வாசகர் வட்டம்

Thursday, September 13, 2012

ஆஸி செல்லும் இலங்கை BOAT PEOPLE பற்றிய விவரணம் -வீடியோ

Monday, September 10, 2012

இந்த தெரு குழந்தை தொழிலாளி ..பள்ளிக்கு சென்றிருந்தால்-வீடியோ

கூடங்குளத்தில் போலீஸ்- நிராயதபாணிகள் மீது தாக்குதல் -வீடியோ

Sunday, September 09, 2012

பனை மரங்களும் சில அடையாளங்களும்-வீடியோ

Tuesday, September 04, 2012

அப்பாவி சிங்களவர் மீது வீர்ம் காட்டும் தமிழக அரசியல் கட்சிகள் சில-வீடியோ




அப்பாவி சிங்களவர் மீது தமிழ் வீரம் காட்டி என்ன பயன்? ...77, 83 கலவரங்களின் பொழுது ஒட்டு மொத்தம் சிங்களவனும் எதிரியாக இருந்திருந்தால் ..ஒரு தமிழனும் வடக்கு கிழக்குக்கு பத்திரமாக திரும்பி வந்திருக்க முடியாது . இந்த வீடியோவில் ஒரு சிங்கள பெண் அழுது கொண்டு குமிறுகிறாள் . உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று ...அந்த கேள்வி நியாயமாகாதானே படுகிறது .சிங்கள் பேரினவாத அரச யந்திரம் செய்யும் தவறுகளுக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?

Saturday, September 01, 2012

ஒரு கேரள பெண்ணும் ..ஏமாற்றப்பட்ட சென்னை இளைஞர்களும் -வீடியோ

solvathellam by msmorethan143
solvathellam 2 by msmorethan143

தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.

இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.-நன்றி- வீரகேசரி

Friday, August 31, 2012

.சிறீதேவி vs ஆங்கிலம் -வீடியோ

Tuesday, August 28, 2012

மதுரையில் அகப்பட்ட ஆதி மனிதன் விருமாண்டி-வீடியோ

Monday, August 27, 2012

நோய் தீர்க்கும் எளிய முறை உடற் பயிற்சி -வீடியோ

நன்றாக தமிழ் பேசும் யப்பானியர் -வீடியோ

Thursday, August 23, 2012

சித்தர்களின் மனோவசியக் கலை (HYPNOTISM AND MESMERISM)- வீடியோ

Wednesday, August 22, 2012

(MADRAS DAY-22 AUGUST)-மட்ராஸ்.. இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லை-வீடியோ

Tuesday, August 21, 2012

ஹிந்து ராம் ..புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சையில்-வீடியோ

Monday, August 20, 2012

யாழ்ப்பாணத்தின் சின்னம் பனையாம்-வீடியோ

Wednesday, August 15, 2012

ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்.. கண் திறந்தோம்-வீடியோ

Tuesday, August 14, 2012

ஜெயமோகனின்-யானை டாக்டர் (சிறுகதை ) ஒலி வடிவம்-வீடியோ

Sunday, August 12, 2012

டெசோ நாடகத்தின் ஆரம்ப நிகழ்வு ஆரம்பம்-வீடியோ

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120812_voxonteso.shtml டெசோ மகாநாடு குறித்து வட இலங்கை மக்கள் அதிருப்தி -பிபிசி தமிழ்

Monday, August 06, 2012

இணைய தளம் தொடர்பாடலில் முக்கிய சாதனம்-வீடியோ

Saturday, August 04, 2012

தடி ஊன்றி பாய்ந்து(pole vault) சாதனை படைக்கும் 90 வயது தாத்தா-வீடியோ

Tuesday, July 31, 2012

இப்படியே விட்டால் சாமி குத்தமாயிடும் .என்று வீறு கொள்ளும் இவர்கள்-வீடியோ

மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.

இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.

மீடியா கேமராமேனும் உடந்தையா...?

இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.

;நன்றி-

http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html

Saturday, July 28, 2012

மூன்றாம் உலக போர் புத்தக வெளீயீட்டு விழாவில்-வீடியோ

moondram by rakshidha
moondram_0 by rakshidha
moondram 4 by rakshidha

லண்டன் ஒலிம்பிக் -ஆரம்ப வைபவத்தில் -வீடியோ

லண்டன் ஒலிம்பிக் தொடக்க வைபவத்துக்கு எலிசபத் மகாரணியை ஜேம்ஸ் பொன்ட் ஹெலிகொபடரில் அழைத்து வந்து ஹெலிகொப்டரிலிருந்தே பாரசூட்டில் இருந்து குதித்து வைபவ இடத்துக்கு வந்த மாதிரி காட்டி இருக்கினம் ....கீழே பாருங்கோ ...ஹி ஹி

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 23 , 1983 அன்று -வீடியோ

Sunday, July 22, 2012

எங்கள் காலத்துக்கு அழைத்து சென்ற நிகழ்ச்சி-வீடியோ

Friday, July 20, 2012

இவ லண்டன் ரமணி அம்மாளோ?

Monday, July 16, 2012

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் (தமிழில்) -வீடியோ

Sunday, July 15, 2012

தோழர் சண்முகதாசன் அவர்களைப் பற்றிய விவரண படம்

யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 1943 இல் பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு (A Marxist looks at the History of Ceylon) என்ற நூலை எழுதினார்.

Friday, July 13, 2012

தாங்கள் கலாச்சார காவலர்களாம் ..இந்த.கேடு கெட்டதுகள் .ச்சீய் -வீடியோ

Friday, July 06, 2012

சேதுராமன் -பொன்னுச்சாமி -தெட்சாணாமூர்த்தி(நாதஸ்வரம் -தவில்)-வீடியோ

தில்லான மோகனம்மாள் திரைபடத்தில் பங்களித்தமையால் அந்த காலத்தில் சேதுராமன் பொன்னுச்சாமி இருவரும் இலங்கையில் பிரபலமாக அறியபட்டார்கள் .

. அதனால் அபபட வந்த காலத்துக்கு பின் யாழ் வடமராட்சி கரவெட்டியிலுள்ள ஏதோ ஒரு கோயில் (யாக்கரு விநாயகர் கோவில் அல்லது கிழவிதோட்ட பிள்ளையார் கோவில்) திருவிழாக்கு இவர்களை இந்தியாவில் இருந்து அழைத்ததாக சிறுவயது ஞாபக பதிவு சிறிதாக வந்து போகிறது . .

அத்தோடு அப்பொழுது இலங்கையில் மட்டுமின்றி இந்தியா மலேசியா போன்ற நாடுகளில் கூட பிரபலமாக இருந்த தவில் வித்துவான்தெட்சாணாமூர்த்தி அவர்கள் இவர்களுக்கு இணையாக தவில் வாசித்ததாக பேசி க்கொண்டார்கள்..


மேலே இணைத்த வீடியோக்களில் முதலாவதாக சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடையதும்

 இரண்டாவதில் தெட்சாணாமூர்த்தி

அவர்களினதும் மூன்றாவது சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடைய பங்களிப்புள்ள தில்லான மோகனாம்பாள் திரைபடத்தில் நாதரஸ்வரத்தில் மேல்நாட்டு சங்கீதத்தை பிரமாதமாக வாசிக்கும் காட்சிகளை காணலாம்

Thursday, July 05, 2012

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி புத்தகமாக -வீடியோ


இதில் தொடர்ந்து வரும் 14 வீடியோக்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலிவடிவத்தில் இருக்கின்றன

முத்துலிங்கம் அவர்களின் மிகுதி கதைகளை பார்க்க அழுத்தவும்



மனப் பாடம் செய்வதையே கல்வியாக்கி ,,,பெறுபேறுகளேயே அறிவாக நினைக்கும் பள்ளிகள் (நீயா நானாவில் விவாதம்)-வீடியோ

Tuesday, July 03, 2012

இந்த குரங்கு செய்வதை மனித சேட்டை என்று அழைக்கலாமோ?

Monday, June 25, 2012

மென்பொருள் செய்யும் தொழிலாளி ..மூளையை விற்கும் தினக் கூலி-வீடியோ

இந்த பாடலை பாடி கொண்டு இருப்பவர் சக வலைபதிவர் மயூரன்

தொங்குது தோளில் மடிக்கணினி - செவித்
துளையில் வெள்ளை இசைக்கொழுவி
பிந்திவந்த புதுச் செல்பேசி - கையில்
புதுத் தொடுதிரைத் தாள்கணினி

சந்தைக்கு என்றைக்கும் மின்னணுப் பண்டங்கள்
வந்ததும் வாங்கிச் சுமந்திடும் பாவி

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவள்
மூளையை விற்கும் தினக்கூலி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவன்
மூளையை விற்கும் தினக்கூலி

ஆறு இலக்கத்தில் கூலிகள் வாங்கிடும்
பேறுகள் பெற்ற பெரும் படிப்பாளி

வாட்டிடும் வெயில் தெரியாது - சும்மா
குளு குளுக் குளிர்க் காற்றுவரும்
நாட்டின் வறுமை புரியாது - பள
பள பளத்திடும் வேலைத்தலம்

ஆட்குறைப்புப் பற்றி மேலிடம் சொன்னபின்
நாட்களை எண்ணக் குளிரிலும் வேர்க்கும்

கால்களிருப்பது உள்நாட்டில் - அவர்
மூளை வசிப்பது மேல்நாட்டில்
வாழ்வு தினப்படிச் சம்பளத்தில் - முத
லாளி நினைப்படி உள்மனத்தில்

நடப்பு நிலத்தில் நினைப்பு வானத்தில்
கிடக்கு வாழ்க்கை அந்தர மாயத்தில்

தேயிலைத்தோட்டத் தொழிலாளி - அவர்
நீதிக்குப் போரிடச் சங்கம் உண்டு
ஆடைத்தொழிற்றுறை ஊழியரும் - தொழில்
உரிமை கேட்டார் ஒன்றுபட்டு

நாயென மென்பொருட் கூலிகள் கெஞ்சுவர்
HR ஆண்டையின் காலைத்தொட்டு

நீயும் உழைக்கும் உழைப்பாளி - உண்மை
நினைத்துப் பார்த்தே ஒன்றுபடு
ஓய்வையிழந்த உன் உழைப்பைத் திருடி
உறிஞ்சுவதார் சிந்தித்திடு

உன்னையும் என்னையும் சுரண்டும் அமைப்பை
உடைத்து மாற்றிட வந்துவிடு

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
உழைக்கும் மக்களின் கூட்டாளி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
மனசு வைத்தால் போராளி

புதிய பூமியை புதிய நீதியை
படைத்திட வா போராடி..

Wednesday, June 20, 2012

கொழும்பில் நடந்த உலக தமிழ் இலக்கிய மகாநாடு 2012-வீடியோ

Monday, June 18, 2012

இளையராஜா -M.I.A-- இரு தமிழர்களின் பாடல்கள் ஒலிம்பிக் தொடக்க விழாவில்?-வீடியோ

லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி.
அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன.
பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.


கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' என்ற படத்தில் வரும் பாடல் இது.
சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.

ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.


இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மிலியனேர்” போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.

அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான “ பேப்பர் ப்ளேன்ஸ்”, (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து.

உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

;நன்றி -பிபிசி தமிழோசை

Sunday, June 17, 2012

சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்த நிகழ்ச்சி ஒன்றில்-வீடியோ

Friday, June 15, 2012

டிவி நிகழ்ச்சி மூலம் தெரியவந்த மறைக்கப்பட்ட மூன்று கொலைகள்-வீடியோ


தொடர்ச்சியாக நான்கு வீடியோ கிளிப்பக்களையும் இதில் பார்க்கலாம்

இவை பற்றி லண்டன் daily mail இல் வந்த செய்தியை அழுத்தி பார்க்கவும்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூன்றுபேரை கொலை செய்து புதைக்கப்பட்ட விவகாரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர்களது எலும்புக் கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்,42; தச்சுத் தொழிலாளி. இவரது மகள் லாவண்யா,19. சேகருடன் பணிபுரிந்த சிலம்பரசன்,27, என்பவருக்கும், லாவண்யாவிற்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த 2008ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
புகார்: பின் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள லாவண்யாவின் உறவினர் முருகன்,45, என்பவரின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். தகவலறிந்த சேகர் கடந்த 2009ம் ஆண்டு எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்றார். பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது கணவர் மற்றும் மகளை காணவில்லை என்று நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் சேகரின் மனைவி ஜீவா புகார் அளித்தார். இந்நிலையில் முருகன் மகள் பார்கவி,20, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சதீஷ் என்பவரை கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தார். இதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தங்கள் காதல் விவகாரம் பற்றி பேட்டி அளித்தனர். பின் முருகன், அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்ற போது, பார்கவி தனது தந்தை முருகன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆதரவு தேடிவந்த மூவரை கொலை செய்ததாகக் கூறினார். அதனை தொடர்ந்து, 29ம் தேதி நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.
மண்டை ஓடு: இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சேகர், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் ராஜேந்திரன், வி.ஏ.ஓ., முத்தையன் முன்னிலையில் முருகன் வீட்டின் அருகே பார்கவி அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் மூலம் தோண்டினர். மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைந்து கிடந்த இருவரது மண்டை ஓடுகளும், உடல் எலும்புகளும் கிடைத்தன. மாலை 5 மணிக்கு முருகன் வீட்டின் அருகே மற்றொருவரது எலும்புத் துண்டுகள் கிடைத்தன. முருகன் வீட்டின் மண் புதரிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகள் சேகர், லாவண்யா, சிலம்பரசன் ஆகியோரின் சடலங்களாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விழுப்புரம் டி.ஐ.ஜி., சண்முகவேல், எஸ்.பி., பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய மனித எலும்புகளை சென்னையில் உள்ள மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். மூன்று பேரை கொலை செய்து புதைத்து விட்டு அங்கேயே குடும்பம் நடத்திய முருகன், திடீரென தலைமறைவான சம்பவம் எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: டி.ஐ.ஜி., சண்முகவேல் பேட்டி: டி.ஐ.ஜி., சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண், கடந்த 1ம் தேதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர், மகளை காணவில்லை எனக் கூறியிருந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இவரின் கணவர், மகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் என்பவரின் வீட்டு முன் புதைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. முருகன் வீட்டு முன் தோண்டப்பட்டதில், சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த எலும்புகளை மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, காணாமல் போனவர்களதுதானா என்பது உறுதி செய்யப்படும். அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்கும் தாலுகா போலீசார் குற்றவாளியை கூடிய விரைவில் கண்டுபிடித்து கைது செய்வர். இவ்வாறு சரக டி.ஐ.ஜி., சண்முகவேல் கூறினார்.
மகள் ஆவேசம்: தனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்து, புதைத்த இடத்தை பார்கவி, போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இறந்தவர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தவுடன், பார்கவி, ஆதங்கத்துடன் போலீசாரிடம் கூறுகையில், "ஆரம்பத்தில், எனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்ததாக நான் கூறியதை யாரும் நம்பவில்லை. ஏற்கனவே நான் கூறியபடி தற்போது மூன்று பேரின் எலும்புகள் கிடைத்துள்ளன பார்த்தீர்களா... இப்போது நான் கூறியது உண்மை தான் என, நிரூபணமாகியுள்ளது' என்றார்.
நன்றி -தினமலர்

Thursday, June 14, 2012

கமலின் விஸ்வரூபம் பார்த்த பாலசந்தர்-வீடியோ

Tuesday, June 12, 2012

வயது என்பது ஒன்றுமில்லை ..அது வெறும் இலக்கங்களே என்று கூறும் 75 வயது BODY BUILDER-வீடியோ

Sunday, June 10, 2012

பாதிக்கபட்டவரின் நேர்முகம் தமிழில்-Nithyananda Latest Sex Scandal 2012-வீடியோ


1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ

இந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற இன கலவரத்தின் பின் காமினி பொன்சேகா கதாநாயகனாக நடித்த இந்த படம் சிங்கள தமிழ் ஒற்றுமையை மையபடுத்தி எடுக்கப்படம் .

 .முதல் ஒரு திரைபட சூட்டிங்கை சிறுவயதில் பார்க்க கிடைத்தது என்றால் இந்த படத்தின் சூட்டிங் தான்.

.பாடலின் முடிவில் வரும் இந்து கோயில்  முன்னால் உள்ள கேணி யாழ்-வடமராட்சி பகுதியிலுள்ள கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோவில்.

..இந்த படத்தின் அநேகமான காட்சிகள் யாழ்ப்பாணத்தில படமாக்க பட்டிருந்தன,


கரவெட்டியை சேர்ந்த முன்னாள வானொலி தொகுப்பாளர்  யோகா பாலசந்திரன் அவர்களால் இந்த திரைபடத்தின் தமிழ் பகுதிக்கு கதை வசனம் எழுதப்பட்டது

இந்த படத்துக்கான பாடல்களும் எழுதியுள்ளார்



இந்த வீடியோ காட்சியில்  அந்த காலம் நெல்லியடியில் இருந்த சத்தியமூர்த்தி தவில் கோட்சியில் இருந்த ஒருவரையும்  நுணவில் பிள்ளையார் கோயில் ஜய்யரையும் என்னால் அடையாளம் காண முடிகிறது

Friday, June 08, 2012

நித்தியானந்தா மீண்டும் பாலியல் சர்ச்சையில்-வீடியோ


அண்மையில் கன்னட தொலைக்காட்சியில் நித்தியானந்தவின் பாலியல் தொல்லை பற்றி ஒரு பெண்ணின் பேட்டி வெளியானது ..அதை தொடர்ந்து நித்தியானந்தா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருந்தார் . அதில் நடந்த களேபரம் தான் மேலே பார்ப்பது

Tuesday, June 05, 2012

முட்டாள் பயல்கள்...இதுக்கு பெயர் பகிடி வதையாம்-வீடியோ

இலங்கை பல்கலைகழகமொன்றில் புதிதாக வந்த மாணவர்களை பழைய மாணவ மாணவிகள் பகிடி வதை (றாக்கிங்) என்ற போர்வையில் ஒரு வித குரூர மனப் பான்மையுடன் வரவேற்பதை மேலுள்ள வீடியோவில் காணலாம்

Monday, June 04, 2012

தமிழ் நடிகர்களின் சாதி பற்றிய கலந்துரையாடல் மாதிரியாம் -வீடியோ

Friday, June 01, 2012

ஒரு நூலகத்தின் கதை இது-வீடியோ

Wednesday, May 30, 2012

இலங்கை கடைசி தமிழ் அரசன் ராஜசிங்கனின் சிம்மாசனம் ,முடி -வீடியோ

இலங்கையை கடைசி வரை ஆண்ட கண்டி மன்னன் நாயக்கர் வழி வந்த தமிழ் அரசன் என்பது யாவரும் அறிந்ததே, மேல் இருக்கும் வீடியோவில் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் விக்கிரம ராஜசிங்கனின் சிம்மாசனம் முடி போன்றவற்றை பார்க்கலாம் . இதே நூதன சாலையில் முன்பு பார்க்கும் பொழுது ராஜசிங்க குடும்ப பெண்மணி ஒருவருடைய பெருவாரியாக ரத்த கறைகள் உள்ள மேல சட்டை ஒன்று இருந்தது. வெள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்டதாம்.இந்த வீடியோவில் அதை காணவில்லை எடுத்துவிட்டார்கள் போலும் நாகரிகம் கருதி..

Sunday, May 27, 2012

அப்பாடா ...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோ

பேராசிரியர் சிவத்தம்பி ..ஒரு மானுட ஆவணம் -வீடியோ

Friday, May 25, 2012

Che Guevara வின் வாழ்க்கை சரிதம் தமிழில் -வீடியோ

Thursday, May 24, 2012

இந்த பிரெஞ்சு பாடலை ரசிப்பதுக்கு மொழி தேவை இல்லை -வீடியோ

நூறுவருடங்கள் பத்து நிமிடத்தில்(1911-2011) -வீடியோ

நோர்வே பழங்குடி இசை ....இலங்கை தமிழர் மீது பழி ...தமிழ் திரைபடத்தின் திருட்டினால்-வீடியோ

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/220-2012/1257-2012-05-23-20-40-40

Friday, May 18, 2012

கார்ட்டூன் மதனிடம் -காலில் விழுவது எப்பொழுது ஆரம்பிக்க பட்டது? -வீடியோ

Wednesday, May 16, 2012

உலக கின்னஸ் சாதனை -90 வயதை கடந்த யோகா டீச்சரின் -வீடியோ

Tuesday, May 15, 2012

மூன்று வயது சிறுவனின் ஈவ் டீசிங்...இல்லை இது அதுக்கு மேலை-வீடியோ

Sunday, May 13, 2012

லண்டனில் நடைபெற்ற..ஆறா வடு நாவல் விமர்சன அரங்கில்-வீடியோ


ஆறாவடு நாவல் விமர்சன அரங்கு 12.05..12 லண்டனில் நடைபெற்றது..அதில் சில காட்சிகள் ..இதில் வலை பதிவர்களுமான முறையே சசீவன்,சயந்தன் உரையாற்றி இருந்தார்கள் அவற்றில் சில மணித்துளிகள்
http://www.youtube.com/embed/6VRbu4I9cWc?rel=0"

Tuesday, May 08, 2012

எந்த ஊரில் ..எந்த நாட்டில் எங்கு காண்போமோ?-வீடியோ

Monday, May 07, 2012

கே.பி சுந்தரம்பாள் -வாழ்க்கை குறிப்புக்கள் -வீடியோ

மூவினமும் ஒன்று சேர்ந்து.. ஒரே மலேசியா என்று பாடுகிறார்களாம்-வீடியோ

Saturday, May 05, 2012

கார்ல் மாக்ஸின் படைப்புகளுக்கு இப்ப புதிய மவுசு -வீடியோ

Wednesday, May 02, 2012

தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான எழுத்தோட்டம்-வீடியோ

Tuesday, May 01, 2012

தமிழ் சினிமா ஒன்றில் மே தினம் -வீடியோ

Monday, April 30, 2012

உழைக்கும் கைகளே ...உலகை புதிதாக உருவாக்கும் கைகளே-வீடியோ

Sunday, April 29, 2012

தமிழ் சினிமா -ஊமைப் படக்காலமும் பேசும் பட ஆரம்பமும்-வீடியோ

Saturday, April 28, 2012

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி -நவீன நாடகக் கலைஞன்-வீடியோ

Wednesday, April 25, 2012

எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய விவரண படம்-வீடியோ

Tuesday, April 24, 2012

மலையக தமிழர்கள் 250 வருடங்கள் சென்றும் அதே தோட்ட தொழிலாளர்களாக -வீடியோ

Tuesday, April 17, 2012

பழம் பெரும் நடிகை பத்மினி அமெரிக்காவில் கொடுத்த பேட்டி -வீடியோ

Saturday, April 14, 2012

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ

டைட்டானிக் கப்பலினுள் -அகப்பட்ட உண்மை வீடியோ காட்சி -வீடியோ

Friday, April 13, 2012

ஹிப்னோடிசம் தமிழில் ஒரு அறிமுகம் -வீடியோ

Thursday, April 12, 2012

இந்த இசை மழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்-வீடியோ

Wednesday, April 11, 2012

பூமி அதிர்ச்சி -கொழும்பு இந்து சமுத்திரபிராந்தியத்தில் -சுனாமி எச்சரிக்கை -வீடியோ


கொழும்பு மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முழுக்க நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பாத்மென்கள் கட்டில்கள்,கதிரைகள் ஆடியதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்...சில இடங்களில் அலை பேசியும் வேலை செய்யவில்லை...தமிழ் நாட்டில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது...கொழும்பு மற்றும் சென்னையில் பல இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து கூட்டமாக வெளியே வந்து நிற்பதா சொல்கிறார்கள்..இலங்கை நேரம் இன்று நண்பகல் 2.15 மணியளவிலேயே இந்த சிறியளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...பயப்படும் படியாக் எதுவும் இல்லை என்றும் இலேசான நிலா நடுக்கம் என்றும் அறியப்படுகிறது...

அந்தமான் , நிக்கோபார் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது...

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட 8.9 அளவிலான பூமி அதிர்ச்சியின் தாக்கமே இங்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

எம்.ஜீ.ஆர் கட்டிலில்இருந்து கொண்டு ஜெயித்த விவரணம் -வீடியோ

Saturday, April 07, 2012

இலங்கை வானொலி புகழ் கோமாளிகள் திரைபட பாடல்கள் -வீடியோ


கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.
கீழே உள்ள வீடியோ துண்டத்திலுள்ளவை யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாரய்ச்சி மகாநாட்டில் அரங்கேற்றப்படது..இந்த வீடியோவில் கோமாளிகள் புகழ் மரிக்கார் ராம்தாஸ் உபாலி செல்வசேகரன் அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோர் பங்கு பற்றினர்

Tuesday, April 03, 2012

லண்டனில் ரஜனி காந்த் -வீடியோ

Monday, April 02, 2012

அறுசுவையுடன் சாப்பிடுங்க,,,உணவே மருந்து,,,என்று இவர் -வீடியோ

நாம் தண்ணீர் குடிக்கிறோம். தண்ணீர் குடிக்கும்போது இது கைக்காக அல்லது கழுத்துக்காக என்று தனியாகத் தண்ணீர் குடிப்பதில்லை. சாப்பிடுகிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகச் சாப்பிடுவதில்லை. உடல் முழுவதற்கும்தான் சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவம் மட்டும் கண்ணுக்கு என்றும், இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும், தலைக்கு என்றும் தனித்தனியாகப் பார்க்கிறோம். இது எப்படிச் சரியாகும்?'' என்று கேட்கிறார் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக "செவி வழி தொடு சிகிச்சை' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க தனது மருத்துவமுறையைப் பிரசாரம் செய்து வருகிறார் பாஸ்கர். ஹோமியோபதி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்துக்கான பட்டயப் படிப்பு முடித்தவர் பாஸ்கர். செவி வழி தொடு சிகிச்சை பற்றி கூட்டங்களில் பேசுவதோடு, அது தொடர்பான டிவிடிகளையும் வெளியிட்டு அச் சிகிச்சை
முறையைப் பரப்பி வருகிறார். அவரிடம் செவி வழி தொடு சிகிச்சையைப் பற்றிக் கேட்டோம்.

""நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப் போவது ஒரு காரணம். ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம்.
நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.
இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானாகவே சரியாகிவிடும்.

அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துகளைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.
அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கும் என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழி தொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை எப்படி அளிப்பது?
நாம் உண்ணும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும். அப்படியானால் எதை உண்ணுவது? எப்படி உண்ணுவது?
முதலில் பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.

அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும்.
வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.
உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.
தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.
எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். இதுதான் நான் கூறும் எளிய மருத்துவமுறை.
உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிறுவயது முதல் தீராத தலைவலி, உடலெங்கும் புண்கள், வயிற்று வலி, மலச் சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்; எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நொந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டேன். உடல் நோய் காரணமாக எந்த இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அதன் பிறகு, நானே எனக்குச் செய்து கொண்ட மருத்துவம்தான் இது.
ஆனால் வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக் கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரி செய்ய முடியும்'' என்றார்.


(நன்றி -தினமணி )



Thursday, March 29, 2012

Sunday, March 25, 2012

நித்தியானந்தாவின் பில்டப்பும் பீலாவும் அதற்கான காமடி பதிலும்-வீடியோ

Friday, March 23, 2012

குயிலின் பயணம் முடிவுற்றது -அஞ்சலி கே.எஸ் ராஜாவுக்கு செலுத்திய பொழுது-வீடியோ


பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்
நன்றி- தமிழ்மிரர்.

Wednesday, March 21, 2012

கையால் ஊட்டி விட்ட நோர்வே இந்தியா சர்ச்சை-வீடியோ

நார்வேயில் வாழுகின்ற இந்திய பெற்றோர் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு விவகாரம் இருநாட்டு அதிகாரிகளிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
நார்வேயில் இப்போது அந்நாட்டு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் இருக்கின்ற இரண்டு குழந்தைகளையும் எப்படியாவது கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை
இந்தக் குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர் போதுமான கரிசனையைக் காட்டவில்லையென்ற குற்றச்சாட்டில் நோர்வே அரசின் குழந்தைகள் நலன்புரிப் பணியகம் குழந்தைகளுக்கான பராமரிப்பை பொறுப்பேற்றது.
ஆனால் தாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று வாதிடுகின்ற குழந்தைகளின் பெற்றோர், கலாசார ரீதியான வேறுபாடுகளே இந்தப்பிரச்சனைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகளுக்கு கைகளால் உணவூட்டுவதும், குழந்தைகளை பெற்றோருடனேயே படுக்கவைப்பதும், குழந்தைகள் அழும்வேளைகளில் தாய்ப்பால் கொடுப்பதும் இந்திய பின்புலங்களில் வளரும் குடும்பங்களில் நிலவும் வழக்கம் என்பதை நோர்வே குழந்தைகள் நலன்சார் அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது இந்தியப் பெற்றோரின் வாதம்.
ஆனால், குழந்தைகள் பராமரிப்பில் இந்தப் பெற்றோர் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பராமரிப்பை தாங்கள் பொறுப்பேற்க நியாயமான காரணங்கள் இருந்தன என்றும் பிபிசியிடம் பேசிய நார்வே ஸ்டேவேஞ்சர் நகரிலுள்ள சிறார் பாதுகாப்பு பணியகத்தின் தலைவர் கன்னர் டொரேஸன் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் இந்திய ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டுள்ளதுடன் ஆத்திரம் கலந்த கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த விவகாரம் குறித்து தாங்கள் ஒரு இணக்கப்பாடான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று கூறியிருந்தார்.
முன்னதாக, பெற்றோரின் உறவினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலைச் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவும்படி கோரியிருந்தனர்.
மூன்று வயதான அபிக்ஞான் பட்டாச்சார்யா மற்றும் அவனது ஒருவயது தங்கை ஐஸ்வர்யா ஆகியோர் இப்போது நார்வேயிலுள்ள குழந்தைகள் காப்பக இல்லத்தில் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக ஆஸ்லோவிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.
எனினும் அவர்கள் சொந்தப் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்தியா நார்வேக்கு எடுத்துக்கூறியுள்ளது.

Thursday, March 15, 2012

மூன்று வயது குழந்தை சொல்லும் திருக்குறளும் தமிழ் மாதங்களும்-வீடியோ

Thursday, March 08, 2012

Battle of The North 1980- யாழ் மத்திய கல்லூரி Vs யாழ் சென் ஜோன்ஸ் BIG MATCH -வீடியோ

பீடியில் பெண்களின் வாழ்க்கை -வீடியோ

Tuesday, March 06, 2012

சராசரி அமெரிக்கர்கள் இவ்வளவு முட்டாள்களா?

Friday, March 02, 2012

மெதுவான அசைவு- நிஜமும் நிழலும்-வீடியோ

Thursday, March 01, 2012

நான் உலகம் ..தொழிலாளி.. ..நானே உலகம் -வீடியோ

Wednesday, February 29, 2012

புதிய தலைமுறை டிவியில் விவாதம் -ஜெனிவா மனித உரிமை மாநாடு பற்றி -வீடியோ

Tuesday, February 28, 2012

அறிவியல் தமிழை எளிமை படுத்தியவர் இவர் -வீடியோ

writer sujatha from guru on Vimeo.

Friday, February 24, 2012

எம்ஜியாரின் பகுத்தறிவு கதாபிரசங்கமாம் -வீடியோ

Wednesday, February 22, 2012

என்னத்தை சொல்லுறது ......சினிமா மோகத்துக்கு ஒரு அளவில்லையே- வீடியோ

Sunday, February 19, 2012

Friday, February 17, 2012

தொலைந்து போகுமோ தூர தேசத்தில்-வீடியோ

Wednesday, February 15, 2012

உடனடி ஆனந்தம் தரும் சத்தம்-வீடியோ

Monday, February 13, 2012

உலக மொழியாம் இது? -யாழ் மற்றும் மலேசியாவிலிருந்து-வீடியோ

கீழே இருப்பது யாழ்ப்பாணத்திலிருந்து

கீழே இருப்பது மலேசியாவிலிருந்து

Saturday, February 11, 2012

வட துருவ எக்ஸீமோவரின் பனி வீடு லண்டனிலும் -வீடியோ


லண்டனில் அண்மையில் பெய்த ஸ்னோ மூலம் சிறுசுகள் கட்டிய பனிவீடு தான் மேலே பார்ப்பது .வடதுருவ எக்சீமோவர் மட்டும் தானா ஸ்னோ வீடு கட்டுவார்கள் நாங்கள் கட்டுவோம் என்று கட்டிக்காட்டிய சிறுசுகள்