இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Sunday, July 15, 2012
தோழர் சண்முகதாசன் அவர்களைப் பற்றிய விவரண படம்
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 1943 இல் பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு (A Marxist looks at the History of Ceylon) என்ற நூலை எழுதினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment