இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, December 29, 2022
70 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் மழை -ஒலிவடிவம்
ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான நாடக நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்திய 70 நாடகங்களில் முதல் வெற்றி நாடகம் இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதிஅவர்கள் எழுதிய “மழை”.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1970 இல் எழுதப் பட்ட இந்த நாடகம் தமிழக சிறு சஞ்சிகையான “கசடதபற “ வில் முதல் பிரசுரமானது.
1994 இல் நடந்த சுவிஸ் நாடக விழாவிலும் , 2010இல் நடந்த சென்னைநாடவிழாவிலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் “மழை” நாடகம் மேடையேற்றப்பட்டது.
மழை நாடகம் 40 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகம் 23-09-1978 இல் இலங்கை வானொலியில் மேடை நாடக வரிசையில் ஒலி பரப்பானது.வானொலிக்கென தயாரித்தவர் கே எம் வாசகர் .
அந்த நேரத்தில் மேடை நாடகத்தில் நடித்தவர்களே வானொலி நாடகத்திலும் நடித்தார்கள்.
நடிகர்கள்:
பேராசிரியர் சந்திரசேகர் -இர ஸ்ரீநிவாசன்
ரகு - க பாலேந்திரா
நிர்மலா - ஆனந்தராணி ராஜரட்ணம் (பாலேந்திரா )
டொக்டர் -சுகந்தன் பிளாஞ்சார்ட்
Tuesday, December 06, 2022
Monday, December 05, 2022
Sunday, December 04, 2022
Subscribe to:
Posts (Atom)