வாசகர் வட்டம்

Tuesday, July 30, 2013

மாற்றான் தோட்டத்து மல்லிகையென்றாலும் மணக்கதான் செய்யும்-வீடியோ

கீழே உள்ள மோடிக்கு பிரச்சராமான வீடியோவாக இருந்தாலும் இதில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ தான் . நானே இந்த வீடியோவை இணைக்கிறேனே எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எம்ஜிஆரின் கற்பனை அரசு எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்த சில காலத்தில் பின் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் நீங்கள் கூறின மாதிரி ஏன் அமுல் படுத்தவில்லை என்று .அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில் வங்களாத்தில் கம்னீயூஸ்ட் ஜோதிபாஸ் கூட சொல்லியிருக்கிறார் மத்திய அரசை மீறி மாநில அரசு ஒரு அளவுக்கு தான் செயல் பட முடியும் அதற்கு மேலே செயல் பட முடியாது இருக்கிறது என்று அந்த பதில் தான் எனக்கும் பொருந்தும் என்றார்.மோடியால் எப்படி இதை சாதிக்க முடிந்தது?

உந்த திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து திருவள்ளுவருக்கும் கண்ணகிக்கும் சிலை வைத்த தான் மிச்சம்

Saturday, July 27, 2013

நடிகை வைஜெயந்திமாலாவின் அம்மாவின்...அய்யயோ சொல்ல வெட்கம் ஆகுதே-வீடியோ


மங்கம்மா சபதம்(1943)என்ற திரைபடத்தில் வசுந்தரா தேவியின் அழகு நடனம் இது .இந்த நடனம் படத்தின் வெற்றியை உறுதி செய்தது..1943-ன் வாலிபர்களின் கனவு பாடல் இது

Friday, July 26, 2013

CCTV -யில் அகப்பட்ட ஸ்பெயின் ரயில் விபத்து-வீடியோ


ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர்.
நன்றி-one india tamil

Tuesday, July 23, 2013

கமலின் விஸ்வரூபம் 2 திரைபடத்தின் முன்னோட்டம் ?-வீடியோ

Thursday, July 18, 2013

என்றென்றும் வாலி-.வீடியோ

Friday, July 12, 2013

முன்பு ''JAFFNA'' ,,.பின்பு .''Madras Cafe'' என மாற்றப்பட்ட திரைபடத்தின் முன்னோட்டம்-வீடியோ

http://businessofcinema.com/news/new-poster-madras-cafe-john-abraham-guns-sri-lanka/82621

இ-மெயிலை கண்டு பிடித்த தமிழர் ...அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்-வீடியோ (don't miss)

Thursday, July 11, 2013

இளவரசன்!... அடுத்தடுத்த ..அதிர்ச்சிகள்..... -வீடியோ

Sunday, July 07, 2013

ஹாட்லி கல்லூரி(UK) SPORTS DAY(2013)-வீடியோ

Saturday, July 06, 2013

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?-வீடியோ

Wednesday, June 26, 2013

சென்னை அருகே எரிமலை?-வீடியோ

http://tamil.oneindia.in/news/2013/06/25/tamilnadu-is-there-volcano-about-100-110-km-from-chennai-177823.html

எஸ்.பி பாலசுப்பிரமணியம் ''ஓராயிரம் நிலவே வா'' என்றதுக்கு முன்னரா?-வீடியோ

Monday, June 24, 2013

WARRANT- சிறந்த குறும் படமாக விஜய் டிவி விருதுகளில் -வீடியோ

மணிவண்ணன் நடித்த சில நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பு -வீடியோ

Friday, June 21, 2013

கள்ளு கடை பக்கம் போகாதே -வீடியோ

Monday, June 17, 2013

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..கண்ணீருடன் மணிவண்ணன் பாரதிராஜாவை பற்றி-ஒலிவடிவம்

பாரதிராஜா ஆனந்தவிகடனில் மணிவண்ணன் பற்றி எழுதியது குறித்து இரு தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட கட்டுரை..

இயக்குநர் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா கூறியுள்ள பதில் மகா கேவலமாக அமைந்துள்ளது. பல வாசகர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். ‘சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். ‘நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!”

Friday, June 14, 2013

அமெரிக்க இந்திய யுவதிகளின் கலக்கல் மேடை நடனம் -வீடியோ