வாசகர் வட்டம்

Monday, October 17, 2011

விசரனை சந்தித்தேன்

லண்டனில் இன்று தமிழ் புத்தக சந்தை ஒன்று நடைபெற்றது .நல்ல முயற்சி என்று நினைத்து நானும் எனது வலைபதிவில் அது பற்றிய விபரம் போட்டிருந்தேன்.காலை பத்துமணியிலிருந்து இரவு 7 மணிவரையும் நிகழ்வு என்று அறிவித்திருந்தார்கள்.எனது எதிர்பார்ப்பு பிழையோ தெரியாது அப்படி எதிர்ப்பாத்து போன அளவுக்கு அங்கு புத்தங்கள் பார்வைக்கோ விற்பனைக்கோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு என்று  சொல்லுவாங்களே அதிலை எழுதிறனான் , சின்னக்குட்டி என்ற புனைப்பெயர் இருக்கு .என்று கூறினேன்...நாங்களும் இணையம் பார்க்கிறனான்கள் அப்படி உங்களை தெரிந்ததாக ஞாபகம் வரவில்லை என்றார்கள்.

 இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்..அங்கே ஆளவந்தான் ஸ்டைலில் முழு மொட்டையுடன் ஒரு சிலருடன்  பேசி கொண்டிருந்தார் ஒருவர்.அவரை எங்கையோ நெருக்க மாக பார்த்திருக்கிறேன் என்று எனது மூளை சொல்லி கொண்டிருந்தது, எங்கை என்று மொழி பெயர்க்க மறுத்து கொண்டிருந்தது.என்க்கென்னவோ அவர் நோர்வே இலிருந்து வந்திருக்க வேணும் மாதிரி என்று பட்டுது ஏனோ தெரியவில்லை .அவர் அருகில் போய் நீங்கள் நோர்வேயிலிருந்தா வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன் ,

,,ஓம் என்று சொன்னார்...எனக்கே ஆச்சரியமாய் இருந்தது எப்படி எல்லாம் அனுமானிக்கிறேன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருந்த பொழுது ..நீங்கள் சரவணன் தானே என்று கேட்டேன் ...நான் சரவணன் இல்லை எனக்கு சரவணனையும் தெரியும் என்றார் . நானும் விடுவதாய் இல்லை ஏன் என்றால் இந்த வலை பதிவுலத்தில் எங்கேயோ தான் இவரை சந்தித்து இருக்கிறன் என்று எனது உள் மனது தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தது.அதனால் திரும்ப கேட்டேன் நீங்கள் இந்த வலை பதிவுகளிலை தலை காட்டுறனீங்களோ என்று கேட்டேன் ..ஓம் என்று மகிழ்வுடன் கூறீனார் ,என்ன பெயர் என்று கூற முடியுமோ என்று கேட்டேன் ..சஞ்சயன் என்றார் ...எனது முக பாவம் அவருக்கு அப்படி என்ற பெயரை கேள்வி பட்டது இல்லை என்றது போல் பாவனை செய்திருக்க வேணும் ...தன்னை சுதாகரித்து கொண்டு விசரனை தெரியுமோ என்றார் (சாதாரணமானவனின் மனது என்ற தலைப்பில் எழுதும வலைபதிவர்அவர்)..தெரியுமாவது உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான் என்று கூறினேன் ...அப்ப தாங்கள் யாரோ என்று கேட்டார் .....ஏற்கனவே பலர் சின்னக்குட்டி யார் என்று தெரியாது என்று கூறிய அனுபவத்தால் ..தயங்கிய படி தான் கூறினேன் சின்னக்குட்டி என்ற வலை பதிவர் நான்  தெரியுமா என்று ? நல்லாய் தெரியுமே என்றார் ஒரு சந்தோச குறியோடு. கொஞ்சம் நேரம் பின்பு எனக்கு முன்பே தெரிந்த சபேசன் வந்திருந்தார் அவர் கவிஞர் இலக்கியவாதி மனித உரிமை ஆர்வலர் என்று அவருக்கு அப்படி பல அடை மொழி பின்னால் இடலாம் .. அவருக்கு அங்கு இருந்த எழுத்தாளர் இலக்கியவாதிகளை தெரிந்து இருந்ததால் ..அவரை சுற்றி நிறைய கூட்டம் அளவளவாகி கொண்டிருந்தது. அதிலும் நான் கொஞ்சம் நேரம்  நின்றிருந்தேன்.  தீப்ம் தொலைக் காட்சி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அனஸ் இவரை முன் பார்த்ததில்லை இவர் யார் என சபேசனிடம் வினாவினார்.அதற்கு சபேசன் உங்களை மாதிரி இவரும் எழுதிறவர் தான்  ஆனால் வலை பதிவில் எழுதிறவர் சின்னக்குட்டி அவருடைய பெயர் என்றார் ..அதற்கு..அனஸ் அப்படி ஒரு ஆளை நான் இதுவரை கேள்விபட்டது இல்லையே என்றார்....

 நோர்வையில் இருந்து வந்த விசரன் என்ற பெயரில் எழுதிற சஞ்சயனை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ,,,நான் ஊர் உளவராம் என்ற வலை பதிவு வைத்திருக்கு பொழுது என்னுடன் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னுடன் பழக விரும்பிய காலத்தில்..எனது முகமூடியை கழட்டாமால் தயங்கி அவர்களின் வேண்டுகோளை எல்லாம் அலட்சியம் செய்திருந்தேன்.. அதை நினைக்கும் பொழுது இப்பொழுது வேதனைப்படுகிறேன்...எனக்கு பிடித்தமான எழுத்தை எழுதும் விசரன் என்ற ஒரு வலை பதிவரை கண்ட மட்டற்ற மகிழச்சி ஒன்றே . அந்த புத்தக சந்தையில் பெற்றது ..அந்த ஒரு பாக்கியமாகவாது அங்கு கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் அங்கிருந்து விடை பெற்றேன்

விசரனின் வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்


புத்தக கண்காட்சி போய் வந்தது பற்றி விசரன் எழுதிய பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்

1 comment:

சஞ்சயன் said...

நம்மளப் பற்றி ஒரு பதிவா? கலிகாலம் என்பது இது தான். இருந்தாலும் நன்றிங்கண்ணா.
பி.கு. செக்ஸியான படம் போட்டதுக்கு ரசிகைகள் சார்பில் நன்றி.

நட்புடன்
விசரன்