வாசகர் வட்டம்

Wednesday, February 27, 2013

முகவரி இல்லாத அவல பயணம் -வீடியோ

Saturday, February 23, 2013

Friday, February 15, 2013

சிதறியது எரி நட்சத்திரம்---400 பேர் காயம் ரஸ்யாவில்-வீடியோ

Wednesday, February 13, 2013

தொடக்க இசை - அந்த கால காலை 7;30 மணி ஞாபகம் வரும்-வீடியோ

Tuesday, February 12, 2013

எமது சினிமா...இந்திய சினிமாவோ அல்லது சிங்கள சினிமாவோ அல்ல-வீடியோ

இவர் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனும் வடமாரட்சி அல்வாயை பிறப்பிடமாக கொண்டவர் என்று மேற் காணும் வீடியோவில் குறிப்பிடப் படுகிறது

Monday, February 11, 2013

உலகம் பேசும் ஓரே மொழி FACE BOOK நீ தானே-வீடியோ

இது இலங்கை கலைஞரின் படைப்பு

Wednesday, February 06, 2013

மறைந்த மூத்த சக வலைபதிவர் டோண்டு சார் ஜெயா டிவிக்கு அளித்த நேர்முகம்-வீடியோ


மூத்த வலைபதிவாளர் டோண்டு சார் அவர்களின் மறைவு அறிந்து சக வலைபதிவாளர் பிரபா ..எழுதிய வலைபதிவு கீழை இருக்கிறது பார்க்க
http://www.madathuvaasal.com/2013/02/blog-post.html

Monday, February 04, 2013

விஸ்வருபம் தரும் புதிய திரை அனுபவம்

விஸ்வரூபம் திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி  தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது  அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல்  இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது  எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று  சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன்  மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன்

 

நேரம் கிட்ட தட்ட முன்னிரவில் ஒரு மணியாகி இருந்தது .லண்டன் தூக்கத்துக்கு போயிருந்தது ..இன்னும் கொஞ்சம் நேரத்தில் எழும்பி பழைய மாதிரி வீறு கொண்டு எழுந்து விடும் .தெரு வெறிச்சோடி கிடந்தது.இந்த நேரத்தில் உலாவிறது கவனம் என்று ஒரு நண்பன் சொன்னது ஞாபகம் வர ...இந்த படத்தில் கமலகாசன் திருக்குர்ஆன் ஓதி விட்டு சண்டையிடும் முதல் சண்டைக் காட்சி நினைவில் வர .திரைக்குள் எங்களை பார்த்து திரைக்குள் வெளிய அதை வெளியில் கொண்டு வர அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை முயற்சி செய்த நாங்கள் இதற்கு எல்லாம் பயப்படலாமா அதே மாதிரி அடிபட வேண்டியதானே என்று  என்னோடையே நான் நகைத்து கொண்டேன்

.அந்த சண்டை காட்சி எடுத்த விதம் அற்புதமாக இருந்தது .தியேட்டரே ஒருமித்து கூவி ஆர்பர்த்தரித்த்து.எத்தனை திரைபடத்தில் எத்தனை சண்டை காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் ஏதோ  வித்தியாசமாக இருந்த்து தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணத்தை கண்டு வியக்க வைத்தது.தமிழில் அறிமுகபடுத்துகின்ற கமலுக்கு நன்றியாக சொல்லியாக வேண்டும் .இப்படி நான் பிரமிக்கும்  பொழுது சிலர் சொல்ல வருவார்கள் ..பேமாரி ...ஹாலிவூட் படங்களிலும் இதை மாதிரி எத்தனையோ படங்களில் நாம் எல்லாம் பார்த்து இருக்கிறோம் இது எல்லாம் பெரிய விசயமில்லை என்று .நாகேஸ் ஒரு படத்தில் கெளவரமாக  இங்கிலீஸ் படம் ஒன்லி தான் பார்ப்போம் என்று சொல்லுற மாதிரி .நாங்கள் தமிழ் படம் ஒன்லி  தான் பார்ப்போம் .அதாலை இது வரை  வந்த தமிழ் படங்களில் விஸ்வரூபம் அதி சிறந்த தொழில் நுட்பத்துடன்  காட்சிகளை அமைந்து இருக்குது என்றால் நான் சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்

<

முக்கியாமாக இந்த படத்தின் ஓலித்தரம்  புதிய அனுபவமாக இருந்தது .முக்கியமாக இந்த ஓலிக்காகவே கட்டாயம் தியேட்டரில் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது .DTH யிலோ வேறு முறைகளிலோ இந்த படத்தை பார்த்தால் அந்த அனுபவத்தை தராது என்று நிச்சயம் சொல்லலாம் . தியேட்டர் ஒலி குறிப்புகளை தவற விட்டு பார்த்தால் தமிழ் நாட்டு  முஸ்லிம் கூட்டமைப்பு சொன்ன மாதிரி ஒரு டாக்குமென்றி  படம் போல சில வேளை தோற்றமளிக்க கூடும் . திரைகதையின் சில நகர்வுகளின் குழப்பங்கள் காரணமாயிருக்கலாம்

ஆப்கான் புவிபரப்பு காட்சிகளை இந்தியாவில் வடிவமைத்து தமிழ் நாட்டிலும்  வேறு பகுதிகளிலும் படமாக்கினார்கள் என்று சொல்லும் பொழுது நம்ப மறுக்கிறது .அப்படி தத்துரூவமாக இருந்த்து .ஹெலிகொப்டர்கள் பறக்கும் பொழுது  தியேட்டரில் இருந்து திரைக்குள் சென்று பறப்பது மாதிரி ஒரு அனுபவத்தை தந்தது

ஆப்கான் தலபான் 

அமெரிக்க, றோ என முடிச்சு போட்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் . இந்த தில்லர் திரைபடத்துக்கு பல காட்சிகளை அமைக்க இந்த களம் வசதியாக நிச்சயமாக இருந்திருக்க கூடும்  அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.இது பெரிய கலை படைப்பு அது இது என்று சொல்ல எனக்கு தெரியாது சொல்லவுமில்லை .தலாபான் பயங்கரவாத்த்தை காட்டியவர் . அமரிக்க அரச பயங்கரவாதம் செய்யும் காட்சிகளை ஒரு இரு காட்சிகளில் காட்டி இருந்தாலும் தலபான் பயங்கரவாத்த்தை காட்டியளவுக்கு காட்டியிருக்கலாம்.இந்திய றோ அதிகாரி கதாநாயகனாக பாத்திரம் அமைந்திருக்கும் பொழுது அப்படி ஒரு முயற்சிக்கு போக முடியாது தானே

கமல் இந்த படத்தில் ஒரு வசனம் சொல்லுவார் ...ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று  அது உண்மை  தான் படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல  .அவரது இன்றைய நிலையில் தனிப்பட்ட நிலைபாட்டுக்கும் பொருந்தும்.இது போன்ற தில்லர் திரைக்கதைக்கு கமல் ஆப்கான் வரை இவ்வளவு தூரம் போயிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் பாக்கு நீரிணையை கடந்தால் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். .றோ அதிகாரியாக நடித்து சாகசம் செய்வது இந்தியனாக சில வேளை பெருமைப்பட்டு கொள்ளலாம்..மற்றவர்களை பொறுத்த வரை வில்லத்தனமாகவே தோற்றமளிக்கும் வரலாறுகள் சாட்சியாக இருப்பதால் ..முக்கியமாக தமிழர்களை பொறுத்தவரையில்

தமிழ் திரைபடம் என்ற ரீதியில்..தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இருக்கிறார் .பார்க்க வேண்டிய படம் தான் ..புதிய சினிமா அனுபவத்தை நிச்சயம் தரும்

Friday, February 01, 2013

'''ஊரை விட்டு போறன்'' சிவாஜி-கமல் உரையாடல்(விஸ்வரூபம் சம்பந்தமாக)-வீடியோ