கூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.
இப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார்
இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.
பாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்
நல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்
இந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது
இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Thursday, August 25, 2016
Saturday, August 20, 2016
லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோ
இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்
தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.
சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்
Tuesday, August 16, 2016
Sunday, August 14, 2016
30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி கப்பல் தமிழர்கள் -ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு -வீடியோ
1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே
Tuesday, July 26, 2016
Sunday, July 24, 2016
Sunday, July 17, 2016
Thursday, July 14, 2016
கபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே?- வீடியோ
இலங்கை மலைய மக்களை முன்னிறுத்தி இப்படி
தேயிலை மேட்டிலே
அப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே
பா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக
இந்த பேட்டியிலை சொல்லுறார் .
.வாழ்த்துக்கள்
தேயிலை மேட்டிலே
அப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே
பா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக
இந்த பேட்டியிலை சொல்லுறார் .
.வாழ்த்துக்கள்
Wednesday, July 13, 2016
ஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ
இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.
இலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான "கோமாளிகளின் கும்மாளம்" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார். "கோமாளிகள் கும்மாளம்" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். நன்றி -பிபிசி தமிழ்

Saturday, July 02, 2016
இனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நாட்டுபுற பாடகி பிரசீதா-வீடியோ
மலையாள நாட்டுப்புற பாடகி பிரசீதாவின் இன்னுமொரு அசத்தலான பாடல் கீழே ,,கேட்டு பாருங்கள் உங்களையும் கிறங்க வைக்கலாம்
Thursday, June 30, 2016
Tuesday, June 21, 2016
Friday, June 17, 2016
Saturday, June 04, 2016
Wednesday, June 01, 2016
Friday, May 27, 2016
Saturday, May 21, 2016
Wednesday, May 18, 2016
Saturday, May 07, 2016
Thursday, May 05, 2016
Tuesday, May 03, 2016
Sunday, May 01, 2016
Monday, April 25, 2016
Sunday, April 24, 2016
Monday, April 11, 2016
60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவியில்-வீடியோ
60 70 களில் பிரபலமான நடிகைகளின் ஒரு ஒன்று கூடல் மாதிரியான நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது
அதில் சரோஜாதேவி ,காஞ்சனா ,சாராதா, லதா,வாணிசிறி, வெண்ணிறை ஆடை நிர்மலா .ஒய்,விஜயா, ,ராஜசுலோசனா ,விஜயகுமாரி, சகுந்தலா , விஜயலலிதா ,ஜோதிலட்சிமி,அனுராதா,சச்சு,,பாரதி ஷீலா,கலந்து கொண்டனர்
இந்த வீடியோவில் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து மீட்கும் நினைவலைகள் அற்புதம்.
Monday, April 04, 2016
Wednesday, March 30, 2016
இலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,
கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...
அவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்
படத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்
இவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்
வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்

Tuesday, March 29, 2016
Friday, March 11, 2016
Thursday, March 10, 2016
Monday, March 07, 2016
Thursday, March 03, 2016
4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா? 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ
பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.
விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்
இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.
இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.
நன்றி -மாலைமலர்

Tuesday, March 01, 2016
மறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்
மறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.
எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்
அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்
தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில்
நேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்
எழில்வேந்தனுடன் நானும் இணைந்து
அமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம்.
இணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.
அமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.
-ரஞ்சகுமார்
இலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது
இந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக கிசுகிசு உலாவியது ...
அந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்
Sunday, February 28, 2016
Monday, February 22, 2016
Saturday, February 20, 2016
Friday, February 19, 2016
Friday, February 12, 2016
Monday, February 08, 2016
Saturday, February 06, 2016
Wednesday, February 03, 2016
Friday, January 29, 2016
Wednesday, January 20, 2016
Saturday, January 16, 2016
Saturday, January 09, 2016
Thursday, January 07, 2016
Friday, January 01, 2016
சின்னக்குட்டி வலை பதிவுலகில் பத்தாவது ஆண்டில்
கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது .
முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால் வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த்தது .....அதன் தொடர்ச்சியாக சின்னக்குட்டி என்பவன் நாள் நட்சத்திரம் தெரியாமால் பார்க்காமால் இணையத்தில் பிறந்தான்.
அப்படி மெல்ல மெல்லயாழ் இணையத்தில் தவிழ்ந்து வரும் காலத்தில் அவுஸ்திரலியா நாட்டில் வானொலி அறிவிப்பாளராகவும் இருக்கும் கனா பிரபா என்பவர் அதில் எழுதுவது வழக்கம் .2005 ஆண்டளவில் என்று நினைக்கிறன் இணையத்தில் வலைபதிவு (blog) ஒன்றை தனக்கு உருவாக்கி எழுதி அதற்கான இணைப்பை யாழ் இணையத்தில் வழங்கி வருவதை வழக்கமாகி கொண்டிருந்தார்
அவரின் இணைப்பு மூலம் அந்த வலைபதிவு செல்லும் பொழுது அதன் வேலைப்பாடுகளை கண்டு அதில் உள் சென்று பார்த்த பொழுது பட்டணத்தில் மிட்டாசு கடையை பார்ப்பது போல மிரள முடிந்தது.. 2006 ஆண்டு ஏதோ ஒரு கண முடிவில் ஒரு துணிவு வர புளக் பக்கத்தில் ஒரு பாதைக்குள் போனால் போகுது என்று நுழையும் பொழுது தொடர் பாதைகளை வழிகாட்டி போல் காட்டி கொண்டிருந்தது சென்றேன் .....இது தான் இவ்வளவு தான் இந்தா உனது பெயரில் வலைபதிவு என்று தந்தது ..ஏதாவது எழுது என்று சொன்னது
எனக்கு தோன்றியதை எழுதினேன் பேச்சு தமிழில் தான் எழுதினேன் ..வலைபதிவுகளை ஒன்றிணைக்கும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைந்தேன் .அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கை பதிவர்கள் அப்பொழுது எழுதி கொண்டிருந்தனர் ....சுஜாதா கதைகளில் வரும் கணேஸ் வசந்த் இரட்டையர்கள் மாதிரி வசந்தன் சயந்தன் என எழுதி கொண்டிருந்த இருவர் எனக்கு வலைபதிவு உலகில் போகும் பொழுது வழி தெரியாமால் திசை தெரியாமால் இருக்கும் பொழுது வழி காட்டி உதவுவார்கள்.வசந்தன் என்பவர் எங்கு இருக்கிறார் தெரியாது ..சயந்தன் என்பவர் பிரபல எழுத்தாளராக இப்ப வலம் வந்து கொண்டிருக்கிறார்
அப்பொழுது எழுதி கொண்டிருந்த இலங்கை பதிவர்கள் கனக்ஸ்,சந்திரவதனா ,மதி கந்தசாமி, டிசே தமிழன் கான பிரபா ,சிநேகிதி,யாழ் சுதாகர் மலைநாடன் பெயரிலி வசந்தன் பின் தமிழ் நதி.,யோகன் பாரிஸ்,சாத்திரி போன்றவர்களும் மற்றும் இன்று தமிழ் நாட்டு வார சஞ்சிகை வண்ணதிரை யின் ஆசிரியராக இருக்கும் ஆரம்பத்தில் லக்கிலுக் என்று அறியப்பட்டவரும் இப்பொழுது யுவகிருஸ்ணா என்ற நிஜ பெயரில் வலம் வருபவரும் மற்றும் செந்தழல் ரவி வரவணையான் என்று அழைக்கப்படுகிற செந்தில் போன்ற தமிழ் நாட்டு வலை பதிவர்களும் எங்களுடன் பயணித்தவர்களாவர்.
கீழே நான் போட்ட வலை பதிவு ஒன்றில் அப்ப இருந்த இலங்கை பதிவர்கள் அதிகமானோர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் அந்த பதிவை பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங் அழுத்தி பார்க்கவும்
http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post.html
அப்பொழுது வலைபக்கங்களை திரட்டும் முக்கிய திரட்டியாக பங்காற்றிய தமிழ்மணம் வாரம் வாரம் நட்சத்திர பதிவர்கள் என்பதை உருவாக்கி வலை பதிவர்கள் ஊக்கபடுத்தியது . அதில் இந்த சின்னக்குட்டியும் விரைவில் நட்சத்திர அந்தஸ்து பெற்று நட்சத்திரபதிவர் என்ற அந்தஸ்து பெற்றான் ஒரு வாரத்திற்க்கு..
இதை பொறுக்கமுடியாத ஒரு சிலர் அரசியலோ இலக்கியமோ என்ன வென்று தெரியாத இந்த அரைவாக்காட்டு சின்னக்குட்டிக்கு எல்லாம் தமிழ்மணம் நட்சத்திரபதிவர் அந்தஸ்து கொடுத்து தனது தரத்தை தாழ்த்திவிட்டது என்று எள்ளி நகையாடினர்
ஊரில் இருந்த பொழுது போராட்டமென்றால் என்ன கிலோ என்று கேட்கும் அதுவும் வெளிநாட்டுக்கு வந்த பின் உந்த மேற்க்த்தைய அரைகுறை தத்துவங்களை விழுங்கிவிட்டு வாந்தி எடுப்பவர்கள் தான் இந்த இவர்கள் என தெரிந்தமையால் அதையெல்லாம் ஒரு என்னுள் புன்னகையுடன் கடந்து சென்றிருக்கிறேன்.
அப்பொழுது யூரூயூப் ஆரம்பித்த கொஞ்ச காலம் தான் நான் விரும்பி பார்த்த வீடியோக்களை பகிர்வதுக்கென்று தனி வீடியோ வலைபதிவை ஆரம்பித்திருந்தேன்.அது நான் எழுதும் வலைபதிவிலும் பார்க்க என்னையறியாமாலே மிகவும் பிரபலமாகியது ..அந்த காலத்தில் வருகை தரும் வாசகர்களை ஒப்பிட்டு சிலர் கணிக்கும் கணிப்புகளில் முதல் பத்து வலைபதிவுகளில் கூட இடம் பிடித்திருந்தது....எத்தனை நாடுகளில் வருகிறார்கள் என்று அறிவதற்க்கு இலவச குறிகாட்டி எனது வலைபதிவில் இருந்தது ....138 நாடுகளில் இருந்து வாசகர்கள் வந்திருந்தினர். நான் அறியா நாடுகளின் கொடிகளை கூட காட்டியது அங்கில்லாம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து கோடி காட்டியது.
தமிழ் எழுத்துருவில் புரட்சி செய்த சுரதா யாழ்வாணன் அவர்கள் தனது பிரபலமான வெப்சைட்டில் சின்னக்குட்டி ரூயூப் என பெயரிட்டு இணைப்பு கொடுத்து இந்த எனது வீடியோ வலை பதிவை பிரபலபடுத்தினார் ..அதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்ளுகிறான் சின்னக்குட்டி இந்த தருணத்தில்
பிரபல தமிழ் நாட்டு பிரபலம் மாலனுக்கும் இலங்கை பதிவர் பெயரிலிக்கும் நடந்த பாஸ்போட் பற்றி இணையத்தில் நடந்த மோதலை மையமாக வைத்து அவன் என்ன பாஸ்போட் வைத்திருந்தால் என்ன என்று நகைச்சுவையாக எழுதிய கருத்து சித்திரம் மிகவும் பிரபலமான பதிவுகளில் ஒன்று.
நொங்கமால் நோகமால் வீடியோவை இணைத்து அதுக்கு ஒரு தலைப்பை மட்டும் போட்டு பத்து வருடம் வலை உலகில் பயணித்திருக்கிறேன் என என்னை நானே பாரட்டி கொண்டு இன்னும் பல வருடங்கள் பயணிப்பேன் என உங்கள் முன் உறுதி எடுத்து கொள்ளுகிறேன்
இவ்வளவு காலமும் தந்த ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
Thursday, December 31, 2015
Saturday, December 26, 2015
Friday, December 25, 2015
Thursday, December 24, 2015
Friday, December 18, 2015
Wednesday, December 16, 2015
Monday, December 14, 2015
இலங்கை தமிழ் திரைபடங்கள் பற்றிய அரிதான விவரண தொகுப்பு -வீடியோ
விபி கணேசன் ஒரு காலத்தில் இருந்த மலையக தொழில்சங்கத்தின் தலைவரோ உபதலைவர் ,,எம்ஜீஆர் பாணியில் புதிய காற்று நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க போன்ற படங்களை எடுத்து இலங்கையில் ஒரளவு வெற்றியடைய செய்தார் ..இவர் இப்ப இருக்கும் மலையக தமிழ் அரசியல்வாதி மனோ கணேசனின் தந்தையாவார்
Saturday, December 12, 2015
Sunday, December 06, 2015
Thursday, December 03, 2015
Monday, November 30, 2015
Sunday, November 29, 2015
Thursday, November 26, 2015
Wednesday, November 25, 2015
சிங்கப்பூர் கோமள விலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் விருந்து-வீடியோ
மோடி சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர் முன் தமிழை கொமடி ...மகிந்த இவரிலும் பாரக்க நல்லாய் தமிழை கொமடி பண்ணுவார் போலை
Friday, November 20, 2015
Thursday, November 19, 2015
Wednesday, November 11, 2015
Friday, November 06, 2015
Friday, October 30, 2015
டாஸ்மாக்கை மூடு என்றால் ..பாடிய தோழர் கோவனை மூடி வைச்சிருக்கு தமிழக அரசு-வீடியோ
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
சரி யார் இந்த கோவன்?
கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!
“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன். ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க.
முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம். இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம்.
‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம். நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம். எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு.
நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல;
இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை. இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம்.
பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம்.
உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில் இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!” ______________________
நன்றி: ஆனந்த விகடன் ______________________

Friday, October 23, 2015
Monday, October 19, 2015
Sunday, October 11, 2015
'''பொம்பிளை சிவாஜியை''' ..தெரியாதோ நோக்கு தெரியாதோ-வீடியோ
சென்னை: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் நடிகை மனோரமா நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் பழம் பெரும் நடிகை மனோரமா. 78 வயதாகும் அவர் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த வாரம் கூட சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடல் தேறிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று இரவு 10.50 மணியளவில் அவருக்கு வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபலங்கள் அஞ்சலி: மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைந்த நடிகை மனோகரமா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்
நன்றி -தினகரன்.
Friday, October 09, 2015
Friday, October 02, 2015
Friday, September 25, 2015
70 களில் இலங்கை-வீடியோ
சீன அதிபர் சூன்லாயின் விஜயம்
1971 ஆண்டு நடந்த சேகுவார புரட்சி காலகட்டத்து வீடியோ காட்சிகள் போன்றவற்றை பார்க்கலாம்
Three Yellow Cats என்ற ஆங்கில படம் இலங்கையில் முழுமையாக 1966 ஆண்டளவில் படமாக்கபட்டது
அக்கால இரத்மலானை விமான நிலையம் மற்றும் அக்கால பிராந்திய அமைப்பு போன்றவற்றை இந்த படம் பற்றிய விவரணதொகுப்பு வீடியோவில் பார்க்கலாம் அதன் இணைப்பு கீழே
Monday, September 21, 2015
லண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ
அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது.யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் நடத்தப்ட்ட கலை விழாவில் தான் இந்த நடனம்.
இந்த நடனம் ஆடும் இளம் ஜோடிகள் லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொலைகாட்சி தொடர் நாடகங்களில் பாத்திரங்களாக வருவதால் அதி்கமானவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
Wednesday, September 09, 2015
Tuesday, September 08, 2015
Wednesday, August 26, 2015
Sunday, August 16, 2015
Tuesday, July 14, 2015
எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் பயணம் -வீடியோ
இடமிருந்து வலமாக டி எம் எஸ், சிவாஜி , முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், எம்.எஸ் விஸ்வநாதன்
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின்மாயானத்தில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த...' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசைஅமைத்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது. இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். நன்றி -
தினத்தந்தி
Thursday, July 09, 2015
Thursday, June 25, 2015
Sunday, June 14, 2015
Thursday, June 11, 2015
கிறிஸ்ரோபர் லீ -டிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் குலை நடுங்கும்-வீடியோ
டிராகுலா' கிறிஸ்டோஃபர் லீ காலமானார்
அந்த அளவுக்கு ரத்தம் குடிக்கும் டிராகுலா-காட்டேரி திரையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1950களின் பிற்பகுதியில் வெளியான மூன்று திரைப்படங்கள் பார்ப்பவர்களை திகிலின் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றன. அப்படங்களில் தனது கதாபாத்திரங்கள் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோஃபர் லீ காலமானார்.
உலகின் மிகவும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவரான அவர் தமது 93ஆவது வயதில் லண்டன் மருத்துவமனையில் உயிர் நீத்தார். த மம்மி, டிராகுலா, பிராங்கெஸ்டைன் போன்ற படங்களில் நடித்து ஆங்கிலத் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.
கிறிஸ்டோஃபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். அவரது 6 அடி 4 அங்குல உயரமான உடல்வாகு வில்லன் தோற்றத்துக்கு பெரிதும் உதவியது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை எழுதிய இயன் ஃபிளமெங்கின் தூரத்து உறவினரான அவர் மேன் வித் தி கோல்டன் கன் திரைப்படத்தில் ஸ்காரமாங்கா என்னும் வில்லன் பாத்திரத்திலும் நடித்து ஆழ்ந்த முத்திரை பதித்திருந்தார்.
அண்மைக் காலங்களில் லார்ட்ஸ் ஆஃப் த ரிங்ஸ் போன்ற பிரபல படங்களிலும் கிறிஸ்டோஃபர் லீ நடித்திருந்தார். உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
நன்றி -பிபிசி தமிழ்
http://www.bbc.com/tamil/global/2015/06/150611_christopherlee_obit
Wednesday, June 10, 2015
Sunday, June 07, 2015
'''தீபன்'' திரைபட நாயகன் சோபாசக்தியுடன் நேர்காணல் தொலைக்காட்சியில்-வீடியோ
இந்த நேர்காணலில் சோபாசக்தி ஏன் இந்திய தமிழ் உச்சரிப்பில் இடைக்கிடை அதிகம் கதைக்கிறார்?
மாஸ்...திரைபடத்தில் ஈழப்பேய் சரியாக தமிழ் கதைக்கவில்லை என்று கவலை படுகிறாக்கள் இதையும் ஒருக்கா கவனம் எடுத்து கேளுங்கோ..
தீபன் திரைபடத்தில் சோபாசக்தி நன்றாக யதார்த்தமாக நடித்ததாக பல பத்திரிகைகள் பாராட்டியதாக இணையத்தில் படித்தேன்.இந்த பேட்டியில் சோபசக்தியின் அசைவுகள் பேச்சுக்கள் சரியான ஓவர் ஆக்டிங்கா கிடக்கு
...ரஜனியின் திரைபடத்தில் செய்யும் பாவனைகள் கூட யதார்த்தமாக இருக்கும்...சோபாசக்தி தீபன் நடித்தா பிறகு இப்படி ஆயிட்டரோ. அல்லது.வழமையாக விவாதம் செய்யும் பொழுது இப்படித்தானோ?.
.சோபாசக்தி அடிக்கடி ஏன் அண்ணாந்து முகட்டை பார்க்கிறார்?
சோபாசக்தியின் இந்த பேட்டியில் அகதி பார்வை .இடதுசாரி பார்வை இலக்கிய பார்வை ...கேட்டு பாருங்கள் தீபன் திரைபடத்தை பற்றி பேசுவாங்கள் என்று பார்த்தால் பேட்டி காண்பவர் கோவை நந்தன் என்று நினைக்கிறன் அவர் கூட ஒரு அரசியல் இலக்கிய வாதி என்று நினைக்கிறன்...பேட்டி எடுக்க போய் பேட்டி கொடுக்க போய் இரண்டு பேரும் முட்டு படுறதை பார்க்க ...என்னத்தை சொல்ல அய்யோ அய்யோ...
உந்த இலக்கிய அரசியல் சந்திப்பு அப்பிடி இப்பிடி சந்திப்பிலை வெளிநாட்டில் இலக்கிய விவாதங்கள் அரசியல் விவாதங்கள் இப்படித்தான் நம்மாக்கள் செய்வினம் போலை?
30 வருசத்துக்கு முன்னே திண்ணையிலை மதிலை அங்கங்கை அரசியல் இலக்கிய விவாதம் செய்தவியளை பார்த்து பலது பத்து சொல்லி குறை சொல்லுவினம்....ஆனால் ..இவையளை பார்கக்க்கை...அவையள் எவ்வளவோ பராவியில்லை..
என்னத்தை சொல்ல ...சாதாரண பார்வையாளனாக,,,
Saturday, June 06, 2015
Friday, June 05, 2015
Subscribe to:
Posts (Atom)