இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, June 30, 2011
Wednesday, June 29, 2011
Tuesday, June 28, 2011
தற்கொலை முயற்சியை முறியடித்த ஜப்பானிய முத்தம்-வீடியோ
பாலத்தின் மேல் இருந்து தற்கொலை முயற்சி கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவனை எப்படி தடுப்பது என்று பொலிசார் திணறிக் கொண்டிருந்தனர் ..அத் தருணத்தில் 19 வயது யுவதி ஒருவர் அவ் இளைஞனிடம் சென்று பேச்சு கொடுத்து முத்தம் கொடுத்து திசை திருப்பினார்.அச் சமயம் அவ் இளைஞன் தடுமாற அச் சந்தர்ப்பத்தை பாவித்து பொலிசார் சூழ்ந்து கொண்டனர் . அவ் யுவதி இப்ப அந்த நகரத்தில் கதாநாயகியாக மக்களால் பார்க்க படுகிறாவாம்
Monday, June 27, 2011
வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் வெளியீட்டு விழாவில்-வீடியோ
வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் கவிதை தொகுதி வெளியீடு யாழ் கரவெட்டி தேவராயாளி கல்லூரியில் இலங்கையின் பிரபல பழம் பெரும் எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு பிரதம விருந்தினராக பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி .சிறீநிதி பங்கேற்று இருந்தார் ,கவிதை தொகுதியின் முதல் பிரதியை எனது வகுப்பு தோழனும் நெல்லியடி சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை உரிமையாளருமான சிவம் பெற்று கொண்டார் .. இலங்கையின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அறிமுக உரையை வழங்கியிருந்தார். ரவீந்திரன் மூத்த எழுத்தாளர்களை பொன்னாடை போர்த்தி இந்நிகழ்வில் கெளவரவித்து இருந்தார்....சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் நேர்முகங்கள் என ரவீந்திரன் தனது எழுத்து பணியை பல காலமாக செய்து வந்த பொழுதும் இந்த புத்தக வெளியீடு தான் முதன் முறை என்பது குறிப்படதக்கது. எனது முகநூல் நண்பரில் ஒருவரான ரவீந்திரனின் விழா பற்றியை குறிப்பை வழங்குவதில் இந்த சின்னக்குட்டியின் பதிவு மிக்க மகிழ்வு கொள்கிறது.
Tuesday, June 21, 2011
Saturday, June 18, 2011
அப்ப பெப்சி உமாவுக்கு ..இப்ப சுஹாசினிக்கு வலைபதிவர்கள் மேல் அலர்ஜி-வீடியோ
எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம் இணைய தள எழுத்தாளர்கள். அவர்களை கேட்பாரில்லை, சொல்வாரில்லை. தணிக்கை இல்லை, தரமும் இல்லை. கையில் ஒரு கணினியும் ஒரு எலியும் இருப்பவர்கள் எல்லோருமே மேதாவிகள். விமர்சகர்களாக மாறி பெரியவர்களை, சிறியவர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்து, திட்டி தீர்க்கிறார்கள். ஒரு வகையில் இணையதளம் மனிதனின் வக்கிரத்திற்கு வடிகாலாக மாறி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
மேலே உள்ள விடயம் அண்மையில் நடிகை சுஹாசினி வலை பதிவர்களை பற்றி கூறிய கருத்து ..மேதாவிகள் விமர்சகர்கள் என்று நினைப்பவர்கள் சுஹாசினியை போன்றவர்கள் தான் ...எம்மை போல சாதாரணர்கள் கூட மேதாவிகள் விமர்சகர்ளாக உண்மையில் வந்து விடுவார்களோ என்று பயப்படுகிறா போலை . காரணமற்ற வலைபதிவர்களின் மேலுள்ள பயம் தான் இப்படி எல்லாம் திட்டி தீர்க்க வேண்டி இருக்கு ...அந்த பயமே வாழ்க..
இதே போலத்தான் காரணமற்று ..சில வருடங்களுக்கு முன்னர் பெப்சி உமாவும் காரணமற்ற பயத்தில் வலை பதிவர்கள் மேல் பாய்ந்திருந்தா அந்த வீடியோ கீழே இருக்கு பார்க்கவும்
Tuesday, June 14, 2011
1999 திரைபட இயக்குனர் லெனின்-சிவமுடன் உரையாடல்-வீடியோ
லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.
விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.
டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான்.
அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..
படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.
குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்
இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது
(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)
Monday, June 13, 2011
Thursday, June 09, 2011
Wednesday, June 08, 2011
Tuesday, June 07, 2011
துப்பட்டாவுக்குள் ஒளிந்து ஓடிய யோகா குரு பாபா ராம்தேவ்-வீடியோ
உண்ணாவிரமிருந்த யோகா குரு பாபா ராம்தேவை கைது செய்ய முயன்ற பொலிசாரிடமிருந்த தப்ப முயலும் நோக்குடன் யாரும் எதிர்பாராதவரையில் உயரமான மேடையிலிருந்து கீழே குதித்து இருக்கிறார் .பின் கூட்டத்துடன் கலந்து அதன் பின் பெண்கள் கூட்டத்துக்குள் கலந்து பெண்கள் அணியும் உடையை அணிந்து கொண்டு துப்பட்டாவிற்க்குள் முகத்தை மறைத்து தப்பி கொள்ள முயற்சி செய்த பொழுதும் பொலிசாருடன் மாட்டி கொண்டார்
Monday, June 06, 2011
Saturday, June 04, 2011
Wednesday, June 01, 2011
ரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்
அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.
இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.
ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.
70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.
வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.
ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்
ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.
.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.
யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..
அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...
ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப் போல
Subscribe to:
Posts (Atom)