எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்
http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html
பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,,
ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த்து இல்லை ஒரு மட்டுபடுத்தபட்ட வாசிப்பு தான் இருந்த்து . ஆனால் எனது வாசிப்பு குறைவு பற்றி புலம் பெயர்ந்த காலங்களில் கூட அந்த கவலை இருந்தது. தமிழ் சிறுகதையின் பிரம்மா என்ற புதுமைபித்தனை முன்பு கேள்விப்பட்டாலும் புலம் பெயர்ந்த பிறகு தான் வாசித்து இருக்கிறேன்
.அவரின் சிறுகதைகளை வாசித்தால் பிறகு எந்த சிறுகதைகளை வாசித்தாலும் வெறுமையாக தான் இருக்கிறது எனக்கு ..அப்படி அவரின் சிறுகதைகள் காலத்தை வென்றவை ..
அவரின் சிறுகதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் பொழுது ஒவ்வொரு தரமும் உங்களுக்கு புது புது முடிச்சு அவிழும் அனுபவம் ஏற்படும்...அவரின் சிறுகதை ஒன்றான செல்லம்மாள் என்ற சிறுகதையின் காட்சி வடிவத்தை பார்க்க கிடைத்த்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
கீழே புதுமைபித்தனின் கதைகள் அடங்கிய இணைப்பு கீழே இருக்கிறது
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_01.html
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0389_02.html
No comments:
Post a Comment