இடமிருந்து வலமாக டி எம் எஸ், சிவாஜி , முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், எம்.எஸ் விஸ்வநாதன்
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.
அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின்மாயானத்தில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த...' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசைஅமைத்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது.
இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர்.
நன்றி -
தினத்தந்தி
No comments:
Post a Comment