பாரிஸ் காவலர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் செய்துள்ள கருப்பின இளைஞருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பாரிஸ் நகர தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் வெளியானதில் இருந்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து வருகிறது.
ஒரு காவலர் மீது பாலியல் புகாரும் மூவர் மீது தாக்குதல் புகாரும் பதியப்பட்டுள்ளது.
ஆனால் அதனால் பாரிஸ் தெருக்களில் வெளிப்படும் கோபத்தைக் குறைக்கமுடியவில்லை-நன்றி பிபிசி தமிழ்
No comments:
Post a Comment