வாசகர் வட்டம்

Sunday, March 11, 2018

லண்டனில் நடைபெற்ற புதுசு சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிலிருந்து சில துளிகள்-வீடியோ



 லண்டனில் நடைபெற்ற ''புதுசு ''சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்தேன்



 புதுசு என்ற இலக்கிய சஞ்சிகையை கண்ணுற்று இயக்க சஞ்சிகை என்று சர்ச்சைக்காக்கி பேராதானை பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்

 இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மாணவர்கள் மீதிலான தாக்குதல் ஒரு இனக்கலவரத்துக்கான முன்னாடி என்று கூறினார்

 அதன் படியே 1983 இனக்கலவரம் சொல்லிய சில மாதங்களில் நடந்தது

3 comments:

Yarlpavanan said...

நினைவில் மீட்டுப் பார்க்கிறேன்.

Unknown said...

உங்கள் பதிவுக்கும் நன்றி. வீடியோ இணைப்பிற்கும் நன்றி.

புதுசுவில் வெளிவந்த கே.எஸ்.சிவகுமாரன் தொடர்பான குறிப்பிற்கு, கே.எஸ்.சிவகுமாரன் பதில் அனுப்பிய பொழுது புதுசு அதனைப் பிரசுரிக்கவில்லையென, மீள் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நித்தியானந்தன் கூறியதாக அறிகின்றேன். பின்னர் ரவி தனது உரையில் புதுசு ஆசிரியர் குழுவினரது அக்காலகட்டத்தைய வயதுகளைக் காரணங்காட்டி அதற்கு மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிய வருகின்றது.

37 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சாதாரண விடயத்தை இப்போது நித்தியானந்தன் தூக்கிப்பிடிப்பதன் நோக்கமென்ன? அவரது கொழுவல் கேள்விக்கு புதுசு பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகிய ரவி அந்த விவகாரம் எப்போதோ முடிந்துவிட்டது என்று கூறுவதைவிட்டு, மன்னிப்புக்கேட்டதின் மூலமாக, அவர் பத்திரிகை ஆசிரியராக இருப்பதற்கு பொருத்தமில்லையென பகிரங்கமாகத் தெரிவித்து விட்டார்.

சின்னக்குட்டி said...

வண்க்கம் ஜீவலிங்கம் சிவசண்முகமூர்த்த்தி இருவரும் இந்த வலைபதிவுக்கு வருகை தந்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்

அவர் செய்த விமர்சனத்தை அவர் அந்த நிகழ்ச்சியில் பாவித்த ஒரு வசனத்தேயே அவருக்கே பாவிக்கலாம் என்று நினைக்கிறன்

''என்ன மேட்டிமைத்தனம்''

இந்த 37 வருடங்களில் பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் எழுதியிருக்கிறார் .அவர் பாதைகளை .அதை மீள பார்க்க போய் விமர்சனம் செய்தால் . அவரே அவருக்கு இப்படி விமர்சனம் செய்ய வேண்டி இருக்கும்

அவருடைய கம்பு சுத்தலை கேட்க நகைச்சுவையாக இருந்தது ..சபையும் ரசித்து சிரித்தது ..நாங்களும் சிரித்தோம்
அவரின் கம்பு சுத்தலுக்கு வயது அனுபவமின்மையை தான் காரணம் காட்டியதாக நினைவு

மன்னிப்பு கேட்டதாக நினைவில்லை