வாசகர் வட்டம்

Sunday, January 15, 2012

ஜரோப்பியரின் ஆசியாவின் ஆனந்த பூமியாம் -வீடியோ

எதுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லணும்? சமூக அக்கறையற்ற சமூகத்துக்கு -வீடியோ

Friday, January 13, 2012

எழுத்தாளர்கள்- 35 வது சென்னை புத்தக கண்காட்சியில் -வீடியோ

Wednesday, January 11, 2012

அம்மாவென்றால் சும்மாவா.?..நக்கீரன் பதை பதைத்த அந்த நிமிடங்கள்-வீடியோ

Tuesday, January 10, 2012

இந்து சமுத்திரத்தில் ஒரு சொர்க்கமாம் ..அதையும் தேடி வந்தவர்களாம் -வீடியோ

Monday, January 09, 2012

சமூக வலை தளங்களுக்கு கட்டுபாடு அவசியம் (ஒரு விவாதம்)-வீடியோ

Saturday, January 07, 2012

நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல் -வீடியோ

Tuesday, January 03, 2012

கண் சிவந்தால் மண் சிவக்கும் (,குருதிப் புனல் நாவல் மூலம்?) (full movie) -வீடியோ

இந்த திரைப்படம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை அடிப்படையாக கொண்டதாய் இருக்க வேணும் .குருதிப்புனல் நாவல் கீழ்வெண்மணி சம்பவத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட நாவல் என கூறப் படுகிறது

Sunday, January 01, 2012

கொலை வெறி டா -இது யாழ்ப்பாணத்தில் இருந்து என்றினம்-வீடியோ

2012 -வாண வேடிக்கையுடன் லண்டனில் -வீடியோ

Friday, December 30, 2011

தானே புயலின் நடனம் -வீடியோ

<

Thursday, December 29, 2011

ஆறா வடு -சக வலை பதிவு நண்பர் சயந்தனின் நேர்காணல்-வீடியோ

வரும் ஜனவரி மாதம் சக வலபதிவர் நண்பர் சயந்தனின் ஆறா வடு என்ற நாவல் வெளி வருகின்றதாம் .தீபம் தொலைக்காட்சியில் சயந்தனை நேர் காணல் செய்திருந்தார்கள் ..அத்ன் வீடியோ இணைப்பு இது

Wednesday, December 28, 2011

கொலை வெறி-CNN இந்த வருடத்தின் பிரபல பாடல் என்கின்றது (Top song of the year)

Monday, December 26, 2011

மாலன் Vs மனுஷ்யபுத்திரன் -வீடியோ

மாலன் இப்படி இந்த புத்தகத்தை பற்றி இப்படி விமர்சித்து பேசியதுக்கு காரணங்களை அடுக்குகிறது.குமுதம் ரிப்போட்டர்..இந்த புத்தகத்தில் கமலஹாசனை மாலன் சன் டிவிக்காக எடுத்த பேட்டி பற்றி குறிப்படாததும் ..மற்றும் இந்த புத்தகத்தில் வரும் கமலஹாசன் சுஜாதாவுக்கும் இடையில் நடக்கு உரையாடலில் ,,,சுப்பிரமணி ராஜோ அல்லது மாலனோ எழுதிய கவிதையோ ஏதோ என்று நக்கல் தொனியில் இருப்பது தான் மாலன் இவ்வளவுத்துக்கு கடுப்பாயிருக்கிறார் என்கிறது. மனுஷ்யபுத்திரன் கூறிய பதிலுக்கு சபையோர் ஏகோபித்த வரவேற்பு கொடுத்ததை இந்த வீடியோ துண்டத்தில் காணக்கூடியதாயிருந்தது

இப்படியும் ஒரு கொலை வெறி- வீடியோ

Sunday, December 25, 2011

உனக்கு 4000 ...எனக்கு 1000 ...எப்படி இருக்கு இந்த டீல்?-வீடியோ

தமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது,

Friday, December 23, 2011

நோக்கு வர்மம் (மெஸ்மரிஸம்)?-வீடியோ

Thursday, December 22, 2011

1999 - கனடிய தமிழ் திரைபடம்(FULL LENTH)-வீடியோ

பர்மிய தமிழர்கள் அன்றும் இன்றும் -ஒரு நேர்முகம் -வீடியோ

Wednesday, December 21, 2011

அந்த நாள் ஞாபகம் போனதோ நண்பியே-வீடியோ

Tuesday, December 20, 2011

கமல் நம் காலத்து நாயகன் -புத்தக வெளியீடு-வீடியோ

Thursday, December 15, 2011

DAM999 -தமிழ் நடிகர்களின் நகைச்சுவை படமானால் -வீடியோ

Tuesday, December 13, 2011

80 -களில் திரைக்கு பின்னால் தமிழ் சினிமா கலைஞர்கள்-வீடியோ

Monday, December 12, 2011

மோனே ..தமிழா கேரளத்தோடை கழிக்கண்டா..வீடியோ

மோனை தமிழா கேரளத்தை கழிக்கண்டாவாவாம் ..ஏனென்றால் கேரளமும் பெங்காலும் புத்திஜவியுள்ள் பிரதேசமாம் .. வீடியோ -தகவல் உதவி- நன்றி -ஓலிவர்

ரஜனிகாந்த் நடித்த ஆங்கில படத்தின் முன்னோட்டம்-வீடியோ

Saturday, December 10, 2011

இவங்கள் எல்லாம் ஒன்னாயிருந்தாங்களா? சொல்லவே இல்லை?-வீடியோ


1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது.


 இந்த வீடியோவில் உள்ளவர்கள்  ---  ரொமேஷ் பண்டாரி (முன்னாள் வெளிவிவாகார செயலாளர்) ,குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) – சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) – அமிர்தலிங்கம் (TULF) – உமாமகேஸ்வரன் (PLOTE) – வாசுதேவா (PLOTE) – வெற்றிச்செல்வன் (PLOTE) – கனகராஜா (PLOTE) – யோகி (LTTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – பிரபாகரன் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- – றொபர்ட் (TELO) – சிறீ சபாரட்னம் (TELO) – ? – ? – பத்மநாபா (EPRLF) – கேதீசுவரன் (EPRLF) – சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)

இந்த வீடியோவை இணைக்க அனுமதியும் மற்றும் தகவல்களும் தந்த அஜீவனுக்கு எனது நன்றிகள்

கார்த்திக் யெமன்னரு(yemannaru)?

 

 

ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "

Friday, December 09, 2011

தெருக் கூத்து- புதிய வார்ப்புகளில்-வீடியோ

Wednesday, December 07, 2011

பாபா ராம்தேவின் யோகாசன செய்முறை தமிழில்-வீடியோ


வீடியோ தகவல் உதவி நன்றி -அஜீவன்

Sunday, December 04, 2011

தனுஷுக்கு தமிழ் மறந்து போன படியால் -இப்படி ஒரு கொலை வெறி

Friday, December 02, 2011

சக வலை பதிவர் சுகுணா திவாகரின் (மிதக்கும் வெளி) உரை -வீடியோ

Wednesday, November 30, 2011

ஊடகங்களில் தமிழ் - தளைக்கிறதா ? தத்தளிக்கிறதா?-வீடியோ



Tuesday, November 29, 2011

ஒன்லி இங்கிலீசில் -வை திஸ் கனிமொழி கனிமொழி இன்-வீடியோ

Sunday, November 27, 2011

தமிழை கொல்லு ..கொல்லு,,,வை திஸ் கொலை வெறி டீ-வீடியோ

Thursday, November 24, 2011

இவரை இப்படி எல்லாம் திருவிளையாடல் பண்ண வைத்திருக்கினம் -வீடியோ

Tuesday, November 22, 2011

சிவகாமியின் சபதம் -நாட்டிய நாடகம்(சில பகுதிகள்)-வீடியோ

Monday, November 21, 2011

குடித்து விட்டால்..,,, ,ராஜா .மந்திரி எல்லாமே ஆகலாம்-வீடியோ

Saturday, November 19, 2011

ஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ

Ian Kiru Karan who was born in(துன்னாலை-கரவெட்டி) Point-Pedro in 1939, Studied at Hartley College(ஹாட்லி கல்லூரி) Point Pedro, moved to Germany in 1970 after studying in the United Kingdom — where he went on to build one of the world's biggest container leasing companies in Hamburg.
He was recently sworn in as Senator for Economic Affairs in Hamburg.
As an orphan from Sri Lanka, Ian Kiru Karan obtained a scholarship to study at the London School of Economics and later worked for the English branch of the logistics company, Schenker. Later, Karan moved to Hamburg in 1970, with no more than 3,000 DM with him.
Karan began life in Germany as a dishwasher in a vegetarian restaurant and later joined a container company as a clerk before being promoted to managerial level due to exceptional ability.

view-source:www.adobe.com/software/flash/about/

undefined

Friday, November 18, 2011

60 களில் -தில்லானா மோகனம்பாள் படப் பிடிப்பின் போது-வீடியோ

Thursday, November 17, 2011

சமூக இணைய தளங்கள் -வம்பா ? வசதியா-வீடியோ


Tuesday, November 15, 2011

HOT AFRICA- மெய்சிலிர்க்க வைக்கும் யோக நடனம்-வீடியோ

வீடியோ-தகவல் உதவி -அஜீவன்

Monday, November 14, 2011

இதில் நீயா நானா கோபிநாத் செய்தது சரியா ? பிழையா?

Saturday, November 12, 2011

சிவாஜியின் குத்து சண்டையும்...HULK HOGAN இன் Wrestling ம்-வீடியோ

Thursday, November 10, 2011

போதி தர்மர் -அந்த இருபது நிமிடங்கள்-வீடியோ

Wednesday, November 09, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைபடத்தை பற்றி ஒரு கருத்துரை-ஒலி வடிவம்

Tuesday, November 08, 2011

குத்தாட்டம் போடும் 95 வயது கிழவி-வீடியோ

Friday, November 04, 2011

சிங்கப்பூரில் பணிப் பெண்கள் -ஒரு விவாதம் -வீடியோ


Monday, October 31, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின கனடிய விஜயத்தின் பொழுது-வீடியோ

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவில் தமிழனை உசுப்பேத்தும் சில வசனங்கள் .-வீடியோ

Saturday, October 29, 2011

17 வயது தமிழ்ச் சிறுவன் கண்டுபிடித்த புற்று நோய் ஒழிப்பு பொறிமுறை-வீடியோ

Friday, October 28, 2011

தமிழனாக இருக்கிறதனாலை இந்தியாவிலை மதிக்க மாட்டென்கிறான்கள்-வீடியா

இது ஒரு வித்தியாசமான வகுப்பறை... .தேவையான பாடம்-வீடியோ

Thursday, October 27, 2011

தமிழ் திரைபடங்களில் யதார்த்தம் - உண்டு Vs இல்லை -வீடியோ



Tuesday, October 25, 2011

சிறுவர்களின் குறுக்கு விசாரணை;-குற்றவாளி கூண்டில் சோதிடர்கள்-வீடியோ

Monday, October 24, 2011

அவள் ஒரு திருநங்கை -சமூகத்தின் பார்வையில்-வீடியோ


லண்டனில் கசகறனம் நாவல் விமர்சன உரை அரங்கு -வீடியோ

Saturday, October 22, 2011

இனிமேல் கையை ஓங்கினால் தெரியுமாம்-வீடியோ

Thursday, October 20, 2011

கடாபியின் கடைசி நிமிடங்கள்(இளகிய மனமுடையோர் பார்க்க வேண்டாம்)-வீடியோ

நூறு வயதில் மரதன் ஓடி முடித்த பிரிட்டிஸ் சீக்கியர் -வீடியோ

Wednesday, October 19, 2011

அழகான சிறுமியின் வடிவில் வந்த கே.பி .சுந்தரம்பாள்-வீடியோ

Monday, October 17, 2011

விசரனை சந்தித்தேன்

லண்டனில் இன்று தமிழ் புத்தக சந்தை ஒன்று நடைபெற்றது .நல்ல முயற்சி என்று நினைத்து நானும் எனது வலைபதிவில் அது பற்றிய விபரம் போட்டிருந்தேன்.காலை பத்துமணியிலிருந்து இரவு 7 மணிவரையும் நிகழ்வு என்று அறிவித்திருந்தார்கள்.எனது எதிர்பார்ப்பு பிழையோ தெரியாது அப்படி எதிர்ப்பாத்து போன அளவுக்கு அங்கு புத்தங்கள் பார்வைக்கோ விற்பனைக்கோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு என்று  சொல்லுவாங்களே அதிலை எழுதிறனான் , சின்னக்குட்டி என்ற புனைப்பெயர் இருக்கு .என்று கூறினேன்...நாங்களும் இணையம் பார்க்கிறனான்கள் அப்படி உங்களை தெரிந்ததாக ஞாபகம் வரவில்லை என்றார்கள்.

 இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்..அங்கே ஆளவந்தான் ஸ்டைலில் முழு மொட்டையுடன் ஒரு சிலருடன்  பேசி கொண்டிருந்தார் ஒருவர்.அவரை எங்கையோ நெருக்க மாக பார்த்திருக்கிறேன் என்று எனது மூளை சொல்லி கொண்டிருந்தது, எங்கை என்று மொழி பெயர்க்க மறுத்து கொண்டிருந்தது.என்க்கென்னவோ அவர் நோர்வே இலிருந்து வந்திருக்க வேணும் மாதிரி என்று பட்டுது ஏனோ தெரியவில்லை .அவர் அருகில் போய் நீங்கள் நோர்வேயிலிருந்தா வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன் ,

,,ஓம் என்று சொன்னார்...எனக்கே ஆச்சரியமாய் இருந்தது எப்படி எல்லாம் அனுமானிக்கிறேன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருந்த பொழுது ..நீங்கள் சரவணன் தானே என்று கேட்டேன் ...நான் சரவணன் இல்லை எனக்கு சரவணனையும் தெரியும் என்றார் . நானும் விடுவதாய் இல்லை ஏன் என்றால் இந்த வலை பதிவுலத்தில் எங்கேயோ தான் இவரை சந்தித்து இருக்கிறன் என்று எனது உள் மனது தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தது.அதனால் திரும்ப கேட்டேன் நீங்கள் இந்த வலை பதிவுகளிலை தலை காட்டுறனீங்களோ என்று கேட்டேன் ..ஓம் என்று மகிழ்வுடன் கூறீனார் ,என்ன பெயர் என்று கூற முடியுமோ என்று கேட்டேன் ..சஞ்சயன் என்றார் ...எனது முக பாவம் அவருக்கு அப்படி என்ற பெயரை கேள்வி பட்டது இல்லை என்றது போல் பாவனை செய்திருக்க வேணும் ...தன்னை சுதாகரித்து கொண்டு விசரனை தெரியுமோ என்றார் (சாதாரணமானவனின் மனது என்ற தலைப்பில் எழுதும வலைபதிவர்அவர்)..தெரியுமாவது உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான் என்று கூறினேன் ...அப்ப தாங்கள் யாரோ என்று கேட்டார் .....ஏற்கனவே பலர் சின்னக்குட்டி யார் என்று தெரியாது என்று கூறிய அனுபவத்தால் ..தயங்கிய படி தான் கூறினேன் சின்னக்குட்டி என்ற வலை பதிவர் நான்  தெரியுமா என்று ? நல்லாய் தெரியுமே என்றார் ஒரு சந்தோச குறியோடு. கொஞ்சம் நேரம் பின்பு எனக்கு முன்பே தெரிந்த சபேசன் வந்திருந்தார் அவர் கவிஞர் இலக்கியவாதி மனித உரிமை ஆர்வலர் என்று அவருக்கு அப்படி பல அடை மொழி பின்னால் இடலாம் .. அவருக்கு அங்கு இருந்த எழுத்தாளர் இலக்கியவாதிகளை தெரிந்து இருந்ததால் ..அவரை சுற்றி நிறைய கூட்டம் அளவளவாகி கொண்டிருந்தது. அதிலும் நான் கொஞ்சம் நேரம்  நின்றிருந்தேன்.  தீப்ம் தொலைக் காட்சி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அனஸ் இவரை முன் பார்த்ததில்லை இவர் யார் என சபேசனிடம் வினாவினார்.அதற்கு சபேசன் உங்களை மாதிரி இவரும் எழுதிறவர் தான்  ஆனால் வலை பதிவில் எழுதிறவர் சின்னக்குட்டி அவருடைய பெயர் என்றார் ..அதற்கு..அனஸ் அப்படி ஒரு ஆளை நான் இதுவரை கேள்விபட்டது இல்லையே என்றார்....

 நோர்வையில் இருந்து வந்த விசரன் என்ற பெயரில் எழுதிற சஞ்சயனை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ,,,நான் ஊர் உளவராம் என்ற வலை பதிவு வைத்திருக்கு பொழுது என்னுடன் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னுடன் பழக விரும்பிய காலத்தில்..எனது முகமூடியை கழட்டாமால் தயங்கி அவர்களின் வேண்டுகோளை எல்லாம் அலட்சியம் செய்திருந்தேன்.. அதை நினைக்கும் பொழுது இப்பொழுது வேதனைப்படுகிறேன்...எனக்கு பிடித்தமான எழுத்தை எழுதும் விசரன் என்ற ஒரு வலை பதிவரை கண்ட மட்டற்ற மகிழச்சி ஒன்றே . அந்த புத்தக சந்தையில் பெற்றது ..அந்த ஒரு பாக்கியமாகவாது அங்கு கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் அங்கிருந்து விடை பெற்றேன்

விசரனின் வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்


புத்தக கண்காட்சி போய் வந்தது பற்றி விசரன் எழுதிய பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்

Friday, October 14, 2011

காதல் வயப்பட்டால் இப்படி எல்லாம் வெட்கபடுவாங்களாம் -வீடியோ

Wednesday, October 12, 2011

சேக்ஸ்பியரின் othello ஆக சிவாஜி கணேசன்-வீடியோ

Monday, October 10, 2011

லண்டனில் october 16 அன்று தமிழ் புத்தக கண்காட்சியும் எழுத்தாளர்கள் சந்திப்பும்-வீடியோ

லண்டனில் தமிழ் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற இருக்கிறது !



இடம்;-October 16, 2011 -10am to 7pm
Lord Brooke Hall,
Shernhall Street,
Walthamstow,(

E17 3EY.

வாசிப்பை தூண்டு நோக்குடன் மிக மலிந்த விலையிலும் வாசகர்கள் பெற்று கொள்ள வழிவகை செய்யும் நோக்குடனும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்ததாக மேற்படி உள்ள வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் அறிய கூடியதாய் இருக்கிறது .அத்துடன் எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பாக சந்தர்ப்பமாக அமையும் என கூறப்படுகிறது.வலை பதிவுகளின் வளர்ச்சி அண்மைக்காலங்களில் அதிகம் இருப்பதுடன் அதிக பெயர் எழுதுகிறார்கள்.இணைய எழுத்தாளர்களின் பங்களிப்பனையும் ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்த கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் .நல்லதொரு முயற்சி ..நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துவதோடு இந்நிகழ்வை பற்றி பலருக்கும் எமது பங்குக்கு அறிய செய்வோம் நன்றி

''சிவாஜி: ஒரு பண்பாட்டியற் குறிப்பு ''-பேரா .சிவத்தம்பி-வீடியோ

வீடியோ உதவி - நன்றி -மூர்த்தி

Sunday, October 09, 2011

சே குவேரா-வாழும் கனவு (தமிழில் ஆவணப்படம்)-வீடியோ

Friday, October 07, 2011

எல்லாரும் அப்பிடி சொல்லுறீங்கள் முதலிலை...பிறகு பார்த்தால்-வீடியோ

Thursday, October 06, 2011

தமிழிலிருந்து சீனம் சென்ற அறிவு -வீடியோ

http://www.youtube.com/watch?v=GRTYgJ6I6zM&list=UUSP6RYspZpIXKO8vIZxfnqA&feature=plcp

Wednesday, October 05, 2011

இதற்கு சிரிக்கலாமா ?...சிரிக்க முடியாதா?-வீடியோ

Tuesday, October 04, 2011

தமிழில் முத்துராமன் ஹிந்தியில் சிவாஜி-வீடியோ

சிவாஜி நடித்த சிவந்தமண் திரைபடத்தின் ஹிந்தி பதிப்பின் சில காட்சிகள் தான் இவை ..சிவந்தமண்ணில் முத்துராமன் நடித்த காட்சிகளை சிவாஜி ஹிந்தி பதிப்பில் நடித்திருந்தார்..அவைகளின் காட்சிகள் தான் இவை..சிவந்தமண்ணில் முத்துராமன் நடித்த காட்சிகள் வெகுவாக அந் நேரம் பாரட்டு பெற்று இருந்தன...
முத்துராமன் சிவந்த மண்ணில் நடித்த காட்சி கீழே


Sunday, October 02, 2011

ஹிங் மேக்கர் என சொல்லப்பட்ட காமராஜரின் இறுதி நிகழ்வில்-வீடியோ

Friday, September 30, 2011

20 வருடங்களின் பின் இலங்கை தமிழ் திரைபடம் -ஒரே நாளில் -வீடியோ

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் சாரு ....ச.ரி.க.ம. ப.த.நி.ச..என......-வீடியோ

Tuesday, September 27, 2011

அடுத்த கணத்தில் எதுவும் நடக்கலாம்,,-வீடியோ

Sunday, September 25, 2011

அமெரிக்காவின் வாழ்மானம் இது தான்-வீடியோ

Friday, September 23, 2011

ஒரு வேளை இதைத்தான் நரகம் என்று சொல்லுவாங்களோ?-வீடியோ

Wednesday, September 21, 2011

பரமகுடி கலவரம்-வீடியோ

 

Tuesday, September 20, 2011

மண்டியிடாத மானம் இந்த இளம் தமிழ் சிறுவனிடம்-வீடியோ


இலங்கை கல்வி அமைச்சரின் காலில் விழுமாறு தாய் தந்தையர்  வற்புறுத்திய போதும் மறுத்து விட்டானாம் இந்த சிறுவன் ..பின் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இச்சிறுவன் தாய் தந்தையர் ஆசிரியர் போன்றவர்களிடம் அவசியம் ஏற்படின் காலில் விழுவேனே தவிர மற்றவர்கள் காலில் ஒரு போதும் விழமாட்டேன் என்று கூறினான்

Sunday, September 18, 2011

குங் பு வூம் (kung fu) அதன் அபூர்வ சக்தியும்-வீடியோ

Friday, September 16, 2011

இடதுகளின் பாதை சரியானவை-வீடியோ

Wednesday, September 14, 2011

இனிமேல் கோலிவூட்டலையும் இருப்பாவாம் பொலிவூட்டலையும் இருப்பாவாம்-வீடியோ

இலங்கையின் முன்னாள் வடக்கு கிழக்கு மாகணசபையின் முதல்வர் வரதராஜபெருமாளின் மகள் நீலாம்பரி தான் மேலே உள்ள வீடியோவில் பேட்டி கொடுப்பவர் ,மலையாள திரைபடத்தின் மூலம் திரை நாயகியாக வந்திருக்கிறார் ,,கமலாகாசன் மற்றும் பொலிவூட் முன்னனி கதாநாயகர்களோடு நடிக்கவேண்டும் என்ற கனவுடனும் இருக்கிறார்

Monday, September 12, 2011

சன் பிக்ஸ்ர்ஸ் சக்ஸோனாவின் ஓலம்-வீடியோ

Tuesday, September 06, 2011

ஊழலை நிறுவனபடுத்தியவர்கள் இவர்கள் தான்-வீடியோ

வீடியோ உதவி -நன்றி -கலையரசன்

Monday, September 05, 2011

வராத போனுக்கு சு-சுவாமி attend பண்ண போறாரு-)) -வீடியோ

Thursday, September 01, 2011

Monday, August 29, 2011

அட ..மடப் பசங்களா-வீடியோ

Sunday, August 28, 2011

ஏன் அந்த மூவரையும் தூக்கில் போட வேண்டும்-வீடியோ

இந்தியா ,கொழும்பு எந்த பக்கம் இருக்கு என்று தெரியாது-வீடியோ

Friday, August 26, 2011

ஏய் மரண தண்டனையே..நீ மரணமாகாயோ?-வீடியோ

Thursday, August 25, 2011

கனடா -CN TOWER ஐ அண்மையில் மின்னல் தாக்கிய பொழுது-வீடியோ

<

Sunday, August 21, 2011

Wednesday, August 17, 2011

லண்டன் கலவரம்- ஒரு உரையாடல் தமிழில்-வீடியோ

மரண தண்டனைக்கு எதிராக கமலஹாசன் -வீடியோ


Tuesday, August 16, 2011

இது இல்லாமால் இருந்தால் நல்லாய் இருக்கும் என்கிறார்-வீடியோ

Monday, August 15, 2011

தமிழை அழிப்பதற்க்கு என்ன செய்யலாம் ? என்ன செய்யக் கூடாது?-வீடியோ


Friday, August 12, 2011

இங்கிலாந்து ;கலவரமா ? கிளர்ச்சியா?




லண்டனில் தெருக்களில் கடந்த வார இறுதியில் தொடங்கிய so call வன்முறை  இங்கிலாந்து பல பாகங்களிலும் பரவி இப்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.Darcus Howe என்ற கறுப்பின லண்டனிலும் வாழும் எழுத்தாளருடன் நேர்முக உரையாடலை பிபிசி தொலைகாட்சி அத்தருணம் நடத்தியது. நேர்முக உரையாடலின் பொழுது அறிவிப்பாளரின் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இவ் எழுத்தாளர் இதை கலவரம் என்று கூற மாட்டேன் இதை மக்கள் எழுச்சி என்றே தான் கூறுவேன் என பதிலளித்தார்.லண்டனில் கறுப்பு இனத்தவர் ஒருவர் தமிழ் நாட்டு என்கவுண்டர் பாணியில் சுட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் லண்டன் வாழும் கறுப்பு சமூகத்தனிரால் ஏற்ப்படுத்தப் பட்டட எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பட்டம் பின் கலவரமாக வெடித்தது .பல கடைகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன.உண்மையில் முதலில் கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் நகரங்களிலே உருவாகியது , பின் பல்லின மக்கள் வாழும் வேறு நகரங்களிலும்  இந்த கடை உடைப்பு சூறையாடுதல் போன்றவை நடைபெற்றது.


இந்த கடையுடைப்பு சூறையாடுதல் போன்றவற்றில் ஏழு வயதுக்கும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் ஈடுபட்டார்கள் .இப்பொழுது பாடசாலை விடுமறை காலம் நீண்ட பகல் போன்றவை இந்த கலவரம் தொடர்ச்சியாக இலகுவாக நடைபெற சாதகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.இங்கிலாந்தில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி அண்மை காலங்களாக அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன என கூறப்படுகிறது.அழகிய அலங்கார கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் தங்களுக்கு பார்ப்பதுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை அவர்களுக்கு இவ்வளவு காலம் இருந்திருக்கவேண்டும் .வலுவிழந்தவர்களாக தங்களை பற்றி நினைப்பில் இருந்தவர்கள் குழுவாக சேர்ந்து இயங்கும் பொழுது வலுவானவர்களாக தங்களை உணரும் நிலை ஏற்பட்டிருக்கலாம் .அதனால் அவர்களுக்கு  இவ்வளவு காலம் எட்டாக்கனியாக இருந்த பொருட்களை அபகரிக்க துணிந்து இருக்கலாம் என்று பலவகையான காரணங்களை சமூக உளவியல் அறிஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளுவோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.


இங்கிலாந்தில் வறிய மக்களுக்கு வழங்கப்படும் சமூக உதவி கொடுப்பனவுகளில் கட்டுபாடுகள் குறைப்புகளை கொண்டு வந்தது அண்மையில் புதிதாக பதவிக்கு அமர்ந்த வலதுசாரிக்கட்சி ,அந்த கறுப்பு இனத்தவரை சுட்டு கொன்ற காரணத்தை விட ..மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் அடித்தட்டு மக்களின் சமூக நல கொடுப்பனவுகளில் கை வைத்தமை போன்றவையே இங்கிலாந்தின் வரலாற்றில் காணாத கலவரத்தை காணவேண்டிய நிலமை வந்தது என ஒரு சாரார் வாதாடுகின்றனர் .


பல காலமாக கறுப்பின மக்கள் மீது பாகுபாடு காட்டபடுகிறது என்று கூறப்படும் நிலையில் அதே நேரத்தில் அதிக குற்ற செயல்களில் அவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.அவர்கள் இப்படி ஈடுபடுவதற்க்கு காரணம் அவர்களுடைய கல்வியறிவு குறைபாடு நிறமூர்த்த அடிப்படை போன்றவற்றையை காரணம் கற்பிப்போரும் உளர் .அதில் உண்மை அல்ல என்பதுக்கு உதாரணம் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தான் கறுப்பு இனத்தவரிலும் பார்க்க குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.கறுப்பின மக்களின் குடி பரம்பல் ரோமானியா  காலத்திலையே நிகழ தொடங்கி விட்டது .அதன் பின் அடிமைகளாகவும் போர் வீரர்களாகவும் இங்கு குடி புகுந்தனர் .அழகான பெண்கள் அழகற்ற ஆண்களையே எப்போதும் வைத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக கூறுவர்.வெள்ளை இனப் பெண்கள் கறுப்பின ஆண்களை விரும்பி ஜோடியாக தேர்ந்தெடுப்பதை அடிப்படையாக வைத்தே இதை கூறுவார்கள் .கறுப்பின ஆண்களால் இவர்கள் கட்டிலில் நன்கு கவனிக்கப்படுவதனால் விரும்புவதற்க்கு காரணம் என்று கூறிக்கொண்டாலும் இன்றும் நிறுவப்படாத உண்மையாக தான் இப்பொழுதும் இருக்கிறது.இவர்கள் பிரபலமான இசை பாடகர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதால் இவர்களின் நடை உடை பேச்சு முறைகளை அப்பட்டமாக கொப்பி அடித்து விரும்பி பின்பற்றுக்கிறார்கள் .ஏன் நம் இளைஞர்கள் கூட இவர்களின் நடை உடை பேச்சு போன்றவற்றை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானித்து இருக்கலாம்.




இது தன் முனைப்பு கிளர்ச்சியாக தான் ஆரம்பத்தில் இருந்தது ,பின் நன்கு  திட்டமிடப்பட்டு பல இடங்களில் செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகிறது. துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் சமூக தொடர்பு இணையங்களான பேஸ்புக் ட்விட்டர் மூலம் போரட்டத்துக்கு அழைத்தது போல் இப்பொழுது இங்கிலாந்து நடந்த சம்பவத்துக்கு செய்திருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற சம்பவத்துக்கு ஊக்கமும் பாரட்டு கொடுத்த இங்கிலாந்து தனக்கே அந்த நிலை ஏற்படும் பொழுது செய்வதறியாமால் மிரளுகிறது.மேற்கத்தைய நாடுகள் தங்கள் அமைப்பின் பொய்மையான விம்பங்கள் மெல்ல மெல்ல நன்கு தெரிய தொடங்கி விட்டதை உணர்ந்து கொண்டன..அமெரிக்காவின் கடன் வாங்கு திறன் தர வரிசை குறைக்கப்பட்டமை ,பிரித்தானிய எந்த புதிய உற்பத்தி  இன்றி  வெறும் பண தரகராகவே இவ்வளவு காலமும் இருந்து வந்தது இனிமேல் எடுபடாது என்ற நிலைமை உருவாக்கி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் பொழுதெல்லாம் தமது இருப்பை காப்பற்றுவதற்க்கு அடிதட்ட மக்களின் இருப்பையை கை வைக்கிறது.இந்த எதிர்ப்பு முறை சரியே பிழையோ என ஒரு புறம் இருக்க இந்த கை வைப்புக்கு எதிராக திரள்வது தவிர்க்க முடியமால் இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாமால் இருந்திருக்காது.அதனால் அவர்கள் இரும்பு கரங்கள் கொண்டு அடக்க தயாராகவிட்டார்கள் என்று பிரதமர் அவர்களின் அண்மைய அறிக்கைகள் காட்டுகிறது.


இந்த கடை உடைப்பபில் வறியஇளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஈடுப்டவில்லை .பிரபல இங்கிலாந்து ஒலிம்பிக் வீராங்கனை ,பிரபல பாடசாலையில் படித்த பெரிய கோடிஸ்வரனின் மகள் ,பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற தண்டனை போதுமானதாக இல்லையென்று பொலிஸ் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது.இவர்கள் இப்படி கிளர்வதுக்குரிய அடிப்படை காரணத்தை கண்டறியமால் தண்டனை கொடுப்பதால் எதுவும் தீரப்போவதுமில்லை , குழப்பத்தில் ஈடுபடுவர்களும் தனது எதிரி யார் என சரியாக இனம் காணமால் இப்படி போராடுவதாலும் பலன் எதுவும் வரப்போவதுமில்லை. 
இவை தொடர்பான விரிவான கலையரசனின் பதிவுhttp://kalaiy.blogspot.com/2011/08/blog-post_13.html

Sunday, August 07, 2011

கறுப்பு இனத்தவரின் கோபத்தால் வடக்கு லண்டன் தீயால் எரிந்தது-வீடியோ

Thursday, August 04, 2011

இராமய்யாவின் குடிசை -கீழ்வெண்மணி சம்பவ ஆவணப் படம் -வீடியோ



அறிஞர் அண்ணாவின் திமுக ஆட்சி காலத்தில் நடந்த கீழ்வெண்மணி சம்பவம் பற்றிய ஆவணப்படம் ராமய்யாவின் குடிசை.இவை பற்றியதை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதி புனல் நாவல் வெளிவந்தது நினைவிருக்கலாம். இந்த ஆவணபடத்தை பற்றிய மேலும் விபரங்களை அறியவிரும்பின் இங்கு அழுத்தி பார்க்கவும்

Tuesday, August 02, 2011

திராவிடர்களின் கொடும் சூழ்ச்சியாம் -வீடியோ



Friday, July 29, 2011

துக்க காரியத்துக்கு போய் துக்கமாக வந்தவர்கள்

அவர்கள் ஏன் அந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினமோ என்று தெரியவில்லை என்று புலம்பினார்கள்.. அந்த புலம்பலில் அவர்களுக்கு பட்ட மனரீதியான வேதனை உடல் ரீதியான வேதனை இல்லாமால் போனது என்று இல்லை, வாடகை விடும் வாகனத்தின் நிறுவனத்தின் முதலாளி தான் இவர்களுக்கு சாரதியாக லண்டனிலிருந்து பிரான்ஸ் போகும் வரை .அதுவே  அவர்களின் பிரச்சனையாக உருவெடுத்து அலைக்கழித்து சீரழிந்த பிரயாணமாக முடிவுற்றது.

இந்த 17 பேர் கொண்ட குழுவினர் பாரிஸ் நகரத்தில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளுவதற்க்காகவே இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் ,பொதுவாக இறுதி நிகழ்வுக்காக கலந்து கொள்ள போவதால் அவர்களுக்கு முகத்தில் ஒரு இறுக்கம் மற்றும் சலனம் இருப்பது வழமை அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் அந்த வாகனத்தின் முதலாளியும் சாரதியுமான அவருக்குத்தான் இறுக்கம் ஏனோ தெரியவில்லை அதிகம் இருந்தது வழமைக்கு மாறாகா.. .அந்த வாகனத்தில் பயணிப்பவர்களோடு எந்த உறவோ நட்புத்துவமோ காட்டதாவராகவே இருந்தார் .மேற்கு லண்டனில் தொடங்கிய பயணம் பிரித்தானிய எல்லை டோவர் துறைமுகத்தை கடந்து பிரான்ஸ் நாட்டை அடைந்தது..அந்த நாட்டுக்குள் பல மணி நேரம் ஓடியும் சலனமற்ற இறுக்கமான சாரதியாகவே இருந்தார்.இறுக்கமான சாரதியாக இருந்து விட்டு போகட்டுமே ஆனால் அந்த பிர\யாணிகளின் எந்த விதமான கோரிக்கைக்கும் செவி சாய்க்காமால் அல்லவா ஓடி கொண்டிருந்தார், பிரயாணம் செய்தவர்களில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்,ஒரே இடத்தில் தான் சாப்பிட நிறுத்தினார் குறுகிய கால அவகாசத்தை கொடுத்து . பாரிஸ் செல்லும் வரையும் பெண்கள் முதியவர்கள் சிறுநீர் கழிக்கும் மற்றும் தேவைகளுக்கு ஓரிடத்தில் நிறுத்தம்படி பல முறை கோரிக்கை வைக்கவும் அதை காதில் போட்டு கொள்ளமாலே ஓடி கொண்டிருந்தார்.

இறுதி சடங்கு முடிந்து அன்று பின்னேரமே லண்டன் திரும்பும் நோக்கில் அதே வாகனத்தில் அதே சாரதியின் இறுக்கத்துடன் திரும்பி கொண்டிருந்தார்கள் .மிகவும் களைப்புற்ற பெண்கள் மருந்து பாவிக்க வேண்டிய முதியவர்கள் மற்றும் பலர் ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தும் படி பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் காதில் விழாத மாதிரி ஓடிக் கொண்டு வந்தார். மேலும் உரக்க எல்லாருமே மீண்டும் கோரிக்கை வைக்க காதில் விழுந்ததோ என்னவோ, இப்படி திமிருடன் பதிலளித்தார். எனது வாகனம் நான் நிறுத்துவது நிறுத்தாதது எனது தீர்மானத்தில் தங்கியிருக்கிறது உங்களுடையதில் அல்ல என்று. தொடந்து பிரச்சனை தருவீர்கள் என்றால் பிரான்ஸ் நாட்டு எல்லை இமிக்கிரேசன் பொலிசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தினார்.சாரதியும் வாகன உரிமையாளருமானவரும் தமிழர் பயணிகளும் தமிழராக இருந்தும் ஒரு இணக்கத்து வர முடியுமால் .வெருட்டி பார்க்க என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை . .இவ்வளவுத்துக்கும் அத்தனை பேரும் பிரித்தானியா நாட்டு குடியுருமை கடவு சீட்டு வைத்திருக்கிறார்கள் . அப்படி இருந்தும் காலம் காலமாக வெருட்டி பயப்படுத்தி விளையாடிய அணுகுமுறையை இப்ப செலுத்தி பார்க்கிறார் அவர்.

அவர் வாகனத்தை நிறுத்தாமால் ஓடினாலும் விரும்பியோ விரும்பமாலோ ஓரிடத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் ...ஏனெனில் எரிபொருள் தேவைக்காக எரிபொருள் நிலையத்தில்.. எரிபொருள் நிலையத்தில் வைத்து சாரதியின் ஆணவ போக்கை அமைதியாகவும் பண்பாகவும் அப்பிரயாணிகளில் இருவர் தட்டி கேட்கின்றனர்.ஆனால் எதற்க்கும் மசிந்து கொடுக்காத சாரதி ..இரட்டிப்பு ஆணவ திமிர் போக்குடன் பதிலளிக்கிறார் .அந்த பதிலுக்கு பதில்
என வார்த்தைகளாக மாறியது.இது ஒரு சம்பவமாக கருதாமால் சாரதி அவர்களை பழி வாங்கும் வழியில் ஈடுப்பட்டார். எப்படியெனில் calais என்ற பிரான்ஸ்  எல்லையில் பொலிசாரிடம் நியாயத்தை தட்டி கேட்ட இரு நபர்களையும் ஏற்றி செல்ல முடியாது என கூறினார் . பொலிசாரும் சாரதியின் தீர்மானம் தான் முடிவானது ,இது சிவில் சம்பந்த பட்ட விடயம் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டனர்.அந்த இருவரை ஏற்றிக்கொள்ளாவிட்டால் நாமும் அந்த வாகனத்தில் வரவில்லை என ஒட்டு மொத்த சக பிரயாணிகளும் வாகனத்தில் இருந்து இறங்கி விட்டனர். அதே இறுக்கத்துடன் ஆனால் அவர் மட்டும் அந்த வாகனத்தில் சாரதியும் பயணியுமாகி லண்டன் திரும்பி விட்டார்.






இவர்களை இறக்கி விட்ட இடமோ eurostar ரயிலுக்கு போகும் வாகனங்களை அனுமதிக்கும் இடம் .அந்த இடத்தில் பொது கழிப்பறையோ தங்குமிடமோ கடையோ எந்த வசதிகள் அற்ற இடம் பாசை தெரியாத இடம் . அத்துடன் நடை பயணிகளை அனுமதிக்கும் eurostar terminal க்கு போவதுக்கான எந்த நடை பாதைகளும் இருக்கவில்லை...இப்பொழுது அவர்களுக்கும் இன்னும் நிலமை சங்கடமாகி விட்டது.ஏதோ தற்சயலாக அகப்பட்ட வீதி காவல் பிரான்ஸ் பொலிசாரிடம் நிலமையை விளக்கி உதவி செய்யுமாறு வேண்டினர்.பொலிசார் டாக்ஸியை ஒழுங்குபடுத்தினர் அதன் மூலம் நடை பயணிகளின் terminalஜ அடைந்தனர் . ஆனால் அந்த டாக்சி அந்த இடத்துக்கும் இந்த இடத்துக்கும் மூன்று முறை ஓடியது பிரயாணிகளின் தொகை காரணமாக.

நடை பயணிகளின் terminalஜ அடையும் போது இன்னுமொரு சோகம் காத்திருந்தது. நள்ளிரவை கடந்தமயால் அவர்கள் லண்டன் சேருவதற்க்கு எந்த ரயிலும் இருக்கவில்லை . அதனால் அன்று இரவு முழுக்க அங்கேயே கழித்தார்கள்.மறுநாள் காலை டோவரை வந்து அடைந்து ஏதோ முறையில் வந்தடைந்தார்கள் ..அந்த பயணிகளின் சிலரின் கைப்பைகள் அந்த வாகனத்தில் சென்று விட்டன அந்த கைப்பைகளில் சிலர் கட்டாயம் நேரத்து நேரம் பாவிக்க வேண்டிய மருந்து வகைகளும் உள்ளடங்கி இருந்தன. இதனாலும் அவர்கள் மிகவும் அவதியுற்று மேற்கு லண்டன் வந்து சேர்ந்தார்கள்.


(இந்த குறிப்பிட்ட வாகனத்தை இதற்க்கு முன்னும் வாடகைக்கு அமர்த்திய பலர் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங்களை பெற்று கொண்டனர் என்று பின்னர் அறிந்து கொள்ள கூடியிருந்ததாம். அந்த வாகனத்தில் பிரயாணம் செய்த நண்பர் ஒருவர் குறிப்பிட்ட வாடகைக்குவாகனம் விடும் இந்த நிறுவனத்தை பற்றி ஊடகங்கள் மூலம் தெரிய படுத்தும் முயற்சியில் ஈடுப்ட்டு இருந்தார் .அது போல என்னையும் அணுகியிருந்தார் .அவரின் நியாயத்தை புரிந்து கொண்டு இப் பதிவை கொண்டு வந்துள்ளேன்) நன்றி)



வாடகை வாகன நிறுவனத்தின் பெயர் -GOWRI TOURS neasden

Gowri Tours 

-Hired 17 seats vehicle with driver from the above named company to attend a funeral in France on 19/07/2011.


- The journey started from Perivale at 8.00 pm on 18/07/2011 and arrived at Euro star terminal in Dover and took train at 10.50pm.
- Travelling time in the tunnel was 35 minutes and continue the travel until a stop for food break in a service station at 13.30 (Europe time)
- Reached destination near Chat de Gaulle airport 5.00 am (non stop)
- Funeral started at 12.00 noon and finished around 4.00pm
- At about 5.00 pm we started our journey back to UK from the crematorium.
- Number of requests made by us to stop the vehicle to buy refreshments before get the Motorway but not stopped.
- The driver continued his driving for 2 hours and stopped at a filling station
- We asked the driver politely why you didn’t stop the vehicle at a convenient place for refreshment and shopping. He said that this is my company and I can stop only to my convenience and not yours. If you ask or talk anymore, I will report to you to the police and immigration then you all got no chance to go tonight back to UK
- As he warned us when we arrived at the passports check point at Calais Euro Tunnel he complained to the British Police and Immigration officer that he has problem with two passengers and I won’t take them in my vehicle and leave here. The follow passengers didn’t agree these conditions so he took all bags in the back and gone with some bags inside the vehicle with valuables and medicines.
- It was a remote area no shops or public toilets. We asked French police to help us to go to Calais foot passenger terminal to continue our journey to UK. Helped arrived from French Police after one hour of waiting to cross the check point backwards and hired 3 trips of taxi service to the terminal at 10.30 at our costs.
- Foot passenger terminal closed 10.00 pm and we were told the next ferry on the following day 0640hrs.
- We waited there until morning without food, water and sleep. Among us seven women most are on regular medication with various illnesses. We starved even without water and proper rest.
- We bought ticket for ferry in the morning at our own costs and finally arrived Perivale at 12.00noon on Wednesday 20/07/2011 by using coach and minicabs.
- We had gone through lot of struggle by this company and also hearing from others of various complaints. We need your help to investigate this company and find way to compensate our sufferings and losses. We strongly believe that this company has broken your licensing conditions by held us in the vehicle for unreasonable length of time, not to allowed for toilets, left us without food or drink, left us in a scaring and frighten unknown language area, left our children kept in UK with relatives for too long, couldn’t go to work, phone calls from caring people, loss of money for unforeseen expenses. The driver was also looked tired and weak driven the vehicle on his own without proper break and rest. We feared for his reckless driving and told him to taking care of our and his life too.


(ஊடக தர்மத்தின் அடிப்படையில் .அவர்கள் தரப்பு நியாயங்களை கூறுவார்களானால் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்)