இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Saturday, April 07, 2012
இலங்கை வானொலி புகழ் கோமாளிகள் திரைபட பாடல்கள் -வீடியோ
கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.
கீழே உள்ள வீடியோ துண்டத்திலுள்ளவை யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாரய்ச்சி மகாநாட்டில் அரங்கேற்றப்படது..இந்த வீடியோவில் கோமாளிகள் புகழ் மரிக்கார் ராம்தாஸ் உபாலி செல்வசேகரன் அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோர் பங்கு பற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment