வாசகர் வட்டம்

Thursday, June 25, 2015

காமராஜரின் இறுதி ஊர்வலத்தை பின்னணியாக கொண்ட இளையராஜாவின் பாடல் ஒன்று-வீடியோ

காமராஜரின் இறுதி ஊர்வலத்தை பின்னணியாக கொண்ட இளையராஜாவின் பாடல் ஒன்று

Sunday, June 14, 2015

சேகுவாரா ..ஒரு ஸ்பானியபாடல் (ஆங்கில உதவி குறிப்புக்களுடன்)-வீடியோ

வீடியோ உதவி -நன்றி ரவி

Thursday, June 11, 2015

கிறிஸ்ரோபர் லீ -டிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் குலை நடுங்கும்-வீடியோ




டிராகுலா' கிறிஸ்டோஃபர் லீ காலமானார்

 அந்த அளவுக்கு ரத்தம் குடிக்கும் டிராகுலா-காட்டேரி திரையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1950களின் பிற்பகுதியில் வெளியான மூன்று திரைப்படங்கள் பார்ப்பவர்களை திகிலின் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றன. அப்படங்களில் தனது கதாபாத்திரங்கள் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோஃபர் லீ காலமானார்.

உலகின் மிகவும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவரான அவர் தமது 93ஆவது வயதில் லண்டன் மருத்துவமனையில் உயிர் நீத்தார். த மம்மி, டிராகுலா, பிராங்கெஸ்டைன் போன்ற படங்களில் நடித்து ஆங்கிலத் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

கிறிஸ்டோஃபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். அவரது 6 அடி 4 அங்குல உயரமான உடல்வாகு வில்லன் தோற்றத்துக்கு பெரிதும் உதவியது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை எழுதிய இயன் ஃபிளமெங்கின் தூரத்து உறவினரான அவர் மேன் வித் தி கோல்டன் கன் திரைப்படத்தில் ஸ்காரமாங்கா என்னும் வில்லன் பாத்திரத்திலும் நடித்து ஆழ்ந்த முத்திரை பதித்திருந்தார்.


அண்மைக் காலங்களில் லார்ட்ஸ் ஆஃப் த ரிங்ஸ் போன்ற பிரபல படங்களிலும் கிறிஸ்டோஃபர் லீ நடித்திருந்தார். உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

நன்றி -பிபிசி தமிழ்
http://www.bbc.com/tamil/global/2015/06/150611_christopherlee_obit

Wednesday, June 10, 2015

Sunday, June 07, 2015

'''தீபன்'' திரைபட நாயகன் சோபாசக்தியுடன் நேர்காணல் தொலைக்காட்சியில்-வீடியோ



இந்த நேர்காணலில் சோபாசக்தி ஏன் இந்திய தமிழ் உச்சரிப்பில் இடைக்கிடை அதிகம் கதைக்கிறார்?

 மாஸ்...திரைபடத்தில் ஈழப்பேய் சரியாக தமிழ் கதைக்கவில்லை என்று கவலை படுகிறாக்கள் இதையும் ஒருக்கா கவனம் எடுத்து கேளுங்கோ..

 தீபன் திரைபடத்தில் சோபாசக்தி நன்றாக யதார்த்தமாக நடித்ததாக பல பத்திரிகைகள் பாராட்டியதாக இணையத்தில் படித்தேன்.இந்த பேட்டியில் சோபசக்தியின் அசைவுகள் பேச்சுக்கள் சரியான ஓவர் ஆக்டிங்கா கிடக்கு

 ...ரஜனியின் திரைபடத்தில் செய்யும் பாவனைகள் கூட யதார்த்தமாக இருக்கும்...சோபாசக்தி தீபன் நடித்தா பிறகு இப்படி ஆயிட்டரோ. அல்லது.வழமையாக விவாதம் செய்யும் பொழுது இப்படித்தானோ?.

.சோபாசக்தி அடிக்கடி ஏன் அண்ணாந்து முகட்டை பார்க்கிறார்?

 சோபாசக்தியின் இந்த பேட்டியில் அகதி பார்வை .இடதுசாரி பார்வை இலக்கிய பார்வை ...கேட்டு பாருங்கள் தீபன் திரைபடத்தை பற்றி பேசுவாங்கள் என்று பார்த்தால் பேட்டி காண்பவர் கோவை நந்தன் என்று நினைக்கிறன் அவர் கூட ஒரு அரசியல் இலக்கிய வாதி என்று நினைக்கிறன்...பேட்டி எடுக்க போய் பேட்டி கொடுக்க போய்  இரண்டு பேரும் முட்டு படுறதை பார்க்க ...என்னத்தை சொல்ல அய்யோ அய்யோ...


 உந்த இலக்கிய அரசியல் சந்திப்பு அப்பிடி இப்பிடி சந்திப்பிலை வெளிநாட்டில்  இலக்கிய விவாதங்கள் அரசியல் விவாதங்கள் இப்படித்தான் நம்மாக்கள் செய்வினம் போலை?

 30 வருசத்துக்கு முன்னே திண்ணையிலை மதிலை அங்கங்கை அரசியல் இலக்கிய விவாதம் செய்தவியளை பார்த்து பலது பத்து சொல்லி குறை சொல்லுவினம்....ஆனால் ..இவையளை பார்கக்க்கை...அவையள் எவ்வளவோ பராவியில்லை..


என்னத்தை சொல்ல ...சாதாரண பார்வையாளனாக,,,