வாசகர் வட்டம்

Thursday, May 19, 2011

அதிக தேசிய விருதுகள் தமிழுக்கு -வீடியோ

Monday, May 16, 2011

யாழ் குடி மன்னர்களின் அவசர விண்ணப்பம் ஒன்று-வீடியோ




இந்த வீடியோ உதவி ..நன்றி -யாழ் இணைய புலவருக்கு ..இது பற்றிய விவாதங்களை பார்க்க இங்கே அழுத்தவும்

Sunday, May 15, 2011

பொம்பளை வைரமுத்து -நீயா நானா நிகழ்ச்சியில்




இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றி பேசிய கிராமத்து பொண்ணு வைரமுத்துவை அங்கு பங்கு பற்றிய பலருக்கும் பிடித்திருந்தது. அதன் மூலம் அவர்கள் வழங்கும் பரிசையும் பெற்றார். அங்கு பங்குபெற்றிய வேறு ஒருவருக்கும் பரிசு வழங்கும் போது பரிசு வழங்கும் தகுதியையும் பெற்றார் . அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது ..இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அந்த பொம்பளை வைரமுத்துவை கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் ..அந்த கிராமத்து பொண்ணு வைரமுத்துக்கு ...வாழ்த்துக்கள்

Saturday, May 14, 2011

75 வயது வாலிபரின் -யாழில் இப்ப புது வகை விளம்பர யுக்தி-வீடியோ

Friday, May 13, 2011

அரச குடும்ப திருமணத்தில் -ராக்கமாவும் தேவுடாவும் -வீடியோ



Tuesday, May 10, 2011

தாஜ்மஹாலை ஜால வித்தை மூலம் இல்லாமால் செய்த பொழுது -வீடியோ




There was "nothing supernatural" in this vanishing act, he said. "This is all science, the science of controlling the mind and the willpower to create a psychic balance with the environment."

இவை பற்றி பிபிசியில் கூறியவற்றை பார்க்க இங்கே அழுத்தவும்

Sunday, May 08, 2011

பிரித்தானிய அரச குடும்பத்தினர் எல்லாரும் இந்தியர்களாம்-வீடியோ

Saturday, May 07, 2011

ஒசாமா பின்லாடன் பற்றிய விவரணம் -தமிழில் -வீடியோ

Friday, May 06, 2011

கனடிய முதல் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா -வீடியோ

Thursday, May 05, 2011

உங்களுடைய பழக்கம் என்னவோ ..அது தான் எங்களுடையதும்-வீடியோ




best video of the year

Monday, May 02, 2011

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவிப்பு-வீடியோ

Saturday, April 30, 2011

கனடிய பாரளுமன்ற தேர்தலில் ராதிகா என்ற தமிழ் பெண் -வீடியோ

Friday, April 29, 2011

ரஜனி சிக்சர் அடிச்சால் (ஒரு கற்பனை)-வீடியோ

Thursday, April 28, 2011

உன்னிக்கிருஸ்ணன்+சைந்தவி-ஹாட்லி கல்லூரி லண்டன் விழாவில்-வீடியோ


Sunday, April 24, 2011

ஹாட்லிக் கல்லூரியின் (UKகிளை)நாதவினோதம்(24.04.11)-வீடியோ



ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது.


எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் ..தொடர்ந்து ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் லண்டன் ஜபிசி வானொலியில் அறிவிப்பாளருமான தினேஷ் தொடர்ந்து தனது மதுரக் குரலால் நெறிப்படுத்தினார்.மேலே உள்ள வீடியோ கிளிப் அந்த நிகழ்ச்சியின் இடைவேளையின் பொழுது எடுக்கப்பட்டது.

SECRET SWAMI சாயிபாபா BBCயில் விவரணம் தமிழில்-வீடியோ



Thursday, April 21, 2011

துன்பம் துறந்தவன் நான் என்கிறார் -யாழ் சுதாகர்- விகடனில்


தமிழ்நாட்டூ சூரியன் எப்.எம் இரவு நேர அறிப்பாளர் யாழ் சுதாகரை பற்றி ஒரு கட்டுரையை கடைசியாக வந்த ஆனந்த விகடனில் கண்ணுற்றேன். ..யாழ் சுதாகர் எனது பால்ய கால்த்தில் எனக்கு தெரிந்த நண்பரில் ஒருவர். அறிவிப்பாளர் கவிஞர் கட்டுரையாளர் பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் மற்றும் தமிழ் எழுத்துரு விடயத்தில் ஒரு புரட்சியை செய்தவர்களில் ஒருவரான சுரதா யாழ்வாணனின் சகோதரருமாவார். இந்த கட்டுரையை வாசித்து முடித்தவுடன் என்னுள் ஏற்ப்பட்ட சோக இழை அகல நீண்ட நேரம் எடுத்தது. எனக்கு என்னுள் ஒரு கேள்வியும் எழுந்தது .மற்றவர்களை சந்தோசபடுத்துவர்களின் வாழ்க்கையின் ஏன் எப்போதுமே சோகம் சூழ்ந்து கொள்ளுகிறது என்று ..

யாழ் சுதாகர் சூரியன் பண்பலைத் தொகுப்பாளர் காதல் வயப்பட்டவர்களுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் இரவின் தனிமைப் பொழுதுகளைக் காதலால் நிரப்பி வரும் காற்றலை நண்பன். அனைவரின் சோகங்களுக்கும் மெல்லிசைத் தாலாட்டி ஆறுதல் அளிக்கும் யாழ் சுதாகரின் வாழ்க்கை அத்தியாயங்கள் அத்தனையும் சோகச் சுவடுகள் தான்
யாழ்ப்பாணம் எனது சொந்த ஊர் .தந்தை யாழ்வாணர் அங்கு பிரபலமான எழுத்தாளர்.யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராக பல வருடங்களாக இருந்தவர், அப்பொழுதெல்லாம் யாழ் தமிழர் வீடுகளில் இருக்கும் கிராம போன்களில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும் அவற்றை ஒரு தவம் போல கேட்டுக் கொண்டு இருப்பேன் இன்று நான் பண்பலை நிகழ்ச்சியில் பாடல்களை பற்றித் தரும் தகவல்களுக்கு அந்த கவனிப்புத்தான் காரணம் .வெடி குண்டுகள்,அலறல்கள் அழுகை ஒலிகள் பதுங்கு குழிகள், யுத்தம் ,,ரத்தம் எனக் கழிந்த இளமைக்காலம் சராசரி இளைஞக்கான சந்தோசங்கள் எதுவும் எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு வாய்க்கவில்லை. கொடுமைகளை கண்டு கொதித்தவர்கள் இயக்த்தில் சேர்ந்து கொண்டார்கள் நான் சேரவில்லை

1984 இல் மதுரை வந்தவன் அங்குள்ள தியேட்டர் கேன்டீன் ஒன்றில் வேலை பார்த்தேன் . பிறகு சென்னை வாசம் . பலப் பல பத்திரிகைகளில் பணி புரிந்தேன் .விளம்பரப் படங்களுக்கு பிண்ணணிக் குரல் கொடுத்தேன் எனது யாழ்ப்பாணத் தமிழைக் கேட்டு , '' இவன் வாயில் தர்ப்பை புல்லை வைக்க என்று ஒருவன் என் காது படவே கூறீனான்.
எந்த தமிழை வைத்து என்னை கேவலப்படுத்தனானோ அதே தமிழை வைத்து நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் . யாழ்சுதாகர் என்பவன் அப்போது தான் பிறந்தான். 2003 இல் சூரியன் பண்பலை துவக்கப்பட்டது முதல் இப்போது வரை இரவு நேரங்களில் மெல்லைசை ராகங்களை தொகுத்து வழங்கி வருகிறேன் என்றவர். சின்ன இடைவெளி விட்டு பேச தொடங்குகிறார் .என் மனைவி சாந்தி ,,மகன் அருண் பாலாஜீ . அவர்களை பார்க்கிறீர்களா என்று பக்கத்து அறைக்குள அழைத்துச் செல்லுகிறார்.

மலங்க மலங்க பார்த்தபடி அம்மாவின் மடியில் படுத்திருக்கிறான் அருண் பாலாஜி .மகனை தன் மடிக்கு இடம் மாற்றி அவனுடைய தலைமுடியை கோதியபடியே பேசுகிறார் . யாழ் சுதாகர். அருணுக்கு 15 வயசு .ஆனால் அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது . பிறந்தப்பே அவன் இதயத்தில் நாலு துவாரங்கள் இருந்தன . பிறந்த ஏழாவது மாசத்திலையே அவனுக்கு மேஜர் ஆபிரேசன் பண்ணினார்கள் . அதன் பக்கவிளைவின் காரணமாக சுய நினைவினை இழந்து விட்டான் .மூளை வளர்ச்சியும் இல்லாமால் போச்சு .சராசரி மனிதனுக்குரிய உணர்ச்சிகள் மற்றும் எதுவும் தெரியாமால் இருக்கிறான் .எதையும் உணரமுடியாமால் இருக்கிறான் . உடல் வளர்ச்சி மட்டும இருக்கு உள வளர்ச்சி ஏதுமில்லை..இப்ப எல்லாம் அப்பான்று வாயாரா அவன் என்னை கூப்பிடுவதை கேட்காமால் செத்து போயிடுவோனோன்று பயமாக இருக்கிறது. கண்ணீர் துளிர்க்கிறது யாழ் சுதாகருக்கு.

நான் ஒரு கவிதை சொல்லட்டுமா .கொஞ்சம் மனமும் சாந்தமாக இருக்கும் .மெலிதாக சிரித்துவிட்டு யாழ் தமிழில் கவிதை வாசிக்கிறார் சுதாகர்.
தன்னை துறந்தவன்
துன்பங்களை துறக்கிறான்
தன்னை திறந்தவன்
சொர்க்கத்தை திறக்கிறான்

Wednesday, April 20, 2011

இந்த QUESTION TIME BBCயில் அல்ல ..லண்டன் தீபம் டிவியில்-வீடியோ

Tuesday, April 19, 2011

.எல்லாமே நிகழ்கிறது ..நாங்கள் ஒன்றும் நடத்துவதில்லை என்ற நினைப்பு-வீடியோ

Saturday, April 16, 2011

சார்லி சப்ளினின் 122 வது பிறந்த தினம் -வீடியோ

Wednesday, April 13, 2011

ராக்கம்மா ரங்கய்யா கதை கேளுங்க-வீடியோ

Friday, April 08, 2011

சென்னை தமிழில் ஒரு மேடை பேச்சு -நன்னாக்கீது-ஒலி வடிவம்

Thursday, April 07, 2011

டாடி மம்மி வீட்டில் இல்லை -இந்த குழந்தையின் குதூகலம்-வீடியோ

தமிழ்நாடு தேர்தல் களம் 2011 -வாக்குக்காக பணம் வழங்கும் காட்சி-வீடியோ

Wednesday, April 06, 2011

இவர்கள் ஏப்ரல் முட்டாள்களாம்-வீடியோ

Monday, April 04, 2011

ஒரு சிவப்பு கார்ட்டூன்-வீடியோ



வீடியோ தகவல் உதவி -நன்றி கலையரசன்

Friday, April 01, 2011

இவர்கள் விவாதிப்பது அரசியலாக இருக்குமோ?



வீடியோ தகவல் உதவி -நன்றி -சந்திரவதனா

Thursday, March 31, 2011

தமிழ்நாடு தேர்தல் களம் -தாம் தீம் தூம்-வீடியோ

Wednesday, March 30, 2011

CALL CENTER என்றால் என்ன? நடிகர் சத்தியராஜின் விளக்கம்-வீடியோ

Tuesday, March 29, 2011

விஜயகாந்தின் டிஸ்யூம் ..டிஸ்யூம் ,,தேர்தல் பிரச்சார வானில்-வீடியோ

Sunday, March 27, 2011

WAR ON CUTS - லண்டன் வீதியில் அரசுக்கு எதிராக இறங்கிய பொதுமக்கள்-வீடியோ



26.03.11 சனிக்கிழமை இப்போதைய பிரித்தானிய அரசின் பொதுநல கொடுப்பனவு குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக லண்டன் நடுப்பகுதியில் பெரிய ஒரு ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இதில் பல லட்சகணக்கான மக்கள் பங்குபற்றினர் . சிறிய ஆர்ப்பாட்ட அனார்க்சிஸ்ட் குழுவினர் வன்முறையில் இறங்கியமையால் கலவரத்தில் முடிந்தது .ஈராக்கில் மேற்குலகு நடத்திய யுத்தத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய ஊர்வலத்துக்கு பிறகு நடந்த பிரமண்டாமான ஆர்பாட்ட ஊர்வலம் என இது கருதப் படுகிறது.

Wednesday, March 23, 2011

வடிவேலுவின் தேர்தல் சரவெடி -இப்பவே கண்ணை கட்டுதே-வீடியோ

போங்கடா...கிறுக்கு ஹிந்தி கதாநாயங்களா-நடிகர் மாதவன் -வீடியோ


வீடியோ தகவல் உதவி -நன்றி -ஒலிவர்

Monday, March 21, 2011

அழகாக தமிழ் பேசும் மார்வாடி அம்மாவும் ஒரு டமிழ் இளைஞனும்-வீடியோ

Sunday, March 20, 2011

நான் யாழ்ப்பாணத்தவன் தான் -எழுத்தாளர் டொமினிக் ஜீவா



Saturday, March 19, 2011

அது எல்லாம் சும்மா பேச்சுக்கு -தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்துடுவோம் -வீடியோ




தகவல் வீடியோ உதவி - நன்றி -மதி கந்தசாமி

Friday, March 18, 2011

இந்திய பொண்ணு தாங்கோ -மாமிகளின் ஆட்டம் -வீடியோ




வீடியோ தகவல் உதவி -நன்றி -அஜீவன்

உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது -பரமேஷின் நேர்முகம்-வீடியோ

Wednesday, March 16, 2011

தமிழ் எழுத்துக்களை கற்பதை எளிதாக்க வேண்டும் -வீடியோ

Tuesday, March 15, 2011

4 வயது பெண் குழந்தை மோட்டார் சைக்கிள் ஓடும் அதிசயம் -வீடியோ

Monday, March 14, 2011

புலம் பெயர் இளைஞர்களின் குழு மோதல் -நேரடி காட்சிகள்-வீடியோ

Saturday, March 12, 2011

ஒரு சீன வியாபாரி சரளமாக தமிழ் பேசும் அழகு-வீடியோ

Friday, March 11, 2011

சர்ச்சைக்குரியவரும் வலைபதிவருமான லீனா மணிமேகலையின் நேர்முகம் -வீடியோ

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்-வீடியோ

Monday, March 07, 2011

அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு-வீடியோ






Sunday, March 06, 2011

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களிலிருந்து சில காட்சிகள் -வீடியோ


Saturday, March 05, 2011

ஒரு அம்மா பாட்டுக்கு அழுத சபையினர் -வீடியோ

Thursday, March 03, 2011

1931 இலிருந்து 2010 வரையிலான தமிழ் சினிமாவை பற்றி -வீடியோ


விக்கிபீடியாவில் தமிழில் கட்டுரை தொகுப்பது எப்படி ?

Monday, February 28, 2011

தமிழனா நீங்கள்? உங்களுக்கு ''ழ'' கரம் சொல்ல வருமா?

Thursday, February 24, 2011

Monday, February 21, 2011

மலேஷியா வாசுதேவன் பங்கு பெற்றிய கடைசி நிகழ்ச்சிகளில் ஒன்று-வீடியோ

Sunday, February 20, 2011

நோர்வே தமிழ் திரைப் பட விழா -2011-வீடியோ

Friday, February 18, 2011

பி.எச். அப்துல் ஹமீட்டும் ஏ.ஆர் ரஹ்மானும 1990 இல்-வீடியோ

Sunday, February 13, 2011

காதலே மோசமடா? .-வீடியோ

Friday, February 11, 2011

எகிப்திய அதிபர் முபராக் ராஜினமா செய்தார்-வீடியோ

Thursday, February 10, 2011

தமிழுக்கு வந்த புதிய ஆபத்து-வீடியோ

Tuesday, February 08, 2011

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா-வீடியோ

Monday, February 07, 2011

Sunday, February 06, 2011

70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்



இவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெயர் பொன்னம்பலம் என்று நினைக்கிறேன் . இவர் படிக்கும் பொழுது எப்பொழுதும் use என்ற ராகத்துடன் முடிப்பார் ,பொதுவாக இவர் முன் பெண் மாணவிகள் சிரித்தால் இவருக்கு கெட்ட கோபம் வரும். ஏனோ தானோ என்று படிக்கின்ற பெயரில் பின் வரிசையில் இருந்து சிரித்து கும்மாளமடித்த காரணத்தால் என்னை வெளியே துரத்தி இருந்தார் .30 வருடங்கள் சென்றாலும் இந்த சம்பவம் ஞாபகம்



இவரும் வடமராட்சி தனியார் யூட்டரிகளின் பிரபலமான ஆசிரியர் பெயர் தம்பிராசா இவரிடம் உயிரியல் பாடம் படித்திருக்கிறேன் .இவர் படிப்புக்கும் பொழுது தமிழை ஒருவிதமான உச்சரிப்பில் உச்சரிப்பார் அதுவும் உயிரியல் பாடத்தில் வாழ்வில் முக்கியமான விடயம் பற்றி படிக்கும் போது நானும் எனது பக்கத்து மாணவனும் சிரிப்பு அடக்க முடியாமால் சிரித்து கொண்டிருந்தமையால் எங்களை வெளியேற்றியது இன்று ஞாபகம்



இவரும் யாழ் வடமராட்சி பகுதியிலுள்ள தனியார் டியூட்டரிகளில் பிரபலமான கணித ஆசிரியர் இவரை நல்லையா மாஸ்ரர் என்று அழைப்பர்.அந்த காலங்களில் அரிதாக அதி வேகம் கூடிய குதிரை சக்தியுடைய மோட்ட சைக்கிள் வைத்திருந்தவர்களில் ஒருவர்,இவர் என்னை வெளியேற்றவில்லை ஆனால் என்னை வெளியேற்ற பட சூழ்நிலையை செய்யிறாய் நான் உன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்று கூறியது இன்று ஞாபகம் வருகிறது எனது பின்வரிசை கும்மாளத்தை நட்புத்துவத்துடன் ஏற்று கொண்டவர் ,,,இவர் மாணவர்களுடன் மிகவும் சிநேகபூர்வமாக இருப்பார்


Saturday, February 05, 2011

இந்த சிறுமிகளின் பிரமிக்க வைக்கும் சாகச யோக நடனம்-வீடியோ

Monday, January 31, 2011

அண்ணை றைற் - பிரபலமான தனி நடிப்புகள் -வீடியோ

வாழும் வரை போராடு -நாகேஸ் என்ற அற்புதமான கலைஞன் மறைந்து இரண்டு ஆண்டுகள் -வீடியோ

MADLY IN LOVE -சுவிஸ் தமிழ் திரைபட பாடல் ஒன்று-வீடியோ

Saturday, January 29, 2011

Thursday, January 27, 2011

பேட்டைக்காரனாக உருவெடுத்த கவிஞர்.வ.ஜ.ச ஜெயபாலனின் நேர்முகம்-வீடியோ

கவிஞர் இன்குலாப்பின் புகழ் பெற்ற பாடல் ஒன்று-வீடியோ

Sunday, January 23, 2011

பாகிஸ்தான் பள்ளி சிறுமிகளின் பார்வையில் இந்தியா-வீடியோ



இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் .அப்படி இல்லாதவிடத்து உங்களுக்கு இந்த வீடியோவை பற்றி தவறான அபிப்பிராயம் ஏற்படும் ,அதில் ஒரு சிறுமி அருமையாக பாரட்டகூடிய வகையில் தனது கருத்தை தெரிவித்திருக்கின்றார்.அத்துடன் முடிவில் பாடப்படும் அந்த பாடலும் அருமை.

தகவல் உதவி -கீரன் பேஸ்புக்கில் இருந்து

Thursday, January 20, 2011

புலம் பெயர் எழுத்தாளர் கருணாகரமூர்த்தியுடனான நேர்முகம் -வீடியோ

Monday, January 17, 2011

நடிகர் சிலோன் சின்னையா பற்றிய விவரணம் -வீடியோ

Saturday, January 15, 2011

நடிகர் ஆர்யாவின் அந்த தமிழ் மலையாள சினிமா பற்றிய உரை -வீடியோ



நடிகர் ஆர்யா துபாய் படவிழாவில் தமிழ் நடிகர்களை விமர்சித்தும் மலையாள நடிகர்களை புகழ்ந்தும் பேசியதாக எதிர்ப்புகள் கிளப்பின. திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் வி.சி. குகநாதன் சென்னையில் நடந்த உங்கள் விருப்பம் பட விழாவில் பங்கேற்று பேசியபோது, “ஆர்யாவை மறைமுகமாக கண்டித்தார். தமிழ் நடிகர்களை விமர்சித்தால் விரட்டியடிப்போம் என்றார்.

நன்றி -நக்கீரன்

Friday, January 14, 2011

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே-வீடியோ

இவர்களுடைய புது வடிவமும் நல்லாய் தான் இருக்கு-வீடியோ

Thursday, January 13, 2011

சென்னை புத்தக கண்காட்சி -2011 -வீடியோ

Wednesday, January 12, 2011

மட்டகளப்பில் வரலாறு காணதா மழையும் வெள்ளமும்-வீடியோ

Monday, January 10, 2011

பாலசந்தரின் கேள்விக்கு -பதில் தரும் ரஜனி-வீடியோ

Sunday, January 09, 2011

கனடிய தமிழ் இளம் சாலமனின் நடிப்புக்கு ஒரு சபாஸ்-வீடியோ

Friday, January 07, 2011

கொழும்பில் நடைபெறும் எழுத்தாளர் மகாநாட்டின் ஆரம்ப தொகுப்பு-வீடியோ

நித்தியானந்தா லெனினுடன் பேரம் பேசிய தொலைபேசி உரையாடல் -வீடியோ

Sunday, January 02, 2011

கோடம்பாக்கத்து குடும்பச் சண்டை ,,சென்னை விமான நிலையத்தில்-வீடியோ




Friday, December 31, 2010

என் .எஸ் .கிருஸ்ணனும் எம்.ஜி.ஆரும் பாட்டுக்கு பாட்டில் -வீடியோ

Thursday, December 30, 2010

நந்தலாலா திரைபடத்தை விமர்சிக்கிறார்கள் இவர்கள்-வீடியோ

Monday, December 27, 2010

ஈழத்து திரைபடத்துறையின் முன்னோடி கலைஞர் ஏ.ரகுநாதனின் பவளவிழா -வீடியோ

Saturday, December 25, 2010

Thursday, December 23, 2010

சிந்து வெளி நாகரீகம்-வீடியோ

Sunday, December 19, 2010

இலங்கை வலைபதிவர் சந்திப்பு 2010-வீடியோ

Watch live streaming video from srilankantamilbloggers at livestream.com

Tuesday, December 14, 2010

யாழில்-மண்ணிலிருந்து வானத்துக்கு நீர் பாய்ந்த அதிசயம்-வீடியோ

Monday, December 13, 2010

டில்லி தமிழ்ச் சங்கம் -2010 நிகழ்வில்-வீடியோ

Tuesday, November 30, 2010

ஸ்பெக்ட்ரம் ஒரு பார்வை -வீடியோ






Monday, November 29, 2010

படைப்பு எழுத்துக்களை விட படைப்பு அல்லாதாவைகள் தான் இப்ப விற்பனை அதிகம் -வீடியோ

Thursday, November 25, 2010

வைரமுத்துவின் தோழிமார் கதை பாடலாக-வீடியோ

Tuesday, November 23, 2010

நடிகர் விஜயகுமாரதுங்க - அபூர்வ-புகைப்படங்கள்




இரண்டாவது கீழ் இருக்கு படத்தில் .இடம் இருந்து வலமாக ..சந்திரிக்கா ,உமா மகேஸ்வரன்,

வலம் இருந்து இரண்டாவதாக நடிகர் விஜயகுமாரதுங்க

இப்படங்கள் இணையத்தில் மேயும் போது பேஸ்புக்கில் இருந்து பெறப்பட்டது...நன்றி - மூல இணைப்புக்கு இங்கே அழுத்தவும்

பாலசந்தர் ரஜனியை எடுத்த பேட்டி -வீடியோ

Friday, November 19, 2010

இது ஒரு வகையான குப்பைத் தொட்டி-வீடியோ

Monday, November 15, 2010

56 வது பிறந்த நாளில் கமலின் உரை-வீடியோ

Sunday, November 07, 2010

கவி பாடும் கமல்-வீடியோ

Thursday, November 04, 2010

Wednesday, November 03, 2010

ரஜனிகாந்த் Phenomenon:Star Power Or Marketing Muscle?