குத்துவிளக்கு (திரைப்படம்) -Srilankan Film 1972
-------------------------------------------------------------------------------- ---------------
குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.
இயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
தயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா
கதை வீ. எஸ். துரைராஜா
நடிப்பு ஆனந்தன்
ஜெயகாந்த்
லீலா நாராயணன்
பேரம்பலம்
யோகா தில்லைநாதன்
எம். எஸ். ரத்தினம்
எஸ். ராம்தாஸ்
சிசு. நாகேந்திரா
இந்திராதேவி
திருநாவுக்கரசு
நடராஜன்
பரமானந்த
ஸ்ரீசங்கர்
இசையமைப்பு ஆர். முத்துசாமி
ஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்
விநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்
வெளியீடு 1972
நாடு இலங்கை
மொழி தமிழ்
திரைக்கதை ஈழத்து இரத்தினம்
*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.
--------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------
இந்த திரைபடத்தை பற்றிய எனது நினைவு குறிப்புகள் சிலவற்றை சொல்ல முடியுமென்றால் ...இத்திரைபடத்தில் அதிகமான வீட்டு காட்சிகள் வடமராட்சியிலுள்ள ஓராங்கட்டை என்ற இடத்தில் படமாக்கபட்டிருந்தது
இது நடித்த கதாநாயகி லீனா நாரயாணன் தென்னிந்திய கதாநாயகி மாதிரி இருப்பதாக பலராலும் விதந்துரைக்கப்பட்டது .
வல்லிப்புர கோவில் பகுதிகளில் படமாக்க பட்டது ...அதிக மணல் திட்டுக்கள அப்போது இருந்ததை காணலாம். மீன் விற்கும் பெண்கள் தலையில் மீன் கூடையுடன் ஒரு வித பாவனை ஓட்டத்துடன் ஓடுவது வழமை அந்த காட்சியை இந்த படத்தில் காட்டும் பொழுது ஒரு கேலித் தனமான இசை இசைக்க பட்டமையால் அப்பொழுது ஒரு சர்ச்சை எழும்பி அடங்கியது நினைவுக்கு வருகிறது
யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் அப்பம் சுடும் முறை இதில் இப்பொழுது பார்க்கும் பொழுது நினைவுகள் திரும்பு கின்றன்
இத்திரைபடத்தை பாரக்க பொழுது 70 களின் ஞாபகத்தை ஓரளவு கொண்டு வர முயற்சிக்கலாம்
No comments:
Post a Comment