இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, September 29, 2016
Sunday, September 25, 2016
Saturday, September 17, 2016
எழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச்சானின் உருவாக்கத்தில்-MUST WATCH-வீடியோ
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.-நன்றி விக்கி பீடியோ
கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் வீடியோ துண்டங்கள் தான் கீழே உள்ளது

Tuesday, September 13, 2016
Saturday, September 10, 2016
''நடந்தாய் வாழி காவேரி''' ...நதியின் போக்கை நிறுத்திறதுக்கு '''நீ''' யாரு?
கர்நாடகா, காவிரி தமிழ் நாட்டுக்கு கனத்த இதயத்தோடு திறந்து விடுறேன்னு சொல்லிருக்கு.
நான் என்ன கேட்குறேன், எதுக்கு கனத்த இதயம்...? ஏன் இத்தனை வெறுப்பு, இத்தனை வன்மம்? இவ்வளவு enmity ஏன்?
ஒரு நைல் நதியை மூன்று நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன..எந்தப் பிரச்சனையும் இல்லை.
.#இஸ்ரேல், #பாலஸ்தீனம் இரண்டு எதிரி நாடுகள், ஒரே நதியைப் பங்கிட்டுக் கொள்கின்றன. எந்தப் பிரச்சனையும் இல்லை..
இந்த இந்தியா, பங்களாதேஷ் கூட ஒரு நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்தப் பிரச்சனையும் இல்லை..
பாகிஸ்தானோடு இந்தியா ஒரு நதியைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், கர்நாடகா- தமிழ்நாடு, ஒரே நாட்டின் இரண்டு குழந்தைகள்??😁😁
ஒரு காவிரியைப் பங்கீடு செய்வதில், 114 வருசமா பிரச்சனை.
இதுல கனத்த இதயம் ஏன் வருது??? 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொல்லுது. 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது. 528 அமர்வுகளில் அறிவியல் ஆய்வர்கள் சொன்னது. விவசாயிகள் சொன்னது, வேளாண் அதிகாரிகள் சொன்னது. வாஜ்பாயாய் போன்ற பிரதமர்கள் சொன்னது. பிரதமர் தலைமையிலான நடுவர் குழுக்கள் சொன்னது. இவ்வளவு பேர் சொன்ன பிறகும், கனத்த இதயத்தோடு குடுக்கிறேன்றீங்க. பந்த் நடத்துறீங்க. பஸ் அ கொளுத்துறீங்க. கர்நாடகாவை விடுங்க. சரி,
தமிழ்நாட்டுல நம்ம கிழிச்சுக்கிட்டு இருந்தோம்? இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம்??? #தொழிற்சாலைகள், கூல்டரிங்க் கம்பெனி, லெதர் கம்பெனியா உருவாக்கினோம். ஒரு நதிக்கு, #நீர் #என்பது #மேலாடை. அதன் உள்ளிருக்கும், #மணல் என்பது, #உள்ளாடை. #மேலாடையை #உருவி, #கார்போரேட்டுக்கு வித்தாச்சு.உள்ளாடையை உருவி, உருவி, #லாரில வச்சு வித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு இந்த நாடு. இந்த நாடு உருப்படுமா??
#இருக்குற மணலை எல்லாம், கொள்ளையடிச்சு, என்னைக்கோ வரப்போற, தண்ணிக்கு சிங்கி அடிக்கப்போற ஒரு தலைமுறைக்கு கோடி கோடியாக கொட்டி, இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், அந்த யூனிவர்சிட்டி இந்த யூனிவர்சிட்டி ன்னு கட்டி வைக்கிறோம்?? தண்ணிக்கு???!!! எங்க பாட்டன் #ஆத்துல #குளிச்சான். எங்கப்பன் #குளத்துல குளிச்சான். நான் குழாயில் குளிக்கிறேன். என் பையன் குளிக்கவே மாட்டான். குளிக்கிறதுக்கு ஒரு மாத்திரை கண்டுபுடிச்சுடுவான். என் பேரன் #குடிக்கிறதுக்கு #என்ன #செய்வான்???
#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை,
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போஅணை கட்டுனோம்.
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி.
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்
. #வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.

நன்றி -முகநூலில் சுட்டது
Tuesday, September 06, 2016
Subscribe to:
Posts (Atom)