வாசகர் வட்டம்

Friday, November 22, 2013

யாழ்ப்பாணத்தில் ஒரு நாள்-வெளிநாட்டு யாத்திரிகினின் பார்வையில்-வீடியோ

இந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு யாத்திரிகன் யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அனுபவத்தை படம் பிடிக்கிறான் . அதில் ஒரு இடத்தில் மதிய உணவு உண்ண ஹோட்டலுக்கு சென்ற பொழுது சாப்பிட்ட முடிந்த பின் கைதுடைக்க ,வாய் துடைக்க முந்திய பழைய பேப்பர் துண்டு கொடுப்பது பற்றி கூறுகிறான்.
இப்படி கூறும் பொழுது ஒன்று நினைவுக்கு வருகிறது 25 அல்லது 30 வருடங்கள் முன்னர் எழுத்தாளர் மணியன் விகடன் பத்திரிகையுடன் முரண்பட்டு இதயம் பேசுகிறது என்ற வாரந்தர பத்திரிகையை தொடக்கி அதற்கு ஆசிரியாராகிறார் , விகடனில் பல நாடுகளுக்கு சென்று பயண கட்டுரை எழுதி இருக்கிறார். அது போல தன்னுடைய இதய பேசுகிறது பத்திரிகை தொடங்கிய பின்னர் இலங்கை பயண கட்டுரை எழுதி இருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணமும் வந்து யாழ்ப்பாண்த்தை பற்றியும் எழுதி இருந்தார்.

அப்பொழுது தான் அவர் இந்த உலகம் சுற்றி நாடுகளை பற்றி எழுதுவது பற்றி தெரிய வந்தது.அவரது வண்டவாளங்கள் தெரிய வர யாழ் வாசிகளிடம் இருந்து விமர்சனத்தை எதிர் கொண்டார். மேலே உள்ள வீடியோ வில் சொன்ன யாத்திரிகன் மாதிரி உள்ளதை சொல்லாமால் கிண்டலாக சொல்லி இருந்தார் . அவர் அவரது பயணக்கட்டுரையில் இப்படி எழுதுகிறார் நான் யாழில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன் சாப்பிட போனேன் சாப்பிட்டு முடிந்த பின் பணியாள் ஒரு துண்டு பேப்பரை நீட்டினார் . நான் படிக்க தருகிறார் என்று நினைத்து வேண்டினேன் .அது ஒரு பழைய செயதி பத்திரிகையின் துண்டு பேப்பர். ஏனப்பா பழைய பேப்பராக தருகிறாய் என்று கேட்டேன் ..அதற்கு அந்த பணியாள் வாசிக்கவில்லை கை துடைக்க என்று கூறி சென்றார் இப்பிடி எழுதி கொண்டு போகிறார்.

(இப்படி மணியன் சொல்வதால் ஒரு கேள்வி எழுகிறது தமிழ் நாட்டில் பழைய பத்திரிகை பேப்பர் இப்படி கை துடைக்க கொடுப்பதில்லையா என்று?)

மணியன் தனது இதயம் பேசுகிறது ஏஜன்டாக தம்பித்துரை அன்சன்ஸ் இடம் வர்த்தகம் பேச வந்த இடத்தில் யாழ் பயணக்கட்டுரை எழுதியதை பார்த்து யாழ் வாசிகள் கிண்டலோ
கிண்டல் அடித்தது ஞாபகம் வருகிறது.

Saturday, November 16, 2013

மாமா ...மாப்பிளே...என்று அசலும்... அசத்தும் நகலும்-வீடியோ



Monday, November 11, 2013

ஜெயமோகனின் இன்றைய பிதற்றலுக்கு அன்றே கண்ணதாசனின் பதில்-வீடியோ

Saturday, November 09, 2013

தமிழ் நடிகர்களும் அவர்கள் குடும்பமும் Unseen Collections-வீடியோ

Wednesday, November 06, 2013