இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Friday, September 19, 2014
மாண்டலின் ஸ்ரீநிவாசன் உடன் பாடகர் ஹரிகரன் ஒரு நிகழ்ச்சியில் -வீடியோ
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தனயார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.-நன்றி தினமணி
சன் டிவியில் விருந்தினர் பக்கம் என்ற நிகழ்ச்சியில் அண்மையில் அவர் கலந்து கொண்ட பொழுது கீழே
julia roberts இன் EAT PRAY LOVE என்ற ஆங்கில படத்தில் இவருடைய பின்னனி இசை கலியுக வரதா என்ற பாடலுடன் அதற்க்கான வீடியோ கீழே
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மைக்கல் ஜக்சன் இப்போ என் மனதைச் சஞ்சலப்படுத்திய மரணம்.
1985 ல் இந்திய விழாவுக்கு வருகை தரவுள்ளார் என விளம்பரத்தில் பார்த்தேன். ஜேசுதாஸ், பட்டம்மாள், வலயப்பட்டி, வீணை காயத்திரி எல்லோருக்கும் பதிவு செய்து விட்டேன். இவருக்கு
5 நாள் நிகழ்ச்சி , எனக்கு இவரை யாரெனத் தெரியாது.
5 நாளில் கடைசிக்கு முதல் நாள் இரவு , குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி!, மென்டலின் சீநிவாஸ் பற்றி உங்கள் கருத்து. அரசு பதிலிட்டுள்ளார்: அவர் கையில் உள்ளது மென்டலீனோ, மந்திரக்கோலோ அறியேன்.
கடைசி நாளிரவு கச்சேரிக்குச் சென்றேன். கடைசியில் திருப்புகழ் வாசிக்கும்படி கேட்டேன். வாசித்தார். மேடையில் அவர் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்து வாசித்தார்.
நிகழ்ச்சி முடிவில் எத்தனை வயது எனக் கேட்டபோது, "போட்டீன் " என ஆங்கிலத்தில் கூறினார்.
அன்று முதல் அவர் ரசிகன் , அதன் பின் இருதடவை பாரிசில் நிகழ்ச்சி பார்த்தேன்.
அவரை நான் தியாகராஜ சுவாமிகளின் மறுபிறப்போ என பிரமிப்பேன். தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அவர் கொடுக்கும் ஜாலங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தது.
அவர் மேடையில் எப்போது புன்னகை ததும்ப வீற்றிருப்பார். பக்கவாத்தியக்கலைஞர்களை கண்ணாலெ
அரவணைத்து, அப்பப்போ சபாஸ் சொல்லி ஊக்கப்படுத்துவார்.
ஒரு நிறைவான கலைஞன் .
பாரிசின் மாநகர சபை மண்டபத்தில் 90 களில் நடந்த கச்சேரியில் ரசிகர்கள் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி ஆர்பரித்து தம் மகிழ்வை வெளிக்காட்டியதை பார்த்து என்னுடன் வந்த என் நண்பன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.
"நம் இசைக்கு இவ்வளவு வரவேற்பா" அவனால் நம்பமுடியவில்லை.
ஆம்...மேலைத்தேசங்களில் நம் இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இவர் மென்டலின் நாதம் எனில் மிகையில்லை.
இவ்வளவு சொற்ப வயதில் இவர் மறைவை என்னால் ஒப்பமுடியவில்லை.
அவர் விட்டுச் சென்ற நாத வெள்ளம் என்றும் இருக்கும்.
அன்னார் இறைவனுடன் "இசை" ந்திருக்கட்டும்.
இசையருமை தெரியாத செவிடனையா -இயமன்.
//இசையருமை தெரியாத செவிடனையா -இயமன்//
ஓம்
Post a Comment