இதுல கனத்த இதயம் ஏன் வருது??? 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொல்லுது. 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது. 528 அமர்வுகளில் அறிவியல் ஆய்வர்கள் சொன்னது. விவசாயிகள் சொன்னது, வேளாண் அதிகாரிகள் சொன்னது. வாஜ்பாயாய் போன்ற பிரதமர்கள் சொன்னது. பிரதமர் தலைமையிலான நடுவர் குழுக்கள் சொன்னது. இவ்வளவு பேர் சொன்ன பிறகும், கனத்த இதயத்தோடு குடுக்கிறேன்றீங்க. பந்த் நடத்துறீங்க. பஸ் அ கொளுத்துறீங்க. கர்நாடகாவை விடுங்க. சரி,
தமிழ்நாட்டுல நம்ம கிழிச்சுக்கிட்டு இருந்தோம்? இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம்??? #தொழிற்சாலைகள், கூல்டரிங்க் கம்பெனி, லெதர் கம்பெனியா உருவாக்கினோம். ஒரு நதிக்கு, #நீர் #என்பது #மேலாடை. அதன் உள்ளிருக்கும், #மணல் என்பது, #உள்ளாடை. #மேலாடையை #உருவி, #கார்போரேட்டுக்கு வித்தாச்சு.உள்ளாடையை உருவி, உருவி, #லாரில வச்சு வித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு இந்த நாடு. இந்த நாடு உருப்படுமா??
#இருக்குற மணலை எல்லாம், கொள்ளையடிச்சு, என்னைக்கோ வரப்போற, தண்ணிக்கு சிங்கி அடிக்கப்போற ஒரு தலைமுறைக்கு கோடி கோடியாக கொட்டி, இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், அந்த யூனிவர்சிட்டி இந்த யூனிவர்சிட்டி ன்னு கட்டி வைக்கிறோம்?? தண்ணிக்கு???!!! எங்க பாட்டன் #ஆத்துல #குளிச்சான். எங்கப்பன் #குளத்துல குளிச்சான். நான் குழாயில் குளிக்கிறேன். என் பையன் குளிக்கவே மாட்டான். குளிக்கிறதுக்கு ஒரு மாத்திரை கண்டுபுடிச்சுடுவான். என் பேரன் #குடிக்கிறதுக்கு #என்ன #செய்வான்???
#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை,
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போஅணை கட்டுனோம்.
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி.
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்
. #வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.
நன்றி -முகநூலில் சுட்டது
1 comment:
பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping
Post a Comment