<
இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Friday, December 30, 2011
Thursday, December 29, 2011
ஆறா வடு -சக வலை பதிவு நண்பர் சயந்தனின் நேர்காணல்-வீடியோ
வரும் ஜனவரி மாதம் சக வலபதிவர் நண்பர் சயந்தனின் ஆறா வடு என்ற நாவல் வெளி வருகின்றதாம் .தீபம் தொலைக்காட்சியில் சயந்தனை நேர் காணல் செய்திருந்தார்கள் ..அத்ன் வீடியோ இணைப்பு இது
Wednesday, December 28, 2011
Monday, December 26, 2011
மாலன் Vs மனுஷ்யபுத்திரன் -வீடியோ
மாலன் இப்படி இந்த புத்தகத்தை பற்றி இப்படி விமர்சித்து பேசியதுக்கு காரணங்களை அடுக்குகிறது.குமுதம் ரிப்போட்டர்..இந்த புத்தகத்தில் கமலஹாசனை மாலன் சன் டிவிக்காக எடுத்த பேட்டி பற்றி குறிப்படாததும் ..மற்றும் இந்த புத்தகத்தில் வரும் கமலஹாசன் சுஜாதாவுக்கும் இடையில் நடக்கு உரையாடலில் ,,,சுப்பிரமணி ராஜோ அல்லது மாலனோ எழுதிய கவிதையோ ஏதோ என்று நக்கல் தொனியில் இருப்பது தான் மாலன் இவ்வளவுத்துக்கு கடுப்பாயிருக்கிறார் என்கிறது. மனுஷ்யபுத்திரன் கூறிய பதிலுக்கு சபையோர் ஏகோபித்த வரவேற்பு கொடுத்ததை இந்த வீடியோ துண்டத்தில் காணக்கூடியதாயிருந்தது
Sunday, December 25, 2011
உனக்கு 4000 ...எனக்கு 1000 ...எப்படி இருக்கு இந்த டீல்?-வீடியோ
Friday, December 23, 2011
Thursday, December 22, 2011
Wednesday, December 21, 2011
Tuesday, December 20, 2011
Thursday, December 15, 2011
Tuesday, December 13, 2011
Monday, December 12, 2011
மோனே ..தமிழா கேரளத்தோடை கழிக்கண்டா..வீடியோ
Saturday, December 10, 2011
இவங்கள் எல்லாம் ஒன்னாயிருந்தாங்களா? சொல்லவே இல்லை?-வீடியோ
1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது.
இந்த வீடியோவில் உள்ளவர்கள் --- ரொமேஷ் பண்டாரி (முன்னாள் வெளிவிவாகார செயலாளர்) ,குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) – சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) – அமிர்தலிங்கம் (TULF) – உமாமகேஸ்வரன் (PLOTE) – வாசுதேவா (PLOTE) – வெற்றிச்செல்வன் (PLOTE) – கனகராஜா (PLOTE) – யோகி (LTTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – பிரபாகரன் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- – றொபர்ட் (TELO) – சிறீ சபாரட்னம் (TELO) – ? – ? – பத்மநாபா (EPRLF) – கேதீசுவரன் (EPRLF) – சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)
இந்த வீடியோவை இணைக்க அனுமதியும் மற்றும் தகவல்களும் தந்த அஜீவனுக்கு எனது நன்றிகள்
கார்த்திக் யெமன்னரு(yemannaru)?
ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "
Friday, December 09, 2011
Wednesday, December 07, 2011
Sunday, December 04, 2011
Friday, December 02, 2011
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
Sunday, November 27, 2011
Thursday, November 24, 2011
Tuesday, November 22, 2011
Monday, November 21, 2011
Saturday, November 19, 2011
ஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ
Ian Kiru Karan who was born in(துன்னாலை-கரவெட்டி) Point-Pedro in 1939, Studied at Hartley College(ஹாட்லி கல்லூரி) Point Pedro, moved to Germany in 1970 after studying in the United Kingdom — where he went on to build one of the world's biggest container leasing companies in Hamburg.
He was recently sworn in as Senator for Economic Affairs in Hamburg.
As an orphan from Sri Lanka, Ian Kiru Karan obtained a scholarship to study at the London School of Economics and later worked for the English branch of the logistics company, Schenker. Later, Karan moved to Hamburg in 1970, with no more than 3,000 DM with him.
Karan began life in Germany as a dishwasher in a vegetarian restaurant and later joined a container company as a clerk before being promoted to managerial level due to exceptional ability.
view-source:www.adobe.com/software/flash/about/
undefined
Friday, November 18, 2011
Thursday, November 17, 2011
Tuesday, November 15, 2011
Monday, November 14, 2011
Saturday, November 12, 2011
Thursday, November 10, 2011
Wednesday, November 09, 2011
Tuesday, November 08, 2011
Friday, November 04, 2011
Monday, October 31, 2011
Sunday, October 30, 2011
Saturday, October 29, 2011
Friday, October 28, 2011
Thursday, October 27, 2011
Tuesday, October 25, 2011
Monday, October 24, 2011
Saturday, October 22, 2011
Thursday, October 20, 2011
Wednesday, October 19, 2011
Monday, October 17, 2011
விசரனை சந்தித்தேன்
அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு என்று சொல்லுவாங்களே அதிலை எழுதிறனான் , சின்னக்குட்டி என்ற புனைப்பெயர் இருக்கு .என்று கூறினேன்...நாங்களும் இணையம் பார்க்கிறனான்கள் அப்படி உங்களை தெரிந்ததாக ஞாபகம் வரவில்லை என்றார்கள்.
இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்..அங்கே ஆளவந்தான் ஸ்டைலில் முழு மொட்டையுடன் ஒரு சிலருடன் பேசி கொண்டிருந்தார் ஒருவர்.அவரை எங்கையோ நெருக்க மாக பார்த்திருக்கிறேன் என்று எனது மூளை சொல்லி கொண்டிருந்தது, எங்கை என்று மொழி பெயர்க்க மறுத்து கொண்டிருந்தது.என்க்கென்னவோ அவர் நோர்வே இலிருந்து வந்திருக்க வேணும் மாதிரி என்று பட்டுது ஏனோ தெரியவில்லை .அவர் அருகில் போய் நீங்கள் நோர்வேயிலிருந்தா வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன் ,
,,ஓம் என்று சொன்னார்...எனக்கே ஆச்சரியமாய் இருந்தது எப்படி எல்லாம் அனுமானிக்கிறேன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருந்த பொழுது ..நீங்கள் சரவணன் தானே என்று கேட்டேன் ...நான் சரவணன் இல்லை எனக்கு சரவணனையும் தெரியும் என்றார் . நானும் விடுவதாய் இல்லை ஏன் என்றால் இந்த வலை பதிவுலத்தில் எங்கேயோ தான் இவரை சந்தித்து இருக்கிறன் என்று எனது உள் மனது தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தது.அதனால் திரும்ப கேட்டேன் நீங்கள் இந்த வலை பதிவுகளிலை தலை காட்டுறனீங்களோ என்று கேட்டேன் ..ஓம் என்று மகிழ்வுடன் கூறீனார் ,என்ன பெயர் என்று கூற முடியுமோ என்று கேட்டேன் ..சஞ்சயன் என்றார் ...எனது முக பாவம் அவருக்கு அப்படி என்ற பெயரை கேள்வி பட்டது இல்லை என்றது போல் பாவனை செய்திருக்க வேணும் ...தன்னை சுதாகரித்து கொண்டு விசரனை தெரியுமோ என்றார் (சாதாரணமானவனின் மனது என்ற தலைப்பில் எழுதும வலைபதிவர்அவர்)..தெரியுமாவது உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான் என்று கூறினேன் ...அப்ப தாங்கள் யாரோ என்று கேட்டார் .....ஏற்கனவே பலர் சின்னக்குட்டி யார் என்று தெரியாது என்று கூறிய அனுபவத்தால் ..தயங்கிய படி தான் கூறினேன் சின்னக்குட்டி என்ற வலை பதிவர் நான் தெரியுமா என்று ? நல்லாய் தெரியுமே என்றார் ஒரு சந்தோச குறியோடு. கொஞ்சம் நேரம் பின்பு எனக்கு முன்பே தெரிந்த சபேசன் வந்திருந்தார் அவர் கவிஞர் இலக்கியவாதி மனித உரிமை ஆர்வலர் என்று அவருக்கு அப்படி பல அடை மொழி பின்னால் இடலாம் .. அவருக்கு அங்கு இருந்த எழுத்தாளர் இலக்கியவாதிகளை தெரிந்து இருந்ததால் ..அவரை சுற்றி நிறைய கூட்டம் அளவளவாகி கொண்டிருந்தது. அதிலும் நான் கொஞ்சம் நேரம் நின்றிருந்தேன். தீப்ம் தொலைக் காட்சி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அனஸ் இவரை முன் பார்த்ததில்லை இவர் யார் என சபேசனிடம் வினாவினார்.அதற்கு சபேசன் உங்களை மாதிரி இவரும் எழுதிறவர் தான் ஆனால் வலை பதிவில் எழுதிறவர் சின்னக்குட்டி அவருடைய பெயர் என்றார் ..அதற்கு..அனஸ் அப்படி ஒரு ஆளை நான் இதுவரை கேள்விபட்டது இல்லையே என்றார்....
நோர்வையில் இருந்து வந்த விசரன் என்ற பெயரில் எழுதிற சஞ்சயனை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ,,,நான் ஊர் உளவராம் என்ற வலை பதிவு வைத்திருக்கு பொழுது என்னுடன் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னுடன் பழக விரும்பிய காலத்தில்..எனது முகமூடியை கழட்டாமால் தயங்கி அவர்களின் வேண்டுகோளை எல்லாம் அலட்சியம் செய்திருந்தேன்.. அதை நினைக்கும் பொழுது இப்பொழுது வேதனைப்படுகிறேன்...எனக்கு பிடித்தமான எழுத்தை எழுதும் விசரன் என்ற ஒரு வலை பதிவரை கண்ட மட்டற்ற மகிழச்சி ஒன்றே . அந்த புத்தக சந்தையில் பெற்றது ..அந்த ஒரு பாக்கியமாகவாது அங்கு கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் அங்கிருந்து விடை பெற்றேன்
விசரனின் வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்
புத்தக கண்காட்சி போய் வந்தது பற்றி விசரன் எழுதிய பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்
Friday, October 14, 2011
Wednesday, October 12, 2011
Monday, October 10, 2011
லண்டனில் october 16 அன்று தமிழ் புத்தக கண்காட்சியும் எழுத்தாளர்கள் சந்திப்பும்-வீடியோ
இடம்;-October 16, 2011 -10am to 7pm
Lord Brooke Hall,
Shernhall Street,
Walthamstow,(
E17 3EY.
வாசிப்பை தூண்டு நோக்குடன் மிக மலிந்த விலையிலும் வாசகர்கள் பெற்று கொள்ள வழிவகை செய்யும் நோக்குடனும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்ததாக மேற்படி உள்ள வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் அறிய கூடியதாய் இருக்கிறது .அத்துடன் எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பாக சந்தர்ப்பமாக அமையும் என கூறப்படுகிறது.வலை பதிவுகளின் வளர்ச்சி அண்மைக்காலங்களில் அதிகம் இருப்பதுடன் அதிக பெயர் எழுதுகிறார்கள்.இணைய எழுத்தாளர்களின் பங்களிப்பனையும் ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்த கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் .நல்லதொரு முயற்சி ..நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துவதோடு இந்நிகழ்வை பற்றி பலருக்கும் எமது பங்குக்கு அறிய செய்வோம் நன்றி
Sunday, October 09, 2011
Friday, October 07, 2011
Thursday, October 06, 2011
தமிழிலிருந்து சீனம் சென்ற அறிவு -வீடியோ
http://www.youtube.com/watch?v=GRTYgJ6I6zM&list=UUSP6RYspZpIXKO8vIZxfnqA&feature=plcp
Wednesday, October 05, 2011
Tuesday, October 04, 2011
தமிழில் முத்துராமன் ஹிந்தியில் சிவாஜி-வீடியோ
சிவாஜி நடித்த சிவந்தமண் திரைபடத்தின் ஹிந்தி பதிப்பின் சில காட்சிகள் தான் இவை ..சிவந்தமண்ணில் முத்துராமன் நடித்த காட்சிகளை சிவாஜி ஹிந்தி பதிப்பில் நடித்திருந்தார்..அவைகளின் காட்சிகள் தான் இவை..சிவந்தமண்ணில் முத்துராமன் நடித்த காட்சிகள் வெகுவாக அந் நேரம் பாரட்டு பெற்று இருந்தன...
முத்துராமன் சிவந்த மண்ணில் நடித்த காட்சி கீழே
Sunday, October 02, 2011
Friday, September 30, 2011
Tuesday, September 27, 2011
Sunday, September 25, 2011
Friday, September 23, 2011
Wednesday, September 21, 2011
Tuesday, September 20, 2011
மண்டியிடாத மானம் இந்த இளம் தமிழ் சிறுவனிடம்-வீடியோ
இலங்கை கல்வி அமைச்சரின் காலில் விழுமாறு தாய் தந்தையர் வற்புறுத்திய போதும் மறுத்து விட்டானாம் இந்த சிறுவன் ..பின் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இச்சிறுவன் தாய் தந்தையர் ஆசிரியர் போன்றவர்களிடம் அவசியம் ஏற்படின் காலில் விழுவேனே தவிர மற்றவர்கள் காலில் ஒரு போதும் விழமாட்டேன் என்று கூறினான்
Sunday, September 18, 2011
Friday, September 16, 2011
Wednesday, September 14, 2011
இனிமேல் கோலிவூட்டலையும் இருப்பாவாம் பொலிவூட்டலையும் இருப்பாவாம்-வீடியோ
Monday, September 12, 2011
Tuesday, September 06, 2011
Monday, September 05, 2011
Thursday, September 01, 2011
Monday, August 29, 2011
Sunday, August 28, 2011
Friday, August 26, 2011
Thursday, August 25, 2011
Sunday, August 21, 2011
Wednesday, August 17, 2011
Tuesday, August 16, 2011
Monday, August 15, 2011
Friday, August 12, 2011
இங்கிலாந்து ;கலவரமா ? கிளர்ச்சியா?
லண்டனில் தெருக்களில் கடந்த வார இறுதியில் தொடங்கிய so call வன்முறை இங்கிலாந்து பல பாகங்களிலும் பரவி இப்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.Darcus Howe என்ற கறுப்பின லண்டனிலும் வாழும் எழுத்தாளருடன் நேர்முக உரையாடலை பிபிசி தொலைகாட்சி அத்தருணம் நடத்தியது. நேர்முக உரையாடலின் பொழுது அறிவிப்பாளரின் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இவ் எழுத்தாளர் இதை கலவரம் என்று கூற மாட்டேன் இதை மக்கள் எழுச்சி என்றே தான் கூறுவேன் என பதிலளித்தார்.லண்டனில் கறுப்பு இனத்தவர் ஒருவர் தமிழ் நாட்டு என்கவுண்டர் பாணியில் சுட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் லண்டன் வாழும் கறுப்பு சமூகத்தனிரால் ஏற்ப்படுத்தப் பட்டட எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பட்டம் பின் கலவரமாக வெடித்தது .பல கடைகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன.உண்மையில் முதலில் கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் நகரங்களிலே உருவாகியது , பின் பல்லின மக்கள் வாழும் வேறு நகரங்களிலும் இந்த கடை உடைப்பு சூறையாடுதல் போன்றவை நடைபெற்றது.
இந்த கடையுடைப்பு சூறையாடுதல் போன்றவற்றில் ஏழு வயதுக்கும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் ஈடுபட்டார்கள் .இப்பொழுது பாடசாலை விடுமறை காலம் நீண்ட பகல் போன்றவை இந்த கலவரம் தொடர்ச்சியாக இலகுவாக நடைபெற சாதகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.இங்கிலாந்தில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அண்மை காலங்களாக அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன என கூறப்படுகிறது.அழகிய அலங்கார கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் தங்களுக்கு பார்ப்பதுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை அவர்களுக்கு இவ்வளவு காலம் இருந்திருக்கவேண்டும் .வலுவிழந்தவர்களாக தங்களை பற்றி நினைப்பில் இருந்தவர்கள் குழுவாக சேர்ந்து இயங்கும் பொழுது வலுவானவர்களாக தங்களை உணரும் நிலை ஏற்பட்டிருக்கலாம் .அதனால் அவர்களுக்கு இவ்வளவு காலம் எட்டாக்கனியாக இருந்த பொருட்களை அபகரிக்க துணிந்து இருக்கலாம் என்று பலவகையான காரணங்களை சமூக உளவியல் அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளுவோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் வறிய மக்களுக்கு வழங்கப்படும் சமூக உதவி கொடுப்பனவுகளில் கட்டுபாடுகள் குறைப்புகளை கொண்டு வந்தது அண்மையில் புதிதாக பதவிக்கு அமர்ந்த வலதுசாரிக்கட்சி ,அந்த கறுப்பு இனத்தவரை சுட்டு கொன்ற காரணத்தை விட ..மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் அடித்தட்டு மக்களின் சமூக நல கொடுப்பனவுகளில் கை வைத்தமை போன்றவையே இங்கிலாந்தின் வரலாற்றில் காணாத கலவரத்தை காணவேண்டிய நிலமை வந்தது என ஒரு சாரார் வாதாடுகின்றனர் .
பல காலமாக கறுப்பின மக்கள் மீது பாகுபாடு காட்டபடுகிறது என்று கூறப்படும் நிலையில் அதே நேரத்தில் அதிக குற்ற செயல்களில் அவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.அவர்கள் இப்படி ஈடுபடுவதற்க்கு காரணம் அவர்களுடைய கல்வியறிவு குறைபாடு நிறமூர்த்த அடிப்படை போன்றவற்றையை காரணம் கற்பிப்போரும் உளர் .அதில் உண்மை அல்ல என்பதுக்கு உதாரணம் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தான் கறுப்பு இனத்தவரிலும் பார்க்க குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.கறுப்பின மக்களின் குடி பரம்பல் ரோமானியா காலத்திலையே நிகழ தொடங்கி விட்டது .அதன் பின் அடிமைகளாகவும் போர் வீரர்களாகவும் இங்கு குடி புகுந்தனர் .அழகான பெண்கள் அழகற்ற ஆண்களையே எப்போதும் வைத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக கூறுவர்.வெள்ளை இனப் பெண்கள் கறுப்பின ஆண்களை விரும்பி ஜோடியாக தேர்ந்தெடுப்பதை அடிப்படையாக வைத்தே இதை கூறுவார்கள் .கறுப்பின ஆண்களால் இவர்கள் கட்டிலில் நன்கு கவனிக்கப்படுவதனால் விரும்புவதற்க்கு காரணம் என்று கூறிக்கொண்டாலும் இன்றும் நிறுவப்படாத உண்மையாக தான் இப்பொழுதும் இருக்கிறது.இவர்கள் பிரபலமான இசை பாடகர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதால் இவர்களின் நடை உடை பேச்சு முறைகளை அப்பட்டமாக கொப்பி அடித்து விரும்பி பின்பற்றுக்கிறார்கள் .ஏன் நம் இளைஞர்கள் கூட இவர்களின் நடை உடை பேச்சு போன்றவற்றை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானித்து இருக்கலாம்.
இது தன் முனைப்பு கிளர்ச்சியாக தான் ஆரம்பத்தில் இருந்தது ,பின் நன்கு திட்டமிடப்பட்டு பல இடங்களில் செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகிறது. துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் சமூக தொடர்பு இணையங்களான பேஸ்புக் ட்விட்டர் மூலம் போரட்டத்துக்கு அழைத்தது போல் இப்பொழுது இங்கிலாந்து நடந்த சம்பவத்துக்கு செய்திருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற சம்பவத்துக்கு ஊக்கமும் பாரட்டு கொடுத்த இங்கிலாந்து தனக்கே அந்த நிலை ஏற்படும் பொழுது செய்வதறியாமால் மிரளுகிறது.மேற்கத்தைய நாடுகள் தங்கள் அமைப்பின் பொய்மையான விம்பங்கள் மெல்ல மெல்ல நன்கு தெரிய தொடங்கி விட்டதை உணர்ந்து கொண்டன..அமெரிக்காவின் கடன் வாங்கு திறன் தர வரிசை குறைக்கப்பட்டமை ,பிரித்தானிய எந்த புதிய உற்பத்தி இன்றி வெறும் பண தரகராகவே இவ்வளவு காலமும் இருந்து வந்தது இனிமேல் எடுபடாது என்ற நிலைமை உருவாக்கி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் பொழுதெல்லாம் தமது இருப்பை காப்பற்றுவதற்க்கு அடிதட்ட மக்களின் இருப்பையை கை வைக்கிறது.இந்த எதிர்ப்பு முறை சரியே பிழையோ என ஒரு புறம் இருக்க இந்த கை வைப்புக்கு எதிராக திரள்வது தவிர்க்க முடியமால் இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாமால் இருந்திருக்காது.அதனால் அவர்கள் இரும்பு கரங்கள் கொண்டு அடக்க தயாராகவிட்டார்கள் என்று பிரதமர் அவர்களின் அண்மைய அறிக்கைகள் காட்டுகிறது.
இந்த கடை உடைப்பபில் வறியஇளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஈடுப்டவில்லை .பிரபல இங்கிலாந்து ஒலிம்பிக் வீராங்கனை ,பிரபல பாடசாலையில் படித்த பெரிய கோடிஸ்வரனின் மகள் ,பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற தண்டனை போதுமானதாக இல்லையென்று பொலிஸ் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது.இவர்கள் இப்படி கிளர்வதுக்குரிய அடிப்படை காரணத்தை கண்டறியமால் தண்டனை கொடுப்பதால் எதுவும் தீரப்போவதுமில்லை , குழப்பத்தில் ஈடுபடுவர்களும் தனது எதிரி யார் என சரியாக இனம் காணமால் இப்படி போராடுவதாலும் பலன் எதுவும் வரப்போவதுமில்லை.
இவை தொடர்பான விரிவான கலையரசனின் பதிவுhttp://kalaiy.blogspot.com/2011/08/blog-post_13.html
Sunday, August 07, 2011
Thursday, August 04, 2011
இராமய்யாவின் குடிசை -கீழ்வெண்மணி சம்பவ ஆவணப் படம் -வீடியோ
அறிஞர் அண்ணாவின் திமுக ஆட்சி காலத்தில் நடந்த கீழ்வெண்மணி சம்பவம் பற்றிய ஆவணப்படம் ராமய்யாவின் குடிசை.இவை பற்றியதை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதி புனல் நாவல் வெளிவந்தது நினைவிருக்கலாம். இந்த ஆவணபடத்தை பற்றிய மேலும் விபரங்களை அறியவிரும்பின் இங்கு அழுத்தி பார்க்கவும்
Tuesday, August 02, 2011
Friday, July 29, 2011
துக்க காரியத்துக்கு போய் துக்கமாக வந்தவர்கள்
இந்த 17 பேர் கொண்ட குழுவினர் பாரிஸ் நகரத்தில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளுவதற்க்காகவே இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் ,பொதுவாக இறுதி நிகழ்வுக்காக கலந்து கொள்ள போவதால் அவர்களுக்கு முகத்தில் ஒரு இறுக்கம் மற்றும் சலனம் இருப்பது வழமை அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் அந்த வாகனத்தின் முதலாளியும் சாரதியுமான அவருக்குத்தான் இறுக்கம் ஏனோ தெரியவில்லை அதிகம் இருந்தது வழமைக்கு மாறாகா.. .அந்த வாகனத்தில் பயணிப்பவர்களோடு எந்த உறவோ நட்புத்துவமோ காட்டதாவராகவே இருந்தார் .மேற்கு லண்டனில் தொடங்கிய பயணம் பிரித்தானிய எல்லை டோவர் துறைமுகத்தை கடந்து பிரான்ஸ் நாட்டை அடைந்தது..அந்த நாட்டுக்குள் பல மணி நேரம் ஓடியும் சலனமற்ற இறுக்கமான சாரதியாகவே இருந்தார்.இறுக்கமான சாரதியாக இருந்து விட்டு போகட்டுமே ஆனால் அந்த பிர\யாணிகளின் எந்த விதமான கோரிக்கைக்கும் செவி சாய்க்காமால் அல்லவா ஓடி கொண்டிருந்தார், பிரயாணம் செய்தவர்களில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்,ஒரே இடத்தில் தான் சாப்பிட நிறுத்தினார் குறுகிய கால அவகாசத்தை கொடுத்து . பாரிஸ் செல்லும் வரையும் பெண்கள் முதியவர்கள் சிறுநீர் கழிக்கும் மற்றும் தேவைகளுக்கு ஓரிடத்தில் நிறுத்தம்படி பல முறை கோரிக்கை வைக்கவும் அதை காதில் போட்டு கொள்ளமாலே ஓடி கொண்டிருந்தார்.
இறுதி சடங்கு முடிந்து அன்று பின்னேரமே லண்டன் திரும்பும் நோக்கில் அதே வாகனத்தில் அதே சாரதியின் இறுக்கத்துடன் திரும்பி கொண்டிருந்தார்கள் .மிகவும் களைப்புற்ற பெண்கள் மருந்து பாவிக்க வேண்டிய முதியவர்கள் மற்றும் பலர் ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தும் படி பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் காதில் விழாத மாதிரி ஓடிக் கொண்டு வந்தார். மேலும் உரக்க எல்லாருமே மீண்டும் கோரிக்கை வைக்க காதில் விழுந்ததோ என்னவோ, இப்படி திமிருடன் பதிலளித்தார். எனது வாகனம் நான் நிறுத்துவது நிறுத்தாதது எனது தீர்மானத்தில் தங்கியிருக்கிறது உங்களுடையதில் அல்ல என்று. தொடந்து பிரச்சனை தருவீர்கள் என்றால் பிரான்ஸ் நாட்டு எல்லை இமிக்கிரேசன் பொலிசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தினார்.சாரதியும் வாகன உரிமையாளருமானவரும் தமிழர் பயணிகளும் தமிழராக இருந்தும் ஒரு இணக்கத்து வர முடியுமால் .வெருட்டி பார்க்க என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை . .இவ்வளவுத்துக்கும் அத்தனை பேரும் பிரித்தானியா நாட்டு குடியுருமை கடவு சீட்டு வைத்திருக்கிறார்கள் . அப்படி இருந்தும் காலம் காலமாக வெருட்டி பயப்படுத்தி விளையாடிய அணுகுமுறையை இப்ப செலுத்தி பார்க்கிறார் அவர்.
அவர் வாகனத்தை நிறுத்தாமால் ஓடினாலும் விரும்பியோ விரும்பமாலோ ஓரிடத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் ...ஏனெனில் எரிபொருள் தேவைக்காக எரிபொருள் நிலையத்தில்.. எரிபொருள் நிலையத்தில் வைத்து சாரதியின் ஆணவ போக்கை அமைதியாகவும் பண்பாகவும் அப்பிரயாணிகளில் இருவர் தட்டி கேட்கின்றனர்.ஆனால் எதற்க்கும் மசிந்து கொடுக்காத சாரதி ..இரட்டிப்பு ஆணவ திமிர் போக்குடன் பதிலளிக்கிறார் .அந்த பதிலுக்கு பதில்
என வார்த்தைகளாக மாறியது.இது ஒரு சம்பவமாக கருதாமால் சாரதி அவர்களை பழி வாங்கும் வழியில் ஈடுப்பட்டார். எப்படியெனில் calais என்ற பிரான்ஸ் எல்லையில் பொலிசாரிடம் நியாயத்தை தட்டி கேட்ட இரு நபர்களையும் ஏற்றி செல்ல முடியாது என கூறினார் . பொலிசாரும் சாரதியின் தீர்மானம் தான் முடிவானது ,இது சிவில் சம்பந்த பட்ட விடயம் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டனர்.அந்த இருவரை ஏற்றிக்கொள்ளாவிட்டால் நாமும் அந்த வாகனத்தில் வரவில்லை என ஒட்டு மொத்த சக பிரயாணிகளும் வாகனத்தில் இருந்து இறங்கி விட்டனர். அதே இறுக்கத்துடன் ஆனால் அவர் மட்டும் அந்த வாகனத்தில் சாரதியும் பயணியுமாகி லண்டன் திரும்பி விட்டார்.
இவர்களை இறக்கி விட்ட இடமோ eurostar ரயிலுக்கு போகும் வாகனங்களை அனுமதிக்கும் இடம் .அந்த இடத்தில் பொது கழிப்பறையோ தங்குமிடமோ கடையோ எந்த வசதிகள் அற்ற இடம் பாசை தெரியாத இடம் . அத்துடன் நடை பயணிகளை அனுமதிக்கும் eurostar terminal க்கு போவதுக்கான எந்த நடை பாதைகளும் இருக்கவில்லை...இப்பொழுது அவர்களுக்கும் இன்னும் நிலமை சங்கடமாகி விட்டது.ஏதோ தற்சயலாக அகப்பட்ட வீதி காவல் பிரான்ஸ் பொலிசாரிடம் நிலமையை விளக்கி உதவி செய்யுமாறு வேண்டினர்.பொலிசார் டாக்ஸியை ஒழுங்குபடுத்தினர் அதன் மூலம் நடை பயணிகளின் terminalஜ அடைந்தனர் . ஆனால் அந்த டாக்சி அந்த இடத்துக்கும் இந்த இடத்துக்கும் மூன்று முறை ஓடியது பிரயாணிகளின் தொகை காரணமாக.
நடை பயணிகளின் terminalஜ அடையும் போது இன்னுமொரு சோகம் காத்திருந்தது. நள்ளிரவை கடந்தமயால் அவர்கள் லண்டன் சேருவதற்க்கு எந்த ரயிலும் இருக்கவில்லை . அதனால் அன்று இரவு முழுக்க அங்கேயே கழித்தார்கள்.மறுநாள் காலை டோவரை வந்து அடைந்து ஏதோ முறையில் வந்தடைந்தார்கள் ..அந்த பயணிகளின் சிலரின் கைப்பைகள் அந்த வாகனத்தில் சென்று விட்டன அந்த கைப்பைகளில் சிலர் கட்டாயம் நேரத்து நேரம் பாவிக்க வேண்டிய மருந்து வகைகளும் உள்ளடங்கி இருந்தன. இதனாலும் அவர்கள் மிகவும் அவதியுற்று மேற்கு லண்டன் வந்து சேர்ந்தார்கள்.
(இந்த குறிப்பிட்ட வாகனத்தை இதற்க்கு முன்னும் வாடகைக்கு அமர்த்திய பலர் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங்களை பெற்று கொண்டனர் என்று பின்னர் அறிந்து கொள்ள கூடியிருந்ததாம். அந்த வாகனத்தில் பிரயாணம் செய்த நண்பர் ஒருவர் குறிப்பிட்ட வாடகைக்குவாகனம் விடும் இந்த நிறுவனத்தை பற்றி ஊடகங்கள் மூலம் தெரிய படுத்தும் முயற்சியில் ஈடுப்ட்டு இருந்தார் .அது போல என்னையும் அணுகியிருந்தார் .அவரின் நியாயத்தை புரிந்து கொண்டு இப் பதிவை கொண்டு வந்துள்ளேன்) நன்றி)
வாடகை வாகன நிறுவனத்தின் பெயர் -GOWRI TOURS neasden
Gowri Tours
-Hired 17 seats vehicle with driver from the above named company to attend a funeral in France on 19/07/2011.
- The journey started from Perivale at 8.00 pm on 18/07/2011 and arrived at Euro star terminal in Dover and took train at 10.50pm.
- Travelling time in the tunnel was 35 minutes and continue the travel until a stop for food break in a service station at 13.30 (Europe time)
- Reached destination near Chat de Gaulle airport 5.00 am (non stop)
- Funeral started at 12.00 noon and finished around 4.00pm
- At about 5.00 pm we started our journey back to UK from the crematorium.
- Number of requests made by us to stop the vehicle to buy refreshments before get the Motorway but not stopped.
- The driver continued his driving for 2 hours and stopped at a filling station
- We asked the driver politely why you didn’t stop the vehicle at a convenient place for refreshment and shopping. He said that this is my company and I can stop only to my convenience and not yours. If you ask or talk anymore, I will report to you to the police and immigration then you all got no chance to go tonight back to UK
- As he warned us when we arrived at the passports check point at Calais Euro Tunnel he complained to the British Police and Immigration officer that he has problem with two passengers and I won’t take them in my vehicle and leave here. The follow passengers didn’t agree these conditions so he took all bags in the back and gone with some bags inside the vehicle with valuables and medicines.
- It was a remote area no shops or public toilets. We asked French police to help us to go to Calais foot passenger terminal to continue our journey to UK. Helped arrived from French Police after one hour of waiting to cross the check point backwards and hired 3 trips of taxi service to the terminal at 10.30 at our costs.
- Foot passenger terminal closed 10.00 pm and we were told the next ferry on the following day 0640hrs.
- We waited there until morning without food, water and sleep. Among us seven women most are on regular medication with various illnesses. We starved even without water and proper rest.
- We bought ticket for ferry in the morning at our own costs and finally arrived Perivale at 12.00noon on Wednesday 20/07/2011 by using coach and minicabs.
- We had gone through lot of struggle by this company and also hearing from others of various complaints. We need your help to investigate this company and find way to compensate our sufferings and losses. We strongly believe that this company has broken your licensing conditions by held us in the vehicle for unreasonable length of time, not to allowed for toilets, left us without food or drink, left us in a scaring and frighten unknown language area, left our children kept in UK with relatives for too long, couldn’t go to work, phone calls from caring people, loss of money for unforeseen expenses. The driver was also looked tired and weak driven the vehicle on his own without proper break and rest. We feared for his reckless driving and told him to taking care of our and his life too.
(ஊடக தர்மத்தின் அடிப்படையில் .அவர்கள் தரப்பு நியாயங்களை கூறுவார்களானால் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்)
Thursday, July 28, 2011
Wednesday, July 27, 2011
Friday, July 22, 2011
Thursday, July 21, 2011
Wednesday, July 20, 2011
Monday, July 18, 2011
Saturday, July 16, 2011
Friday, July 15, 2011
Wednesday, July 13, 2011
நித்தியின் சித்து விளையாட்டு இல்லையாம்..அது SUN TV யின் உடையதாம்-நடிகை ரஞ்சிதா-வீடியோ
இந்த மாற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது அந்தரங்கத்தையும், மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று தனது மனுவில் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்திகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இருந்தும் முதல் முதலாக அந்த வீடியோவை கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது சன் குழுமம் என்பதால் அதன் மீது புகார் அளித்துள்ளதாக ரஞ்சிதா தெரிவித்தார்.
கடந்த ஆண்டே தான் இந்த ஊடகங்கள் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் இது குறித்த வழக்கை ஏற்று நடத்த வழக்கறிஞர்கள் முன்வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
நன்றி- பிபிசி தமிழ்
Sunday, July 10, 2011
Wednesday, July 06, 2011
Monday, July 04, 2011
Friday, July 01, 2011
Thursday, June 30, 2011
Wednesday, June 29, 2011
Tuesday, June 28, 2011
தற்கொலை முயற்சியை முறியடித்த ஜப்பானிய முத்தம்-வீடியோ
பாலத்தின் மேல் இருந்து தற்கொலை முயற்சி கொண்டிருந்த ஒரு இளைஞன் ஒருவனை எப்படி தடுப்பது என்று பொலிசார் திணறிக் கொண்டிருந்தனர் ..அத் தருணத்தில் 19 வயது யுவதி ஒருவர் அவ் இளைஞனிடம் சென்று பேச்சு கொடுத்து முத்தம் கொடுத்து திசை திருப்பினார்.அச் சமயம் அவ் இளைஞன் தடுமாற அச் சந்தர்ப்பத்தை பாவித்து பொலிசார் சூழ்ந்து கொண்டனர் . அவ் யுவதி இப்ப அந்த நகரத்தில் கதாநாயகியாக மக்களால் பார்க்க படுகிறாவாம்
Monday, June 27, 2011
வதிரி சி.ரவீந்திரனின் மீண்டு வந்த நாட்கள் வெளியீட்டு விழாவில்-வீடியோ
Tuesday, June 21, 2011
Saturday, June 18, 2011
அப்ப பெப்சி உமாவுக்கு ..இப்ப சுஹாசினிக்கு வலைபதிவர்கள் மேல் அலர்ஜி-வீடியோ
எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம் இணைய தள எழுத்தாளர்கள். அவர்களை கேட்பாரில்லை, சொல்வாரில்லை. தணிக்கை இல்லை, தரமும் இல்லை. கையில் ஒரு கணினியும் ஒரு எலியும் இருப்பவர்கள் எல்லோருமே மேதாவிகள். விமர்சகர்களாக மாறி பெரியவர்களை, சிறியவர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்து, திட்டி தீர்க்கிறார்கள். ஒரு வகையில் இணையதளம் மனிதனின் வக்கிரத்திற்கு வடிகாலாக மாறி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
மேலே உள்ள விடயம் அண்மையில் நடிகை சுஹாசினி வலை பதிவர்களை பற்றி கூறிய கருத்து ..மேதாவிகள் விமர்சகர்கள் என்று நினைப்பவர்கள் சுஹாசினியை போன்றவர்கள் தான் ...எம்மை போல சாதாரணர்கள் கூட மேதாவிகள் விமர்சகர்ளாக உண்மையில் வந்து விடுவார்களோ என்று பயப்படுகிறா போலை . காரணமற்ற வலைபதிவர்களின் மேலுள்ள பயம் தான் இப்படி எல்லாம் திட்டி தீர்க்க வேண்டி இருக்கு ...அந்த பயமே வாழ்க..
இதே போலத்தான் காரணமற்று ..சில வருடங்களுக்கு முன்னர் பெப்சி உமாவும் காரணமற்ற பயத்தில் வலை பதிவர்கள் மேல் பாய்ந்திருந்தா அந்த வீடியோ கீழே இருக்கு பார்க்கவும்
Tuesday, June 14, 2011
1999 திரைபட இயக்குனர் லெனின்-சிவமுடன் உரையாடல்-வீடியோ
லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.
விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.
டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான்.
அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..
படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.
குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்
இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது
(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)
Monday, June 13, 2011
Thursday, June 09, 2011
Wednesday, June 08, 2011
Tuesday, June 07, 2011
துப்பட்டாவுக்குள் ஒளிந்து ஓடிய யோகா குரு பாபா ராம்தேவ்-வீடியோ
உண்ணாவிரமிருந்த யோகா குரு பாபா ராம்தேவை கைது செய்ய முயன்ற பொலிசாரிடமிருந்த தப்ப முயலும் நோக்குடன் யாரும் எதிர்பாராதவரையில் உயரமான மேடையிலிருந்து கீழே குதித்து இருக்கிறார் .பின் கூட்டத்துடன் கலந்து அதன் பின் பெண்கள் கூட்டத்துக்குள் கலந்து பெண்கள் அணியும் உடையை அணிந்து கொண்டு துப்பட்டாவிற்க்குள் முகத்தை மறைத்து தப்பி கொள்ள முயற்சி செய்த பொழுதும் பொலிசாருடன் மாட்டி கொண்டார்
Monday, June 06, 2011
Saturday, June 04, 2011
Wednesday, June 01, 2011
ரஜனியை பற்றிய எனது சில குறிப்புக்கள்
அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.
இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.
ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.
70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.
வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.
ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்
ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.
.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.
யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..
அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...
ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப் போல
Tuesday, May 31, 2011
Monday, May 30, 2011
Saturday, May 28, 2011
Wednesday, May 25, 2011
வைரமுத்து ..புரட்சி பெண்ணில்லைதான் ..அதுக்கு என்ன இப்ப?
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றிய வைரமுத்து புரட்சி பெண்ணோ அல்லது புதுமை பெண்ணோ அல்ல, சாதாரணமான யதார்த்தமான பெண் தான்..அங்கு பங்கு பற்றிய வைரமுத்து திரைபடங்களில் உருவகபடுத்துகின்ற பெண்ணொன்று புயலாகிறது என்ற புரட்சி பாணியில் இல்லை தான்.மேலும் தொடர்புசாதனங்களினால் உருவகபடுத்தபட்டு உரு கொண்டு இருக்கும் நகர் புற பெண்களின் தங்களுக்குள் கொண்டிருந்த பொய்மையான ஆளுமையை அதில் உடைத்து எறிந்து இருக்கிறார் அவ்வளவு தான் அந்த நிகழ்ச்சியை மட்டும் பொருத்தவரையில் .அதை விட்டு விட்டு நகர் புற பெண்கள் இழந்த பண்பாடு கலாச்சாரம் அடக்கம் வெட்கம் அச்சம் போன்றவற்றை வைரமுத்து அதில் காட்டிவிட்டார்.அதனால் இந்த வைரமுத்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறை படும் பதிவுகள் அண்மையில் வெளியிடப் ப்ட்டிருந்தன.நிலபுரவுத்துவ அம்சமான வெட்கத்தை காட்டி விட்டார் ,,,அதனால் நிலபுரவுத்து மிச்ச சொச்ச அம்சங்களை காவி திரியும் வைரமுத்தை இந்த உள்ளூர் இளைஞர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு இளைஞர்களும் தூக்கி கொண்டாடுகிறார்கள் ...இவர்களுக்கு நிலபுரவுத்து அம்சமான ஆணாதிதக்க மனோபவம் தான் இவர்களையெல்லாம் இப்படி எல்லாம் ரசித்து கொண்டாட வைக்குது இன்னொரு குற்றச்சாட்டு வைரமுத்துக்கு எதிராக வைக்கப்பட்ட எதிர்வினை பதிவில்.
அந்த வைரமுத்துவில் நிலபுரத்துவ அம்சங்கள் நிரம்பி வழியுது என்று சொல்ல வந்த இந்த so call பெண்ணிய வாதிகள் ,மேற்கத்தைய கலாச்சரம் கூட ஒரு கட்டத்தில் முற்போக்கானது அதை தாண்டிய ஏகாதிபத்திய நசிவு கலாச்சாரத்தின் விம்பங்களாக அங்கு தோற்றமளித்து அதற்கும் ஆதரவாக பேசியவர்களை பற்றி எதுவும் அந்த பதிவுகள் எதையும் கூறவில்லை என்பது நல்ல வேடிக்கை . இந்த so call பெண்ணிய கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் நீண்ட காலத்துக்கு முன்னே இடம் பெற்று இருந்தன ..பெண்ணியவாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த சமூக அமைப்பிற்க்குள்ளையே ஒட்டு போட்டு சரி செய்து விட முடியும் என்று. ஆனால் வலுவான சரியான புரட்சிகர அரசியலுடன் இணைத்து ஒரு சமூக மாற்றத்துடன் தான் அவர்களின் முற்று முழுதான விடுதலையை பெற முடியும். ஆணாதிக்க சிந்தனை தனிப்பட்ட ஆணின் சிந்தனை அல்ல சமூக அமைப்பின் சிந்தனை ...இந்த விசயத்தை நீட்டி பேச விரும்பவில்லை இவை பற்றி நீண்ட காலமாக பலராலும் பேசிய விடயத்தை திரும்ப விவாதமாக மீண்டும் உருவாக்கி செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிக்க விரும்பவில்லை .
கறுப்பு வெள்ளை அழகு எல்லாம் இந்த மீடியாக்கள் மற்றும் ஆதிக்க சக்திகளின் உருவாக்கம்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் வாசித்த ஞாபகம் ஒரு கிராமத்து தேநீர் கடை ஒன்றின் வாங்கில் சிலர் அமர்ந்து இருக்கிறனர் அப்பொழுது நகர்புற இளம் பெண் ஒருத்தி வந்து பஸ் இலிருந்து இறங்குகிறா .அந்த வாங்கிலிருந்த ஒருவன் கூறுகிறான் மற்றவனிடம் பட்டணத்து பெண்கள் எல்லாம் எவ்வறவு அழகா சோக்கா இருக்கிறாங்கள் என்று ..அதுக்கு மற்றவன் கூறுகிறான் ,,,,எதுவுமே பார்க்க நல்லாகத்தான் இருக்கும் குட்டியிலே ....ஆடு மாடு கோழி இளமையில் வடிவாகத்தான் இருக்கு
அந்த வைரமுத்துவின் வீடியோவில் அழகு வெட்கம் வெகுளித்தனம் கறுப்பு எல்லாவற்றை பார்த்து எதிர்வினையாற்றிய பதிவர் அவர் அந்த வீடியோவில் தொடர்புசாதனங்களினால் வெளிச்சத்துக்கு கொண்டு வராத எங்கோ ஒரு மூலையில் வெளிச்சத்துக்கு வரமுடியாத பெண்களின் பிரநிதி ஒருவர் அந்த நிகழ்ச்சியை பொறுத்து வரையில் வெளிச்சமாக தெரியிறா என்பதை பார்க்க தவறி விடுகிறார்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார் என்று கேட்கலாம்...வராத படிப்பை வா வா என்று கூறுகிறார்கள் எனக்கு பேச வருகுது பேச விடமாட்டார்களே என்ற ஆதங்க படுகிறார்....என்னத்துக்கு maths பாடமாக எடுத்தேன் என்று தனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார் ....கிராம்த்துக்கு ஒரு வழிகாட்டல் இல்லை என்று ஒரு பொது குரலாக ஏங்குகிறார்...பிரிட்டிஸார் தங்களின் குமாஸ்தா தேவைகளுக்கு ஏற்பட்ட காலனித்துவ கல்விமுறையினால் ஏற்படும் சிக்கல் அது தனி ஒரு பெண்ணை அழுத்தி பாதிக்கப்படுவது தொனிப்பதை காணவில்லையா .. சமூக எதிர்பார்ப்பை நிறேவற்றுவதற்க்கு அல்லது பணம் உழைப்பதையே குறியாக கொண்டு பெற்றோர்கள் அவர் மேலை திணித்து அவருடைய மற்றைய தனிப்பட் திறமையை மழங்கடிப்பதை கூறுவதை காணவில்லையா?
நகர்புற ஒரு பெண்ணின் உடையை பார்த்து கூறுகிறார் நம்ம ஊரிலை என்றால் கொன்னே போடுவாங்கள் ...அரை நிலவுடமை மிச்ச சொச்ச தாக்கத்தைத்தானே கூறுகிறார்
வியாபார டிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் உங்களுக்கு விவாத வெளிப்பாடாக ஒரு புரட்சி புண்ணாக்கு எல்லாம் கை ஓங்க விட்டுடுவாங்கள் என்று எதிர்பார்ப்பது எல்லாம் கேலி கூத்தாகும் ..அந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஏதாவது முற்போக்கு அம்சங்களால் ஏற்படும் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அக மகிழ்வு தான் பலருக்கு அந்த வைரமுத்துவின் வீடியோவில் பிடித்ததுக்கு காரணம் என நினைக்கிறேன்( இந்த அக மகிழ்வு எல்லாம் மத்திய தரவர்க்க குணாம்சம் அல்லது குட்டி பூர்ஷ்வா சிந்தனை என்று அந்த பொல்லு மூலம் அடிக்க வருவீங்கள் என்றால் ..ஒன்று தான் இப்ப சொல்ல முடியும் வடிவேலு பாணியில் சொல்லுவது என்றால் ..ரொம்ப அடிச்சீங்கள் என்றால் தாங்க மாட்டேன் ..அழுது விடுவேன்
வைரமுத்து நீயா நானாவில் பேசிய விடயங்கள் பற்றிய தொகுப்பை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்
வைரமுத்து வீடியோவுக்கு எதிர் வினையாற்றிய பதிவிரின் இணைப்பை பார்க்க
Saturday, May 21, 2011
Thursday, May 19, 2011
Monday, May 16, 2011
Sunday, May 15, 2011
பொம்பளை வைரமுத்து -நீயா நானா நிகழ்ச்சியில்
இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பற்றி பேசிய கிராமத்து பொண்ணு வைரமுத்துவை அங்கு பங்கு பற்றிய பலருக்கும் பிடித்திருந்தது. அதன் மூலம் அவர்கள் வழங்கும் பரிசையும் பெற்றார். அங்கு பங்குபெற்றிய வேறு ஒருவருக்கும் பரிசு வழங்கும் போது பரிசு வழங்கும் தகுதியையும் பெற்றார் . அந்த பெண் வைரமுத்து பேசும் போது ஓரிடத்தில் கூறினார்...வராதா படிப்பை வா வா என்றாங்கள்...எனக்கு பேச வருகுது .பேசக் கூடாது கூடாது என்கிறாங்களே என்று அந்த இடம் பிடித்திருந்தது ..இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாருக்கும் அந்த பொம்பளை வைரமுத்துவை கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் ..அந்த கிராமத்து பொண்ணு வைரமுத்துக்கு ...வாழ்த்துக்கள்
Saturday, May 14, 2011
Friday, May 13, 2011
Tuesday, May 10, 2011
தாஜ்மஹாலை ஜால வித்தை மூலம் இல்லாமால் செய்த பொழுது -வீடியோ
There was "nothing supernatural" in this vanishing act, he said. "This is all science, the science of controlling the mind and the willpower to create a psychic balance with the environment."
இவை பற்றி பிபிசியில் கூறியவற்றை பார்க்க இங்கே அழுத்தவும்
Sunday, May 08, 2011
Saturday, May 07, 2011
Friday, May 06, 2011
Thursday, May 05, 2011
Monday, May 02, 2011
Saturday, April 30, 2011
Friday, April 29, 2011
Thursday, April 28, 2011
Sunday, April 24, 2011
ஹாட்லிக் கல்லூரியின் (UKகிளை)நாதவினோதம்(24.04.11)-வீடியோ
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது.
எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் ..தொடர்ந்து ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவரும் லண்டன் ஜபிசி வானொலியில் அறிவிப்பாளருமான தினேஷ் தொடர்ந்து தனது மதுரக் குரலால் நெறிப்படுத்தினார்.மேலே உள்ள வீடியோ கிளிப் அந்த நிகழ்ச்சியின் இடைவேளையின் பொழுது எடுக்கப்பட்டது.