வாசகர் வட்டம்

Wednesday, November 27, 2019

Monday, November 18, 2019

Tuesday, November 12, 2019

கமலின் APPU RAJA (அபூர்வ சகோதரர்கள் )success party -80 களின் ஹிந்தி நடிகர் நடிகைகளுடன்-வீடியோ

Sunday, November 10, 2019

''ஹே ராம்'' திரைபடத்திலுள்ள நுணுக்கங்கள் - திரைகதை ஆசிரியர் M.k மணியின் பார்வையில்-வீடியோ

போனசாக கீழே ஒரு வீடியோ அதுவும் ஹேராம் பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது பேசுறவர் வேறொருவர் ஹேராம் முழு திரைபடம் கீழே

Monday, November 04, 2019

Saturday, October 19, 2019

தமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின் '''தமிழி''' ஆவணப்படம் -வீடியோ

தொடரும்

Saturday, October 12, 2019

கீழடியிலிருந்து இலங்கையிலுள்ள தம்பலகாமம் வரை -வீடியோ

இலங்கையின் முக்கிய தமிழ் எழுத்தளாரில் ஒருவரான ரஞ்சகுமாரும் அவரின் நண்பரும் இது பற்றி உரையாடுகிறார்கள்

Thursday, October 10, 2019

இலங்கையை காட்சிபடுத்திய சர்வதேச திரைபடங்களின் ஒளி காட்சிகள்-வீடியோ

Saturday, September 21, 2019

Sunday, September 15, 2019

எம்.எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி -alex in wonderland stand up comedy-வீடியோ

தனி நகைச்சுவை நடிப்பு சிறுவயதில் சக்கடத்தார்,டிங்கிரி சிவகுரு நம்ம கே.எஸ் பாலசந்திரன் போன்றவர்களை பார்திருக்கிறோம் ..பின்னர் சன் டிவி விஜய் டிவி வகையறாக்களூடாகவும் பார்திருப்போம்.

 Alexander Babu என்பவரின் தனி நடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சி தற்சமயம் யூரூயுப்பில் பார்க்க கிடைத்தது
..சற்று வித்தியாசமாக இருந்தது

..இந்திய ஆங்கில மொழி பார்வையாளர்களை மையமாக கொண்டு நிகழ்த்துவதாக இருந்தாலும் என்னை போன்றவர்கள் கூட விளங்க கூடியளவான நிகழ்ச்சி தான்

. இவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் அருகிலுள்ள குக் கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் ஒரு மென் பொருள் என்ஜினியாராக பணியாற்றி அதை உதறி தள்ளவிட்டு இந் நிகழ்ச்சிகளை செய்து வருகிறாராம்

..அவர் ஒரு யோகா ஆசிரியரும் கூட

 அவரிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் .பாடுகிறார் சகல இசை கருவிகளை கையாள்கிறார்..கதாகலபட்சம் செய்கிறார் கர்நாடக கச்சேரி செய்கிறார்.

 அவருடைய நான் பார்த்த சில தனி நடிப்பு யூடியுப் வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்

Thursday, August 08, 2019

இந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ

மன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் -

 கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று சொன்னால்

 அன்பே சிவம் திரைபடத்தில் மாதவனுக்கு சொன்னதை நினைச்சு பாருங்க கமல் சார்


  கமல் மாதவனைப் பார்த்து ‘வெளிநாட்டு கம்பெனிகளோட பொருட்களை டிவியில கூவி விக்குற selfish கூலி நீ’ என சொல்ல, ‘அது என் business.. அதைப் பத்தி, பேசாதீங்க’ என்பார். அதை கேலி செய்யும் வகையில், ‘சரி..

. பிசினஸ் பிசினஸ்ன்னு எல்லாத்தையும் தூக்கி குடுத்துட்டா எப்படி...? இப்போவே அவன் மஞ்சள், பாஸ்மதி அரிசி எல்லாம் தனதுன்னு சொந்தம் கொண்டாடுறான்… 

நீங்க பாட்டுக்கு காசு குடுக்குறான்னு குனிஞ்சு குனிஞ்சு சலாம் போட்டுட்டே இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்குறது முதுகுத்தண்டா இல்லை ரப்பர் துண்டான்னு சந்தேகம் வரும்ல?’ என சொல்வார்.

Sunday, July 07, 2019

லண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.  'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.--- நன்றி -கிரிதரன்

Saturday, June 22, 2019

குதூகலிக்கும் 50 +plus'..அந்த காலம் route 750 பஸ் க்கு பெயரே வசந்த மாளிகை-வீடியோ

Friday, June 21, 2019

இந்த யோக பயிற்சி ...மிக எளிமையானது ...பல பலன்களை தரக்கூடியது -வீடியோ

Thursday, June 20, 2019

ventriloquism என்னும் மாயக்குரல்- கமலும் கலக்கல் போவது யாரு வெற்றியாளர் நிரஞ்சனாவும்-வீடியோ

கலக்க போவது யாரு டைட்டிலில் வின்னரை வென்ற நிரஞ்சனா வின் நிகழ்ச்சி கமலஹாசனின் பாடல் யூனியர் சீனியர் கலக்கல் போவது யாரு டைட்டில் வின்னரை வென்ற பின் மாயக்குரல் நிரஞ்சனாவின் அசத்தலான கலகலப்பான பேட்டி 20நிமிட பேட்டி சென்றதே தெரியவில்லை பொம்மையும் அவரும் பேட்டி கண்டவரும் நடத்தும் உரையாடல் அற்புதமாக இருந்த்து

Saturday, June 15, 2019

புளித்த மா சண்டையும் ஜெயமோகனும் -வீடியோ

Friday, June 07, 2019

தமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ

Wednesday, June 05, 2019

தலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ

சாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் சமீபத்தில் நடந்த இளையராஜாவின் நிகழ்ச்சியொன்றில் மேடையில் தண்ணி கேட்டவர்களுக்கு தண்ணி கொடுக்க வந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த சம்பவம் பலர் அவரை கேள்விக்குள்ளாகியிருக்கறார்கள்

..அவர் இசை மேதையாக இருக்கலாம் ..அவர் சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்து ரசித்தது..அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்

 ஞான செருக்கு ,வித்யா கர்வம் இருக்கும் மேதைகளுக்கு என்று பலர் சப்பை கட்டுகிறார்கள்

 இப்படித்தான் டிஎம் செளந்திரராஜனக்கும் தான் பெரிய பாட்டுக்காரன் என்று  வித்யா கர்வமாம்

இலங்கையில் 80 களில் டிம் செளந்திரராஜன் மேடையில் இப்படி நடந்த கொள்ள இலங்கை தமிழ் ரசிகர்கள் முறியடித்து இருந்தனர்

டிஎம்ஸ் க்கு அவரது திறமையில் அபார கர்வமாம் அந்த காலம் . அந்த வித்யா கர்வம் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டியது தான்

. இலங்கையில் சுகதாச ஸ்டேடியத்தில் வந்து ஒரு நிகழ்ச்சி செய்யும் பொழுது அதற்கு கே.எஸ் ராஜா அறிவிப்பாளராக இருந்தார்.

யாராப்பா ஏனப்பா எனக்கு ஏன் அறிவிப்பாளர் நான் சிவாஜிக்கு குரல் கொடுத்தனான் எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தனான் என்று ஏளனமாக சொல்ல.

.அதை கேட்டு ராஜா மூத்த கலைஞரை மதித்து வழி விட ..

ஆனால் அங்கு கூடி இருந்த ரசிகர்கள் ராஜா, ராஜா என்று கோரஸ் இட மீண்டும் ராஜா வந்து தான் நிகழச்சியை இலகுவாக ஆரம்பிக்க கூடியதாக இருந்த்து

Saturday, June 01, 2019

எரிக்கப்பட்ட அறிவுக் கோயில் ,38 வருடங்கள் இன்றுடன்..அணையா நினைவுகள் -வீடியோ

எரிக்கப்பட முன் இருந்த நூலக சூழலில் ஒரு மாலை நேரத்தை நினைத்து நினைத்து பார்க்கிறேன் வெறும் மங்கலாகவே தெரிகிறது

 .அப்படியிருந்தும் அதனூடாக ஊன்றி பார்த்தால் சுப்பிரமணிய பூங்காவில் நேரம் சொல்லும் றேடியோ 

அதன் பின் வரும் மெதுவாக உடலை வருடும் சினிமா பாடல்

 சைக்கிளில் மடித்து சுருட்டிய கொப்பியுடன் அவசரமா டியூசனுக்கு வேண்டா வெறுப்பாக செல்லும் பொடியள்

 மத்திய கல்லூரி மைதானத்தில் பயிற்சி எடுக்கும் பொடியள்

 மற்றும் விளையாடும் மாணவர்கள் மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை விடுதியின் முன்பாக உள்ள மதிலிற்க்கு பாரமாக இருந்து கொண்டு அரட்டை அடிக்கும் அக்கல்லூரி உயர்தர மாணவ பிரபலங்கள் 

 முனியப்பர் கோவிலுக்கும் வரும் பெட்டையள்களின் கண் குடுப்பை தரிசிக்க அவசரமாக செல்லும் பொடியள்
 நூலக வாசலில் வரவேற்பாளனோடு அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சில பெட்டையள் 
 விளங்காத போரடிக்கும் மு.வரதராசரின் புத்தகத்தை நூலகத்தில் இரவல் எடுத்து கொண்டு அவசரமாக சைக்கிள் தரிப்பிடத்துக்கு செல்லும் நண்பர்கள் 
 சற்று மேலாக சென்றால் படிகளில் பயந்து பயந்து பேசிக்கொண்டு காதலிக்கும் ஜோடிகள் 
 ஒரு பக்கத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான அஸ்திரத்தை தேடிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் ..அப்படியொரு மயான அமைதி இருக்கும் படிக்கும் மற்றும் உதவி குறிப்புகள் இருக்கும் பகுதியிலை 

ஒரு குண்டூசி விழுந்தாலும் பெரிய ஒலியுடன் கேட்கும் .இங்கு தானோ புத்தர் இங்கு தான ஞானம் பெற்றாரோ என்று தோன்றும் எதிரே கேட்போர் கூடம் 
..எதாவது கருத்தரங்கு .கூட்டம் போன்ற நாட்களில் திறந்து இருக்கும்

 கீழே புத்தகம் இரவல் எடுக்கும் பகுதி எதிர் பக்கம் செய்தி பத்திரிகைகள் சஞ்சிகைகள், அப்படி வந்த சஞ்சிகைகள் இப்ப காணமால் போயிட்டன என
 நினைக்கிறன் .

.பொம்மை பிலிமாலாயா ,readers digest,அதே சாயலில் வரும் தமிழ் சஞ்சிகை .மஞ்சரி .சிங்கப்பூரில் இருந்து வரும் உயர் தர தாளில் அச்சடித்து வரும் சினிமா சஞ்சிகை (பெயர் மறந்து விட்டது),கணையாழி, மல்லிகை ,சிரித்திரன் ,கலகலப்பு ,இந்திய குமுதம் பாணியில் வெளியில் வந்த இலங்கை சஞ்சிகை மாணிக்கம் ,அம்புலி மாமா,சந்தாமாமா ,குஷ்வந்த் சிங்கின் illustrated weekly of india,லண்டனில் இருந்து வந்த லண்டன் முரசு என்ற சஞ்சிகை ( ஜநாவுக்கு நுழைந்த வைகுந்தவாசனின் தம்பி ஆசிரியாக கொண்டது) உத்தியோகபூர்வமாக வைக்காவிடின் சிவாஜி ரசிகர்களால் வெளியிடப்படும் சிம்ம குரல் என்ற பத்திரிகையும் எம்ஜிஆர் ரசிகர்களால் வெளியிடப்படும் பத்திரிகையும் சிலவேளை இருக்கும் 

 80 களில் இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்களால் 9 பேர் சாகுவரை உண்ணாவிரதம் இருந்து கடத்தபட்டு ஒரு நாடகம் யாழ் பல்கலைகழத்தில் நடந்த்து யாவரும் அறிந்த்தே

 அதன் பின்னர் யாழ் மேல் தட்டு வர்க்கத்தினர் நீலன் திருச்செல்வத்தின் அனுசரனையுடன் அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய மாணவ நிர்வாகத்தின் பிரநிதகளை ஜேஆருடன் சந்திக்க ஒழுங்கு செய்தனர்

 இடம் பெயர்ந்த பல்கலைகழக மாணவர்கள் அப்பொழுது வைத்த கோரிக்கை சகல பீடங்களும் வடக்கு கிழக்கில் உருவாக்கி அங்கு சகல தமிழ மாணவர்களையும் அங்கு கல்வி கற்க ஒழுங்கு செய்ய வேண்டும் என்று அந்த சந்திப்பில் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் மாணவர்களுடன் கலந்து கொண்டார் ..

.அப்படி உரையாடல் நடந்து கொண்டிருக்கு சந்தர்ப்பத்தில் சட்டபிரிவு பீடம் அமைவது பற்றி வரும் பொழுது அப்போதைய பிரதி சட்ட அமைச்சராகவும் இருந்த ரனில் விக்கிரமசிங்கா சட்டபீடம் எல்லாம் உடனடியாக வைக்க இயலாது அதுக்கு உரிய சட்ட புத்தகம் அடங்கிய நூலகம் எல்லாம் அமைக்கோணும் என்று கூறினார் 

 அப்பொழுது எம்பெருமான் அமிர்தலிங்கம் என்ன கூறி சலசலபை உருவாக்கினார் தெரியுமா 
 ஜயோ என தலையில் கையில் அடிச்சப்படி எனன அருமையான சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்த்து அதை எரிச்சு போட்டியளே என்று ?

Thursday, May 23, 2019

இனிமேல் தானே பார்க்க போறீயள் இந்த காளியோடை ஆட்டத்தை -மோடி நடனம்

Friday, May 17, 2019

எம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு

Friday, May 10, 2019

Thursday, May 09, 2019

Wednesday, May 08, 2019

பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி (ஞாபகம் வருகிறதா) -வீடியோ

Friday, May 03, 2019

Tuesday, April 23, 2019

சரோஜா- தமிழ் சிங்கள திரைபடம்- FULL VIDEO ( பல விருதுகளை பெற்ற திரைபடம்)-வீடியோ

தமிழ் சிங்கள இரு சிறுமிகளின் பாச போரட்டத்தை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைபடம் ..இந்த திரைபடம் வந்த காலம் யுத்தம் நடைபெற்ற காலம் 2000 ஆண்டளவில்

CCTV FOOTAGE - இலங்கையில் ஈஸ்டர் குண்டுதாரி CHURCH க்குள் நுழையும் காட்சி-வீடியோ

Friday, April 12, 2019

இந்த பச்சை புள்ளையை போய் பிஜேபியின்ரை பி டீம் என்றாங்களே ..பாவிகள்-video

Wednesday, April 03, 2019

5 நொடிகள் போதுமாம் -வாழ்க்கையில் மாற்றம் பெறலாமாம் (விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டதாம்)-வீடியோ

Mel Robbins இவர் முன்னாள் CNN தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளர்....இவருடைய 5 செக்கன் rule விஞ்ஞானரீதியாக நிரூபிக்க பட்டது என்று சொல்லப்படுகிறது.

Wednesday, March 27, 2019

Sunday, March 24, 2019

Wednesday, March 06, 2019

Wednesday, February 13, 2019

Friday, February 08, 2019

யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா? (යාපනේ මිනිස්සු ඇත්තටම නිදහස්ද?)-வீடியோ

இந்த MR WORLD தமிழனின் உணர்ச்சிகரமான பேச்சு -வீடியோ

Saturday, February 02, 2019

''நினைவுகள் மரணிக்க முன்'' ஆவணபடம் ..மலையக தமிழர்களின் பங்கு ஈழ போரட்டத்தில்-வீடியோ

தமிழா..தமிழா ..தமிழ் பேசு ..தடைகள் கடந்து தமிழ் பேசு-வீடியோ

Tuesday, January 29, 2019

Wednesday, January 23, 2019

இணையத்தை கலக்கும்'' very very bad '' பாடல் ..ஆனால் பாடல் very very good -வீடியோ

Saturday, January 19, 2019

Saturday, January 12, 2019