வாசகர் வட்டம்

Thursday, March 30, 2017

கதை கேளு..நடந்து வந்தது ஒரு நகைக்கடை.....கூட்டமே அது ஒரு சாக்கடை-வீடியோ

Wednesday, March 29, 2017

ரஜனிகாந்தும் யாகாவா முனிவரும்-வீடியோ

நான் தான் கடவுள்  எனக்கு வயது 5000  என்று 90 களில் தமிழ் நாட்டில் சொல்லிக்கொண்டு திரிந்த யாகாவா முனிவரை  மறந்து கொண்டிருக்க மாட்டீர்கள் .. இவரின் சட்டை பையில் எப்பொழுதும் உள்ளூர் சிகரட்டு பைக்கட் இருந்து கொண்டிருக்கும் ..இவர் சொல்லும் எதிர்வு கூறல்கள்  நடந்தும் இருக்கின்றன. இவர் ஒரு சித்தர் என்று கூறி பல அறிஞர்கள்  ஆன்மிவியாளர்கள்  இவரிடம்செ ன்று  கலந்து உரையாடியதுமுண்டு. அப்போதைய பிரபல சன் டிவியும்  இவரை பேட்டி கண்டும்  பிரபலபடுத்தியது

அவர் சொன்ன பல விசயங்களில் ரஜனி காந்த் பற்றியதும் உண்டு . ரஜனி காந்தின் பின் ஒரு ஒளி வட்டம் ஒன்று தெரிகிறது charisma இருக்கு .எதிர்காலத்தில் இந்த நாட்டு அதிபதியாக வருவார்  மற்றும் இலங்கை பாகிஸ்தான் சீனா நாட்டு பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்றும்


அதன் பின்  ரஜனி காந்த் அந்த யாகாவா முனிவரிடம் சென்று நீங்கள் தான் என் கடவுள் என்று சொல்லி ஆசி பெற்றதாகவும் அந்த நேரம் செய்திகள் வந்தன.

ரஜனி காந்த்  90 களில் இலங்கை போர் உக்கிரம் பெற்ற காலங்களில் தனது நண்பர்களிடம் கூறியதாக கிசுகிசு பேசப்பட்டது , ரஜனி காந்த்  தன்னிடம் உள்ள அந்த கவர்ச்சி சக்தியை வைத்து இலங்கை பிரச்சனையை  என்னால் தீர்க்க முடியும் ...ஆனால் ஒரு இயல்பான போக்கு எதிராக  எனது சக்தியை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும்

யாகவா முனிவரும்  சிவசங்கர் பாபா  என்ற நடன கலைஞரும் தான் தான் கடவுள் என்று  தொலைகாட்சி  விவாதத்தில்  அடிப்பட சம்பவங்களும் நடந்திருக்கின்றன

கீழே  பிரபல அறிவிப்பாளர்  ரவி பெர்னாட்  யாகாவா முனிவரை பேட்டி கண்ட வீடியோவை பார்க்காலாம்



யாகாவா முனிவர் மாதிரி த்த்துவங்களயும் நடை உடை பாவனையையும் வைத்து நடிகர் விவேக் திரைபடத்தில் கலாய்த்ததை கீழே உள்ள வீடியோவில் மற்றும் தான் தான் கடவுள் என்று டிவி விதவாத்த்தில் யாகாவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடிப்பட்டதை கலாய்க்கும் காட்சிகளையும் காணலாம் யாகாவா முனிவரின் 55 வது பிறந்தாளில் பிரபலங்கள் பங்கு பற்றிய வீடியோ

Monday, March 27, 2017

இன்று உலக நாடக அரங்க தினமாம் அது பற்றிய விவரணம் -வீடியோ

Thursday, March 23, 2017

எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புக்கள்-வீடியோ

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

 ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

 1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.

 பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். நன்றி -தமிழ் பிபிசி

Monday, March 20, 2017

Thursday, March 16, 2017

இளம் எஸ் பி .பாலசுப்பிரமணியம்-வீடியோ

Wednesday, March 15, 2017

காசு ,,பணம்..துட்டு ..ஊழல் லஞ்சம்-வீடியோ

ஆட்டோக்காரன்..நாலும் தெரிஞ்ச ஆட்டோக்கரானின் அசத்தல் பேச்சு-வீடியோ

Tuesday, March 14, 2017

எம்ஜிஆர் -கமல்- பாலு மகேந்திரா-மண்டலின் சிறிநிவாஸ்-வீடியோ

Sunday, March 05, 2017

கொடா நாட்டு ரகசியம்..ஜெ..க்கு சசி கொடுத்த மாத்திரை எது?

Saturday, March 04, 2017

''சும்மா அதிருதில்லே'' இந்த பொடியன் என்ன கிழி கிழிக்கிறான்-வீடியோ

Wednesday, March 01, 2017

,'''சவுக்கு சங்கர்''- வலைபதிவர்(Blogger)....திமுக,,அதிமுக இரண்டு பேருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவர்-வீடியோ






சவுக்கு சங்கரின் இணையதளத்தை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்




தமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008ல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.

அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.