இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Saturday, June 01, 2013
Tuesday, May 28, 2013
A Gun & A Ring என்ற புலம் பெயர் தமிழரின் திரைபடம் ..சர்வதேச திரைபட விழாவின் தங்க கோப்பை போட்டிக்கு தெரிவு-வீடியோ
புலம்பெயர் தமிழரின் உழைப்பில் கனடாவில் உருவான A Gun & A Ring ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில்
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) கனடியத் தமிழர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A GUN & A RING.
112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து போட்டிப் பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து A GUN & A RING உட்பட 12 படங்கள் மட்டுமே Golden Goblet(தங்கக் கோப்பை) விருதுக்கான போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.
2013 ஜூன் 15-23 வரையில் சீனாவின் ஷாங்காய் நகரில் விழா நடைபெறுகின்றது.
இப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் தான் ''1999'' என்ற திரைபடத்தை ஏற்கனவே எடுத்து பல சர்வதேச விருதுகளை பெற்று கொடுத்தார்
1999 திரைபடம் லண்டனில் திரையிடபட்ட பொழுது அதை பற்றிய விமர்சனம் எழுதி இருந்தேன் அதை பார்க்க விரும்பின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்
http://sinnakuddy.blogspot.co.uk/2011/06/1999.html
Monday, May 27, 2013
இருக்கு என்றுவாங்க..இல்லை .மனிதனிட்டை. ஆனால்.இந்த ஜீவனிட்டை இருக்கு பாருங்க-வீடியோ
Saturday, May 25, 2013
Wednesday, May 22, 2013
Tuesday, May 21, 2013
70 ,80 கால கட்டங்கள் பொற் காலமா?-வீடியோ
70 80 களின் காலம் பொற்காலம் என்று ஒரு சாராரும் ,மறுபக்கத்தில் வேதனையே மறு சாராரும் இருந்து விவாதிக்கும் நீயா நானா நிகழ்ச்சி பார்க்க கிடைத்தது.பங்கு பற்றிய இரு சாரரும் ஒரே கால கட்டத்த்தினர் அவரவர் கருத்துகளை அவர் அவர் கூறும் பொழுது இருசாராரும் உன்னிப்பாக ரசித்து அனுபவித்து அந்த காலத்துக்கு சென்று கொண்டிருந்தினர்.
நல்லதோ கெட்டதோ சந்தோசமோ வேதனையோ எப்படியோ அது பொற்காலம் என்று தண்டரோ போட்டு சொல்ல முடியாவிட்டாலும் என்னவென்று கூற முடியாத உணர்வு ஒன்று மனதை தாலட்டி அந்த காலத்தோடை அடிக்கடி ஒன்றிணைத்து வைத்து கொண்டிருப்பதால் பார்த்து கொண்டிருந்த எனக்கும் அந்த நிகழ்ச்சியோடு சங்கமித்தித்த்து ஆச்சரியமான விசயமில்லை தானே
அதில் விருந்தின பேச்சாளர் ஒருவராக வந்திருந்த கவிஞர் மகுடேஸ்வரன் கூறிய ஒரு கருத்து 70 80 களில் நடைபெற்ற சம்பவம் ஒவ்வொன்றும் மனதில் ஞாபகமாக அச்சாணியாக பதிந்து இருக்கிறது..மற்றய காலகட்டது நினைவுகள் ஞாபகம் இல்லாமால் இருப்பது மட்டுமின்றி....வேகமாக நகர்ந்த மாதிரி இருக்கிறது என்றார். அது என்னை பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருந்திய மாதிரி இருந்த்து..அந்த கால கட்ட நினைவுகளை இப்பொழுதும் சரியாக நினைவுட்ட முடிகிறது மற்ற கால கட்டத்தினிலும் பார்க்க..
காலனித்து வாதிகள் இந்திய உபகண்டத்துக்கு சீதனமாக கொடுத்து விட்டு போன இந்த கிரிக்கட் விளையாட்டில் அந்த காலம் முற்போக்கு பிற்போக்கு பேதமின்றி மிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இந்த விவாதத்தில் பங்கு பெற்றிய ஒரு ஒருவர் அந்த காலம் கிரிக்கட் வர்ணணை கேட்கும் விதம் பற்றி கூறி இருந்தார் . நண்பர்கள் சுற்றி இருக்க ஒரே ஒருவர் கேட்டு கொண்டு அந்த வர்ணணையை இக்காலத்தில் இருப்பது மாதிரி நேர்முக படபிடிப்பில் வரும் உணர்வை கொண்டு வருவார் என்று.
நாங்களும் இதே மாதிரி தான் சிறிய றேடியோவை வைத்து கிரிக்கட் கொமண்டிறி கேட்டது ஞாபகம் இந்தியாவில் அப்பொழுது பெரு நகரங்களான பம்பாய்,கல்கத்தா, சென்னை ,டெல்லி பெங்களூர்,கான்பூர் இடங்களில் டெஸ்ட் கிரிக்கட் நடக்கும். சென்னை தவிர மற்ற இடங்களில் நடக்கும் டெஸ்ட் வர்ணணைகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் 15 நிமிடத்துக்கு ஒரு முறை மாறி மாறி தான் கேட்க முடியும் .... கிரிக்கட் ஆர்வத்தால் எங்களுக்கு ஹிந்தி சொல்ல சொல்லுகள் கூட தெரிந்து கொள்ளுவோம் ..இப்படி அந்த கால கட்டத்து மனதில் சொறியும் நினைவுகளை இப்படி கனக்க சொல்லலாம் ....கீழே அந்த பொற் கால விவாத வீடியோ பார்த்து உங்களுக்கும் அப்படி ஒரு சொறியும் நினைவுகள் இருந்தால் சொல்லுங்கோ
Monday, May 20, 2013
Thursday, May 16, 2013
Wednesday, May 15, 2013
Saturday, May 11, 2013
Monday, May 06, 2013
Sunday, May 05, 2013
Saturday, May 04, 2013
Tuesday, April 30, 2013
Wednesday, April 24, 2013
'''அய்யோ கொல்லுறாங்களே ''..2001 இல் கலைஞரை கைது செய்த பொழுது-வீடியோ
2001 இல் கருணாநிதி கைது செய்யபட்ட விபரங்களை மேலும் அறிய விரும்பின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கவும்
http://truetamilans.blogspot.com/2011/08/2001.html
Monday, April 22, 2013
Friday, April 19, 2013
Wednesday, April 17, 2013
Sunday, April 07, 2013
Saturday, April 06, 2013
Friday, April 05, 2013
Monday, April 01, 2013
BREAKING NEWS-பலருக்கு இன்று சென்றடைந்த விநோத தொலைபேசி அழைப்புக்கள் -வீடியோ
(01.04.2013)....பொறுத்து கொள்ளுங்கள் ..புரிஞ்சுக்குவீங்க என்று நம்புகிறேன்..
Tuesday, March 26, 2013
Saturday, March 23, 2013
Friday, March 22, 2013
Tuesday, March 19, 2013
Monday, March 18, 2013
Thursday, March 14, 2013
Saturday, March 02, 2013
Wednesday, February 27, 2013
Saturday, February 23, 2013
Friday, February 15, 2013
Wednesday, February 13, 2013
Tuesday, February 12, 2013
எமது சினிமா...இந்திய சினிமாவோ அல்லது சிங்கள சினிமாவோ அல்ல-வீடியோ
இவர் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனும் வடமாரட்சி அல்வாயை பிறப்பிடமாக கொண்டவர் என்று மேற் காணும் வீடியோவில் குறிப்பிடப் படுகிறது
Monday, February 11, 2013
Wednesday, February 06, 2013
மறைந்த மூத்த சக வலைபதிவர் டோண்டு சார் ஜெயா டிவிக்கு அளித்த நேர்முகம்-வீடியோ
மூத்த வலைபதிவாளர் டோண்டு சார் அவர்களின் மறைவு அறிந்து சக வலைபதிவாளர் பிரபா ..எழுதிய வலைபதிவு கீழை இருக்கிறது பார்க்க
http://www.madathuvaasal.com/2013/02/blog-post.html
Monday, February 04, 2013
விஸ்வருபம் தரும் புதிய திரை அனுபவம்
விஸ்வரூபம் திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல் இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன் மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன்
.அந்த சண்டை காட்சி எடுத்த விதம் அற்புதமாக இருந்தது .தியேட்டரே ஒருமித்து கூவி ஆர்பர்த்தரித்த்து.எத்தனை திரைபடத்தில் எத்தனை சண்டை காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் ஏதோ வித்தியாசமாக இருந்த்து தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணத்தை கண்டு வியக்க வைத்தது.தமிழில் அறிமுகபடுத்துகின்ற கமலுக்கு நன்றியாக சொல்லியாக வேண்டும் .இப்படி நான் பிரமிக்கும் பொழுது சிலர் சொல்ல வருவார்கள் ..பேமாரி ...ஹாலிவூட் படங்களிலும் இதை மாதிரி எத்தனையோ படங்களில் நாம் எல்லாம் பார்த்து இருக்கிறோம் இது எல்லாம் பெரிய விசயமில்லை என்று .நாகேஸ் ஒரு படத்தில் கெளவரமாக இங்கிலீஸ் படம் ஒன்லி தான் பார்ப்போம் என்று சொல்லுற மாதிரி .நாங்கள் தமிழ் படம் ஒன்லி தான் பார்ப்போம் .அதாலை இது வரை வந்த தமிழ் படங்களில் விஸ்வரூபம் அதி சிறந்த தொழில் நுட்பத்துடன் காட்சிகளை அமைந்து இருக்குது என்றால் நான் சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்
<
முக்கியாமாக இந்த படத்தின் ஓலித்தரம் புதிய அனுபவமாக இருந்தது .முக்கியமாக இந்த ஓலிக்காகவே கட்டாயம் தியேட்டரில் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது .DTH யிலோ வேறு முறைகளிலோ இந்த படத்தை பார்த்தால் அந்த அனுபவத்தை தராது என்று நிச்சயம் சொல்லலாம் . தியேட்டர் ஒலி குறிப்புகளை தவற விட்டு பார்த்தால் தமிழ் நாட்டு முஸ்லிம் கூட்டமைப்பு சொன்ன மாதிரி ஒரு டாக்குமென்றி படம் போல சில வேளை தோற்றமளிக்க கூடும் . திரைகதையின் சில நகர்வுகளின் குழப்பங்கள் காரணமாயிருக்கலாம்
ஆப்கான் புவிபரப்பு காட்சிகளை இந்தியாவில் வடிவமைத்து தமிழ் நாட்டிலும் வேறு பகுதிகளிலும் படமாக்கினார்கள் என்று சொல்லும் பொழுது நம்ப மறுக்கிறது .அப்படி தத்துரூவமாக இருந்த்து .ஹெலிகொப்டர்கள் பறக்கும் பொழுது தியேட்டரில் இருந்து திரைக்குள் சென்று பறப்பது மாதிரி ஒரு அனுபவத்தை தந்தது
அமெரிக்க, றோ என முடிச்சு போட்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் . இந்த தில்லர் திரைபடத்துக்கு பல காட்சிகளை அமைக்க இந்த களம் வசதியாக நிச்சயமாக இருந்திருக்க கூடும் அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.இது பெரிய கலை படைப்பு அது இது என்று சொல்ல எனக்கு தெரியாது சொல்லவுமில்லை .தலாபான் பயங்கரவாத்த்தை காட்டியவர் . அமரிக்க அரச பயங்கரவாதம் செய்யும் காட்சிகளை ஒரு இரு காட்சிகளில் காட்டி இருந்தாலும் தலபான் பயங்கரவாத்த்தை காட்டியளவுக்கு காட்டியிருக்கலாம்.இந்திய றோ அதிகாரி கதாநாயகனாக பாத்திரம் அமைந்திருக்கும் பொழுது அப்படி ஒரு முயற்சிக்கு போக முடியாது தானே
கமல் இந்த படத்தில் ஒரு வசனம் சொல்லுவார் ...ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று அது உண்மை தான் படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல .அவரது இன்றைய நிலையில் தனிப்பட்ட நிலைபாட்டுக்கும் பொருந்தும்.இது போன்ற தில்லர் திரைக்கதைக்கு கமல் ஆப்கான் வரை இவ்வளவு தூரம் போயிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் பாக்கு நீரிணையை கடந்தால் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். .றோ அதிகாரியாக நடித்து சாகசம் செய்வது இந்தியனாக சில வேளை பெருமைப்பட்டு கொள்ளலாம்..மற்றவர்களை பொறுத்த வரை வில்லத்தனமாகவே தோற்றமளிக்கும் வரலாறுகள் சாட்சியாக இருப்பதால் ..முக்கியமாக தமிழர்களை பொறுத்தவரையில்
Friday, February 01, 2013
Tuesday, January 29, 2013
Wednesday, January 23, 2013
Monday, January 21, 2013
''இனி அவன்'' என்ற இலங்கை தமிழ் திரைபடம் பற்றிய பார்வை-வீடியோ
இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்' இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.
இலங்கையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.
பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.
ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் வேலை கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.
தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.
அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.
இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.
வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.
நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம்.
இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.
இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.
அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.
ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த 'இனி அவன்'.
அமானுல்லா எம். றிஷாத்
நன்றி-வீரகேசரி http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16 http://yokarnan.com/?p=394
| ||||
Wednesday, January 16, 2013
Tuesday, January 15, 2013
Sunday, January 13, 2013
Saturday, January 12, 2013
Thursday, January 10, 2013
Friday, January 04, 2013
Tuesday, January 01, 2013
Monday, December 31, 2012
யாழில் -யாழ்தேவி ரயில் ஓட கண்டு இருக்கிறீர்களா?-வீடியோ
Sunday, December 30, 2012
Monday, December 24, 2012
Friday, December 21, 2012
Friday, December 14, 2012
Tuesday, December 11, 2012
Friday, December 07, 2012
Wednesday, December 05, 2012
Tuesday, December 04, 2012
Sunday, December 02, 2012
Thursday, November 29, 2012
Wednesday, November 28, 2012
Monday, November 19, 2012
தமிழ்நாட்டில்- சமூக வலைதள கைதுகள்...தூண்டும் விவாதங்கள்-வீடியோ
பிரபல வலைபதிவளார் லக்கிலுக் அல்லது யுவகிருஸ்ணா உட்பட உரையாற்றிய வீடியோ துண்டங்களை மேலே பார்க்கிறீர்கள்
மேலும் விபரங்கள் அறிய விரும்பின்
கீழே உள்ள இணைப்பகை அழுத்தவும்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21970:2012-11-16-04-01-17&catid=1:articles&Itemid=264
Wednesday, November 14, 2012
Tuesday, November 13, 2012
Monday, November 12, 2012
ஹாட்லி- மைக்கல் ஜக்சனின் மேலும் சில மேடை காட்சிகள் -வீடியோ
ஹாட்லி கல்லூரியில் படித்த முரளிதரனின் மகனின் நடனங்கள் தான் மேலே உள்ள வீடியோவில் இருப்பது.முரளிதரன் ஹாட்லியில் படித்த காலத்தில் நல்ல தொரு ஸ்போர்ட்ஸ்மானாக திகழ்ந்தான்..அவனது மகனின் பலராலும் பாராட்டு பெற்ற சில மேடை அரங்கேற்ற காட்சிகளை சின்னக்குட்டியின் வலைபதிவும் பதிவு செய்வதில் சந்தோசம் கொள்ளுகிறது
வாழ்த்துக்கள் MANOJJ முரளிதரன்
http://www.thenationalstudent.com/News/2011-03-21/Cityanddance_.html manojj முரளிதரனை பற்றிய பத்திரிகை குறிப்பின் ஒரு பகுதி கீழே இருப்பது
Manojj Muraleetharan, who played the role of MJ on the night, said he never imagined that they had a chance of winning, but the cheers and motivation from the judges gave them hope. Muraleetharan said: “The vibe and atmosphere was incredible when we performed our routine. I just knew we were going to win, I could feel it.”
Sunday, November 11, 2012
மைக்கல் ஜக்சன் -ஹாட்லி கல்லூரி லண்டன் இராப்போசன விருந்தில்-வீடியோ
10.11.12 அன்று நடைபெற்ற ஹாட்லி கல்லூரியின் இராப்போசன விருந்தில் அமெரிக்காவில் இருந்து பேராசிரியர் தேவநாயகமும் இலங்கையில் இருந்து தற்போதைய ஹாட்லி கல்லூரி அதிபர் தெய்வேந்திர ராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் .
25 வருடங்களின் பின்னர் எனது நெருக்கமான வகுப்பு தோழன் முரளிதரனை (நெல்லியடி முரளி ) சந்திக்கும் சந்தர்ப்பம்இந்த வைபவத்தின் மூலம் கிடைத்தது.
அவனது மகன் மைக்கல் ஜக்சன் போல ஆடி அங்குள்ளோர் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தான் ..வலைபதிவர் வந்தியதேவன் அல்லது மயூரன் பேரி என்பவரை சந்திக்க கிடைத்தது....மேலும் பல காலம் சந்திக்காத நண்பர்களை கண்டு களிக்க களம் அமைத்து கொடுத்தது இந்த இராப்போசன விருந்து.
Friday, November 09, 2012
Wednesday, November 07, 2012
Tuesday, November 06, 2012
Tuesday, October 30, 2012
Thursday, October 25, 2012
Wednesday, October 24, 2012
பாடகி சின்மயினால் மேலும் செல்வாக்கு பெறும் சமூக வலைதளங்கள்-வீடியோ
சினமயின் ட்விட்டர் பிரச்சனை அறிய விரும்பின் இதில் அழுத்தி பார்க்கவும்
Friday, October 19, 2012
குத்து விளக்கு-70 களில் வந்த இலங்கை தமிழ் திரைபடம் - முழு வீடியோ
--------------------------------------------------------------------------------
குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.
இயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
தயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா
கதை வீ. எஸ். துரைராஜா
நடிப்பு ஆனந்தன்
ஜெயகாந்த்
லீலா நாராயணன்
பேரம்பலம்
யோகா தில்லைநாதன்
எம். எஸ். ரத்தினம்
எஸ். ராம்தாஸ்
சிசு. நாகேந்திரா
இந்திராதேவி
திருநாவுக்கரசு
நடராஜன்
பரமானந்த
ஸ்ரீசங்கர்
இசையமைப்பு ஆர். முத்துசாமி
ஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்
விநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்
வெளியீடு 1972
நாடு இலங்கை
மொழி தமிழ்
திரைக்கதை ஈழத்து இரத்தினம்
*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
Tuesday, October 16, 2012
சக வலை பதிவர் விசரனின் பேட்டி லண்டன் தொலைக்காட்சியில்-வீடியோ
விசரன் என்ற புனைபெயரில் அவர் வலைபதிவு வைத்திருந்த தருணத்தில் சில காலங்களுக்கு முன்பு லண்டனில் தற்சயலாக சந்திக்க நேர்ந்தது.அப்பொழுது ஒரு பதிவு போட்டிருந்தேன் .அந்த பதிவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்
Sunday, October 14, 2012
20 வருடங்களாக தொலைந்த 95 வயது தாயும் 65 மகனும் சந்தித்த பொழுது-வீடியோ
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித் தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்தஈஸ்வரன் (வயது65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.
ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்தஈஸ்வரனுக்குத் தெரியாது.
இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.
பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்தஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.
நன்றி-ஈழநாதம்
Friday, October 12, 2012
Monday, October 08, 2012
Tuesday, October 02, 2012
Monday, October 01, 2012
புலம் பெயர் தமிழ் குஞ்சுகளின்.. ஓட்டை உழுந்து வடை -வீடியோ
மேலே உள்ள பாடல் லண்டன் குட்டி hari யின் உடையது .நகல் வடிவம் ...
கீழே அந்த பாடலின் அசல் வடிவம்
Saturday, September 29, 2012
Tuesday, September 25, 2012
Saturday, September 22, 2012
Thursday, September 20, 2012
இயேசு பற்றிய தற்போதைய கிசு கிசு-வீடியோ
ஏசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், ஏசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ஏசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்டு அவர் கூறியதாவது:-
மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப்படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஏசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.
பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், ஏசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் ஏசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.
ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று ஏசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்துப்படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும், அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்
ஏற்கனவே மேரி மெகதலீனும், ஏசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது 'தி டாவின்சி கோட்' நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் மேரி மெகதலீன், ஏசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.
மேரி மெகதலீன் ஏசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் ஏசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
மேரி மெகதலீன் குறித்து ஏசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய்விட்டனர். ஜான் மட்டுமே இருந்தார். மேரி மெகதலீனும் அவருடன் இருந்தார்.
இதேபோல ஏசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன்.
இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி -மாலை மலர்
Saturday, September 15, 2012
Thursday, September 13, 2012
Monday, September 10, 2012
Sunday, September 09, 2012
Tuesday, September 04, 2012
அப்பாவி சிங்களவர் மீது வீர்ம் காட்டும் தமிழக அரசியல் கட்சிகள் சில-வீடியோ
அப்பாவி சிங்களவர் மீது தமிழ் வீரம் காட்டி என்ன பயன்? ...77, 83 கலவரங்களின் பொழுது ஒட்டு மொத்தம் சிங்களவனும் எதிரியாக இருந்திருந்தால் ..ஒரு தமிழனும் வடக்கு கிழக்குக்கு பத்திரமாக திரும்பி வந்திருக்க முடியாது . இந்த வீடியோவில் ஒரு சிங்கள பெண் அழுது கொண்டு குமிறுகிறாள் . உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று ...அந்த கேள்வி நியாயமாகாதானே படுகிறது .சிங்கள் பேரினவாத அரச யந்திரம் செய்யும் தவறுகளுக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?
Saturday, September 01, 2012
ஒரு கேரள பெண்ணும் ..ஏமாற்றப்பட்ட சென்னை இளைஞர்களும் -வீடியோ
solvathellam by msmorethan143
solvathellam 2 by msmorethan143
தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.
இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.
சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.-நன்றி- வீரகேசரி
