வாசகர் வட்டம்

Tuesday, September 04, 2012

அப்பாவி சிங்களவர் மீது வீர்ம் காட்டும் தமிழக அரசியல் கட்சிகள் சில-வீடியோ




அப்பாவி சிங்களவர் மீது தமிழ் வீரம் காட்டி என்ன பயன்? ...77, 83 கலவரங்களின் பொழுது ஒட்டு மொத்தம் சிங்களவனும் எதிரியாக இருந்திருந்தால் ..ஒரு தமிழனும் வடக்கு கிழக்குக்கு பத்திரமாக திரும்பி வந்திருக்க முடியாது . இந்த வீடியோவில் ஒரு சிங்கள பெண் அழுது கொண்டு குமிறுகிறாள் . உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று ...அந்த கேள்வி நியாயமாகாதானே படுகிறது .சிங்கள் பேரினவாத அரச யந்திரம் செய்யும் தவறுகளுக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?

3 comments:

நந்து said...

சிங்கள அப்பாவிகள் தாக்கப்பட காரணம் அவர்கள் ராசபடசேவுக்கு ஓட்டு போட்டதாம். அப்படி பார்த்தால் முள்ளிவாய்க்காய் போர் நடைபெற்ற சமயம் நடந்த தேர்தலில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரசு கூட்டணி 42% வாக்குகளை பெற்றது. இப்படி ஓட்டுப்போட்ட தமிழ்நாட்டு வீரர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? சிங்களரை அடிக்கும் முன் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட தமிழக வாக்காளர் முதலில் தூக்கில் தொங்கட்டும். பிறகு அடியுங்கள் சிங்களவர்களை.

குறுகிய அரசியல் நலன்களுக்காக பெரும்பான்மை பெளத்தரல்லாத கிருத்துவ சிங்களர்களை அடித்து ஓட்டு பொறுக்கும் தமிழக அரசியல்வாதிகள் சிங்கள இனவாத அரசியல்வாதிகளை ஒத்தவரே!

Anonymous said...

சிங்கள இனவெறியருக்கு காவடி தூக்கும் இப்படிப்பட்ட நாய்களினால் தான் தமிழருக்கு இந்தக் கதி. இந்த தமிழருக்கு இருக்கும் உணர்வு கூட இப்படிப்பட்ட சில தெருப் பொருக்கிகளுக்கு இருப்பதில்லை என நினைக்கையில் அவமானமாக உள்ளது.

Anonymous said...

மிக முக்கிய்மாக புத்தளம் சிலாபம் பகுதிகள் அதிகம் மீனவ்ர்களைக் கொண்டதும் தமிழர்களுகும் சிங்களவர்கள்கும் இணைந்து வாழும் பகுதியாகும் அதிகம் பேர் கிறிஸ்தவர்களே. பல தேவாலயங்களில் இரு மொழி திருபலி வழிபாடு நடக்கும்.இன்னும் வேடிக்கை இந்த பகுதியில் உள்ள பலர் சிங்களவர்களாக காலபோக்கில் மாறிய தமிழர்கள் இது மிக அண்மைக் காலம் வரை நடந்தது. குண்டுத் தாக்குதலில் பலியான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளெ சிங்களவராக அறியப்பட்ட தமிழ் பேசும் தமிழர். அதிகமானவர்கள் இருமொழி பேசக் கூடியவார்கள். இந்த குழுவில் தமிழகம் வந்தவர்களூம் இரு மொழி பெசக் கூடியவர்களே. பெளத்த சிங்கள வாதத்தின் ஒடுக்குதலால் பல்முறை புத்தளத்தி கிறிஸ்தவ இஸ்லாமிய ஆலையங்கள் எரிகப்பட்டதையும் தாக்கப்பட்டதையும் 1890 களில் இருந்தே வரலாற்றில் காண முடியும்.அநகாரிக தர்மபாலவின் பிரதான இலக்காகாவும் கிறிஸ்தவ்ர்கள் இருக்கின்றனர்.