வாசகர் வட்டம்

Saturday, September 21, 2019

Sunday, September 15, 2019

எம்.எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி -alex in wonderland stand up comedy-வீடியோ

தனி நகைச்சுவை நடிப்பு சிறுவயதில் சக்கடத்தார்,டிங்கிரி சிவகுரு நம்ம கே.எஸ் பாலசந்திரன் போன்றவர்களை பார்திருக்கிறோம் ..பின்னர் சன் டிவி விஜய் டிவி வகையறாக்களூடாகவும் பார்திருப்போம்.

 Alexander Babu என்பவரின் தனி நடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சி தற்சமயம் யூரூயுப்பில் பார்க்க கிடைத்தது
..சற்று வித்தியாசமாக இருந்தது

..இந்திய ஆங்கில மொழி பார்வையாளர்களை மையமாக கொண்டு நிகழ்த்துவதாக இருந்தாலும் என்னை போன்றவர்கள் கூட விளங்க கூடியளவான நிகழ்ச்சி தான்

. இவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் அருகிலுள்ள குக் கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் ஒரு மென் பொருள் என்ஜினியாராக பணியாற்றி அதை உதறி தள்ளவிட்டு இந் நிகழ்ச்சிகளை செய்து வருகிறாராம்

..அவர் ஒரு யோகா ஆசிரியரும் கூட

 அவரிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் .பாடுகிறார் சகல இசை கருவிகளை கையாள்கிறார்..கதாகலபட்சம் செய்கிறார் கர்நாடக கச்சேரி செய்கிறார்.

 அவருடைய நான் பார்த்த சில தனி நடிப்பு யூடியுப் வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

Thursday, August 08, 2019

இந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ

மன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் -

 கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று சொன்னால்

 அன்பே சிவம் திரைபடத்தில் மாதவனுக்கு சொன்னதை நினைச்சு பாருங்க கமல் சார்


  கமல் மாதவனைப் பார்த்து ‘வெளிநாட்டு கம்பெனிகளோட பொருட்களை டிவியில கூவி விக்குற selfish கூலி நீ’ என சொல்ல, ‘அது என் business.. அதைப் பத்தி, பேசாதீங்க’ என்பார். அதை கேலி செய்யும் வகையில், ‘சரி..

. பிசினஸ் பிசினஸ்ன்னு எல்லாத்தையும் தூக்கி குடுத்துட்டா எப்படி...? இப்போவே அவன் மஞ்சள், பாஸ்மதி அரிசி எல்லாம் தனதுன்னு சொந்தம் கொண்டாடுறான்… 

நீங்க பாட்டுக்கு காசு குடுக்குறான்னு குனிஞ்சு குனிஞ்சு சலாம் போட்டுட்டே இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்குறது முதுகுத்தண்டா இல்லை ரப்பர் துண்டான்னு சந்தேகம் வரும்ல?’ என சொல்வார்.

Sunday, July 07, 2019

லண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.  'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.--- நன்றி -கிரிதரன்