வாசகர் வட்டம்

Sunday, December 30, 2018

comedy is very சீரியஸ் பிசினஸ்-வீடியோ

Tuesday, December 25, 2018

எதிர்பாராத பந்து வீச்சுக்கு திணறும் துடுப்பாட்டுகாரர் மாதிரி திணறினாரா கமலஹாசன் -வீடியோ

கமலை ஸமிருதி ராணி அண்மையில் நடந்த விவாதமொன்றில் தோற்கடித்தார் என்று இப்பொழுது சமூக வலை தளங்களில் ஒரு கேலியும் கிண்டலுமாக கமலை போட்டு தாக்கி கொண்டிருக்கின்றனர்

 அந்த விவாதத்தை பார்க்கும் பொழுது இந்த பிஜேபி யூனியன் மந்திரியுடன் ஏன் இந்த அடி வாங்கி கொண்டிருக்கிறார் என்று  ஒரு சந்தர்பத்தில் சங்கடமாய் இருந்தது ,,

ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைத்து விட்டால் எவரையும் விவாத்த்தில் வென்று விடலாம் என்பதற்க்கு இந்த விவாதம் ஒரு உதராண்ம்

 சில காலத்துக்கு முன் இந்த ஸ்மிருதி ராணியின் பொய்யான கல்வி தகமை பற்றி சர்ச்சை வந்தது ஞாபகம் வருகுது
இந்த விவாதத்தில் கமலஹாசனுக்கு எதிராக நெறியாளர் அர்னாப் செய்த சதி பற்றி விளக்கும் இன்னொரு காணொளி கீழே
கமல் சுட்டி காட்டி புளாகிங்கத படும் centralism அரசியல் பிரான்சிலும் கொலம்பியாவிலும் இப்பொழுது அடி வாங்கி கொண்டிருக்கிறது


 ஸ்மிருதி ராணி கமல் முழு விவாதத்தை பார்க்க விரும்பின் கீழே

Saturday, December 08, 2018

இது எப்ப ..எங்கே ? ,,ரஜனி -வீடியோ

Wednesday, November 21, 2018

மட்டக்களப்பில் '' பாயோடு ஒட்டிய யாழ்ப்பாணத்தவர்கள் -விவரணம் -வீடியோ

70-80களின் - அன்றைய சினிமா நட்சத்திரங்கள் ...அன்றைய வைபவங்களில் -வீடியோ

கமல் தயாரித்து சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு வெற்றிவிழா கூட்டத்தில் சிவாஜி பங்குபற்றிய வீடியோ கீழே எம்ஜீஆருக்கு டாக்டர் பெற்றதுக்கு தமிழ் சினிமாவுலகம் எடுத்த விழாவில் அக்கால சினிமா நட்சத்திர கூட்டம் கீழே

Tuesday, November 20, 2018

Saturday, November 17, 2018

உலகம் முழுவதும் நடந்த சிறந்த பாரளுமன்ற சண்டைகள் -TIME சஞ்சிகை-வீடியோ

புது வரவாக அண்மையில் இலங்கை பாரளுமன்றத்தில் நடந்த சண்டையையும் சேர்த்து கொள்ளலாம் பார்க்க விரும்பின் கீழே

Wednesday, November 14, 2018

Sunday, November 11, 2018

அன்று ஒரு நாடிருந்ததே ... அது இறந்து போனதோ.?.(MUST WATCH) -வீடியோ

கேரளத்தின் பிரபல பாடகர் ரேஸ்மி சதீஸ் பாடிய சமூக நலன் மிக்க பாடலை காயல் பட்டினத்தின் சிறந்த பாடகர்களில் ஒருவரான கே.ஜே சாஹூல் ஹமீது தமிழில் பாடியுள்ளார்

Saturday, November 03, 2018

1950 களிலையே இந்திய சினிமா உலகில் இப்படி பரிசோதனை ..இது METOO யில் வருமா-வீடியோ

Tuesday, October 23, 2018

Tuesday, October 02, 2018

கண்டியை ஆண்ட இறுதி மன்னன் கதையை வேறொரு கோணத்தில் சொல்லும் திரைபடம் -வீடியோ

) திரைபடத்தின் பெயர் -‘Giri Vasi pura’ (கிரி வெசி புர)

 . நன்கு அறிந்த பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் இந்த திரைபடத்தை பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவை கீழே பார்க்கலாம் -நன்றி

 கண்டியினை ஆண்ட நாயக்கர் வம்சம், நயவஞ்சகத்தால் அழிந்தொழிந்த கதை. ‘ஹங்குரங்கெத’ பிரதேசத்தில் விவசாயக்கடும்பத்தில் பிறந்த ‘கண்ணுச் சாமி’, எனும் இளைஞன், ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக்கபட்ட கதையையும், மதவாதம்,இனவாதம் என்ற பேரில், பேரின வாதிகள் தம் சுயநலத்திற்காக எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகள் செய்து அம்மன்னனைப் பலிகடாவாக்கினார்கள். என்பதையும், வரலாற்று ஆசிரியர்கள் எவ்வறெல்லாம் பொய்யுரைத்து அவனக் கொடுங்கோலனாகச் சித்தரித்துள்ளார்கள்

, அவனது உண்மையான குண இயல்புகள் என்ன, என்பதையெல்லாம் மிக நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியோடும் சித்தரித்திருந்தார்-திரைக்கதாசிரியரும் இயக்குனருமான திரு. Daevinda Kongahage.

தமிழில் பேசவேண்டிய கதை மாந்தர்கள் தமிழிலேயே பேசினார்கள். பிரித்தானிய பாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். பெரும்பாலான உரையாடல்கள் சிங்கள மொழியில் அமைந்திருந்தாலும், இதனை ஒரு மும்மொழித் திரைப்படம் என்றுதான் வகைப்படுத்தவேண்டும்.
கண்ணுச்சாமி என்ற ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக நடித்த Pubudu Chathuranga நிறைவாகவே அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டினார்

. மகாராணி ரங்கநாயகி (வேங்கட ரெங்கம்மாள்)பாத்திரமேற்ற நிரஞ்ஜணி ஷண்முகராஜாவுக்கு இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும். விழாவில் திரைப்படக்குழுவினர் அவருக்களித்த முக்கியத்துவம் கலைஞர்கள் மத்தியில் ’வேற்றுமையிலும் ஒற்றுமை’ பேணுவதற்கு முன்னுதாரணமாயிருந்து.
 நிரஞ்சணியும் அப்பாத்திரத்தை மிகுந்த தேர்ச்சியுடன் சித்தரித்திருந்தார். தமிழகத் திரைப்படங்களிலும் கூட, பாடல்கள் இயற்றிய பெருமைக்குரிய, நமது மண்ணின் கவிஞர் ‘பொத்துவில் அஸ்மின்’ தனித்தமிழ் வரிகளில் ஒரு முழுப்பாடலையே இயற்றியிருந்தார்.
மீனா பிரியதர்ஷணி என்ற இளம் சிங்களப்பாடகி தெளிவான உச்சரிப்புடன் இனிமையாகவே பாடி, அஸ்மினுக்குப் பெருமை சேர்த்திருந்தார். வரலாற்றுத் திரைப்படங்களென்றாலே, அரண்மனை, அந்தப்புறம், யுத்தக்காட்சிகளையெல்லாம், கற்பனைக்கெட்டாத அளவு, பலமடங்கு மிகைப்படுத்தியும் Graphics உத்திகள் மூலம் பிரம்மாண்டப்படுத்தியும் காட்டுவார்கள். உண்மையில் அன்றைய மக்கள் தொகையினைக் கணக்கிட்டால் சில நூற்றுக்கணக்கில் மட்டுமே போர் வீரர்கள் இருப்பார்கள், பழங்காலத்து அரண்மனைகள் ( இப்போதும் சில பேணப்பட்டுள்ளவை போன்று) அப்போது உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பதையெல்லாம் மிக இயல்பாக சித்திரித்திருந்தார்கள்.
 எந்தவொரு இனத்தையும் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை பெரும்பான்மை இனத்தில் அன்றிருந்த சந்தர்ப்பவாதிகளைத் தோலுரித்துக் காட்டிய துணிச்சல் பாராட்டிற்குறியது. தனக்குத் துரோகமிழைத்த ‘எகலப்பலை’யின் குழந்தைகளைப் பெற்ற தாயைக்கொண்டே உரலில் போட்டு இடிக்கவைத்த ‘கண்டிய மன்னன் கதையை’, நடிகர்திலகம் கூட ஒரு திரைப்படத்தில் நாடகமாக நடித்திருப்பார்.
அவை எல்லாம் எவ்வளவு பச்சைப் பொய் என்பதை, இயக்குனர் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். திரைப்படம் நிறைவடையும் போது சூழ்லைநிலைக் கைதியாக மாறிப்போன கண்ணுச்சாமின் மேல், நம் எல்லோரையும் அனுதாபம் கொள்ள வைத்ததில்- இயக்குனர் வெற்றியடைந்துள்ளார்.

 மிக முக்கிய விடயம்- திரைப்படத்தின் நிறைவில் பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலமாக -‘பேரின வாதிகளாய் செயல்பட்ட S.W.R.D. பண்டாரநாயக்க மற்றும் J.R.ஜயவர்தன இருவரதும் பூர்வீக ‘வேர்கள்’ என்ன என்று சுட்டிக்காட்டிய அசாத்தியத் துணிச்சலுக்காக, இயக்குனர் Daevinda Kongahage அவர்களுக்கு ஒரு பூங்கொத்து வழங்கிப் பாராட்ட வேண்டும். இனப் பாகுபாடின்றி எல்லோருமே, ஒருமுறை பார்க்கவேண்டிய திரைப்படம்.

கண்டி அரசனை பற்றி  இவ்வளவு காலமும் இப்படி தான்  பொய்யாய்காட்டி இருந்தார்கள் கூத்துகளாக அது பற்றி பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங்கை தட்டி பாருங்கள்
https://sinnakuddy1.blogspot.com/2013/05/blog-post.html

Tuesday, September 18, 2018

A.R.ரஹ்மான் என்ற இளம் இசை புயலை பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்த தருணம் -வீடியோ

புதுமை பித்தன் சிறுகைதகள் -ஒலி வடிவம்

புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:

 “ இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்.


சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே?-பு

Monday, September 10, 2018

Saturday, September 08, 2018

''' குணமா சொன்னா கேட்பேன்''..தாய்க்கே ஆலோசனை சொல்லும் மழலை-வீடியோ

Saturday, September 01, 2018

அதிகார வர்க்கம் தடுக்க முனைந்து ''ஒருத்தரும் வரேலை'' (FULL) முழு ஆவணபடம் -வீடியோ

கன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் போலீஸ் அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞரும் ஆவணப்பட இயக்குநருமான த.மு.எ.க.ச மதுரை மாவட்டக்குழு உறுப்பினருமான திவ்யாபாரதியின் வீட்டை இன்று அதிகாலையில் போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளது,அராஜகச்செயல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டித்துள்ளது

. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: மதுரை மாவட்ட த.மு.எ.க.ச-வில் மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவர் திவ்யாபாரதி. ஏற்கெனவே, "கக்கூஸ்" என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், வழக்கறிஞராகவும் பணியாற்றிவருகிறார். இவர்,

 தற்போது ஒகி புயல் பாதிப்புகள்குறித்து "ஒருத்தரும் வரேல" என்கிற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் அதன் முன்னோட்டக்காட்சி (டீஸர்) வெளியாகி, பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று (02.07.18), சேலம் க்யூ பிராஞ்ச் போலீஸார் என்று சொல்லிக்கொண்ட சிலர், திவ்யாபாரதியின் தந்தையிடம் சென்று இந்தப் படம்பற்றிய தகவல்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் திவ்யாபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

 அவரது, "ஒருத்தரும் வரலே" படத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவருடைய கணவர் கோபாலை, ’திவ்யா எங்கே’ எனக் கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து, திவ்யாபாரதியின் நடமாட்டத்தைக் கண்காணித்துவந்த போலீஸார், இன்று பிற்பகல், அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யாபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு, ’எங்களுடன் வா விசாரிக்கணும்’ என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீஸார் வாக்குவாதம் செய்துள்ளனர். 

காவல்துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின்படியாக இயங்கும் ஒருவரது கலைச் செயல்பாட்டு உரிமையில், இதுபோல அராஜகமான முறையில் போலீஸார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டைச் சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும். கருத்துச்சுதந்திரத்தைக் கைக்கொள்ளவிடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸார்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

கருத்துரிமை மீதும் கலைச்செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல்துறையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று த.மு.எ.க.ச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி -விகடன்

Tuesday, August 28, 2018

Monday, August 13, 2018

கமலுக்கு போடப் பட்ட குறும் படம் Zee தமிழ் டிவியில் -வீடியோ

Tuesday, August 07, 2018

''அந்த பயமே வாழ்க'' ...மெரினாவில் ஒலித்த அந்த கரகரத்த குரல் மெளமனமானது-வீடியோ

ஒரு பதின்ம வயதில் இதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தை நினைத்து பார்க்கிறேன் ,

,யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராட்சி மகாநாட்டு சிறிமா அரசாங்கம் கருணாநிதிக்கு அனுமதி மறுத்து இருந்தது

 அது குறித்து கருணாநிதி மெரினா கடற்கரையில் பேசும் பொழுது

 கருணாநிதி என்னை கண்டு சிறிமா அரசாங்கம் பயப்படுகிறது

 அந்த பயமே வாழ்க என்று பேசினார்

 தத்துவ வித்தக அது இது உது எல்லாம் வந்து என்ன கூறினாலும் 

கலைஞருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

Saturday, July 28, 2018

சோக்கிரட்டீஸ் நாடகம் கலைஞரின் வசனத்தில் ,,சிவாஜி,பத்மினி ,என் .எஸ் கிருஸ்ணன்-வீடியோ

சோவியத் அமெரிக்க பனிப்போர் காலத்தில் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் சோவியத் சார்புடையதாக இருந்தது.
. தமிழ் நாடு ஒன்று தான் அமெரிக்க நலன் சார்ந்ததாக இருந்தது

 தமிழ் நாட்டு so call இடது வலது தேசிய எல்லா அரசியல் வாதிகளும் ஈழ்ப்போரை நடத்தும் நிறுத்தும் ஊக்கிவிக்கும் மத்திய அரசின் ஏஜன்டுகளாக தான் இருந்து உள்ளனர்.

இதில் யாரும் விதிவிலக்கல்ல

 கலைஞர் எப்படி இந்த system யிலிருந்து விலகி இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்?

 கலைஞராவது அந்த அந்த காலத்துக்கேற்றவாறு சினிமா பத்திரிகை ஊடகத்தை பாவித்து குரலாவது கொடுத்திருந்தார்

Monday, July 09, 2018

''தொழிலாளர்கள் '' தமிழ் திரைபட பாடல்களின் தொகுப்பு -வீடியோ

Tuesday, July 03, 2018

கமல் அதிசயத்து பாரட்டிய கேரள சாதாரண தொழிலாளியின் பாடல் -வீடியோ

Tuesday, June 26, 2018

கொழும்பு வீதிகளில் ''TRAM'' ஓட கண்டிருக்கிறியளா?..ஆனால் இது 1910 இல்-வீடியோ

Friday, June 08, 2018

தன்னை நெகிழ வைத்த அந்த மனிதரை நேரில் சந்தித்தார் கமல்-வீடியோ


Monday, June 04, 2018

Monday, May 28, 2018

Real spider man பிரான்ஸில் உயர்ந்த மாடியில் தவறி தொங்கிய குழந்தையை மீட்டார்-வீடியோ

இந்த ஹீரோவுக்கு உடனடியாக பிரான்ஸ் குடியுருமை வழங்கி கெளரவிக்கப்பட்டது

  Malian migrant, hailed as a hero after mounting a daring rescue to save a small boy dangling from a balcony in Paris, is to be made a French citizen. Mamoudou Gassama won widespread praise after climbing the outside of the building to save the four-year-old.

 Video showed him being cheered on by spectators as he pulled himself from balcony to balcony to the fourth floor. After meeting him at the Elysee Palace, President Emmanuel Macron said he would be made a naturalised citizen.

 He personally thanked Mr Gassama, gave him a medal for courage and said he would also be offered a role in the fire service. Mr Gassama is said to have arrived in France last year, taking the long and dangerous journey to Europe via a boat over the Mediterranean to Italy. 

 The drama that thrust him to fame unfolded on Saturday evening on a street in the north of the city. 

 Mr Gassama said he had been walking past when he saw a crowd gathered in front of the building. He told Mr Macron: "I just didn't have time to think, I ran across the road to go and save him.

Friday, May 04, 2018

சிவாஜி எம்ஜிஆரின் சொப்பனசுந்தரி-வீடியோ

Monday, April 23, 2018

Saturday, April 21, 2018

ச்சீ ..பிராமண பொண்ணா உனக்கு வெட்கமில்லை?..நில் ..உனக்கு வெட்கமில்லை -வீடியோ

கடைசி 30 செக்கனில் வருகிற சூப்பர் வசனங்கள்

 . இது அரங்கேற்றம் படத்தில் வருகிற காட்சி

..இந்த படத்தில் பிராமண பெண்ணை விபச்சராம் செய்வது மாதிரி டைரக்டர் பாலசந்தர் அமைத்ததால் ..அந் நேரம் அவருக்கு எதிராக கண்டனங்கள் ..படத்தை தடை செய்ய வேண்டுமென முயற்சிகள் இடம் பெற்றிருந்தன.

.பாலசந்தரும் பிராமண சமுதாய சேர்ந்தவரே .

Wednesday, April 18, 2018

LORD ' சிவன் பொலிசில்-''அது என்ன ஒருத்தனிட்டை இருக்குது.?...''' இன்னொருவனிட்டை இல்லாமால் போச்சு?-வீடியோ

நாகேஸ் ,தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ,எம் .ஆர் வாசு வி.கே ராமசாமி போன்ற பழைய பிரபல நகைச்சுவை திலகங்கள் இணைந்து நடித்த படம்

 ருத்திர தாண்டவம்

 அந்த முழு திரைபடத்தையும் பார்க்க விரும்பின் கீழே

Sunday, April 08, 2018

அவள் விருதுகள் 2017- இதில் புலம் பெயர்ந்த எழுத்தாளர் ஒருவரும் அடக்கம் -வீடியோ

.
''அவள் விருதுகள்'' புலம் பெயர் எழுத்தாளர் தமிழ்நதி அவர்களுக்கும் கொடுத்திருக்கறார்கள்

Saturday, March 31, 2018

''மெளன வலிகளின் வாக்குமூலம்''- கருவாட்டு குழம்பு திருடி தின்ன இலங்கை சென்ற அமைதி படை-வீடியோ

மௌனவலிகளின் வாக்குமூலம்" நூல் வெளியீடு.

 இலங்கையின் போர்க்காலச் சுழலில் அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாறை மாவட்டங்களில் பிறந்து, வளர்ந்து, போரை எதிர்கொண்ட இளையோர்கள் அவர்களே எழுதிய 12 அனுபவக் கதைகளைக் கொண்ட தொகுப்பு.

சமூக சிற்பிகள் இலங்கையில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிட்ட இந்நூலை இந்தியாவில் 'நக்கீரன்' மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.

 இந்நூலின் படைப்பாளர்களுள் ஒருவரான 'ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்' மிகவும் உருக்கமாக உரையாற்றினார்.

Tuesday, March 13, 2018

-நாட்டுபுற பாடகி ராஜலட்சுமி - மச்சான் ..மச்சான் ..ஆசை மச்சானே,,,,,,,,இந்த அழகு சிலை உன்மேலே தான் ஆசை வைச்சேனே-வீடியோ

இந்த வீடியோ துண்டத்தில் ஒரு நிமிடத்துக்கு பின் தான் பாடல் ஆரம்பமாகிறது

Sunday, March 11, 2018

லண்டனில் நடைபெற்ற புதுசு சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிலிருந்து சில துளிகள்-வீடியோ லண்டனில் நடைபெற்ற ''புதுசு ''சஞ்சிகையின் மீள் வெளியீட்டு விழாவிற்க்கு சென்று வந்தேன் புதுசு என்ற இலக்கிய சஞ்சிகையை கண்ணுற்று இயக்க சஞ்சிகை என்று சர்ச்சைக்காக்கி பேராதானை பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்

 இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மாணவர்கள் மீதிலான தாக்குதல் ஒரு இனக்கலவரத்துக்கான முன்னாடி என்று கூறினார்

 அதன் படியே 1983 இனக்கலவரம் சொல்லிய சில மாதங்களில் நடந்தது

Sunday, March 04, 2018

AL JAZEERA டிவியில் இலங்கை தமிழ் திரைபடம் ''கோமாளி கிங்ஸ்'' பற்றி -வீடியோ

Tuesday, February 27, 2018

SIMPLE ..BUT MASTER PLAN..புதிய.இலங்கை தமிழ் திரைபடம் ''கோமாளி கிங்ஸ்'' முன்னோட்டம் -வீடியோ

Saturday, February 24, 2018

நடிகை சீறீதேவி ....ஏம்மா இந்த அவசரம்?

சீறீதேவியின் கடைசி தருண வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும் Actor Sridevi Dies At Age 54 In Dubai The veteran actor married film producer Boney Kapoor with whom she had two daughters. She was in Dubai to attend her nephew Mohit Marwah's wedding where she reportedly had a cardiac arrest.  நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் சிறீதேவியின் கடைசி தருண வீடியோவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

Tuesday, February 20, 2018

வா....ராசா ...வா....ராசா....கமலஹாசா..,,வாழ்த்தி வரவேற்க்கும் பாடல்-வீடியோ

Monday, February 12, 2018

விகடன் நம்பிக்கை விருதுகள் 2017-வீடியோ

Sunday, January 28, 2018

Saturday, January 27, 2018

Tuesday, January 23, 2018

A.E மனோகரனின் ''கெகரி பலன்ன டிகரி சினவாய்'' காஷ்மீர் காதலி என்ற திரைபடத்தில்-வீடியோ

இல­ங்கையின் மலை­ய­கத்தை பிற­ப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோ­கரன் தனது 73 ஆவ­து வயதில் இன்று (22) கால­மானார்.

Saturday, January 13, 2018

LEAKED AUDIO: ஆண்டாள் சர்ச்சை-வைரமுத்துவை மிரட்டும் RSS கல்யாணராமன்- ஒலி வடிவம்

Wednesday, January 03, 2018

நம்முடைய படைப்பாற்றலை அழிக்க முனையும் இந்த முட்டாள் சமூகம்-வீடியோ