வாசகர் வட்டம்

Wednesday, June 01, 2011

ரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்


அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.

இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.

ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.

70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.

வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.

ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்

ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.

.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.

யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..

அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...

ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம்
அவர்களைப் போல

Tuesday, May 31, 2011

கமல் முறையாக பாடுவதின் ரகசியத்தை சொல்லும் ஜேசுதாஸ்-வீடியோ

Monday, May 30, 2011

ஜானகியின் குரலில் அசத்தும் சீனர்-வீடியோ

Saturday, May 28, 2011

கருணாநிதி, கனிமொழி பற்றி ஹிந்தி டிவியில் தமாஷ்-வீடியோ

ரஜனி ரசிகர்களுக்கு இப்ப வழங்கிய குரல் வடிவமாம்-ஒலி வடிவம்

Wednesday, May 25, 2011

வைரமுத்து ..புரட்சி பெண்ணில்லைதான் ..அதுக்கு என்ன இப்ப?


நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றிய வைரமுத்து புரட்சி பெண்ணோ அல்லது புதுமை பெண்ணோ அல்ல, சாதாரணமான யதார்த்தமான பெண் தான்..அங்கு பங்கு பற்றிய வைரமுத்து திரைபடங்களில் உருவகபடுத்துகின்ற பெண்ணொன்று புயலாகிறது என்ற புரட்சி பாணியில் இல்லை தான்.மேலும் தொடர்புசாதனங்களினால் உருவகபடுத்தபட்டு உரு கொண்டு இருக்கும் நகர் புற பெண்களின் தங்களுக்குள் கொண்டிருந்த பொய்மையான ஆளுமையை அதில் உடைத்து எறிந்து இருக்கிறார் அவ்வளவு தான் அந்த நிகழ்ச்சியை மட்டும் பொருத்தவரையில் .அதை விட்டு விட்டு நகர் புற பெண்கள் இழந்த பண்பாடு கலாச்சாரம் அடக்கம் வெட்கம் அச்சம் போன்றவற்றை வைரமுத்து அதில் காட்டிவிட்டார்.அதனால் இந்த வைரமுத்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறை படும் பதிவுகள் அண்மையில் வெளியிடப் ப்ட்டிருந்தன.நிலபுரவுத்துவ அம்சமான வெட்கத்தை காட்டி விட்டார் ,,,அதனால் நிலபுரவுத்து மிச்ச சொச்ச அம்சங்களை காவி திரியும் வைரமுத்தை இந்த உள்ளூர் இளைஞர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு இளைஞர்களும் தூக்கி கொண்டாடுகிறார்கள் ...இவர்களுக்கு நிலபுரவுத்து அம்சமான ஆணாதிதக்க மனோபவம் தான் இவர்களையெல்லாம் இப்படி எல்லாம் ரசித்து கொண்டாட வைக்குது இன்னொரு குற்றச்சாட்டு வைரமுத்துக்கு எதிராக வைக்கப்பட்ட எதிர்வினை பதிவில்.


அந்த வைரமுத்துவில் நிலபுரத்துவ அம்சங்கள் நிரம்பி வழியுது என்று சொல்ல வந்த இந்த so call பெண்ணிய வாதிகள் ,மேற்கத்தைய கலாச்சரம் கூட ஒரு கட்டத்தில் முற்போக்கானது அதை தாண்டிய ஏகாதிபத்திய நசிவு கலாச்சாரத்தின் விம்பங்களாக அங்கு தோற்றமளித்து அதற்கும் ஆதரவாக பேசியவர்களை பற்றி எதுவும் அந்த பதிவுகள் எதையும் கூறவில்லை என்பது நல்ல வேடிக்கை . இந்த so call பெண்ணிய கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் நீண்ட காலத்துக்கு முன்னே இடம் பெற்று இருந்தன ..பெண்ணியவாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த சமூக அமைப்பிற்க்குள்ளையே ஒட்டு போட்டு சரி செய்து விட முடியும் என்று. ஆனால் வலுவான சரியான புரட்சிகர அரசியலுடன் இணைத்து ஒரு சமூக மாற்றத்துடன் தான் அவர்களின் முற்று முழுதான விடுதலையை பெற முடியும். ஆணாதிக்க சிந்தனை தனிப்பட்ட ஆணின் சிந்தனை அல்ல சமூக அமைப்பின் சிந்தனை ...இந்த விசயத்தை நீட்டி பேச விரும்பவில்லை இவை பற்றி நீண்ட காலமாக பலராலும் பேசிய விடயத்தை திரும்ப விவாதமாக மீண்டும் உருவாக்கி செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிக்க விரும்பவில்லை .

கறுப்பு வெள்ளை அழகு எல்லாம் இந்த மீடியாக்கள் மற்றும் ஆதிக்க சக்திகளின் உருவாக்கம்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் வாசித்த ஞாபகம் ஒரு கிராமத்து தேநீர் கடை ஒன்றின் வாங்கில் சிலர் அமர்ந்து இருக்கிறனர் அப்பொழுது நகர்புற இளம் பெண் ஒருத்தி வந்து பஸ் இலிருந்து இறங்குகிறா .அந்த வாங்கிலிருந்த ஒருவன் கூறுகிறான் மற்றவனிடம் பட்டணத்து பெண்கள் எல்லாம் எவ்வறவு அழகா சோக்கா இருக்கிறாங்கள் என்று ..அதுக்கு மற்றவன் கூறுகிறான் ,,,,எதுவுமே பார்க்க நல்லாகத்தான் இருக்கும் குட்டியிலே ....ஆடு மாடு கோழி இளமையில் வடிவாகத்தான் இருக்கு


அந்த வைரமுத்துவின் வீடியோவில் அழகு வெட்கம் வெகுளித்தனம் கறுப்பு எல்லாவற்றை பார்த்து எதிர்வினையாற்றிய பதிவர் அவர் அந்த வீடியோவில் தொடர்புசாதனங்களினால் வெளிச்சத்துக்கு கொண்டு வராத எங்கோ ஒரு மூலையில் வெளிச்சத்துக்கு வரமுடியாத பெண்களின் பிரநிதி ஒருவர் அந்த நிகழ்ச்சியை பொறுத்து வரையில் வெளிச்சமாக தெரியிறா என்பதை பார்க்க தவறி விடுகிறார்.

அப்படி என்னதான் சொல்லிவிட்டார் என்று கேட்கலாம்...வராத படிப்பை வா வா என்று கூறுகிறார்கள் எனக்கு பேச வருகுது பேச விடமாட்டார்களே என்ற ஆதங்க படுகிறார்....என்னத்துக்கு maths பாடமாக எடுத்தேன் என்று தனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார் ....கிராம்த்துக்கு ஒரு வழிகாட்டல் இல்லை என்று ஒரு பொது குரலாக ஏங்குகிறார்...பிரிட்டிஸார் தங்களின் குமாஸ்தா தேவைகளுக்கு ஏற்பட்ட காலனித்துவ கல்விமுறையினால் ஏற்படும் சிக்கல் அது தனி ஒரு பெண்ணை அழுத்தி பாதிக்கப்படுவது தொனிப்பதை காணவில்லையா .. சமூக எதிர்பார்ப்பை நிறேவற்றுவதற்க்கு அல்லது பணம் உழைப்பதையே குறியாக கொண்டு பெற்றோர்கள் அவர் மேலை திணித்து அவருடைய மற்றைய தனிப்பட் திறமையை மழங்கடிப்பதை கூறுவதை காணவில்லையா?

நகர்புற ஒரு பெண்ணின் உடையை பார்த்து கூறுகிறார் நம்ம ஊரிலை என்றால் கொன்னே போடுவாங்கள் ...அரை நிலவுடமை மிச்ச சொச்ச தாக்கத்தைத்தானே கூறுகிறார்

வியாபார டிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் உங்களுக்கு விவாத வெளிப்பாடாக ஒரு புரட்சி புண்ணாக்கு எல்லாம் கை ஓங்க விட்டுடுவாங்கள் என்று எதிர்பார்ப்பது எல்லாம் கேலி கூத்தாகும் ..அந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஏதாவது முற்போக்கு அம்சங்களால் ஏற்படும் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அக மகிழ்வு தான் பலருக்கு அந்த வைரமுத்துவின் வீடியோவில் பிடித்ததுக்கு காரணம் என நினைக்கிறேன்( இந்த அக மகிழ்வு எல்லாம் மத்திய தரவர்க்க குணாம்சம் அல்லது குட்டி பூர்ஷ்வா சிந்தனை என்று அந்த பொல்லு மூலம் அடிக்க வருவீங்கள் என்றால் ..ஒன்று தான் இப்ப சொல்ல முடியும் வடிவேலு பாணியில் சொல்லுவது என்றால் ..ரொம்ப அடிச்சீங்கள் என்றால் தாங்க மாட்டேன் ..அழு
து விடுவேன்

வைரமுத்து நீயா நானாவில் பேசிய விடயங்கள் பற்றிய தொகுப்பை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்


வைரமுத்து வீடியோவுக்கு எதிர் வினையாற்றிய பதிவிரின் இணைப்பை பார்க்க

யப்பானிய பேராசிரியர் ஒருவர் தமிழில் அளித்த பேட்டி -வீடியோ

Saturday, May 21, 2011

கமல் வாக்கு போட -கமரா கண்கள் துரத்திய பொழுது-வீடியோ

Thursday, May 19, 2011

கண்ணதாசன் பிறந்த ஊரில் ஒரு வைரமுத்து-வீடியோ

அதிக தேசிய விருதுகள் தமிழுக்கு -வீடியோ

Monday, May 16, 2011

யாழ் குடி மன்னர்களின் அவசர விண்ணப்பம் ஒன்று-வீடியோ




இந்த வீடியோ உதவி ..நன்றி -யாழ் இணைய புலவருக்கு ..இது பற்றிய விவாதங்களை பார்க்க இங்கே அழுத்தவும்

Sunday, May 15, 2011

பொம்பளை வைரமுத்து -நீயா நானா நிகழ்ச்சியில்




இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றி பேசிய கிராமத்து பொண்ணு வைரமுத்துவை அங்கு பங்கு பற்றிய பலருக்கும் பிடித்திருந்தது. அதன் மூலம் அவர்கள் வழங்கும் பரிசையும் பெற்றார். அங்கு பங்குபெற்றிய வேறு ஒருவருக்கும் பரிசு வழங்கும் போது பரிசு வழங்கும் தகுதியையும் பெற்றார் . அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது ..இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அந்த பொம்பளை வைரமுத்துவை கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் ..அந்த கிராமத்து பொண்ணு வைரமுத்துக்கு ...வாழ்த்துக்கள்

Saturday, May 14, 2011

75 வயது வாலிபரின் -யாழில் இப்ப புது வகை விளம்பர யுக்தி-வீடியோ

Friday, May 13, 2011

அரச குடும்ப திருமணத்தில் -ராக்கமாவும் தேவுடாவும் -வீடியோ



Tuesday, May 10, 2011

தாஜ்மஹாலை ஜால வித்தை மூலம் இல்லாமால் செய்த பொழுது -வீடியோ




There was "nothing supernatural" in this vanishing act, he said. "This is all science, the science of controlling the mind and the willpower to create a psychic balance with the environment."

இவை பற்றி பிபிசியில் கூறியவற்றை பார்க்க இங்கே அழுத்தவும்

Sunday, May 08, 2011

பிரித்தானிய அரச குடும்பத்தினர் எல்லாரும் இந்தியர்களாம்-வீடியோ

Saturday, May 07, 2011

ஒசாமா பின்லாடன் பற்றிய விவரணம் -தமிழில் -வீடியோ

Friday, May 06, 2011

கனடிய முதல் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா -வீடியோ

Thursday, May 05, 2011

உங்களுடைய பழக்கம் என்னவோ ..அது தான் எங்களுடையதும்-வீடியோ




best video of the year

Monday, May 02, 2011

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவிப்பு-வீடியோ