வாசகர் வட்டம்

Wednesday, March 30, 2016

இலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,

கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...

அவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்

  படத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்

 இவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்

வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம்  தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்

Tuesday, March 29, 2016

Friday, March 11, 2016

1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ

Thursday, March 10, 2016

ஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ

இளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ

வீடியோ உதவி -நன்றி செந்தில்

Thursday, March 03, 2016

4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா? 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ

பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.


இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்


 இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.


 இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.


 இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.


  நன்றி -மாலைமலர்



Tuesday, March 01, 2016

மறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்

 
மறைந்த பிரபல எழுத்தாளர்  செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.



எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்


அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்


தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில்
நேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்
எழில்வேந்தனுடன் நானும் இணைந்து
அமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம். 

இணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.


அமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

-ரஞ்சகுமார்




இலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது

இந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக  கிசுகிசு உலாவியது ...

அந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்