எம்ஜீஆர் -சிவாஜி ,ஜெயசங்கர் -முத்துராமன் ,ரஜனி -கமல் ,விஜய்-அஜீத் ,சிம்பு -தனுஷ் போன்ற போட்டி நடிகர்களை வரலாற்றில் பார்க்கும் பொழுது நன்றாக நடிக்கிறார்கள் என்று கூறபட்டவர்களிலும் பார்க்க மற்றவர் தான் புகழும் வெகுஜன ரசிகர்கள் ஆதரவும் அதிகம் கிடைத்து வந்திருக்கிறது.
ஏனோ தெரியவில்லை.அப்படி தியாகாரஜ பாகவதர் காலத்திலும் தியாகராஜ பாகவர் தான் புகழ் பெற்று இருந்தார் .இவரிலும் பார்க்க கூட பாடி நடிகக கூடிய கிட்டப்பா அவர்களிலும் பார்க்க.
இப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் வசந்தபாலனின் காவியத் தலைவன் படம் கிட்டப்பா -கேபி சுந்தரம்பாள் அவர்களின் காதல் கதை இல்லை என்றாலும் கேபி சுந்தரம்பாள் ஒரு கட்டத்தில் கிட்டப்பாவுக்கு எழுதப்பட்ட பிரசித்து பெற்ற காதல் கடிதங்களை அடிப்படையானது என்று கூறப்படுகிறது .
அந்த காலத்தில் திரைபடங்கள் கேவா கலர், ஈஸ்மண்ட் கலர் ,டெக்னிக்கலர் படங்கள் என்று விளம்பர படுத்தப்படுத்துவார்கள் .அப்படி டெக்னிக்கலர் என்ற முறையில் வந்த படம் ஒன்று கொஞ்சும் சலங்கை .
காவியத் தலைவன் திரைபடத்தின் பாடல்கள் அதிகம் அந்த கால டெக்னிக்கலரில் படமாக்க பட்டிருக்கிறது குறிப்பிடப்பட்டது
கீழே கேபி சுந்தரம்பாளின் ஆவணப்படம் வீடியோவாக
1 comment:
great
http://thefun.tv/
Post a Comment