வாசகர் வட்டம்

Friday, May 26, 2017

கமலின் BIG BOSS போன்ற லண்டனில் நடந்த big brother நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா செட்டி வென்ற பொழுது-வீடியோ

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியும், ஹிந்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சிதான்தான் ‘பிக் பாஸ்’. தற்பொழுது விஜய் தொலைகாட்சி பிரமாண்டமாக தயாரித்து வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொத்து வழங்கப்போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் முதன் முறையாக நிகழ்த்த இருக்கிறார்.

 ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பதினைந்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பில்லாமல், 100 நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத் தொடர்பும் வழங்கப்படமாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும். முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் ‘பிக் பாஸ்’ பற்றிக் கேட்ட போது, “விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன்.

என்னைத் தவிற வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் வந்துள்ளது. தற்பொழுது எதிர்மறையாக இருக்கப்போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும் இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன்.

 இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்க வைக்கப் போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்,” என்று ஆர்வமாகக் கூறினார். எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது.

மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ‘சவால்கள்’ தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும். விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில், “இந்த புது விதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் பொழுது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது,” என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 நன்றி -screen 4screenக்கு இங்கே அழுத்தவும்

Wednesday, May 17, 2017

வேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனி காந்த்

வேலை வெட்டி கேளுங்கய்யா ..வேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனிகாந்த்

 வள்ளி என்ற திரைபடத்தில் இந்த வசனம் .வருகிறது

. இந்த படத்திற்கு ரஜனி கதை திரைகதை வசனம் எழுதியதாக டைட்டிலில் காட்டியிருந்தார்கள்

 ( உண்மையில் ..அந்த காலம் இவரின் நண்பராக இருந்த மன்னார் நடராஜனால் எழுதப்பட்டது)

 இதே படத்தில் இன்னொரு சூப்பர் அரசியல் வசனம் வருகிறது ... '

'இந்த அரச யந்திரத்தை மாற்றமால் ஆட்சியை மட்டும் மாற்றி அரசியலுக்கு வருவதால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது''' என்று ரஜனி பேசுவார்

Monday, May 08, 2017

நீர்வேலி சவாரித்திடலில் நடைபெற்ற வண்டில் சவாரி போட்டி - 07-05-2017 - வீடியோ

Sunday, May 07, 2017

பாகுபலி -2 பற்றி .BBC. அதன் செய்தியில்-வீடியோ