வாசகர் வட்டம்

Friday, April 17, 2015

Google - கையால் தமிழில் இனிமேல் எழுதலாம்-வீடியோ

 தமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது தமிழ் கீ போர்டு இல் டைப் பண்ணுவது எளிதாக இல்லை என்று. அந்த குறையைப் போக்குவதற்காக கூகிள் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் வெளியிட்டு இருக்காங்க.

நான் கொஞ்சம் Super Excited ஆயிட்டேன், இப்படி ஒரு கீ போர்டு வெளியிட்டு இருக்காங்க அதுவும் 82 மொழிகளுக்கு என்ற உடன் தமிழ் இருக்கனும் கடவுளே ன்னு டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் செஞ்சா தமிழ் இருக்கு மக்களே. இனி சும்மா மொக்கை காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க.


கூகிள் handwriting input இன்ஸ்டால் செஞ்சு தமிழில் எழுதுங்க, உபயோகித்த வரை 90% துல்லியமாக இருக்கு. பயன்படுத்த எளிதாகவும் இருக்கு.

Thursday, April 16, 2015

மாயா யதார்த்தம் (magical realism) இலக்கியத்தில் என்பது பற்றி -வீடியோ

எழுத்தாளர் புதுமைபித்தன் 1930 களிலையே இந்த மாயா யதார்த்தத்தை தனது சிறுகதையில் செய்து காட்டி இருக்கிறார்,,மேலே பேச்சாளர் சொன்னது போல கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையில் . அந்த கதையை வாசிக்க விரும்பின் கீழே

கடவுளும் கந்தசாமிபிள்ளையும் என்ற கதையை வாசிக்க இங்கே அழுத்தவும்l


 புதமைபித்தனின் இன்னொரு கதையான கபாடபுரம் என்ற கதையும் அந்த வகைப்பட்டது என்பது எனது அபிப்பிராயம் அந்த கதையை வாசிக்க விரும்பின்

கபாடபுரம் என்ற கதையை வாசிக்க விரும்பின் இங்கே அழுத்தவும்



Wednesday, April 15, 2015

இலங்கை பொப் பாடல்கள்- சோளம் சோறு பொங்கட்டுமா...சொல்லுங்க மருமகனே...-வீடியோ

JUST FOR LAUGHS- சும்மா போய்யா ..அங்கால் பக்கம் வாறன் -வீடியோ

Thursday, April 09, 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ



ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து








இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன். 


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

Tuesday, April 07, 2015

''கோமாளிகள் ''முழு திரைபடம்(இலங்கை)-கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை வானொலி நாடகம் -வீடியோ

கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது

. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன


. எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


 சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார். யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள்.

 சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்

 படம் பிறந்த கதை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கோமாளிகள் கும்மாளம் என்னும் தொடரை வாரந்தோறும் விரும்பிக்கேட்ட வானொலி நேயரான எம். முகம்மது என்னும் வணிகர், இதனைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்தார். எஸ். ராமதாசிடம் தன் எண்ணத்தைக் கூற அவரும் ஒத்துக்கொள்ள படம் எடுக்கத்தொடங்கினர்.

 நாற்பத்தைந்து நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் 1976 நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொழும்பு பிளாசா திரையரங்கு (55 நாட்கள்), கொழும்பு செல்லமகால் திரையரங்கு (76 நாட்கள்), யாழ்ப்பாணம் (76 நாட்கள்), திருகோணமலை (76 நாட்கள்), மட்டக்களப்பு (76 நாட்கள்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. கதை

Monday, April 06, 2015

Friday, March 27, 2015

சூறாவளி நாடகம்-இந்திரா பார்த்தசாரதியின் பாலேந்திராவின் இயக்கத்தில் -வீடியோ

உலக நாடக தினம் இன்று (27.03.05)


Thursday, March 26, 2015

PHOTOSHOP- ஆணை கூட பெண்ணாக்கலாம்-வீடியோ

Monday, March 23, 2015

சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த.. சூப்பர் ஸ்டார் லீ குவான் யூ-வீடியோ

சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூ 91 வது வயதில் மறைவு-செய்தி லீ

குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம்.

கண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

 நன்றி - கலையரசனின் முகநூல் நிலை தகவலின் ஒன்றின் ஒரு பகுதி மேலே உள்ளவை

Sunday, March 22, 2015

லண்டனில் நடந்த சாத்திரியின் ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்ச்சியின் சில துளிகள்-வீடியோ

(இது நிகழ்வை படம் பிடிக்கும் வீடியோ மட்டுமே... நிகழ்ச்சியை முழுமையாக காட்டும் வீடியோ அல்ல..எனது கமராவின் கொள்ளளவுக்கு அமைய எடுக்கபட்டு தொகுக்கப்பட்டவை .) 

இதில் சாம் பிரதீபன் ,சபேசன் ஆகியோரின் விமர்சன கண்ணோட்டத்தின் சில துளிகளும்.. .கீரன்,தேசம் ஜெயபாலன்,போன்ற அங்கு பார்வையாளர்களாக வந்தவர்களின் கருத்துகளின் சில துளிகளையும் காணலாம்



 சாம் பிரதீபனின் முழு விமர்சனமும் கீழே

Thursday, March 19, 2015

நெதர்லாந்து பெண்மணி அழகு தமிழில் -Dr. ஹன்னா எம்.டி புருயின், தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்-வீடியோ




நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த டச்சு பெண்மணி ஒரு தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்  ..நெதர்லாந்து லெய்டன் என்ற இடத்தை சேர்ந்தவர் .அவர் தனது அனுபவங்களை தனது அழகு தமிழில் பகிர்ந்து கொள்ளுகிறார் சன் டிவியின் நிகழ்ச்சியில் ..

.அதை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்



Friday, March 13, 2015

தாயிடம் ஹலோ சொல்லும் ஏழு மாத அயர்லாந்து குழந்தை -வீடியோ

1978 இல் யாழ்ப்பாணத்தில் றோகண விஜயவீராவுக்கு கல்லெறி விழுந்த பொழுது-வீடியோ

Sunday, March 08, 2015

அப்பாடா...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோ



பிறந்த வீட்டில் கறுப்பி

 அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு 

இலங்கை மத்தியில் தெமள 

வடக்கில் கிழக்கச்சி

மீன் பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி

மலையில் மூதூர்க் காரியாக்கும் 

 ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் 


என் புகுந்த நாட்டில் 

அப்பாடா! பழையபடி நான் கறுப்பியானேன்!


Saturday, February 28, 2015

தமிழ் திரைபட உலகின் முதல் சூப்பர் ஸ்டார்-வீடியோ


Tuesday, February 24, 2015

சூப்பர் சிங்கர் ஜெயிசிக்கா நேர்முகம் வெற்றியின் பின் -வீடியோ

Friday, February 20, 2015

அந்த பிரபஞ்ச ரகசியமாம் -வீடியோ

Friday, February 13, 2015

வாழ்வின் வெற்றிக்கான இரகசியங்களை தெரிந்து கொள்ள-வீடியோ

Tuesday, February 10, 2015

அது வந்தது... தெரியாமால் கிளிக் பண்ணினால்.. எப்படி நீக்குவது-வீடியோ

Monday, February 09, 2015

Friday, February 06, 2015

மதராஸில் ஒரு அமெரிக்கன் -முன்னோட்டம் -வீடியோ



 தமிழ்த்திரையுலகின் முன்னோடிகளில் முக்கியமானதாக கருதப்படும் எல்லீஸ்.ஆர்.டங்கன் பற்றி சுவையான 80 நிமிட படத்தை, கரன் பாலி எடுத்திருக்கிறார். டங்கனுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் முழுமையான பாராட்டு. இவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் எம்.எஸ்., எம்.ஜி.ஆர். டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா அடங்குவர்.



Thursday, February 05, 2015

Wednesday, February 04, 2015

.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ



வில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள்


இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லும் பொழுது இவர் சிரித்தால் சிரிப்பார்கள் , இவர் அழுதால் அழுவார்கள் இவர் கோவிக்கும் முகபாவம் வந்தால் கோவிப்பார்கள் இப்படி ஒரு அதிசயத்தை சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இவரது வில்லிசை நடைபெறும் பொழுது கண்டிருக்கிறேன்...



Monday, February 02, 2015

1986 ஆண்டளவில் நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த பொழுது-வீடியோ

இந்த வீடியோ விவரணத்த 86 ஆண்டு அல்லது 87 ஆண்டின் முற்பகுதியில் ஜெர்மன் தொலைகாட்சி ஒளிபரப்பி இருந்தது .அப்பொழுது இதை டிவியில் பார்வையிட்டு இருந்தேன் .. இந்த வீடியோ தற்செயலாக இணையத்தில் திரும்பவும் பார்க்க கிடைத்த்து அதை பகிர்ந்து கொள்ளுகிறேன் .


 அந்நேரம் விஜயகுமாரதுங்க அவர்கள் யாழ் விஜயம் செய்த பொழுது எடுக்கப்பட்டவை

தமிழில் பேசுவான் ..இயந்திர மனிதன் ,,வேற்றுகிரகத்துக்கு செல்லும் பொழுது -கணனியில் தமிழ் -வீடியோ

. தமிழ் கணிமம் தொடர்பாக ஹலோ மலேசியாவில் நடைபெற்ற உரையாடல்

Sunday, February 01, 2015

தமிழ்நாட்டு அகதிகள் நாடு திரும்புவது; அக்கறையா?..,அரசியலா?-வீடியோ

Wednesday, January 28, 2015

வசந்தம் டிவியில் கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் அவர்கள் தனது கலை இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார் -வீடியோ




வதிரி சி ரவீந்திரன் அவர்களை பற்றிய ஒரு அறிமுகம் பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட விடயம் என்னவென்றில் இலங்கையில் உருவாகின மெல்லிசை ,பொப் இசை பாடல்கள் பற்றிய ஆரம்ப கால வரலாற்றை பற்றி விரிவாக சொல்லுகிறார் . இவர் இலங்கை மெல்லிசை பாடல்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர் , இவர் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் .அண்மையில் இவருக்கு கலாபூசணம் விருது வழங்கி  இலங்கையில் கெளவரவித்திருந்தார்கள்


இந்த விருது பெற்ற அண்ணன் வதிரி சி ரவீந்திரன் அவர்களை இந்த சின்னக்குட்டியும்  இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்வு கொள்ளுகிறான்





Saturday, January 24, 2015

நடிகர் V.S ராகவன் - வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்-வீடியோ




 பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன்(வயது90) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகர் வி.எஸ். ராகவன் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று மாலை சிசிக்சை பலன் இன்றி உயிரிழந்தார். 1954-ஆம் ஆண்டு வைரமாலை என்ற படம் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமான வி.எஸ். ராகவன், 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


 எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள அவர், தற்போதைய இளம் நடிகர்களின் படங்களான, ஆல் இன் ஆல் அழகுராஜா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கலகலப்பு, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தனது இளமை பருவ காலத்தில் நாடங்களிலும் முத்திரைப்பதித்து பின்னர் சினிமா அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ள ராகவனுக்கு, தான் சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


  நன்றி -தினமணி

Friday, January 23, 2015

எம்.ஜீ. ஆர் பற்றிய நீயா நானா-வீடியோ





எம்ஜீஆரை பற்றிய நீயா நானா பார்க்க இங்கே அழுத்தவும்


 இந்த நீயா நானா எம்ஜீஆர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பார்த்த பொழுது எனது வகுப்பு தோழன் முரளியும் யாழ் சுதாகரும் (சுரதா யாழ் வாணனின் சகோதரர்) நினைவில் வந்து போகிறார்கள்.அவர்கள் சிறுவயதில் இருந்து இன்று வரை ஒரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகர்கள்

 யாழ் சுதாகர்..தனது வலைபதிவில் எழுதியவற்றில் ஒரு பகுதி கீழே ''''கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்.. ஏற்றி வைக்கப்பட்ட போது எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..ஒரு நூதனமான போட்டி! 'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?' பாடல் காட்சியில் வரும் நான்கு எம்.ஜி.ஆரில் எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு? '''

 (தைரியாமாக சொல் நீ மனிதன்தானே என்ற பாடலின் லிங்)

 இந்த



விவாத்த்தில் சொல்லாமால் விட்ட விசயங்களில் நான் சொல்ல கூடியது ஏதாவது என்றால் ...எம்ஜீஆர் உணர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை அழ வைத்த படம் என்றால் பாசம் ...மற்றும் அவர் இறந்த காட்சியில் படம் இருக்கும் என்றால் அந்த பாசம் படம் தான்


உலகம் சுற்று வாலிபன் படம் இந்தியாவில் திரையிடப்பட்ட பொழுது இந்த பாக்கு நீரிணையை இரவில் கடந்து போய் வேதாரண்யத்துக்கு அண்மையிலுள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து எங்கள் வகுப்பில் அந்த படத்தின் கதையை சொன்ன இன்னுமொரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகன் வகுப்பு தோழன் ரமேஸ் சுந்தரலிங்கமும் ஞாபகத்தில் வந்து போகிறான் இத்தருணத்தில்

Thursday, January 22, 2015

வாடைக்காற்று திரைபடத்தின் சில காட்சிகளுடன் விவரணம் -வீடியோ



இலங்கையில் வெளிவந்த தமிழ் திரைபடம் வாடைக்காற்று ..இத் திரைபடம் பிரபலமான மலையாள படமான செம்மீனுக்கு ஒப்பாக இலங்கை தமிழ் திரைபட ரசிகர்காளல் போற்றப்பட்டது,

1983 கலவரத்தின் பொழுது இத்திரைபடத்தின் பிரதி எரிக்கப்பட்டு விட்டது என்று வதந்தியோ அல்லது உண்மையோ தெரியவில்லை கூறிக் கொள்ளுகிறார்கள் ..ஆனால் இந்த வாடைக்காற்று விவரணத்தில் சில காட்சிகளை பார்க்க கூடியதாக இருக்கிறது இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமாக ஓடிய இலங்கை தமிழ் படமான குத்து விளக்கு பற்றிய விவரணம் கீழே

 இலங்கையில் முதன் முதலாக 35 mm யில் வெளிவந்த திரைபடமான தோட்டக்காரி பற்றிய விவரணம் கீழே

Wednesday, January 21, 2015

இளையராஜாவை பெருமை படுத்திய அமிதாப் ..அங்கு கமல்,ரஜனி, சிறீதேவி மற்றும் பலர்-வீடியோ

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக, இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாகவும் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழா மேடையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவருமே இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். இளையராஜா இசை குறித்து ரஜினிகாந்த் பேசும்போது, "எனக்கு இளையராஜாவை 70-களில் இருந்தே தெரியும். அவர் மிகவும் குறும்புத்தனத்தோடு பழகுவார். ஒரு காலத்தில் நாங்கள் இருவருமே விடிய விடிய மது அருந்தியபடி கதை பேசிக் கொண்டிருப்போம். திடீரென அவரது உடையமைப்பில் மாற்றம் ஏற்பட்டது எனக்கு ஆச்சர்யமளித்தது. அப்போதில் இருந்து அவரை ராஜா சாமி என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர் இப்போது ஞானியாக திகழ்கிறார். அவரிடத்தில் சரஸ்வதி தேவி குடியிருப்பதாக நினைக்கிறேன்" என்றார் ரஜினி. இளையராஜா இசை குறித்து கமல்ஹாசன் பேசும்போது, "அவருடைய 1000 படங்களில் 10% சதவீத படங்கள் என்னுடையது. பாடல்களை வேண்டுமானால் அவர் இயற்றி இருக்கலாம், ஆனால் அந்தப் பாடல்கள் நமக்கு சொந்தமானவை. அவருடைய மாற்றத்திற்கு பிறகு அவரை எனது சகோதரராக அழைக்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன். இளையராஜா இசை குறித்து அமிதாப் பச்சன் பேசும்போது, "இளையராஜா இசை குறித்தும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றியும் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றார். 

இளையராஜா இசை குறித்து தனுஷ் பேசும்போது, "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான். ரஜினி சார் இந்த விழாவிற்கு வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதிரியான விழாவை இனிமேல் என்னுடைய திரையுலக வாழ்வில் எதிர்பார்க்க முடியாது" என்றார் தனுஷ். நன்றி -த இந்து தமிழ் h

Tuesday, January 20, 2015

சூப்பர் சிங்கர் ஜெசிக்கா பற்றி பெருமை படும் வாடைகாற்று திரைபடத்தின் வில்லன் நடிகரின் பேட்டி -வீடியோ




 எல்லோருக்கும் வணக்கம். சூப்பர் சிங்கர் Wild Card Final அடுத்த வாரம் திங்கள் கிழமை ஜனவரி 19 முதல் ஆரம்பமாகவுள்ளது. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம் ஒருவர் மட்டும் எட்டுபேரில் இருந்து தெரிவாகி நான்காவது போட்டியளராக இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும். நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.


 இனி அந்த இறுதிச் சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும். 1. ஆன்லைன் (online) - நீங்கள் www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று எனக்கு ( SSJ10 ) எத்தனை முறையும் வாக்களிக்கலாம்.


 இந்த வழியை இந்தியாவில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களும் உபயோகிக்கலாம். 2. SMS - நீங்கள் SSJ10 என்று டைப் செய்து 57827 என்ற எண்ணுக்கு அனுப்பவேண்டும். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும். 3. Airtel வாடிக்கையாளர்கள் 5432178 என்ற எண்ணை அழைத்தும், எனக்கு (SSJ10) வாக்களிக்கலாம். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும். உங்கள் ஆசியுடன் அந்த மாபெரும் மேடைக்கு செல்வேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன். உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி. - 

உங்கள் ஜெசிக்கா

Monday, January 19, 2015

சென்னை புத்தக கண்காட்சியில் நடந்த அந்த சம்பவம் -சாரு நிவேதிதாவுக்கு-வீடியோ

http://charuonline.com/blog/?p=2217

Sunday, January 18, 2015

யாழ்ப்பாணத்து கூழ் செய்முறை-வீடியோ

Friday, January 16, 2015

பெருமாள் முருகன் சர்ச்சை விவாதம் -உடைகிறதா பேனா?-வீடியோ

பெருமாள முருகனின் புத்தக தடை பற்றி சன் நியூஸ் டிவியில் விவாதிக்கப்பட்டிருந்தது. அதன் வீடியோ பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

Thursday, January 15, 2015

GANGS OF TOOTING BROADWAY முழு திரைபடம் -வீடியோ(lலண்டன் தமிழ் இளைஞர் குழுக்களை பற்றியது)

GANGS OF TOOTING BROADWAY MOVIE
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் குழுக்களை மையமாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது ..இந்த திரைபடத்தின் டைரக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் . லண்டனில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் கதை வசனத்தை இலங்கையை மூலமாக கொண்ட லண்டன் வாழ் சிங்களவர் ஒருவர் எழுதியுள்ளார் .இலங்கை தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் . இது முழுமையான பிரித்தானியா ஆங்கிலதிரைபடம் என்று அதன் டைரக்டர் கூறி இருந்தார்..இந்த திரைபடம் சில வருடங்களுக்கு முன் இங்கு வெளியாயிருந்த்து
இந்த திரைபடத்தின் முழமையான இணைப்பும் கீழே


Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள் முருகன் சர்ச்சை- சென்னை புத்தக கண்காட்சியில் பொலிசார் Vs எழுத்தாளர்கள் -வீடியோ

சென்னை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்கள் ஆர்பாட்டம் சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்து எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கருத்து உரிமை இல்லையா எனவும் எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துண்டுப் பிரசுரம் வினியோகிக்க போலீஸ் தடுத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி -தினகரன்

Friday, January 02, 2015

கே.பாலசந்தர் -சிறப்பு தொகுப்பு- நட்சத்திரங்களை பூக்க வைத்த திரை வானம்-வீடியோ

Saturday, December 20, 2014

நோய்களை விற்பனை செய்யும் புதிய வகை உணவுகள் -வீடியோ

Thursday, December 04, 2014

கிட்டப்பா -சுந்தராம்பாளின் பிரசித்தி பெற்ற காதல் கடிதங்கள் -காவியத் தலைவன் திரைபடத்தில்-வீடியோ

எம்ஜீஆர் -சிவாஜி ,ஜெயசங்கர் -முத்துராமன் ,ரஜனி -கமல் ,விஜய்-அஜீத் ,சிம்பு -தனுஷ் போன்ற போட்டி நடிகர்களை வரலாற்றில் பார்க்கும் பொழுது நன்றாக நடிக்கிறார்கள் என்று கூறபட்டவர்களிலும் பார்க்க மற்றவர் தான் புகழும் வெகுஜன ரசிகர்கள் ஆதரவும் அதிகம் கிடைத்து வந்திருக்கிறது.

ஏனோ தெரியவில்லை.அப்படி தியாகாரஜ பாகவதர் காலத்திலும் தியாகராஜ பாகவர் தான் புகழ் பெற்று இருந்தார் .இவரிலும் பார்க்க கூட பாடி நடிகக கூடிய கிட்டப்பா அவர்களிலும் பார்க்க.


இப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் வசந்தபாலனின்   காவியத் தலைவன் படம் கிட்டப்பா -கேபி சுந்தரம்பாள் அவர்களின் காதல் கதை இல்லை என்றாலும் கேபி சுந்தரம்பாள் ஒரு கட்டத்தில் கிட்டப்பாவுக்கு எழுதப்பட்ட பிரசித்து பெற்ற காதல் கடிதங்களை அடிப்படையானது என்று கூறப்படுகிறது .
அந்த காலத்தில் திரைபடங்கள் கேவா கலர், ஈஸ்மண்ட் கலர் ,டெக்னிக்கலர் படங்கள் என்று விளம்பர படுத்தப்படுத்துவார்கள் .அப்படி டெக்னிக்கலர் என்ற முறையில் வந்த படம் ஒன்று கொஞ்சும் சலங்கை .

காவியத் தலைவன் திரைபடத்தின் பாடல்கள் அதிகம் அந்த கால டெக்னிக்கலரில் படமாக்க பட்டிருக்கிறது குறிப்பிடப்பட்டது


 கீழே கேபி சுந்தரம்பாளின் ஆவணப்படம் வீடியோவாக

Saturday, November 29, 2014

நைஜீரீயா 419 குற்றம் -ஈ-மெயிலில் வந்த 150 கோடி -வீடியோ

Saturday, November 22, 2014

ஹாட்லி கல்லூரி -லண்டன் பழைய மாணவர் ஒன்று கூடல் -2014- வீடியோ

Thursday, November 20, 2014

1965 ஆண்டு டட்லி சேனநாயாக்காவின் அரசாங்கம் பதவியேற்ற பொழுது-வீடியோ

இந்த 1965 -1970 ஆண்டு கால பகுதியில் டட்லி அரசாங்கம் நடத்திய பொழுது தான்    எனது புகுமுக வகுப்பு பாடபுத்தகத்தில் சூழல் என்ற பாடம் நாலாம் வகுப்பில் இருந்தது அப்பொழுது அதில் தெரிந்து கொண்டது

 அக்கால பகுதியில் இலங்கையின் மகா தேசாதிபதி -வில்லியம் போபல்லாவா(இந்த வீடியோவில் காட்டப்படும் அமைச்சரவை பதிவியேற்றம் அவர் முன்னிலையில் தான் நடைபெறுகிறது,

அவர் பிரித்தானிய மாகாராணியின் பிரதிநிதியாக நினைத்து கொள்ளுவர் ..அப்பொழுது நிறேவேற்று அதிகாரம் ஜனாதிபதி இல்லை அவர் ஒரு ரப்பர் சீல் அதிபதி 

இலங்கையின் ராஜங்க அமைச்சர் -ஜே.ஆர் ஜெயவர்த்தனா

 இலங்கையின் உள்ளூராட்சி அமைச்சர் -திருச்செல்வம்(நீலன் திருச்செல்வத்தின் தகப்பனார் தமிழரசு கட்சியின் சார்பில் நியமன எம்பியாக்கப்பட்டு அந்த கட்சியின் அனுரசனையுடன் மந்திரியாக்கப்பட்ட தமிழ் பேச தெரியாத தமிழர்)

 சபாநாயகர்-

 உப சபாநாயகர்-சிவசிதம்பரம்(முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர்

Wednesday, November 19, 2014

பொம்பளைங்க சுதந்திரத்தை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?..அவள் அபபடித்தான் CLIMAX -வீடியோ

கீழே உளள வீடியோவில் கமல் ரஜனிகாந் நடத்தும் உரையாடல்கள் இருக்கின்றன.இவை அவள் அப்படித்தான் திரைபடத்தில் இடம் பெற்றவை ,,,இதன் இயக்குனர் Rudhraiya (18.11.2014) அன்று காலமானார்

Saturday, November 15, 2014

1996 ஆண்டளவில் இளையராஜாவும் எஸ்.பி பாலசுப்பரமணிஜமும் உரைஜாடுகின்றனர் தூரதர்சனில் -வீடிஜோ

கீழே உள்ள வீடிஜோவில் இளைஜராஜா அவர்கள் ஹங்கேரிஇல் ஹேராமுவுக்காக இசை அமைத்த சிம்பொனி இசைபற்றி மற்றும் மகன் கார்த்திக் ராஜாவின் திருமண விருந்துபாசரமும் இருககிறது ..திரை உலக பிரமுகர்களின் பழைய முகங்களை காணலாம்

Friday, November 07, 2014

கமலின் கம்னியூசமும்...,கடவுள் பற்றிய விளக்கமும் -வீடியோ

Thursday, November 06, 2014

யாரடி கள்ளி ..புகழ் நடிகமணி வைரமுத்து அவர்களை நினைவு கூர்ந்து ஒரு சிறப்பு உரையாடல்-வீடியோ

இதயம் பேசுகிறது... சஞ்சிகை கமலுக்கு நடத்திய பாராட்டு விழாவில் MGR மற்றும் பலர் பேசிய உரைகள்-வீடியோ

இதயம் பேசுகிறது பத்திரிகையும் ஏவிஎம் சேர்ந்து நடத்திய பாரட்டு விழாவில் மணியன் MGR பிரசாத் போன்றோர் பேசிய ஆடியோ வடிவம் மேலே உள்ளது 

கமல் சாருக்கு இந்த சின்னக்குட்டியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sunday, November 02, 2014

Monday, October 27, 2014

('''மரண மாஸ்''') சூப்பர் திரைகதை-ஹீரோ அடிச்ச அடியிலை ஏலியனுக்கே உச்சா போகுது-வீடியோ

Friday, October 24, 2014

மிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ





எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.
இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார்.


 சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.


நன்றி -உதயன்

சேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ

சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். 

பரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - 

நன்றி-தினகரன்

Thursday, October 23, 2014

Tuesday, October 21, 2014

அல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீடியோ



 பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,

 திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.

 "வேருக்கு நீர்', "கரிப்பு மணிகள்', "குறிஞ்சி தேன்', "அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.


பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். "சாகித்ய அகாதெமி', "சரஸ்வதி சம்மான்', "பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

  நன்றி -தினமணி

Sunday, October 19, 2014

யாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ

யாழ்தேவியில் காதல் செய்தால் என்ற பாடலில் முடிவில் குரல் வடிவில் வரும் வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர்....


பலரும் நன்கு அறிந்த தமிழ் நாட்டு சூரியன் எப்.எம் இரவு நேர வானொலி அறிவிப்பாளராகும்


இவர் இணைய தமிழ் எழுத்து உரு சம்பந்தமாக புரட்சி செய்த சுரதா தமிழ்வாணனின் சகோதரர் ஆவார்..பால்ய காலத்தில் பழகிய எனக்கும் தெரிந்த நண்பரும் கூட..

.இந்த பாடலை முன்பு ஒலி வடிவத்தில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது தான் ஒளிவடிவத்தில் இந்த பாடலை பார்க்கிறேன் .அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

Saturday, October 18, 2014

Thursday, October 16, 2014

லண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ



 இந்த பேட்டியை பார்க்கும் பொழுது நல்ல தெளிவாகவும் கொஞ்சம் விவரமாகவும் தன்னடகத்துடனும் தானே பேசுகிறார் .. .

இடையிலை என்ன நடந்தது உந்த ஆளுக்கு ...சில வேளை .அரசியலுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் லூசாயிட்டாரோ?

 2002 ஆண்டளவில் சென்னையில் இருந்து லண்டன் நான் வந்த பொழுது அந்த விமானத்தில் இவரும் பயணம் செய்திருந்தார் ஆனால் அவர் முதல் வகுப்பில் ..

மீனபாக்கம் விமானநிலையத்துக்குள் விமானம் வரை அவரை ராஜமரியாதையுடன் அழைத்து சென்றனர் அங்குள்ள அதிகாரிகள்

 லண்டன் விமானநிலையத்தின் குடிவரவு மேசைக்கு நாங்கள் போகும் வழியில் அவரும் அவரது செயலாளரும் எதிர்பக்கமாக அங்குள்ள அறிவுபலகைகள் பார்த்த படி பட்டணத்தில் தவறப்பட்ட குழந்தைகள் போன்று ஏமாலந்தி கொண்டு வந்திருந்தார்கள்..

நான் ஒரு அறிமுக சிரிப்பை செலுத்தி கூடியும் அவர் கண்டு கொள்ளவில்லை .அந்த அளவுக்கு எதையோ தவற விட்ட தனித்துவிடப்பட்ட நிலையில்  படபடப்புடன் இருந்தார்கள்

Friday, October 10, 2014

சாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்,ஜோ டி குரூஸ்-வீடியோ

Tuesday, October 07, 2014

சொல்லாத தீர்ப்புக்கு முன்னும் ..சொல்லிய தீர்ப்புக்கு பின்னும்-வீடியோ

வக்கீல் வண்டுமுருகன் கேட்ட (ஜா)மீன் ...இப்ப கடலிலை கூட இல்லையாம்-வீடியோ

Friday, October 03, 2014

புலம் பெயர் வாழ்வில் இப்படியும் ஒரு சுரண்டல்.. தமிழனை தமிழன்-வீடியோ