. .
இடையிலை என்ன நடந்தது உந்த ஆளுக்கு ...சில வேளை .அரசியலுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் லூசாயிட்டாரோ?
2002 ஆண்டளவில் சென்னையில் இருந்து லண்டன் நான் வந்த பொழுது அந்த விமானத்தில் இவரும் பயணம் செய்திருந்தார் ஆனால் அவர் முதல் வகுப்பில் ..
மீனபாக்கம் விமானநிலையத்துக்குள் விமானம் வரை அவரை ராஜமரியாதையுடன் அழைத்து சென்றனர் அங்குள்ள அதிகாரிகள்
லண்டன் விமானநிலையத்தின் குடிவரவு மேசைக்கு நாங்கள் போகும் வழியில் அவரும் அவரது செயலாளரும் எதிர்பக்கமாக அங்குள்ள அறிவுபலகைகள் பார்த்த படி பட்டணத்தில் தவறப்பட்ட குழந்தைகள் போன்று ஏமாலந்தி கொண்டு வந்திருந்தார்கள்..
நான் ஒரு அறிமுக சிரிப்பை செலுத்தி கூடியும் அவர் கண்டு கொள்ளவில்லை .அந்த அளவுக்கு எதையோ தவற விட்ட தனித்துவிடப்பட்ட நிலையில் படபடப்புடன் இருந்தார்கள்
Friday, October 10, 2014
Tuesday, October 07, 2014
Friday, October 03, 2014
Wednesday, October 01, 2014
Subscribe to:
Posts (Atom)