வாசகர் வட்டம்

Wednesday, April 29, 2015

இணையத்தில் வலம் வரும் கலக்கல் DUBSMASH க்கள்-வீடியோ

Tuesday, April 21, 2015

எம்ஜீஆர் தோட்டத்துக்கு கூப்பிட்டு தோலுரிக்கிறேன் என்றாரு.. இங்கே வா உனக்கு நான் உரிக்கிறன் என்றவன் -ஜெயகாந்தன்-வீடியோ

எம்ஜீஆர் தனக்கு விரும்பாத எதிரிகளை தனது எம்ஜீஆர் தோட்டத்து வீட்டறையில் யாரும் அறியாவண்ணம் செம பூஜை வழங்குவார் என அரசல் புரசலாக செய்திகள் கிசு கிசுக்குள் வதந்திகள் அப்பொழுது பரவி இருந்தன.

 அந்த பூஜை வாங்கியவர்களில் சில பிரபலங்கள் அடங்குபவர் என்று கூறுவர். சந்திரபாபு, பழைய நடிகை லதா பிரச்சனையில் ரஜனிகாந்த்,..தண்ணீர் தண்ணீர் திரைபடத்தின் முடிவு காரணமாக பாலசந்தர் .


 எழுத்தாளர் ஜெயகாந்தன் எம்ஜீஆரை கரு பொருளாக வைத்து சினிமாவுக்கு போன சித்தாளு நாவல் எழுதிய பொழுது ஜெயகாந்தனுக்கும் எம்ஜிஆரால் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது என்பது இந்த வீடியோவில் டைரக்டர் கெளதமன் பேச்சில் இருந்து தெரிகிறது

குமுதம் பிரபல்யபடுத்த மறந்த முத்து ......இந்த வைரமுத்து -வீடியோ





கீழே உள்ளவை எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் முகநூலில் எழுதியவை

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்

.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்

.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!


அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

Friday, April 17, 2015

Google - கையால் தமிழில் இனிமேல் எழுதலாம்-வீடியோ

 தமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது தமிழ் கீ போர்டு இல் டைப் பண்ணுவது எளிதாக இல்லை என்று. அந்த குறையைப் போக்குவதற்காக கூகிள் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் வெளியிட்டு இருக்காங்க.

நான் கொஞ்சம் Super Excited ஆயிட்டேன், இப்படி ஒரு கீ போர்டு வெளியிட்டு இருக்காங்க அதுவும் 82 மொழிகளுக்கு என்ற உடன் தமிழ் இருக்கனும் கடவுளே ன்னு டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் செஞ்சா தமிழ் இருக்கு மக்களே. இனி சும்மா மொக்கை காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க.


கூகிள் handwriting input இன்ஸ்டால் செஞ்சு தமிழில் எழுதுங்க, உபயோகித்த வரை 90% துல்லியமாக இருக்கு. பயன்படுத்த எளிதாகவும் இருக்கு.

Thursday, April 16, 2015

மாயா யதார்த்தம் (magical realism) இலக்கியத்தில் என்பது பற்றி -வீடியோ

எழுத்தாளர் புதுமைபித்தன் 1930 களிலையே இந்த மாயா யதார்த்தத்தை தனது சிறுகதையில் செய்து காட்டி இருக்கிறார்,,மேலே பேச்சாளர் சொன்னது போல கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையில் . அந்த கதையை வாசிக்க விரும்பின் கீழே

கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையை வாசிக்க இங்கே அழுத்தவும்l


 புதமைபித்தனின் இன்னொரு கதையான கபாடபுரம் என்ற கதையும் அந்த வகைப்பட்டது என்பது எனது அபிப்பிராயம் அந்த கதையை வாசிக்க விரும்பின்

கபாடபுரம் என்ற கதையை வாசிக்க விரும்பின் இங்கே அழுத்தவும்



Wednesday, April 15, 2015

இலங்கை பொப் பாடல்கள்- சோளம் சோறு பொங்கட்டுமா...சொல்லுங்க மருமகனே...-வீடியோ

JUST FOR LAUGHS- சும்மா போய்யா ..அங்கால் பக்கம் வாறன் -வீடியோ

Thursday, April 09, 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ



ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து








இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன். 


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

Tuesday, April 07, 2015

''கோமாளிகள் ''முழு திரைபடம்(இலங்கை)-கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை வானொலி நாடகம் -வீடியோ

கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது

. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன


. எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


 சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார். யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள்.

 சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்

 படம் பிறந்த கதை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கோமாளிகள் கும்மாளம் என்னும் தொடரை வாரந்தோறும் விரும்பிக்கேட்ட வானொலி நேயரான எம். முகம்மது என்னும் வணிகர், இதனைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார். எஸ். ராமதாசிடம் தன் எண்ணத்தைக் கூற அவரும் ஒத்துக்கொள்ள படம் எடுக்கத்தொடங்கினர்.

 நாற்பத்தைந்து நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் 1976 நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொழும்பு பிளாசா திரையரங்கு (55 நாட்கள்), கொழும்பு செல்லமகால் திரையரங்கு (76 நாட்கள்), யாழ்ப்பாணம் (76 நாட்கள்), திருகோணமலை (76 நாட்கள்), மட்டக்களப்பு (76 நாட்கள்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. கதை

Monday, April 06, 2015