வாசகர் வட்டம்

Sunday, May 24, 2015

Cannes Film Festival: Dheepan wins Palme d'Or-வாழ்த்துக்கள் சோபாசக்தி-வீடியோ

பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் இன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்


 பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.


 புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm




Thursday, May 21, 2015

Dheepan-எழுத்தாளர் சோபாசக்தி ,,பிரான்ஸ் திரைபட நடிகனாக ..திரைபட விழாவில்-வீடியோ

CANNES, France (AP) — Before making the Sri Lankan immigrant drama "Dheepan," French director Jacques Audiard acknowledged he couldn't have even found his characters' native country on a map. Audiard premiered "Dheepan" on Thursday at the Cannes Film Festival where critics warmly greeted the latest from the director of the Oscar-nominated "A Prophet" and the acclaimed "Rust and Bone." ''Dheepan" is about a former militant, a woman and a young girl who flee their civil war-ravaged Sri Lanka for France with the passports of a deceased family. "I didn't want them to have any links to a post-imperial French situation," Audiard told reporters Thursday. "I wanted them to come from a long way away, and Sri Lanka was the other end of the Earth for me." Posing as a family, the trio settles in a housing project outside Paris, but they soon find that even the other end of the Earth can also rage with violence. The titular character is played by a non-professional actor,


 Anthonythasan Jesuthasan, who, like Dheepan, immigrated to France. After serving as a child soldier for the Liberation Tigers of Tamil Ealam, he fled Sri Lanka for Thailand as a 19-year-old. In 1993, he found political asylum in France. "I came to France because at the time I was able only to find a fake French passport and not a fake English or British passport," said Jesuthasan. "It's a life full of adventure." "Dheepan" sensitively depicts the experience of immigrants in France, which Jesuthasan could easily relate to. "Just as you see in the film, I encountered any number of difficulties when I first arrived in France," said Jesuthasan. "I was even chased by the police when I was in the streets." The film, among the movies vying for Cannes' top honor, the Palme d'Or, has been acquired by IFC and Sundance Selects for U.S. distribution. thanks-

Sri Lankan immigrant drama 'Dheepan' finds a home at Cannes



லண்டன் evening standard பத்திரிகையில் இது பற்றிய செய்தி

Tuesday, May 19, 2015

Monday, May 18, 2015

பொன்மணி என்ற இலங்கை தமிழ் திரைபடம் -பலரும் தவறவிட்ட அருமையான படம் -வீடியோ

70 களில் வந்த இந்த இலங்கை படம் யாழில் மூன்றே மூன்றே நாட்கள் தான் ஓடியது ...ஆனால் இன்றும் தமிழ் திரைபட வரலாற்றில் வெளியான திரைபடங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது...இதை அந்த நேரம் பலர் ரசிக்க பார்க்க தவற விட்டுட்டோமே என்று கூறுவதை கேட்டிருக்கிறேன் ...

.மேலே பொன்மணி திரைபடத்தின் காட்சிகள் இருக்கின்றன, மேலே இருக்கின்ற காட்சிகளில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் மனைவி சித்ரேலாகவும் பிரபல இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதியின் மனைவி நடித்திருக்கிறார்கள் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Friday, May 15, 2015

ஏய்..சின்னக்குட்டி ...ஏம்பா ..இப்படி பண்ணுறாய் ..பொலிசை கூப்பிடுவேன்-வீடியோ

Friday, May 01, 2015

LEFT IS ALWAYS RIGHT-மே தின வாழ்த்துக்கள்-வீடியோ