பிபிசி தமிழோசையில் இடம் பெற்ற இந்த திரைபட நெறியாளிரின் செவ்விக்கான இணைப்பு கீழே
http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131216_upcountryfilm.shtml
இலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் 'இங்கிருந்து' முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக பேசப்பட்டுவரும் இனப்பிரச்சனை என்ற சொல்லாடல் மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக 'இங்கிருந்து' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமதி சிவமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டினார்.
மலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு 'அடிப்படை மூலம்' என்று சுமதி சிவமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
தேயிலைத் தோட்டத்தை கதைக் களமாகக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களை நடிகர்களாகப் பயிற்றுவித்து, இலங்கையின் முன்னணி திரைத்துறைக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை வரலாற்றுப் பின்னணியுடன் அணுகியுள்ளதாக சிவமோகன் கூறினார்.
இங்கிருந்து- திரைப்படத்தின் இயக்குநர் சுமதி சிவமோகன்
மலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சனைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
இந்தியத் தலைநகர் தில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் 'இங்கிருந்து' திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சனைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
நன்றி -பிபிசி தமிழோசை
இந்த திரைபடம் பற்றிய மேலும் விவரங்கள் தாங்கிய பதிவின் இணைப்பு கீழே
http://sivasinnapodi.wordpress.com/2013/12/18/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-from-here-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/
No comments:
Post a Comment