இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.
இலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான "கோமாளிகளின் கும்மாளம்" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார்.
"கோமாளிகள் கும்மாளம்" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.
நன்றி -பிபிசி தமிழ்
No comments:
Post a Comment