வாசகர் வட்டம்

Friday, January 29, 2016

Wednesday, January 20, 2016

இளையராஜா-ரஹ்மான் மோதல் ,,முக்கியமான பாராட்டு விழாவில்-வீடியோ

Saturday, January 16, 2016

ச(ஜ)ல்லிக்கட்டு Vs PETA,,நகர படித்த முட்டாள்களின் திருவாசகங்கள் -வீடியோ

Saturday, January 09, 2016

Thursday, January 07, 2016

92 வயது இளம் பெண்ணின் பரதநாட்டிய மேடையேற்றம் -வீடியோ

Friday, January 01, 2016

சின்னக்குட்டி வலை பதிவுலகில் பத்தாவது ஆண்டில்கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது .

 முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால்  வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத  இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த்தது .....அதன் தொடர்ச்சியாக சின்னக்குட்டி என்பவன் நாள் நட்சத்திரம் தெரியாமால் பார்க்காமால் இணையத்தில் பிறந்தான்.
அப்படி மெல்ல மெல்லயாழ் இணையத்தில் தவிழ்ந்து வரும் காலத்தில் அவுஸ்திரலியா நாட்டில் வானொலி அறிவிப்பாளராகவும் இருக்கும் கனா பிரபா என்பவர் அதில் எழுதுவது வழக்கம் .2005 ஆண்டளவில் என்று நினைக்கிறன் இணையத்தில்  வலைபதிவு (blog) ஒன்றை தனக்கு உருவாக்கி எழுதி அதற்கான இணைப்பை யாழ் இணையத்தில் வழங்கி வருவதை வழக்கமாகி கொண்டிருந்தார்

அவரின் இணைப்பு மூலம் அந்த வலைபதிவு செல்லும் பொழுது  அதன் வேலைப்பாடுகளை கண்டு அதில் உள் சென்று பார்த்த பொழுது பட்டணத்தில் மிட்டாசு கடையை பார்ப்பது போல மிரள முடிந்தது.. 2006 ஆண்டு ஏதோ ஒரு கண முடிவில் ஒரு துணிவு வர  புளக் பக்கத்தில் ஒரு பாதைக்குள்  போனால் போகுது என்று நுழையும் பொழுது  தொடர் பாதைகளை வழிகாட்டி போல் காட்டி கொண்டிருந்தது சென்றேன் .....இது தான் இவ்வளவு தான் இந்தா உனது பெயரில் வலைபதிவு  என்று தந்தது ..ஏதாவது எழுது என்று சொன்னது

எனக்கு தோன்றியதை எழுதினேன் பேச்சு தமிழில் தான் எழுதினேன் ..வலைபதிவுகளை ஒன்றிணைக்கும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைந்தேன் .அந்த காலத்தில்  விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கை பதிவர்கள் அப்பொழுது எழுதி கொண்டிருந்தனர் ....சுஜாதா கதைகளில் வரும் கணேஸ் வசந்த் இரட்டையர்கள் மாதிரி வசந்தன் சயந்தன் என எழுதி கொண்டிருந்த இருவர் எனக்கு வலைபதிவு உலகில்  போகும் பொழுது வழி தெரியாமால் திசை தெரியாமால் இருக்கும் பொழுது  வழி காட்டி உதவுவார்கள்.வசந்தன் என்பவர் எங்கு இருக்கிறார் தெரியாது ..சயந்தன் என்பவர் பிரபல எழுத்தாளராக இப்ப வலம் வந்து கொண்டிருக்கிறார்

அப்பொழுது எழுதி கொண்டிருந்த இலங்கை பதிவர்கள்  கனக்ஸ்,சந்திரவதனா ,மதி கந்தசாமி, டிசே தமிழன் கான பிரபா  ,சிநேகிதி,யாழ் சுதாகர் மலைநாடன் பெயரிலி வசந்தன்  பின் தமிழ் நதி.,யோகன் பாரிஸ்,சாத்திரி போன்றவர்களும் மற்றும்   இன்று தமிழ் நாட்டு வார சஞ்சிகை வண்ணதிரை யின் ஆசிரியராக இருக்கும் ஆரம்பத்தில் லக்கிலுக் என்று அறியப்பட்டவரும் இப்பொழுது யுவகிருஸ்ணா என்ற நிஜ பெயரில் வலம் வருபவரும் மற்றும் செந்தழல் ரவி  வரவணையான் என்று அழைக்கப்படுகிற செந்தில் போன்ற தமிழ் நாட்டு வலை பதிவர்களும் எங்களுடன் பயணித்தவர்களாவர்.


கீழே நான் போட்ட வலை பதிவு ஒன்றில் அப்ப இருந்த இலங்கை பதிவர்கள் அதிகமானோர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் அந்த பதிவை பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங் அழுத்தி பார்க்கவும்
http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post.html

அப்பொழுது வலைபக்கங்களை திரட்டும் முக்கிய திரட்டியாக பங்காற்றிய தமிழ்மணம் வாரம் வாரம் நட்சத்திர பதிவர்கள் என்பதை உருவாக்கி வலை பதிவர்கள் ஊக்கபடுத்தியது . அதில் இந்த சின்னக்குட்டியும் விரைவில் நட்சத்திர அந்தஸ்து பெற்று நட்சத்திரபதிவர் என்ற அந்தஸ்து பெற்றான் ஒரு வாரத்திற்க்கு..

இதை பொறுக்கமுடியாத ஒரு சிலர் அரசியலோ இலக்கியமோ என்ன வென்று தெரியாத இந்த அரைவாக்காட்டு சின்னக்குட்டிக்கு எல்லாம் தமிழ்மணம் நட்சத்திரபதிவர் அந்தஸ்து கொடுத்து தனது தரத்தை தாழ்த்திவிட்டது என்று எள்ளி நகையாடினர்
ஊரில் இருந்த பொழுது போராட்டமென்றால் என்ன கிலோ என்று கேட்கும்  அதுவும் வெளிநாட்டுக்கு வந்த பின் உந்த மேற்க்த்தைய அரைகுறை தத்துவங்களை விழுங்கிவிட்டு வாந்தி எடுப்பவர்கள் தான் இந்த இவர்கள் என தெரிந்தமையால் அதையெல்லாம் ஒரு என்னுள் புன்னகையுடன் கடந்து  சென்றிருக்கிறேன்.

அப்பொழுது யூரூயூப் ஆரம்பித்த கொஞ்ச காலம் தான்  நான் விரும்பி பார்த்த வீடியோக்களை பகிர்வதுக்கென்று தனி வீடியோ வலைபதிவை ஆரம்பித்திருந்தேன்.அது நான் எழுதும் வலைபதிவிலும் பார்க்க என்னையறியாமாலே மிகவும் பிரபலமாகியது ..அந்த காலத்தில் வருகை தரும் வாசகர்களை ஒப்பிட்டு சிலர் கணிக்கும் கணிப்புகளில் முதல் பத்து வலைபதிவுகளில் கூட இடம் பிடித்திருந்தது....எத்தனை நாடுகளில் வருகிறார்கள் என்று அறிவதற்க்கு இலவச குறிகாட்டி எனது வலைபதிவில் இருந்தது ....138 நாடுகளில் இருந்து  வாசகர்கள் வந்திருந்தினர். நான் அறியா  நாடுகளின் கொடிகளை கூட காட்டியது அங்கில்லாம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து கோடி காட்டியது.

தமிழ் எழுத்துருவில் புரட்சி செய்த சுரதா யாழ்வாணன் அவர்கள் தனது பிரபலமான வெப்சைட்டில் சின்னக்குட்டி ரூயூப்  என பெயரிட்டு இணைப்பு கொடுத்து இந்த எனது வீடியோ வலை பதிவை பிரபலபடுத்தினார் ..அதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்ளுகிறான் சின்னக்குட்டி இந்த தருணத்தில்

பிரபல தமிழ் நாட்டு பிரபலம் மாலனுக்கும் இலங்கை பதிவர் பெயரிலிக்கும் நடந்த பாஸ்போட் பற்றி இணையத்தில் நடந்த மோதலை மையமாக வைத்து அவன் என்ன பாஸ்போட் வைத்திருந்தால் என்ன என்று நகைச்சுவையாக எழுதிய கருத்து சித்திரம் மிகவும் பிரபலமான பதிவுகளில் ஒன்று.

நொங்கமால் நோகமால் வீடியோவை இணைத்து அதுக்கு ஒரு தலைப்பை மட்டும் போட்டு பத்து வருடம் வலை உலகில் பயணித்திருக்கிறேன் என என்னை நானே பாரட்டி கொண்டு  இன்னும் பல வருடங்கள் பயணிப்பேன் என உங்கள் முன் உறுதி எடுத்து  கொள்ளுகிறேன்

இவ்வளவு காலமும்  தந்த ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்