வாசகர் வட்டம்

Wednesday, December 25, 2013

லிட்டில் இந்தியா ,சிங்கப்பூர் கலவரம் -வீடியோ

http://ta.wikipedia.org/wiki/2013_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Tuesday, December 24, 2013

80களில் பட பிடிப்புகளின் பொழுது -வீடியோ

Saturday, December 21, 2013

1998 ஆண்டு நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனின் உரை-வீடியோ

Friday, December 20, 2013

சகாயம் ஜ.ஏ.எஸ் அதிகாரி பேச்சு.-வீடியோ







என்னை எத்தனை முறை மாற்றினாலும் நான் கவலைபடாமல் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் எனது பணியை செய்கிறேன்" என கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் கூறினார்.

Wednesday, December 18, 2013

'''இங்கிருந்து'' - இலங்கையின் மலையக மக்களின் வாழ்வியல் போரட்டத்தை சித்தரிக்கும் திரைபடம் -வீடியோ



பிபிசி தமிழோசையில் இடம் பெற்ற இந்த திரைபட நெறியாளிரின் செவ்விக்கான இணைப்பு கீழே

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131216_upcountryfilm.shtml

இலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் 'இங்கிருந்து' முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக பேசப்பட்டுவரும் இனப்பிரச்சனை என்ற சொல்லாடல் மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக 'இங்கிருந்து' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமதி சிவமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டினார்.
மலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு 'அடிப்படை மூலம்' என்று சுமதி சிவமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
தேயிலைத் தோட்டத்தை கதைக் களமாகக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களை நடிகர்களாகப் பயிற்றுவித்து, இலங்கையின் முன்னணி திரைத்துறைக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை வரலாற்றுப் பின்னணியுடன் அணுகியுள்ளதாக சிவமோகன் கூறினார்.

இங்கிருந்து- திரைப்படத்தின் இயக்குநர் சுமதி சிவமோகன்

மலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சனைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
இந்தியத் தலைநகர் தில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் 'இங்கிருந்து' திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சனைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி -பிபிசி தமிழோசை

இந்த திரைபடம் பற்றிய மேலும் விவரங்கள் தாங்கிய பதிவின் இணைப்பு கீழே
http://sivasinnapodi.wordpress.com/2013/12/18/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-from-here-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

Saturday, December 14, 2013

MIRACLE DO HAPPEN -ரஜனிகாந்த் அழுகிறார்-வீடியோ


Wednesday, December 11, 2013

கெட்ட பய சார் அவன்-ரஜனி (மீள் பதிவு)


அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.

இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.

ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.

70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.

வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.

ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்

ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.

.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.

யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..

அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...

ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் 
அவர்களைப் போல

Sunday, December 08, 2013

ஒரு மனிதன் பிறந்தான் என்ற கதை -வீடியோ

Thursday, December 05, 2013

நெல்சன் மண்டலா காலமானார் ..அவருக்கு வயது 94-வீடியோ

Tuesday, December 03, 2013

ஏய் மாமா நீ ஒரு கோமாளி தான்..''கோமாளிகள்''-இலங்கை திரைபடத்திலிருந்து-வீடியோ


மேலே உள்ள பாடல் கோமாளிகள் என்ற இலங்கை திரைபடத்திற்க்காக கண்ணன் -நேசம் குழுவினரால் இசையமைக்கப்பட்டது.மரிக்கார் ராம்தாஸின் இலங்கை வானோலியில் தொடராக வந்த கோமாளிகள் என்ற நாடகமே திரைபடமாக்க பட்டது

கீழே உள்ள பாடல்கள் பிரபல சிங்கள நடிகர்களான விஜயகுமாரதுங்கா (முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் கணவர்) மாலினி பொன்சாகா நடித்த இலங்கை தமிழ் படமான பனிமலரில் இடம் பெற்றது.


Monday, December 02, 2013

இவர் தான் நாயகன் திரைபடத்தின் ''REAL HERO''-வீடியோ



வரதராஜன் முனுசாமி முதலியார்

Varadarajan Muniswami Mudaliar,  also known as Vardhabhai (1926--1988) was a Tamilian from Chennai, Tamil Nadu, who rose to become a mafia don in Mumbai, India. Most active in the 1970s, he was the link in the underworld history between old time mafia men such as Haji Mastan. He is also known as One of Mumbai's dreaded Criminal underworld kingpin.

Friday, November 22, 2013

யாழ்ப்பாணத்தில் ஒரு நாள்-வெளிநாட்டு யாத்திரிகினின் பார்வையில்-வீடியோ

இந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு யாத்திரிகன் யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அனுபவத்தை படம் பிடிக்கிறான் . அதில் ஒரு இடத்தில் மதிய உணவு உண்ண ஹோட்டலுக்கு சென்ற பொழுது சாப்பிட்ட முடிந்த பின் கைதுடைக்க ,வாய் துடைக்க முந்திய பழைய பேப்பர் துண்டு கொடுப்பது பற்றி கூறுகிறான்.
இப்படி கூறும் பொழுது ஒன்று நினைவுக்கு வருகிறது 25 அல்லது 30 வருடங்கள் முன்னர் எழுத்தாளர் மணியன் விகடன் பத்திரிகையுடன் முரண்பட்டு இதயம் பேசுகிறது என்ற வாரந்தர பத்திரிகையை தொடக்கி அதற்கு ஆசிரியாராகிறார் , விகடனில் பல நாடுகளுக்கு சென்று பயண கட்டுரை எழுதி இருக்கிறார். அது போல தன்னுடைய இதய பேசுகிறது பத்திரிகை தொடங்கிய பின்னர் இலங்கை பயண கட்டுரை எழுதி இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணமும் வந்து யாழ்ப்பாண்த்தை பற்றியும் எழுதி இருந்தார்.

அப்பொழுது தான் அவர் இந்த உலகம் சுற்றி நாடுகளை பற்றி எழுதுவது பற்றி தெரிய வந்தது.அவரது வண்டவாளங்கள் தெரிய வர யாழ் வாசிகளிடம் இருந்து விமர்சனத்தை எதிர் கொண்டார். மேலே உள்ள வீடியோ வில் சொன்ன யாத்திரிகன் மாதிரி உள்ளதை சொல்லாமால் கிண்டலாக சொல்லி இருந்தார் . அவர் அவரது பயணக்கட்டுரையில் இப்படி எழுதுகிறார் நான் யாழில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன் சாப்பிட போனேன் சாப்பிட்டு முடிந்த பின் பணியாள் ஒரு துண்டு பேப்பரை நீட்டினார் . நான் படிக்க தருகிறார் என்று நினைத்து வேண்டினேன் .அது ஒரு பழைய செயதி பத்திரிகையின் துண்டு பேப்பர். ஏனப்பா பழைய பேப்பராக தருகிறாய் என்று கேட்டேன் ..அதற்கு அந்த பணியாள் வாசிக்கவில்லை கை துடைக்க என்று கூறி சென்றார் இப்பிடி எழுதி கொண்டு போகிறார்.

(இப்படி மணியன் சொல்வதால் ஒரு கேள்வி எழுகிறது தமிழ் நாட்டில் பழைய பத்திரிகை பேப்பர் இப்படி கை துடைக்க கொடுப்பதில்லையா என்று?)

மணியன் தனது இதயம் பேசுகிறது ஏஜன்டாக தம்பித்துரை அன்சன்ஸ் இடம் வர்த்தகம் பேச வந்த இடத்தில் யாழ் பயணக்கட்டுரை எழுதியதை பார்த்து யாழ் வாசிகள் கிண்டலோ
கிண்டல் அடித்தது ஞாபகம் வருகிறது.

Saturday, November 16, 2013

மாமா ...மாப்பிளே...என்று அசலும்... அசத்தும் நகலும்-வீடியோ



Monday, November 11, 2013

ஜெயமோகனின் இன்றைய பிதற்றலுக்கு அன்றே கண்ணதாசனின் பதில்-வீடியோ

Saturday, November 09, 2013

தமிழ் நடிகர்களும் அவர்கள் குடும்பமும் Unseen Collections-வீடியோ

Wednesday, November 06, 2013

கமலின் மருதநாயகம் திரைபடத்தை எலிசபத் மகாராணி ஆரம்பித்து வைத்த பொழுது-வீடியோ

Tuesday, October 22, 2013

சினிமா.....சினிமா...- இளையராஜாவின் சினிமா நூற்றாண்டு ஸ்பெசல்-வீடியோ

Monday, October 14, 2013

பெற்றோருக்கு தெரியாத குழந்தைகளின் உலகம் -நீயா நானாவில்-வீடியோ

Sunday, October 13, 2013

I TOLD SO! -காரல் மார்க்ஸ்-அமெரிக்க பொருளாதாரம்-வீடியோ


Saturday, October 12, 2013

Wednesday, October 02, 2013

''சிவாஜி'' ஒரு பண்பாட்டியல் குறிப்பு- பேராசிரியர் கா . சிவத்தம்பி


Saturday, September 28, 2013

கோமாளிகள்,ஏமாளிகள்,புதியகாற்று,அனுராகம்,தென்றலும் புயலும்-இலங்கை தமிழ் திரைபட பாடல்கள்-வீடியோ

இதில் கோமாளிகள் ஏமாளிகள் மரிக்கார் ராமதாஸ் அப்புக்குட்டி ராஜகோபால்,அப்துல் ஹமீது, உபாலி செல்வசேகரன் நடித்து இருந்தார்கள்.புதியகாற்று விபி கணேசன் நடித்திருந்தார் .இவர் இலங்கையின் பிரபல தென்னிலங்கை தமிழ் அரசியல் வாதி மனோகணேசனின் தகப்பனாவார் .அனுராகம் படத்தின் கதாநாயகன் பெயர் ஞாபகமில்லை முக்கிய பாத்திரத்தில் கே.எஸ் பாலசந்திரன் நடித்திருந்தார். தென்றலும் புயலும் முழுமையான் தென்னிந்திய தமிழ் திரைபட சூத்திரத்துக்கு அமைவாக முயற்சி செய்து அந்த தரத்துக்கு வந்த படம் என்று நினைக்கிறேன், கீழே உள்ள சில படத்துக்கு அந்த காலம் யாழில் பிரபல இசை குழுவினராக இருந்த கண்ணன் -நேசம் இரட்டையர் இசை அமைத்து உள்ளனர்


















Monday, September 23, 2013

ரஜனிகாந்த் -''சிங்க நடை போட்டு ஓரமா நில்லு''''' இது தான் காலமப்பா'''-வீடியோ

Wednesday, September 18, 2013

1986 ஆண்டு -நடிகர் VIJAY யின் வசந்தராகம்-வீடியோ


Friday, September 13, 2013

டிஜிட்டல் தொழிட்பத்தில் நினைத்தாலே இனிக்கும் -முன்னோட்டம்-வீடியோ



ABBA, BONIEY M போன்ற முழு நீள பாடல்கள் அமைந்த படங்களை போல தமிழில் பாலசந்தரால் உருவாக்க படம் தான் நினைத்தாலே இனிக்கும் . இது 34 வருடங்களுக்கு பிறகு தற்பொதைய டிஜிட்டல் முறைக்கு மாற்ற பட்டு விரைவில் வெளியிட இருக்கிறதாம் ...அதனுடைய முன்னூட்டம் தான் மேலே

Friday, September 06, 2013

நவீன நாடக இயக்குனர் பாலேந்திராவின் நேர்முகம்-வீடியோ



  பாலேந்திராவின் அவைகாற்று கழக நாடக குழுவில் எனது பால்ய காலத்து நண்பனான ராஜ்குமாரும் நீண்ட காலம் இணைந்திருந்தது
ஞாபகம் வருகிறது . ஆனால் அவன் இப்பொழுது இவ்வுலகில் இல்லை

http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post_3460.html

Friday, August 30, 2013

50 யிலும் ஆட வரும் -சிறீதேவி Vs பிரபு தேவா நடனம்-வீடியோ


Thursday, August 22, 2013

மதறாஸ் 1960 களில்-பிரஞ்சு டைரக்டர் Louis Malle யின் பார்வையில்-வீடியோ

Wednesday, August 21, 2013

காதல் ஒரு கண்ணாம் பூச்சி கலவரம்- 61 வயது இளைஞனின் சூப்பர் ஆட்டமும் பாட்டும் -வீடியோ

அழகேசன் என்ற ஒருவர் விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் 4 ..நிகழ்ச்சி பாடுவது பற்றி அறிந்து இருப்பீர்கள்... அவர் தாளம் தப்பி பாடுவதாக சில விமர்சனங்கள் இருந்தாலும் அருமையான குரல் அவருக்கு ... அவரை பற்றி ஹிந்து இணையத்தில் கட்டுரை ஒன்று வந்துள்ளது அதை பார்க்க விரும்பின் கீழே
http://www.thehindu.com/features/metroplus/a-super-ride/article4724222.ece

Saturday, August 17, 2013

Tuesday, August 13, 2013

அட...இவ்வளவு நல்லவனா.. நீ ?- வீடியோ

Friday, August 09, 2013

அடுப்படி குறூப் நடனம்-வேம்படி மகளிர் கல்லூரி அந்த கால இளசுகளின்-வீடியோ

Sunday, August 04, 2013

இலங்கையில் உருவாக்கப்பட் யதார்த்த தமிழ் திரைபடம் ''' பொன்மணி'' ,,ஓரு,முன்னோட்டம்-வீடியோ

 

 

பொன்மணி - 1977ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் டைரக்சன் செய்யப்பட்டது .இந்த திரைபடத்தில் சித்திரலேகா மெளனகுரு திருமதி கைலாசபதி மற்றும் எழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் நடித்து உள்ளனர் ..இத்திரைபடம் சர்வதேச திரைபட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது. ..திரையிடப்பட்டு யாழ்  தியேட்டரில் மூன்றோ நான்கு நாட்களே மட்டுமே ஓடிய ஞாபகம் .இத்திரைபடம் பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்
http://www.ourjaffna.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA

Saturday, August 03, 2013

அக்ரஹாரத்தில் கழுதை ( Donkey in a Brahmin Village ) முழு திரைபடம் -வீடியோ

ஜாண் ஆபிரகாம் என்ற புகழ் பெற்ற மலையாள டைரக்டர் மற்றும் வெங்கட் சாமிநாதன் அவர்களாலும் திரை கதை எழுதப்பட இந்த திரைபடம். தேசிய விருது பெற்றது. எம்ஜிஆர் ஆட்சியில் அப்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர் எம் வீரப்பன் அவர்கள் இத் திரைபடத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று சொல்லி இந்த திரைபடத்தை தடை செய்தார்.தடை செயதது மட்டுமல்ல இத்திரைபட சுருளை அதிகார வர்க்கம் ஏதோ முறையில் முயற்சி செய்து எரித்து விட்டதாக கூட செய்தி வந்தது .இந்த திரைபடம் சம்பந்தமாக -மேலும் அறிய விரும்பினால் கீழுள்ள இணைப்புகளை அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள்

http://sugunadiwakar.blogspot.co.uk/2007/01/blog-post_14.html

http://cinemaanma.wordpress.com/2008/10/02/546/

http://icarusprakash.wordpress.com/2009/08/13/agraharathill-kazutha/

Tuesday, July 30, 2013

மாற்றான் தோட்டத்து மல்லிகையென்றாலும் மணக்கதான் செய்யும்-வீடியோ

கீழே உள்ள மோடிக்கு பிரச்சராமான வீடியோவாக இருந்தாலும் இதில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ தான் . நானே இந்த வீடியோவை இணைக்கிறேனே எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எம்ஜிஆரின் கற்பனை அரசு எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்த சில காலத்தில் பின் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் நீங்கள் கூறின மாதிரி ஏன் அமுல் படுத்தவில்லை என்று .அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில் வங்களாத்தில் கம்னீயூஸ்ட் ஜோதிபாஸ் கூட சொல்லியிருக்கிறார் மத்திய அரசை மீறி மாநில அரசு ஒரு அளவுக்கு தான் செயல் பட முடியும் அதற்கு மேலே செயல் பட முடியாது இருக்கிறது என்று அந்த பதில் தான் எனக்கும் பொருந்தும் என்றார்.மோடியால் எப்படி இதை சாதிக்க முடிந்தது?

உந்த திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து திருவள்ளுவருக்கும் கண்ணகிக்கும் சிலை வைத்த தான் மிச்சம்

Saturday, July 27, 2013

நடிகை வைஜெயந்திமாலாவின் அம்மாவின்...அய்யயோ சொல்ல வெட்கம் ஆகுதே-வீடியோ


மங்கம்மா சபதம்(1943)என்ற திரைபடத்தில் வசுந்தரா தேவியின் அழகு நடனம் இது .இந்த நடனம் படத்தின் வெற்றியை உறுதி செய்தது..1943-ன் வாலிபர்களின் கனவு பாடல் இது

Friday, July 26, 2013

CCTV -யில் அகப்பட்ட ஸ்பெயின் ரயில் விபத்து-வீடியோ


ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர்.
நன்றி-one india tamil

Tuesday, July 23, 2013

கமலின் விஸ்வரூபம் 2 திரைபடத்தின் முன்னோட்டம் ?-வீடியோ

Thursday, July 18, 2013

என்றென்றும் வாலி-.வீடியோ

Friday, July 12, 2013

முன்பு ''JAFFNA'' ,,.பின்பு .''Madras Cafe'' என மாற்றப்பட்ட திரைபடத்தின் முன்னோட்டம்-வீடியோ

http://businessofcinema.com/news/new-poster-madras-cafe-john-abraham-guns-sri-lanka/82621

இ-மெயிலை கண்டு பிடித்த தமிழர் ...அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார்-வீடியோ (don't miss)

Thursday, July 11, 2013

இளவரசன்!... அடுத்தடுத்த ..அதிர்ச்சிகள்..... -வீடியோ

Sunday, July 07, 2013

ஹாட்லி கல்லூரி(UK) SPORTS DAY(2013)-வீடியோ

Saturday, July 06, 2013

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?-வீடியோ

Wednesday, June 26, 2013

சென்னை அருகே எரிமலை?-வீடியோ

http://tamil.oneindia.in/news/2013/06/25/tamilnadu-is-there-volcano-about-100-110-km-from-chennai-177823.html

எஸ்.பி பாலசுப்பிரமணியம் ''ஓராயிரம் நிலவே வா'' என்றதுக்கு முன்னரா?-வீடியோ

Monday, June 24, 2013

WARRANT- சிறந்த குறும் படமாக விஜய் டிவி விருதுகளில் -வீடியோ

மணிவண்ணன் நடித்த சில நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பு -வீடியோ

Friday, June 21, 2013

கள்ளு கடை பக்கம் போகாதே -வீடியோ

Monday, June 17, 2013

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..கண்ணீருடன் மணிவண்ணன் பாரதிராஜாவை பற்றி-ஒலிவடிவம்

பாரதிராஜா ஆனந்தவிகடனில் மணிவண்ணன் பற்றி எழுதியது குறித்து இரு தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட கட்டுரை..

இயக்குநர் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா கூறியுள்ள பதில் மகா கேவலமாக அமைந்துள்ளது. பல வாசகர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். ‘சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். ‘நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!”

Friday, June 14, 2013

அமெரிக்க இந்திய யுவதிகளின் கலக்கல் மேடை நடனம் -வீடியோ

so call சுதந்திரத்துக்கு முந்திய இலங்கை பத்திரிகையின்-வீடியோ

Thursday, June 13, 2013

பறி போகிறதா .. இணையதள பயன்பாட்டளர்களின் சுதந்திரம்?

நடிகமணி வைரமுத்து அவர்களின் அரிசந்திர மயானகாண்டம-வீடியோ


Wednesday, June 12, 2013

நாகரிக கோமாளி-சிரிக்க சிந்திக்க ஒரு மேடை நிகழ்ச்சி-வீடியோ

Tuesday, June 11, 2013

நக்கீரன் பத்திரிகையின் 25 வருட ஆவண படம் -வீடியோ

நந்தன் தெருக்கூத்து -கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைபடத்தில்-வீடியோ


கீழ்வெண்மணி சம்பவத்தை மையமாக இந்திரா பார்த்தசாரதியினால் எழுதப்பட்ட நாவல் குருதிப்புனல். அதை அடிப்படையாக கொண்டு வந்த திரைபடம் தான் கண் சிவந்தால் மண் சிவக்கும் அந்த முழு திரைபடம் கீழே

Saturday, June 08, 2013

உங்கள் ஆழ் மனத்தை RE PROGRAM செய்ய விரும்பின்-வீடியோ

சென்னையில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட லண்டன் இலங்கை தம்பதியர்கள்-வீடியோ

Friday, June 07, 2013

FACE BOOK வரமா? சாபமா? -வீடியோ

Wednesday, June 05, 2013

இது பொடியன் ரஜனியின் ஹிந்தி பக்கம் -வீடியோ

பாலிவூட்டில் கமல் பிரபலமாகி பல படங்களில் நடித்து பாராட்டும் புகழும் பெற்று கொண்டிருந்ததை பொறுக்க முடியாத வடகத்தைய வாலாக்கள் முக்கியமாக அமிதாப் பச்சன் ரஜனியை ஹிந்தியில் அறிமுகமாக்கி கமலை வடக்கிலிருந்து துரத்துவதில் வெற்றியடைந்தார். கடைசியிலை ரஜனியையும் துரத்தி விட்டார்கள்......என்று கிசு கிசு பாணியிலான் செய்தி அப்ப வந்தது

Monday, June 03, 2013

இரண்டிலிருந்து....ஜம்பது வரை -வீடியோ

Saturday, June 01, 2013

Tuesday, May 28, 2013

A Gun & A Ring என்ற புலம் பெயர் தமிழரின் திரைபடம் ..சர்வதேச திரைபட விழாவின் தங்க கோப்பை போட்டிக்கு தெரிவு-வீடியோ

புலம்பெயர் தமிழரின் உழைப்பில் கனடாவில் உருவான A Gun & A Ring ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில்

உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) கனடியத் தமிழர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A GUN & A RING.

112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து போட்டிப் பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து A GUN & A RING உட்பட 12 படங்கள் மட்டுமே Golden Goblet(தங்கக் கோப்பை) விருதுக்கான போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.

2013 ஜூன் 15-23 வரையில் சீனாவின் ஷாங்காய் நகரில் விழா நடைபெறுகின்றது.

இப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் தான் ''1999'' என்ற திரைபடத்தை ஏற்கனவே எடுத்து பல சர்வதேச விருதுகளை பெற்று கொடுத்தார்

1999 திரைபடம் லண்டனில் திரையிடபட்ட பொழுது அதை பற்றிய விமர்சனம் எழுதி இருந்தேன் அதை பார்க்க விரும்பின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்

http://sinnakuddy.blogspot.co.uk/2011/06/1999.html

Monday, May 27, 2013

இருக்கு என்றுவாங்க..இல்லை .மனிதனிட்டை. ஆனால்.இந்த ஜீவனிட்டை இருக்கு பாருங்க-வீடியோ

எட்டு மாதங்களின் பின் கண்ட எஜமானிடம் தனது அன்பை பொழியும் ஜீவன்

Saturday, May 25, 2013

டி .எம். செளந்தரராஜன் அவர்களின் - NON STOP SONGS- அவரின் நினைவாக-வீடியோ

Wednesday, May 22, 2013

Tuesday, May 21, 2013

70 ,80 கால கட்டங்கள் பொற் காலமா?-வீடியோ

70 80 களின் காலம் பொற்காலம் என்று ஒரு சாராரும் ,மறுபக்கத்தில் வேதனையே மறு சாராரும் இருந்து விவாதிக்கும் நீயா நானா நிகழ்ச்சி பார்க்க கிடைத்தது.பங்கு பற்றிய இரு சாரரும் ஒரே கால கட்டத்த்தினர் அவரவர் கருத்துகளை அவர் அவர் கூறும் பொழுது இருசாராரும் உன்னிப்பாக ரசித்து அனுபவித்து அந்த காலத்துக்கு சென்று கொண்டிருந்தினர்.

நல்லதோ கெட்டதோ சந்தோசமோ வேதனையோ எப்படியோ அது பொற்காலம் என்று தண்டரோ போட்டு சொல்ல முடியாவிட்டாலும் என்னவென்று கூற முடியாத உணர்வு ஒன்று மனதை தாலட்டி அந்த காலத்தோடை அடிக்கடி ஒன்றிணைத்து வைத்து கொண்டிருப்பதால் பார்த்து கொண்டிருந்த எனக்கும் அந்த நிகழ்ச்சியோடு சங்கமித்தித்த்து ஆச்சரியமான விசயமில்லை தானே

அதில் விருந்தின பேச்சாளர் ஒருவராக வந்திருந்த கவிஞர் மகுடேஸ்வரன் கூறிய ஒரு கருத்து 70 80 களில் நடைபெற்ற சம்பவம் ஒவ்வொன்றும் மனதில் ஞாபகமாக அச்சாணியாக பதிந்து இருக்கிறது..மற்றய காலகட்டது நினைவுகள் ஞாபகம் இல்லாமால் இருப்பது மட்டுமின்றி....வேகமாக நகர்ந்த மாதிரி இருக்கிறது என்றார். அது என்னை பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருந்திய மாதிரி இருந்த்து..அந்த கால கட்ட நினைவுகளை இப்பொழுதும் சரியாக நினைவுட்ட முடிகிறது மற்ற கால கட்டத்தினிலும் பார்க்க..

காலனித்து வாதிகள் இந்திய உபகண்டத்துக்கு சீதனமாக கொடுத்து விட்டு போன இந்த கிரிக்கட் விளையாட்டில் அந்த காலம் முற்போக்கு பிற்போக்கு பேதமின்றி மிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இந்த விவாதத்தில் பங்கு பெற்றிய ஒரு ஒருவர் அந்த காலம் கிரிக்கட் வர்ணணை கேட்கும் விதம் பற்றி கூறி இருந்தார் . நண்பர்கள் சுற்றி இருக்க ஒரே ஒருவர் கேட்டு கொண்டு அந்த வர்ணணையை இக்காலத்தில் இருப்பது மாதிரி நேர்முக படபிடிப்பில் வரும் உணர்வை கொண்டு வருவார் என்று.

நாங்களும் இதே மாதிரி தான் சிறிய றேடியோவை வைத்து கிரிக்கட் கொமண்டிறி கேட்டது ஞாபகம் இந்தியாவில் அப்பொழுது பெரு நகரங்களான பம்பாய்,கல்கத்தா, சென்னை ,டெல்லி பெங்களூர்,கான்பூர் இடங்களில் டெஸ்ட் கிரிக்கட் நடக்கும். சென்னை தவிர மற்ற இடங்களில் நடக்கும் டெஸ்ட் வர்ணணைகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் 15 நிமிடத்துக்கு ஒரு முறை மாறி மாறி தான் கேட்க முடியும் .... கிரிக்கட் ஆர்வத்தால் எங்களுக்கு ஹிந்தி சொல்ல சொல்லுகள் கூட தெரிந்து கொள்ளுவோம் ..இப்படி அந்த கால கட்டத்து மனதில் சொறியும் நினைவுகளை இப்படி கனக்க சொல்லலாம் ....கீழே அந்த பொற் கால விவாத வீடியோ பார்த்து உங்களுக்கும் அப்படி ஒரு சொறியும் நினைவுகள் இருந்தால் சொல்லுங்கோ

Monday, May 20, 2013

ப்பா ..எப்படிங்க இணையம் இல்லா காலத்தில் இப்படி சுட்டிருக்காங்க?-வீடியோ

Thursday, May 16, 2013

சிவாஜி கணேசனின் ..கண்டி அரசன் கூத்து -வீடியோ

calculator கூட தோற்கும் இந்த தமிழ் சிறுவன் போடும் மன கணக்கு முன்-வீடியோ

Wednesday, May 15, 2013

CEYLON POP SONG-MS Fernando வின் '''கன்னி அவள் இடையினிலே''' -வீடியோ

Saturday, May 11, 2013

100 வயது காணும் இந்திய சினிமாவில் தமிழ் திரைபடங்களின் பங்கு-வீடியோ

Monday, May 06, 2013

86 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை-வீடியோ

Sunday, May 05, 2013

KARL MARX பிறந்த நாள் இன்று- வீடியோ

Saturday, May 04, 2013

எழுத்தாளர் சுஜாதா விருது 2013 -நிகழ்வு -வீடியோ

Tuesday, April 30, 2013

மேதினம்- வீடியோ

Wednesday, April 24, 2013

'''அய்யோ கொல்லுறாங்களே ''..2001 இல் கலைஞரை கைது செய்த பொழுது-வீடியோ

2001 இல் கருணாநிதி கைது செய்யபட்ட விபரங்களை மேலும் அறிய விரும்பின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்

http://truetamilans.blogspot.com/2011/08/2001.html

Monday, April 22, 2013

'''அலை பாயுதே கண்ணாவாம் ''' இந்த பெண்மணியும்-வீடியோ

நிஜ '''' அவள் ஒரு தொடர் கதை''' மாதிரியான நாயகிகள்-வீடியோ

Friday, April 19, 2013

சமூக வலைதளங்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியா? சன் நியூஸ் விவாத மேடை -வீடியோ

Wednesday, April 17, 2013

கமலஹாசனின் சிங்கப்பூர் நேரடி மேடை நிகழ்ச்சி -வீடியோ

Sunday, April 07, 2013

லண்டனில் நடந்த 40 வது இலக்கிய சந்திப்பு(06.04.13)-வீடியோ

Saturday, April 06, 2013

முதல்வன் ரகுவரன் பாணியில் மோடியும் டிவி நேர்முகத்தில்-வீடியோ

Friday, April 05, 2013

Monday, April 01, 2013

வேர் களை-இலங்கையில் உள்ள சாதிகள் பற்றிய ஆவணப்படம்-வீடியோ

BREAKING NEWS-பலருக்கு இன்று சென்றடைந்த விநோத தொலைபேசி அழைப்புக்கள் -வீடியோ

(01.04.2013)....பொறுத்து கொள்ளுங்கள் ..புரிஞ்சுக்குவீங்க என்று நம்புகிறேன்..

Tuesday, March 26, 2013

இலக்கியமும் திரைபடமும் -வீடியோ

Saturday, March 23, 2013

Friday, March 22, 2013

மனதுக்கு புத்துணர்வு தரும் தப்பாட்டம்-வீடியோ

Tuesday, March 19, 2013

நடிகர் சுரேஷின் வாக்கு மூலம் ..வாழ்க்கையின் ஏற்ற இறக்கம் பற்றி-வீடியோ

Monday, March 18, 2013

முட்டாள் பயல்களே...கோபத்தை ஒரு அப்பாவியிடமா காட்டுறது?-வீடியோ

Thursday, March 14, 2013

உங்களை ஹிப்னொசிஸ் செய்து பார்க்க விரும்புகிறீர்களா?( தமிழில்)-வீடியோ

Saturday, March 02, 2013

61 வயதிலும் தள்ளாடாத குரல்-வீடியோ

புலம் பெயர் வாழ்வு- வலி சூழ்ந்த வாழ்வென நான் நினைக்கலை-வீடியோ

Wednesday, February 27, 2013

முகவரி இல்லாத அவல பயணம் -வீடியோ

Saturday, February 23, 2013

Friday, February 15, 2013

சிதறியது எரி நட்சத்திரம்---400 பேர் காயம் ரஸ்யாவில்-வீடியோ

Wednesday, February 13, 2013

தொடக்க இசை - அந்த கால காலை 7;30 மணி ஞாபகம் வரும்-வீடியோ

Tuesday, February 12, 2013

எமது சினிமா...இந்திய சினிமாவோ அல்லது சிங்கள சினிமாவோ அல்ல-வீடியோ

இவர் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனும் வடமாரட்சி அல்வாயை பிறப்பிடமாக கொண்டவர் என்று மேற் காணும் வீடியோவில் குறிப்பிடப் படுகிறது

Monday, February 11, 2013

உலகம் பேசும் ஓரே மொழி FACE BOOK நீ தானே-வீடியோ

இது இலங்கை கலைஞரின் படைப்பு

Wednesday, February 06, 2013

மறைந்த மூத்த சக வலைபதிவர் டோண்டு சார் ஜெயா டிவிக்கு அளித்த நேர்முகம்-வீடியோ


மூத்த வலைபதிவாளர் டோண்டு சார் அவர்களின் மறைவு அறிந்து சக வலைபதிவாளர் பிரபா ..எழுதிய வலைபதிவு கீழை இருக்கிறது பார்க்க
http://www.madathuvaasal.com/2013/02/blog-post.html

Monday, February 04, 2013

விஸ்வருபம் தரும் புதிய திரை அனுபவம்

விஸ்வரூபம் திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி  தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது  அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல்  இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது  எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று  சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன்  மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன்

 

நேரம் கிட்ட தட்ட முன்னிரவில் ஒரு மணியாகி இருந்தது .லண்டன் தூக்கத்துக்கு போயிருந்தது ..இன்னும் கொஞ்சம் நேரத்தில் எழும்பி பழைய மாதிரி வீறு கொண்டு எழுந்து விடும் .தெரு வெறிச்சோடி கிடந்தது.இந்த நேரத்தில் உலாவிறது கவனம் என்று ஒரு நண்பன் சொன்னது ஞாபகம் வர ...இந்த படத்தில் கமலகாசன் திருக்குர்ஆன் ஓதி விட்டு சண்டையிடும் முதல் சண்டைக் காட்சி நினைவில் வர .திரைக்குள் எங்களை பார்த்து திரைக்குள் வெளிய அதை வெளியில் கொண்டு வர அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை முயற்சி செய்த நாங்கள் இதற்கு எல்லாம் பயப்படலாமா அதே மாதிரி அடிபட வேண்டியதானே என்று  என்னோடையே நான் நகைத்து கொண்டேன்

.அந்த சண்டை காட்சி எடுத்த விதம் அற்புதமாக இருந்தது .தியேட்டரே ஒருமித்து கூவி ஆர்பர்த்தரித்த்து.எத்தனை திரைபடத்தில் எத்தனை சண்டை காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் ஏதோ  வித்தியாசமாக இருந்த்து தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணத்தை கண்டு வியக்க வைத்தது.தமிழில் அறிமுகபடுத்துகின்ற கமலுக்கு நன்றியாக சொல்லியாக வேண்டும் .இப்படி நான் பிரமிக்கும்  பொழுது சிலர் சொல்ல வருவார்கள் ..பேமாரி ...ஹாலிவூட் படங்களிலும் இதை மாதிரி எத்தனையோ படங்களில் நாம் எல்லாம் பார்த்து இருக்கிறோம் இது எல்லாம் பெரிய விசயமில்லை என்று .நாகேஸ் ஒரு படத்தில் கெளவரமாக  இங்கிலீஸ் படம் ஒன்லி தான் பார்ப்போம் என்று சொல்லுற மாதிரி .நாங்கள் தமிழ் படம் ஒன்லி  தான் பார்ப்போம் .அதாலை இது வரை  வந்த தமிழ் படங்களில் விஸ்வரூபம் அதி சிறந்த தொழில் நுட்பத்துடன்  காட்சிகளை அமைந்து இருக்குது என்றால் நான் சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்

<

முக்கியாமாக இந்த படத்தின் ஓலித்தரம்  புதிய அனுபவமாக இருந்தது .முக்கியமாக இந்த ஓலிக்காகவே கட்டாயம் தியேட்டரில் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது .DTH யிலோ வேறு முறைகளிலோ இந்த படத்தை பார்த்தால் அந்த அனுபவத்தை தராது என்று நிச்சயம் சொல்லலாம் . தியேட்டர் ஒலி குறிப்புகளை தவற விட்டு பார்த்தால் தமிழ் நாட்டு  முஸ்லிம் கூட்டமைப்பு சொன்ன மாதிரி ஒரு டாக்குமென்றி  படம் போல சில வேளை தோற்றமளிக்க கூடும் . திரைகதையின் சில நகர்வுகளின் குழப்பங்கள் காரணமாயிருக்கலாம்

ஆப்கான் புவிபரப்பு காட்சிகளை இந்தியாவில் வடிவமைத்து தமிழ் நாட்டிலும்  வேறு பகுதிகளிலும் படமாக்கினார்கள் என்று சொல்லும் பொழுது நம்ப மறுக்கிறது .அப்படி தத்துரூவமாக இருந்த்து .ஹெலிகொப்டர்கள் பறக்கும் பொழுது  தியேட்டரில் இருந்து திரைக்குள் சென்று பறப்பது மாதிரி ஒரு அனுபவத்தை தந்தது

ஆப்கான் தலபான் 

அமெரிக்க, றோ என முடிச்சு போட்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் . இந்த தில்லர் திரைபடத்துக்கு பல காட்சிகளை அமைக்க இந்த களம் வசதியாக நிச்சயமாக இருந்திருக்க கூடும்  அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.இது பெரிய கலை படைப்பு அது இது என்று சொல்ல எனக்கு தெரியாது சொல்லவுமில்லை .தலாபான் பயங்கரவாத்த்தை காட்டியவர் . அமரிக்க அரச பயங்கரவாதம் செய்யும் காட்சிகளை ஒரு இரு காட்சிகளில் காட்டி இருந்தாலும் தலபான் பயங்கரவாத்த்தை காட்டியளவுக்கு காட்டியிருக்கலாம்.இந்திய றோ அதிகாரி கதாநாயகனாக பாத்திரம் அமைந்திருக்கும் பொழுது அப்படி ஒரு முயற்சிக்கு போக முடியாது தானே

கமல் இந்த படத்தில் ஒரு வசனம் சொல்லுவார் ...ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று  அது உண்மை  தான் படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல  .அவரது இன்றைய நிலையில் தனிப்பட்ட நிலைபாட்டுக்கும் பொருந்தும்.இது போன்ற தில்லர் திரைக்கதைக்கு கமல் ஆப்கான் வரை இவ்வளவு தூரம் போயிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் பாக்கு நீரிணையை கடந்தால் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். .றோ அதிகாரியாக நடித்து சாகசம் செய்வது இந்தியனாக சில வேளை பெருமைப்பட்டு கொள்ளலாம்..மற்றவர்களை பொறுத்த வரை வில்லத்தனமாகவே தோற்றமளிக்கும் வரலாறுகள் சாட்சியாக இருப்பதால் ..முக்கியமாக தமிழர்களை பொறுத்தவரையில்

தமிழ் திரைபடம் என்ற ரீதியில்..தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இருக்கிறார் .பார்க்க வேண்டிய படம் தான் ..புதிய சினிமா அனுபவத்தை நிச்சயம் தரும்

Friday, February 01, 2013

'''ஊரை விட்டு போறன்'' சிவாஜி-கமல் உரையாடல்(விஸ்வரூபம் சம்பந்தமாக)-வீடியோ

Tuesday, January 29, 2013

நன்றி தமிழகத்துக்கு -கமல் -வீடியோ

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் திரைபடத்துக்கு தமிழகத்தில் தடை-வீடியோ

Monday, January 21, 2013

''இனி அவன்'' என்ற இலங்கை தமிழ் திரைபடம் பற்றிய பார்வை-வீடியோ

இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்' இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.

இலங்கையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.

பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள். 

ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் வேலை கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.

தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.

அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.

இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.

வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.

நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம். 

இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.

இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.

அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.

ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த 'இனி அவன்'.

அமானுல்லா எம். றிஷாத்


 

நன்றி-வீரகேசரி

http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16

http://yokarnan.com/?p=394

 


 

 
 



 

லெனின் நிரந்தமாக தூங்கி கொண்டிருக்கும் காட்சி -வீடியோ

Wednesday, January 16, 2013

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்.கமல் விதந்துரைத்த.குறும்படம் -வீடியோ

Tuesday, January 15, 2013

சிங்கையில் கமலின் சமீபத்திய பேட்டி -வீடியோ

36 வது சென்னை புத்தக கண்காட்சி -வீடியோ

Sunday, January 13, 2013

பொங்கலும் வந்தது ..பாலும் பொங்குது ..பாட்டு சொல்லடியோ-வீடியோ

Saturday, January 12, 2013

நோர்வே தமிழர் ஒருவரின் ஹிப்னாடிசிய திறன் -வீடியோ

Thursday, January 10, 2013

55வது வினாடியில் திகைப்பூட்டும் விசயம் ஒன்று தொடங்குகிறது-வீடியோ

Friday, January 04, 2013

DTH சேவையில் விஸ்வரூபம் -ஒரு பார்வை-வீடியோ

இது இஸ்லாமியர்களிடமிருந்து...விஸ்வரூபம் தொடரும் சர்ச்சை-வீடியோ

Tuesday, January 01, 2013

லண்டன்- புதுவருட வாண வேடிக்கை 2013- வீடியோ