இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Tuesday, October 30, 2012
Thursday, October 25, 2012
Wednesday, October 24, 2012
பாடகி சின்மயினால் மேலும் செல்வாக்கு பெறும் சமூக வலைதளங்கள்-வீடியோ
http://www.twitlonger.com/show/jobjp7
சினமயின் ட்விட்டர் பிரச்சனை அறிய விரும்பின் இதில் அழுத்தி பார்க்கவும்
சினமயின் ட்விட்டர் பிரச்சனை அறிய விரும்பின் இதில் அழுத்தி பார்க்கவும்
Friday, October 19, 2012
குத்து விளக்கு-70 களில் வந்த இலங்கை தமிழ் திரைபடம் - முழு வீடியோ
70 களில் வெளியான குத்து விளக்கு திரைபடத்தை பார்க்க இங்கே அழுத்தவும்
குத்துவிளக்கு (திரைப்படம்) -Srilankan Film 1972
-------------------------------------------------------------------------------- ---------------
குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.
இயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
தயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா
கதை வீ. எஸ். துரைராஜா
நடிப்பு ஆனந்தன்
ஜெயகாந்த்
லீலா நாராயணன்
பேரம்பலம்
யோகா தில்லைநாதன்
எம். எஸ். ரத்தினம்
எஸ். ராம்தாஸ்
சிசு. நாகேந்திரா
இந்திராதேவி
திருநாவுக்கரசு
நடராஜன்
பரமானந்த
ஸ்ரீசங்கர்
இசையமைப்பு ஆர். முத்துசாமி
ஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்
விநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்
வெளியீடு 1972
நாடு இலங்கை
மொழி தமிழ்
திரைக்கதை ஈழத்து இரத்தினம்
*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.
--------------------------------------------------------------------------------
குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.
இயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
தயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா
கதை வீ. எஸ். துரைராஜா
நடிப்பு ஆனந்தன்
ஜெயகாந்த்
லீலா நாராயணன்
பேரம்பலம்
யோகா தில்லைநாதன்
எம். எஸ். ரத்தினம்
எஸ். ராம்தாஸ்
சிசு. நாகேந்திரா
இந்திராதேவி
திருநாவுக்கரசு
நடராஜன்
பரமானந்த
ஸ்ரீசங்கர்
இசையமைப்பு ஆர். முத்துசாமி
ஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்
விநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்
வெளியீடு 1972
நாடு இலங்கை
மொழி தமிழ்
திரைக்கதை ஈழத்து இரத்தினம்
*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
இந்த திரைபடத்தை பற்றிய எனது நினைவு குறிப்புகள் சிலவற்றை சொல்ல முடியுமென்றால் ...இத்திரைபடத்தில் அதிகமான வீட்டு காட்சிகள் வடமராட்சியிலுள்ள ஓராங்கட்டை என்ற இடத்தில் படமாக்கபட்டிருந்தது
இது நடித்த கதாநாயகி லீனா நாரயாணன் தென்னிந்திய கதாநாயகி மாதிரி இருப்பதாக பலராலும் விதந்துரைக்கப்பட்டது .
வல்லிப்புர கோவில் பகுதிகளில் படமாக்க பட்டது ...அதிக மணல் திட்டுக்கள அப்போது இருந்ததை காணலாம். மீன் விற்கும் பெண்கள் தலையில் மீன் கூடையுடன் ஒரு வித பாவனை ஓட்டத்துடன் ஓடுவது வழமை அந்த காட்சியை இந்த படத்தில் காட்டும் பொழுது ஒரு கேலித் தனமான இசை இசைக்க பட்டமையால் அப்பொழுது ஒரு சர்ச்சை எழும்பி அடங்கியது நினைவுக்கு வருகிறது
யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் அப்பம் சுடும் முறை இதில் இப்பொழுது பார்க்கும் பொழுது நினைவுகள் திரும்பு கின்றன்
இத்திரைபடத்தை பாரக்க பொழுது 70 களின் ஞாபகத்தை ஓரளவு கொண்டு வர முயற்சிக்கலாம்
Tuesday, October 16, 2012
சக வலை பதிவர் விசரனின் பேட்டி லண்டன் தொலைக்காட்சியில்-வீடியோ
விசரன் என்ற புனைபெயரில் அவர் வலைபதிவு வைத்திருந்த தருணத்தில் சில காலங்களுக்கு முன்பு லண்டனில் தற்சயலாக சந்திக்க நேர்ந்தது.அப்பொழுது ஒரு பதிவு போட்டிருந்தேன் .அந்த பதிவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்
Sunday, October 14, 2012
20 வருடங்களாக தொலைந்த 95 வயது தாயும் 65 மகனும் சந்தித்த பொழுது-வீடியோ
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித் தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்தஈஸ்வரன் (வயது65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.
ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்தஈஸ்வரனுக்குத் தெரியாது.
இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.
பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்தஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.
நன்றி-ஈழநாதம்
Friday, October 12, 2012
Monday, October 08, 2012
Tuesday, October 02, 2012
Monday, October 01, 2012
புலம் பெயர் தமிழ் குஞ்சுகளின்.. ஓட்டை உழுந்து வடை -வீடியோ
மேலே உள்ள பாடல் லண்டன் குட்டி hari யின் உடையது .நகல் வடிவம் ...
கீழே அந்த பாடலின் அசல் வடிவம்
Subscribe to:
Posts (Atom)