இதில் கோமாளிகள் ஏமாளிகள் மரிக்கார் ராமதாஸ் அப்புக்குட்டி ராஜகோபால்,அப்துல் ஹமீது, உபாலி செல்வசேகரன் நடித்து இருந்தார்கள்.புதியகாற்று விபி கணேசன் நடித்திருந்தார் .இவர் இலங்கையின் பிரபல தென்னிலங்கை தமிழ் அரசியல் வாதி மனோகணேசனின் தகப்பனாவார் .அனுராகம் படத்தின் கதாநாயகன் பெயர் ஞாபகமில்லை முக்கிய பாத்திரத்தில் கே.எஸ் பாலசந்திரன் நடித்திருந்தார். தென்றலும் புயலும் முழுமையான் தென்னிந்திய தமிழ் திரைபட சூத்திரத்துக்கு அமைவாக முயற்சி செய்து அந்த தரத்துக்கு வந்த படம் என்று நினைக்கிறேன், கீழே உள்ள சில படத்துக்கு அந்த காலம் யாழில் பிரபல இசை குழுவினராக இருந்த கண்ணன் -நேசம் இரட்டையர் இசை அமைத்து உள்ளனர்
4 comments:
சின்னக்குட்டியர்!
இதில் சிலபடங்கள் பார்த்துள்ளேன்.
அனுராகம், லீலா நாரயணன் நடித்து தானே!
அந்த நாளில் சுதந்திரனில் -கேள்வி பதிலில் அல்பிரட் துரையப்பா என்ன? செய்கிறார். என்பது கேள்வி, பதில்-
"அனுராகங்களை லீலா வினோதங்களாக மாற்றுகிறார்.
இந்தப் பதிலின் காரணத்துக்குரிய செய்திகள் அன்று வதந்தியாக உலாவியது.
உண்மையில் இக் கேள்வி கேட்கப்பட்டதா? அல்லது இவ் வதந்தியைப் பரப்ப சுதந்திரன் உருவாக்கிய கேள்வியோ? ஆண்டவனே அறிவான்.
டாக்சி ரைவர் எனும் தமிழ்படத்தில் ஒரு பாடல், அப்படத்தில் ஒரே ஒரு பாடல் என நினைக்கிறேன்.
"உப்பில்லாத சோறு நான் ஊறுகாயும் நீ எனக்கு இரண்டு ஒன்றாச் சேர்ந்துகிட்டால் இருக்குது தான் சோக்கு தான் "
என்பது, றொக்சாமி இசையமைத்திருக்க வேண்டும்.
கிடைத்தால் இசைஉருவாவது போடவும்.
நண்பர் யோகன் அவர்களே , அனுராகம் படம் வெளியாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே துரையப்பா இறந்து விட்டாரே .
துரையப்பா இறந்தது 1975 இல் , அனுராகம் வெளியானது 1978 இல்.
சரியா வரவில்லையே ?
யோகண்ணை குத்துவிளக்கு கதாநாயகி லீலா நாரயணனை அனுராக படத்தோடை தவறுதலாக ஒப்பீட்டூ கதைக்கிறியள் என்று நினைக்கிறன்.
குத்துவிளக்கு கதாநாயகி+துரையப்பா+அனுரா பண்டாராநாயக்கா நீங்கள் சொல்லுவது மாதிரி இந்த சமன்பாடு கிசு கிசுக்க பட்டது உண்மைதான்
//யோகண்ணை குத்துவிளக்கு கதாநாயகி லீலா நாரயணனை அனுராக படத்தோடை தவறுதலாக ஒப்பீட்டூ கதைக்கிறியள் என்று நினைக்கிறன்.//
ஆம்
Post a Comment