வாசகர் வட்டம்

Wednesday, January 28, 2015

வசந்தம் டிவியில் கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் அவர்கள் தனது கலை இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார் -வீடியோ




வதிரி சி ரவீந்திரன் அவர்களை பற்றிய ஒரு அறிமுகம் பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட விடயம் என்னவென்றில் இலங்கையில் உருவாகின மெல்லிசை ,பொப் இசை பாடல்கள் பற்றிய ஆரம்ப கால வரலாற்றை பற்றி விரிவாக சொல்லுகிறார் . இவர் இலங்கை மெல்லிசை பாடல்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர் , இவர் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் .அண்மையில் இவருக்கு கலாபூசணம் விருது வழங்கி  இலங்கையில் கெளவரவித்திருந்தார்கள்


இந்த விருது பெற்ற அண்ணன் வதிரி சி ரவீந்திரன் அவர்களை இந்த சின்னக்குட்டியும்  இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்வு கொள்ளுகிறான்





Saturday, January 24, 2015

நடிகர் V.S ராகவன் - வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்-வீடியோ




 பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன்(வயது90) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகர் வி.எஸ். ராகவன் வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று மாலை சிசிக்சை பலன் இன்றி உயிரிழந்தார். 1954-ஆம் ஆண்டு வைரமாலை என்ற படம் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமான வி.எஸ். ராகவன், 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


 எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள அவர், தற்போதைய இளம் நடிகர்களின் படங்களான, ஆல் இன் ஆல் அழகுராஜா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கலகலப்பு, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தனது இளமை பருவ காலத்தில் நாடங்களிலும் முத்திரைப்பதித்து பின்னர் சினிமா அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ள ராகவனுக்கு, தான் சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


  நன்றி -தினமணி

Friday, January 23, 2015

எம்.ஜீ. ஆர் பற்றிய நீயா நானா-வீடியோ





எம்ஜீஆரை பற்றிய நீயா நானா பார்க்க இங்கே அழுத்தவும்


 இந்த நீயா நானா எம்ஜீஆர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பார்த்த பொழுது எனது வகுப்பு தோழன் முரளியும் யாழ் சுதாகரும் (சுரதா யாழ் வாணனின் சகோதரர்) நினைவில் வந்து போகிறார்கள்.அவர்கள் சிறுவயதில் இருந்து இன்று வரை ஒரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகர்கள்

 யாழ் சுதாகர்..தனது வலைபதிவில் எழுதியவற்றில் ஒரு பகுதி கீழே ''''கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்.. ஏற்றி வைக்கப்பட்ட போது எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..ஒரு நூதனமான போட்டி! 'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?' பாடல் காட்சியில் வரும் நான்கு எம்.ஜி.ஆரில் எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு? '''

 (தைரியாமாக சொல் நீ மனிதன்தானே என்ற பாடலின் லிங்)

 இந்த



விவாத்த்தில் சொல்லாமால் விட்ட விசயங்களில் நான் சொல்ல கூடியது ஏதாவது என்றால் ...எம்ஜீஆர் உணர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை அழ வைத்த படம் என்றால் பாசம் ...மற்றும் அவர் இறந்த காட்சியில் படம் இருக்கும் என்றால் அந்த பாசம் படம் தான்


உலகம் சுற்று வாலிபன் படம் இந்தியாவில் திரையிடப்பட்ட பொழுது இந்த பாக்கு நீரிணையை இரவில் கடந்து போய் வேதாரண்யத்துக்கு அண்மையிலுள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து எங்கள் வகுப்பில் அந்த படத்தின் கதையை சொன்ன இன்னுமொரு தீவிரமான எம்ஜீஆர் ரசிகன் வகுப்பு தோழன் ரமேஸ் சுந்தரலிங்கமும் ஞாபகத்தில் வந்து போகிறான் இத்தருணத்தில்

Thursday, January 22, 2015

வாடைக்காற்று திரைபடத்தின் சில காட்சிகளுடன் விவரணம் -வீடியோ



இலங்கையில் வெளிவந்த தமிழ் திரைபடம் வாடைக்காற்று ..இத் திரைபடம் பிரபலமான மலையாள படமான செம்மீனுக்கு ஒப்பாக இலங்கை தமிழ் திரைபட ரசிகர்காளல் போற்றப்பட்டது,

1983 கலவரத்தின் பொழுது இத்திரைபடத்தின் பிரதி எரிக்கப்பட்டு விட்டது என்று வதந்தியோ அல்லது உண்மையோ தெரியவில்லை கூறிக் கொள்ளுகிறார்கள் ..ஆனால் இந்த வாடைக்காற்று விவரணத்தில் சில காட்சிகளை பார்க்க கூடியதாக இருக்கிறது இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமாக ஓடிய இலங்கை தமிழ் படமான குத்து விளக்கு பற்றிய விவரணம் கீழே

 இலங்கையில் முதன் முதலாக 35 mm யில் வெளிவந்த திரைபடமான தோட்டக்காரி பற்றிய விவரணம் கீழே

Wednesday, January 21, 2015

இளையராஜாவை பெருமை படுத்திய அமிதாப் ..அங்கு கமல்,ரஜனி, சிறீதேவி மற்றும் பலர்-வீடியோ

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக, இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாகவும் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழா மேடையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவருமே இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். இளையராஜா இசை குறித்து ரஜினிகாந்த் பேசும்போது, "எனக்கு இளையராஜாவை 70-களில் இருந்தே தெரியும். அவர் மிகவும் குறும்புத்தனத்தோடு பழகுவார். ஒரு காலத்தில் நாங்கள் இருவருமே விடிய விடிய மது அருந்தியபடி கதை பேசிக் கொண்டிருப்போம். திடீரென அவரது உடையமைப்பில் மாற்றம் ஏற்பட்டது எனக்கு ஆச்சர்யமளித்தது. அப்போதில் இருந்து அவரை ராஜா சாமி என்று அழைக்க ஆரம்பித்தேன். அவர் இப்போது ஞானியாக திகழ்கிறார். அவரிடத்தில் சரஸ்வதி தேவி குடியிருப்பதாக நினைக்கிறேன்" என்றார் ரஜினி. இளையராஜா இசை குறித்து கமல்ஹாசன் பேசும்போது, "அவருடைய 1000 படங்களில் 10% சதவீத படங்கள் என்னுடையது. பாடல்களை வேண்டுமானால் அவர் இயற்றி இருக்கலாம், ஆனால் அந்தப் பாடல்கள் நமக்கு சொந்தமானவை. அவருடைய மாற்றத்திற்கு பிறகு அவரை எனது சகோதரராக அழைக்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன். இளையராஜா இசை குறித்து அமிதாப் பச்சன் பேசும்போது, "இளையராஜா இசை குறித்தும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றியும் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றார். 

இளையராஜா இசை குறித்து தனுஷ் பேசும்போது, "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான். ரஜினி சார் இந்த விழாவிற்கு வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதிரியான விழாவை இனிமேல் என்னுடைய திரையுலக வாழ்வில் எதிர்பார்க்க முடியாது" என்றார் தனுஷ். நன்றி -த இந்து தமிழ் h

Tuesday, January 20, 2015

சூப்பர் சிங்கர் ஜெசிக்கா பற்றி பெருமை படும் வாடைகாற்று திரைபடத்தின் வில்லன் நடிகரின் பேட்டி -வீடியோ




 எல்லோருக்கும் வணக்கம். சூப்பர் சிங்கர் Wild Card Final அடுத்த வாரம் திங்கள் கிழமை ஜனவரி 19 முதல் ஆரம்பமாகவுள்ளது. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம் ஒருவர் மட்டும் எட்டுபேரில் இருந்து தெரிவாகி நான்காவது போட்டியளராக இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும். நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.


 இனி அந்த இறுதிச் சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும். 1. ஆன்லைன் (online) - நீங்கள் www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று எனக்கு ( SSJ10 ) எத்தனை முறையும் வாக்களிக்கலாம்.


 இந்த வழியை இந்தியாவில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களும் உபயோகிக்கலாம். 2. SMS - நீங்கள் SSJ10 என்று டைப் செய்து 57827 என்ற எண்ணுக்கு அனுப்பவேண்டும். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும். 3. Airtel வாடிக்கையாளர்கள் 5432178 என்ற எண்ணை அழைத்தும், எனக்கு (SSJ10) வாக்களிக்கலாம். இந்த முறையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் உபயோகிக்க முடியும். உங்கள் ஆசியுடன் அந்த மாபெரும் மேடைக்கு செல்வேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன். உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி. - 

உங்கள் ஜெசிக்கா

Monday, January 19, 2015

சென்னை புத்தக கண்காட்சியில் நடந்த அந்த சம்பவம் -சாரு நிவேதிதாவுக்கு-வீடியோ

http://charuonline.com/blog/?p=2217

Sunday, January 18, 2015

யாழ்ப்பாணத்து கூழ் செய்முறை-வீடியோ

Friday, January 16, 2015

பெருமாள் முருகன் சர்ச்சை விவாதம் -உடைகிறதா பேனா?-வீடியோ

பெருமாள முருகனின் புத்தக தடை பற்றி சன் நியூஸ் டிவியில் விவாதிக்கப்பட்டிருந்தது. அதன் வீடியோ பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

Thursday, January 15, 2015

GANGS OF TOOTING BROADWAY முழு திரைபடம் -வீடியோ(lலண்டன் தமிழ் இளைஞர் குழுக்களை பற்றியது)

GANGS OF TOOTING BROADWAY MOVIE
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் குழுக்களை மையமாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது ..இந்த திரைபடத்தின் டைரக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் . லண்டனில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் கதை வசனத்தை இலங்கையை மூலமாக கொண்ட லண்டன் வாழ் சிங்களவர் ஒருவர் எழுதியுள்ளார் .இலங்கை தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் . இது முழுமையான பிரித்தானியா ஆங்கிலதிரைபடம் என்று அதன் டைரக்டர் கூறி இருந்தார்..இந்த திரைபடம் சில வருடங்களுக்கு முன் இங்கு வெளியாயிருந்த்து
இந்த திரைபடத்தின் முழமையான இணைப்பும் கீழே


Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள் முருகன் சர்ச்சை- சென்னை புத்தக கண்காட்சியில் பொலிசார் Vs எழுத்தாளர்கள் -வீடியோ

சென்னை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்கள் ஆர்பாட்டம் சென்னை: சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்து எழுத்தாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கருத்து உரிமை இல்லையா எனவும் எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துண்டுப் பிரசுரம் வினியோகிக்க போலீஸ் தடுத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி -தினகரன்

Friday, January 02, 2015

கே.பாலசந்தர் -சிறப்பு தொகுப்பு- நட்சத்திரங்களை பூக்க வைத்த திரை வானம்-வீடியோ