வாசகர் வட்டம்

Thursday, December 31, 2015

லண்டனில் கார்ள் மாக்ஸ்,,,,,விவரணம் தமிழில்-வீடியோ

Saturday, December 26, 2015

பொன்மனி-உலக தரத்தில் அமைந்த இலங்கை தமிழ் திரைபடம்(FULL) -வீடியோ

Thursday, December 24, 2015

சென்னை RAPED-VIDEO

MGR யை நான் ஏன் சுட்டேன்- எம். ஆர் . ராதா-வீடியோ

Friday, December 18, 2015

சிவாஜி கணேசனின் அரிய புகைபடங்களும் மற்றும் அரிய ஓலி குறிப்புகளும்-வீடியோ

Wednesday, December 16, 2015

சிம்புவின் பாட்டுக்கு பாட்டு ...பாடுபவர் மலேசியாவில் இருந்தாம்-வீடியோ

Monday, December 14, 2015

இலங்கை தமிழ் திரைபடங்கள் பற்றிய அரிதான விவரண தொகுப்பு -வீடியோ

விபி கணேசன் ஒரு காலத்தில் இருந்த மலையக தொழில்சங்கத்தின் தலைவரோ உபதலைவர் ,,எம்ஜீஆர் பாணியில் புதிய காற்று நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க போன்ற படங்களை எடுத்து இலங்கையில் ஒரளவு வெற்றியடைய செய்தார் ..இவர் இப்ப இருக்கும் மலையக தமிழ் அரசியல்வாதி மனோ கணேசனின் தந்தையாவார்

Saturday, December 12, 2015

அப்துல் ஹமீட்- இலங்கை பொப் இசை பாடல்கள் உருவாகியது எப்படி-வீடியோ

Sunday, December 06, 2015

கமலுக்கு ஓ,பி பதில் சொன்னாரு ,இது TRAFFIC ,ராமசாமியின் ஆவேசம் ..-வீடியோ ..

Thursday, December 03, 2015

இது மனிதர்கள் உருவாக்கிய அனர்த்தம் - சென்னை 2005 Vs 2015-வீடியோ

அவசர தேவைக்கு ..மொபெல் எளியமுறையில் சார்ஜ் செய்வது எப்படி?-வீடியோ

Monday, November 30, 2015

இலங்கை தமிழ் நாட்டு கூத்து-வீடியோ

Sunday, November 29, 2015

45 வது இலக்கிய சந்திப்பு-இலங்கை மட்டக்களப்பில் நடந்த சிறு தொகுப்பு-வீடியோ

BORDERS-''லங்கா ராணி''.எழுதிய அருளரின் மகள் மாயாவின்(M.I.A) புதிய இசை வீடியோ

Thursday, November 26, 2015

கிழக்கின் இசை (மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்)-வீடியோ

Wednesday, November 25, 2015

சிங்கப்பூர் கோமள விலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் விருந்து-வீடியோ

மோடி சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர் முன் தமிழை கொமடி ...மகிந்த இவரிலும் பாரக்க நல்லாய் தமிழை கொமடி பண்ணுவார் போலை

ஊரெங்கும் மழை வெள்ளம் ...தத்தளிக்குது,,,தமிழகம்-வீடியோ

Friday, November 20, 2015

ஆட்சியின் உச்ச அராஜகமே இந்த மழை Vs மழை தந்த மகராசி-வீடியோ

Thursday, November 19, 2015

'''HUG ME'' பயங்கரவாதியில்லை...நான் ஒரு முஸ்லிம்-வீடியோ

Wednesday, November 11, 2015

சினிமா ரசிகர்களுக்காகவா? ரசிகர்கள் சினிமாவுக்காகவா -வீடியோ

Friday, November 06, 2015

தமிழ் சினிமா ...ஒரு அரிதான புகைபடங்களின் தொகுப்பு-வீடியோ

பாடு அஞ்சாமால் பாடு .....இன்னும் ஆயிரம் கோவன்கள் வருவார்கள்-வீடியோ

Friday, October 30, 2015

டாஸ்மாக்கை மூடு என்றால் ..பாடிய தோழர் கோவனை மூடி வைச்சிருக்கு தமிழக அரசு-வீடியோ

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

சரி யார் இந்த கோவன்?


 கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன். ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க.


முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம். இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம்.

 ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம். நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம். எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு.


 நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; 

இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை. இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம்.

பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம்.

உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில் இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!” ______________________

  நன்றி: ஆனந்த விகடன் ______________________

Friday, October 23, 2015

என்ன மச்சி ..காஞ்ச கருவாடு மாதிரி வந்து நிற்கிறாய்?..

Monday, October 19, 2015

ரஜனி-தங்க தட்டில் யாரும் தேங்காய் விற்பாங்களா? நடிகர் சங்க விழாவில் -வீடியோ

Sunday, October 11, 2015

'''பொம்பிளை சிவாஜியை''' ..தெரியாதோ நோக்கு தெரியாதோ-வீடியோ




சென்னை: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் நடிகை மனோரமா நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் பழம் பெரும் நடிகை மனோரமா. 78 வயதாகும் அவர் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த வாரம் கூட சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடல் தேறிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று இரவு 10.50 மணியளவில் அவருக்கு வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

 இதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபலங்கள் அஞ்சலி: மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைந்த நடிகை மனோகரமா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்


  நன்றி -தினகரன்.

Friday, October 02, 2015

ஊருக்கு ஒரு சாராயம்....தள்ளாடுது தமிழகம்-வீடியோ

Friday, September 25, 2015

70 களில் இலங்கை-வீடியோ

சீன அதிபர் சூன்லாயின் விஜயம் 1971 ஆண்டு நடந்த சேகுவார புரட்சி காலகட்டத்து வீடியோ காட்சிகள் போன்றவற்றை பார்க்கலாம் Three Yellow Cats என்ற ஆங்கில படம் இலங்கையில் முழுமையாக 1966 ஆண்டளவில் படமாக்கபட்டது அக்கால இரத்மலானை விமான நிலையம் மற்றும் அக்கால பிராந்திய அமைப்பு போன்றவற்றை இந்த படம் பற்றிய விவரணதொகுப்பு வீடியோவில் பார்க்கலாம் அதன் இணைப்பு கீழே

யாழ்ப்பாண சர்வதேச திரைபட விழாவில்-வீடியோ

Monday, September 21, 2015

லண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ

அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது

.யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் நடத்தப்ட்ட கலை விழாவில் தான் இந்த நடனம்.


 இந்த நடனம் ஆடும் இளம் ஜோடிகள் லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொலைகாட்சி தொடர் நாடகங்களில் பாத்திரங்களாக வருவதால் அதி்கமானவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்


Wednesday, September 09, 2015

மாவோ என்கிற ..மாசேதுங்-வீடியோ

Tuesday, September 08, 2015

Wednesday, August 26, 2015

MADRAS to சென்னை -வீடியோ

Sunday, August 16, 2015

Tuesday, July 14, 2015

எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் பயணம் -வீடியோ

இடமிருந்து வலமாக டி எம் எஸ், சிவாஜி , முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், எம்.எஸ் விஸ்வநாதன் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.

அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின்மாயானத்தில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த...' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசைஅமைத்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது. இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். நன்றி -


தினத்தந்தி

Thursday, July 09, 2015

தமிழ் சினிமாவில் சாதிய பெருமிதங்களும் ஏளனங்களும் -ஆவணப்படம் -வீடியோ

Thursday, June 25, 2015

காமராஜரின் இறுதி ஊர்வலத்தை பின்னணியாக கொண்ட இளையராஜாவின் பாடல் ஒன்று-வீடியோ

காமராஜரின் இறுதி ஊர்வலத்தை பின்னணியாக கொண்ட இளையராஜாவின் பாடல் ஒன்று

Sunday, June 14, 2015

சேகுவாரா ..ஒரு ஸ்பானியபாடல் (ஆங்கில உதவி குறிப்புக்களுடன்)-வீடியோ

வீடியோ உதவி -நன்றி ரவி

Thursday, June 11, 2015

கிறிஸ்ரோபர் லீ -டிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் குலை நடுங்கும்-வீடியோ




டிராகுலா' கிறிஸ்டோஃபர் லீ காலமானார்

 அந்த அளவுக்கு ரத்தம் குடிக்கும் டிராகுலா-காட்டேரி திரையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1950களின் பிற்பகுதியில் வெளியான மூன்று திரைப்படங்கள் பார்ப்பவர்களை திகிலின் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றன. அப்படங்களில் தனது கதாபாத்திரங்கள் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோஃபர் லீ காலமானார்.

உலகின் மிகவும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவரான அவர் தமது 93ஆவது வயதில் லண்டன் மருத்துவமனையில் உயிர் நீத்தார். த மம்மி, டிராகுலா, பிராங்கெஸ்டைன் போன்ற படங்களில் நடித்து ஆங்கிலத் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

கிறிஸ்டோஃபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். அவரது 6 அடி 4 அங்குல உயரமான உடல்வாகு வில்லன் தோற்றத்துக்கு பெரிதும் உதவியது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை எழுதிய இயன் ஃபிளமெங்கின் தூரத்து உறவினரான அவர் மேன் வித் தி கோல்டன் கன் திரைப்படத்தில் ஸ்காரமாங்கா என்னும் வில்லன் பாத்திரத்திலும் நடித்து ஆழ்ந்த முத்திரை பதித்திருந்தார்.


அண்மைக் காலங்களில் லார்ட்ஸ் ஆஃப் த ரிங்ஸ் போன்ற பிரபல படங்களிலும் கிறிஸ்டோஃபர் லீ நடித்திருந்தார். உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

நன்றி -பிபிசி தமிழ்
http://www.bbc.com/tamil/global/2015/06/150611_christopherlee_obit

Wednesday, June 10, 2015

Sunday, June 07, 2015

'''தீபன்'' திரைபட நாயகன் சோபாசக்தியுடன் நேர்காணல் தொலைக்காட்சியில்-வீடியோ



இந்த நேர்காணலில் சோபாசக்தி ஏன் இந்திய தமிழ் உச்சரிப்பில் இடைக்கிடை அதிகம் கதைக்கிறார்?

 மாஸ்...திரைபடத்தில் ஈழப்பேய் சரியாக தமிழ் கதைக்கவில்லை என்று கவலை படுகிறாக்கள் இதையும் ஒருக்கா கவனம் எடுத்து கேளுங்கோ..

 தீபன் திரைபடத்தில் சோபாசக்தி நன்றாக யதார்த்தமாக நடித்ததாக பல பத்திரிகைகள் பாராட்டியதாக இணையத்தில் படித்தேன்.இந்த பேட்டியில் சோபசக்தியின் அசைவுகள் பேச்சுக்கள் சரியான ஓவர் ஆக்டிங்கா கிடக்கு

 ...ரஜனியின் திரைபடத்தில் செய்யும் பாவனைகள் கூட யதார்த்தமாக இருக்கும்...சோபாசக்தி தீபன் நடித்தா பிறகு இப்படி ஆயிட்டரோ. அல்லது.வழமையாக விவாதம் செய்யும் பொழுது இப்படித்தானோ?.

.சோபாசக்தி அடிக்கடி ஏன் அண்ணாந்து முகட்டை பார்க்கிறார்?

 சோபாசக்தியின் இந்த பேட்டியில் அகதி பார்வை .இடதுசாரி பார்வை இலக்கிய பார்வை ...கேட்டு பாருங்கள் தீபன் திரைபடத்தை பற்றி பேசுவாங்கள் என்று பார்த்தால் பேட்டி காண்பவர் கோவை நந்தன் என்று நினைக்கிறன் அவர் கூட ஒரு அரசியல் இலக்கிய வாதி என்று நினைக்கிறன்...பேட்டி எடுக்க போய் பேட்டி கொடுக்க போய்  இரண்டு பேரும் முட்டு படுறதை பார்க்க ...என்னத்தை சொல்ல அய்யோ அய்யோ...


 உந்த இலக்கிய அரசியல் சந்திப்பு அப்பிடி இப்பிடி சந்திப்பிலை வெளிநாட்டில்  இலக்கிய விவாதங்கள் அரசியல் விவாதங்கள் இப்படித்தான் நம்மாக்கள் செய்வினம் போலை?

 30 வருசத்துக்கு முன்னே திண்ணையிலை மதிலை அங்கங்கை அரசியல் இலக்கிய விவாதம் செய்தவியளை பார்த்து பலது பத்து சொல்லி குறை சொல்லுவினம்....ஆனால் ..இவையளை பார்கக்க்கை...அவையள் எவ்வளவோ பராவியில்லை..


என்னத்தை சொல்ல ...சாதாரண பார்வையாளனாக,,,

Sunday, May 24, 2015

Cannes Film Festival: Dheepan wins Palme d'Or-வாழ்த்துக்கள் சோபாசக்தி-வீடியோ

பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் இன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்


 பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.


 புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm




Thursday, May 21, 2015

Dheepan-எழுத்தாளர் சோபாசக்தி ,,பிரான்ஸ் திரைபட நடிகனாக ..திரைபட விழாவில்-வீடியோ

CANNES, France (AP) — Before making the Sri Lankan immigrant drama "Dheepan," French director Jacques Audiard acknowledged he couldn't have even found his characters' native country on a map. Audiard premiered "Dheepan" on Thursday at the Cannes Film Festival where critics warmly greeted the latest from the director of the Oscar-nominated "A Prophet" and the acclaimed "Rust and Bone." ''Dheepan" is about a former militant, a woman and a young girl who flee their civil war-ravaged Sri Lanka for France with the passports of a deceased family. "I didn't want them to have any links to a post-imperial French situation," Audiard told reporters Thursday. "I wanted them to come from a long way away, and Sri Lanka was the other end of the Earth for me." Posing as a family, the trio settles in a housing project outside Paris, but they soon find that even the other end of the Earth can also rage with violence. The titular character is played by a non-professional actor,


 Anthonythasan Jesuthasan, who, like Dheepan, immigrated to France. After serving as a child soldier for the Liberation Tigers of Tamil Ealam, he fled Sri Lanka for Thailand as a 19-year-old. In 1993, he found political asylum in France. "I came to France because at the time I was able only to find a fake French passport and not a fake English or British passport," said Jesuthasan. "It's a life full of adventure." "Dheepan" sensitively depicts the experience of immigrants in France, which Jesuthasan could easily relate to. "Just as you see in the film, I encountered any number of difficulties when I first arrived in France," said Jesuthasan. "I was even chased by the police when I was in the streets." The film, among the movies vying for Cannes' top honor, the Palme d'Or, has been acquired by IFC and Sundance Selects for U.S. distribution. thanks-

Sri Lankan immigrant drama 'Dheepan' finds a home at Cannes



லண்டன் evening standard பத்திரிகையில் இது பற்றிய செய்தி

Tuesday, May 19, 2015

Monday, May 18, 2015

பொன்மணி என்ற இலங்கை தமிழ் திரைபடம் -பலரும் தவறவிட்ட அருமையான படம் -வீடியோ

70 களில் வந்த இந்த இலங்கை படம் யாழில் மூன்றே மூன்றே நாட்கள் தான் ஓடியது ...ஆனால் இன்றும் தமிழ் திரைபட வரலாற்றில் வெளியான திரைபடங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது...இதை அந்த நேரம் பலர் ரசிக்க பார்க்க தவற விட்டுட்டோமே என்று கூறுவதை கேட்டிருக்கிறேன் ...

.மேலே பொன்மணி திரைபடத்தின் காட்சிகள் இருக்கின்றன, மேலே இருக்கின்ற காட்சிகளில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் மனைவி சித்ரேலாகவும் பிரபல இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதியின் மனைவி நடித்திருக்கிறார்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Friday, May 15, 2015

ஏய்..சின்னக்குட்டி ...ஏம்பா ..இப்படி பண்ணுறாய் ..பொலிசை கூப்பிடுவேன்-வீடியோ

Friday, May 01, 2015

LEFT IS ALWAYS RIGHT-மே தின வாழ்த்துக்கள்-வீடியோ

Wednesday, April 29, 2015

இணையத்தில் வலம் வரும் கலக்கல் DUBSMASH க்கள்-வீடியோ

Tuesday, April 21, 2015

எம்ஜீஆர் தோட்டத்துக்கு கூப்பிட்டு தோலுரிக்கிறேன் என்றாரு.. இங்கே வா உனக்கு நான் உரிக்கிறன் என்றவன் -ஜெயகாந்தன்-வீடியோ

எம்ஜீஆர் தனக்கு விரும்பாத எதிரிகளை தனது எம்ஜீஆர் தோட்டத்து வீட்டறையில் யாரும் அறியாவண்ணம் செம பூஜை வழங்குவார் என அரசல் புரசலாக செய்திகள் கிசு கிசுக்குள் வதந்திகள் அப்பொழுது பரவி இருந்தன.

 அந்த பூஜை வாங்கியவர்களில் சில பிரபலங்கள் அடங்குபவர் என்று கூறுவர். சந்திரபாபு, பழைய நடிகை லதா பிரச்சனையில் ரஜனிகாந்த்,..தண்ணீர் தண்ணீர் திரைபடத்தின் முடிவு காரணமாக பாலசந்தர் .


 எழுத்தாளர் ஜெயகாந்தன் எம்ஜீஆரை கரு பொருளாக வைத்து சினிமாவுக்கு போன சித்தாளு நாவல் எழுதிய பொழுது ஜெயகாந்தனுக்கும் எம்ஜிஆரால் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது என்பது இந்த வீடியோவில் டைரக்டர் கெளதமன் பேச்சில் இருந்து தெரிகிறது

குமுதம் பிரபல்யபடுத்த மறந்த முத்து ......இந்த வைரமுத்து -வீடியோ





கீழே உள்ளவை எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் முகநூலில் எழுதியவை

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்

.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்

.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!


அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

Friday, April 17, 2015

Google - கையால் தமிழில் இனிமேல் எழுதலாம்-வீடியோ

 தமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது தமிழ் கீ போர்டு இல் டைப் பண்ணுவது எளிதாக இல்லை என்று. அந்த குறையைப் போக்குவதற்காக கூகிள் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் வெளியிட்டு இருக்காங்க.

நான் கொஞ்சம் Super Excited ஆயிட்டேன், இப்படி ஒரு கீ போர்டு வெளியிட்டு இருக்காங்க அதுவும் 82 மொழிகளுக்கு என்ற உடன் தமிழ் இருக்கனும் கடவுளே ன்னு டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் செஞ்சா தமிழ் இருக்கு மக்களே. இனி சும்மா மொக்கை காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க.


கூகிள் handwriting input இன்ஸ்டால் செஞ்சு தமிழில் எழுதுங்க, உபயோகித்த வரை 90% துல்லியமாக இருக்கு. பயன்படுத்த எளிதாகவும் இருக்கு.

Thursday, April 16, 2015

மாயா யதார்த்தம் (magical realism) இலக்கியத்தில் என்பது பற்றி -வீடியோ

எழுத்தாளர் புதுமைபித்தன் 1930 களிலையே இந்த மாயா யதார்த்தத்தை தனது சிறுகதையில் செய்து காட்டி இருக்கிறார்,,மேலே பேச்சாளர் சொன்னது போல கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையில் . அந்த கதையை வாசிக்க விரும்பின் கீழே

கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையை வாசிக்க இங்கே அழுத்தவும்l


 புதமைபித்தனின் இன்னொரு கதையான கபாடபுரம் என்ற கதையும் அந்த வகைப்பட்டது என்பது எனது அபிப்பிராயம் அந்த கதையை வாசிக்க விரும்பின்

கபாடபுரம் என்ற கதையை வாசிக்க விரும்பின் இங்கே அழுத்தவும்



Wednesday, April 15, 2015

இலங்கை பொப் பாடல்கள்- சோளம் சோறு பொங்கட்டுமா...சொல்லுங்க மருமகனே...-வீடியோ

JUST FOR LAUGHS- சும்மா போய்யா ..அங்கால் பக்கம் வாறன் -வீடியோ

Thursday, April 09, 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ



ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து








இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன். 


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

Tuesday, April 07, 2015

''கோமாளிகள் ''முழு திரைபடம்(இலங்கை)-கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை வானொலி நாடகம் -வீடியோ

கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது

. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன


. எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


 சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார். யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள்.

 சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்

 படம் பிறந்த கதை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கோமாளிகள் கும்மாளம் என்னும் தொடரை வாரந்தோறும் விரும்பிக்கேட்ட வானொலி நேயரான எம். முகம்மது என்னும் வணிகர், இதனைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார். எஸ். ராமதாசிடம் தன் எண்ணத்தைக் கூற அவரும் ஒத்துக்கொள்ள படம் எடுக்கத்தொடங்கினர்.

 நாற்பத்தைந்து நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் 1976 நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொழும்பு பிளாசா திரையரங்கு (55 நாட்கள்), கொழும்பு செல்லமகால் திரையரங்கு (76 நாட்கள்), யாழ்ப்பாணம் (76 நாட்கள்), திருகோணமலை (76 நாட்கள்), மட்டக்களப்பு (76 நாட்கள்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. கதை

Monday, April 06, 2015

Friday, March 27, 2015

சூறாவளி நாடகம்-இந்திரா பார்த்தசாரதியின் பாலேந்திராவின் இயக்கத்தில் -வீடியோ

உலக நாடக தினம் இன்று (27.03.05)


Thursday, March 26, 2015

PHOTOSHOP- ஆணை கூட பெண்ணாக்கலாம்-வீடியோ

Monday, March 23, 2015

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த.. சூப்பர் ஸ்டார் லீ குவான் யூ-வீடியோ

சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூ 91 வது வயதில் மறைவு-செய்தி லீ

குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம்.

கண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

 நன்றி - கலையரசனின் முகநூல் நிலை தகவலின் ஒன்றின் ஒரு பகுதி மேலே உள்ளவை

Sunday, March 22, 2015

லண்டனில் நடந்த சாத்திரியின் ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்ச்சியின் சில துளிகள்-வீடியோ

(இது நிகழ்வை படம் பிடிக்கும் வீடியோ மட்டுமே... நிகழ்ச்சியை முழுமையாக காட்டும் வீடியோ அல்ல..எனது கமராவின் கொள்ளளவுக்கு அமைய எடுக்கபட்டு தொகுக்கப்பட்டவை .) 

இதில் சாம் பிரதீபன் ,சபேசன் ஆகியோரின் விமர்சன கண்ணோட்டத்தின் சில துளிகளும்.. .கீரன்,தேசம் ஜெயபாலன்,போன்ற அங்கு பார்வையாளர்களாக வந்தவர்களின் கருத்துகளின் சில துளிகளையும் காணலாம்



 சாம் பிரதீபனின் முழு விமர்சனமும் கீழே

Thursday, March 19, 2015

நெதர்லாந்து பெண்மணி அழகு தமிழில் -Dr. ஹன்னா எம்.டி புருயின், தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்-வீடியோ




நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த டச்சு பெண்மணி ஒரு தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்  ..நெதர்லாந்து லெய்டன் என்ற இடத்தை சேர்ந்தவர் .அவர் தனது அனுபவங்களை தனது அழகு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறார் சன் டிவியின் நிகழ்ச்சியில் ..

.அதை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்



Friday, March 13, 2015

தாயிடம் ஹலோ சொல்லும் ஏழு மாத அயர்லாந்து குழந்தை -வீடியோ

1978 இல் யாழ்ப்பாணத்தில் றோகண விஜயவீராவுக்கு கல்லெறி விழுந்த பொழுது-வீடியோ

Sunday, March 08, 2015

அப்பாடா...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோ



பிறந்த வீட்டில் கறுப்பி

 அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு 

இலங்கை மத்தியில் தெமள 

வடக்கில் கிழக்கச்சி

மீன் பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி

மலையில் மூதூர்க் காரியாக்கும் 

 ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் 


என் புகுந்த நாட்டில் 

அப்பாடா! பழையபடி நான் கறுப்பியானேன்!


Saturday, February 28, 2015

தமிழ் திரைபட உலகின் முதல் சூப்பர் ஸ்டார்-வீடியோ


Tuesday, February 24, 2015

சூப்பர் சிங்கர் ஜெயிசிக்கா நேர்முகம் வெற்றியின் பின் -வீடியோ

Friday, February 20, 2015

அந்த பிரபஞ்ச ரகசியமாம் -வீடியோ

Friday, February 13, 2015

வாழ்வின் வெற்றிக்கான இரகசியங்களை தெரிந்து கொள்ள-வீடியோ

Tuesday, February 10, 2015

அது வந்தது... தெரியாமால் கிளிக் பண்ணினால்.. எப்படி நீக்குவது-வீடியோ

Monday, February 09, 2015

Friday, February 06, 2015

மதராஸில் ஒரு அமெரிக்கன் -முன்னோட்டம் -வீடியோ



 தமிழ்த்திரையுலகின் முன்னோடிகளில் முக்கியமானதாக கருதப்படும் எல்லீஸ்.ஆர்.டங்கன் பற்றி சுவையான 80 நிமிட படத்தை, கரன் பாலி எடுத்திருக்கிறார். டங்கனுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் முழுமையான பாராட்டு. இவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் எம்.எஸ்., எம்.ஜி.ஆர். டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா அடங்குவர்.



Thursday, February 05, 2015

Wednesday, February 04, 2015

.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ



வில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள்


இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லும் பொழுது இவர் சிரித்தால் சிரிப்பார்கள் , இவர் அழுதால் அழுவார்கள் இவர் கோவிக்கும் முகபாவம் வந்தால் கோவிப்பார்கள் இப்படி ஒரு அதிசயத்தை சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இவரது வில்லிசை நடைபெறும் பொழுது கண்டிருக்கிறேன்...