வாசகர் வட்டம்

Monday, December 31, 2012

யாழில் -யாழ்தேவி ரயில் ஓட கண்டு இருக்கிறீர்களா?-வீடியோ

நெஞ்சில் நிறைந்த யாழ் தேவி –. யாழ்தேவி என்பது ஒரு காலத்தில் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் சேவையாகும். பார்த்ததும் பலவிதமான மனப்போராட்டங்கள் எனக்கு. என்னடா ஒரு சாதாரண ரயிலைப் பற்றிய Documentary தானே இதிலென்ன விஷேடம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அப்படியல்ல. இந்த ரயில் ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது. இலங்கையின் வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றரக்கலந்திருந்த யாழ்தேவி என்ற இந்த ரயிலைப் பற்றி 90 களுக்குப் பிந்திய எங்களின் இளம் சந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை. காரணம் துரதிர்ஷ்டவசமாக 90ம் ஆண்டுடன் இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கான தனது சேவையை நிறுத்திக் கொண்டது. ஒரு காலத்தில் இலங்கையின் மிகப்பிரதான ரயிலாக இருந்ததும், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்தையும், கொழும்பையும் இணைக்கும் பாலமாக இருந்ததும் இந்த கடுகதி ரயில்.இதன் வரலாறும் இந்த ரயிலைப் போலவே கடுகதியானது. பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்த காலத்தில் 1864ல் முதன் முதலில் இலங்கைக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1902ல் தான் யாழ்ப்பாணத்துக்கான சேவை தொடங்கியது. இதில் சாமான்களை காவும் Goods trainம் மற்றும் கடிதங்கள் பொதிகளைக் காவும் mail trainம் அடங்கும். இந்த மெயில் ரயில் மிக மெதுவானது. ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றிக்கொண்டு, கொழும்பு சென்று சேரும் நேரம் மிக அதிகம். பின்னேரம் 5 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த மெயில் ரயில் 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும் சிறு சிறு ஸ்ரேஷன்களிலும் நின்று பொதிகளை ஏற்றிப் புறப்படும்போது பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த ரயில் அடுத்த நாள் காலையில்தான் கொழும்பை சென்றடையும். இதனால் பொதுமக்களின் இந்த அசௌகர்யங்களைத் தவிர்ப்பதற்காக 1956 இல் யாழ்தேவி என்ற பிரயாணிகளுக்கான ஸ்பெஷல் கடுகதி ரயில் ஆரம்பிக்கப் பட்டது. கனடாவில் இருந்து தருவிக்கப்பட்ட அதி சக்திகொண்ட என்ஞின்களால் உருவாக்கப் பட்டது இந்த யாழ்தேவி. 1956இல் இதன் முதல் பயணம் மிக உணர்வு பூர்வமானது. இலங்கை பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெற்று 8 வருடங்களேயான அந்தக் காலகட்டத்திலேயே சிங்கள தமிழ் இனங்களுக்கிடையில் வேறுபாடுகள் உருவாகத்தொடங்கிய காலமது. எனவே இந்தக் காலத்தில் இலங்கையின் தலை நகரான கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ் நகரை மட்டுமே மையப் படுத்தி செல்வதை இரு இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான ஒரு அறை கூவலாக பாவிப்பதற்கு நேர்மையான சிங்கள அரசியல்வாதிகள் முயன்றார்கள். முக்கியமாக இதில் இடது சாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ,அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்துக் கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறிவந்த, கேம்பிரிட்ஜ் பட்டதாரி பீற்றர் கெனமன் முக்கியமானவர். பீற்றர் கெனமன் இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால், அவரால், இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்த போதிலும், இரு இனங்களிலும் இருந்த சமாதானத்தை விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப் பட்ட ஒருவராக இருந்தார். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான யாழ்தேவி ஆரம்பிக்கப் பட்ட போது பீற்றர் கெனமன் மிக மகிழ்வுடன் சொன்ன வாக்கியம் “This is Life line of this country” இதிலிருந்து இந்த ரயில் சேவைக்கும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய இனக்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், அவர் போன்றவர்கள், கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.இந்த ரயில் இலங்கையை இணைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தார்கள். யாழ்தேவி ஓடத்தொடங்கிய காலத்தில் இலங்கையின் ரயில்வேயின் பிரதான முகாமையாளராக இருந்தவர் Rampala. இவரின் காலத்தில் இன மத மொழி பேதமின்றி இலங்கையர்கள் எல்லோருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக் கொடுக்கப் பட்டது. அவருக்குப் பின் வந்தவர் கே.கனகசபை என்ற தமிழர். மிக நேர்மையான இவரின் காலத்திலும் யாழ்தேவி விஷேடமாகக் கவனிக்கப் பட்டு மெருகூட்டப்பட்டு தரத்தில் கோலோச்சியது. அத்துடன் இலங்கையின் ரயில்வேயில் அதிக வருமானம் உழைத்த பெருமையையும் பெற்றது. இந்தக்காலகட்டத்தில் இலங்கையின் பிரதமர் W. டஹனாயக்கே யாழ்தேவியில் பயணம் செய்து அவரின் நெருங்கிய நண்பரும் சுன்னாகம் ஸ்கந்தா அதிபராகவும் இருந்த ஒறேற்ரர் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று தங்கியது, குறிப்பிடத்ததக்கது. அந்தக் கால கட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தைசெல்வா கொழும்பு செல்வதற்கு யாழ்தேவியையே பயன்படுத்தினார் என்றும் நேர்மையான அரசியல் தலைவரான அவர், தனது வீட்டிலிருந்து நடந்தே ரயில்நிலையம் செல்வார் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதைய சூழ்நிலையில் நம்புவதற்குக்க் கடினமாக இருந்தாலும் இது உண்மை . இந்த யாழ்தேவி இருக்கிறதே.. அப்பப்பா அது சமூகத்துக்கு செய்த சேவைகளில் முக்கியமானது கலப்புத்திருமணங்களை ஊக்குவித்ததுதான். கொழும்பில் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு யாழ்தேவியில் ஏறினால் இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் சாப்பிடலாம். இதனால் தென்னிலங்கையில் பரவலாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர் இளைஞிகள் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு யாழ் வந்துவிட்டு மீண்டும் ஞாயிறு புறப்பட்டு கொழும்புசென்று திங்கட்கிழமை வேலைக்குச் செல்வது வழமை. இப்படியாக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் இந்த ரயிலில் சந்திக்கும் இளஞர்களும் இளைஞிகளும் பிரயாண இடைவெளியில் தமக்குள் தாமே கதைத்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட புரிந்துணர்வால் காதல் வசப்பட்டு, திருமணம் செய்த வரலாறுகள் பலவற்றை சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். யாழ்தேவி யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தை அடைந்ததும் முட்டி மோதும் போர்ட்டர்களும், ரக்சி ஓட்டுனர்களும், சிற்றுண்டி,கடலை வியாபாரிகளும் எத்தனை பேர்?? எவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருந்தது இந்த யாழ்தேவி... அந்தக்காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மற்றய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டதை அதைப் பற்றிய தேடலின் போது காணக்கூடியதாக இருக்கிறது. அது தனது பயணிகளுக்கு பரிமாறிய உணவு, பாரம்பரியமான யாழ்ப்பாண உணவுகளாகும். எக்காரணத்தைக் கொண்டும் அதன் தரத்திலோ சுவையிலோ மாற்றம் இருந்ததில்லை. யாழ்தேவி செல்லும் பாதையின் அருகில் வசித்துவந்த மக்களின் கூற்றுப் படி, அந்த ரயில் கடந்து சென்று பல நிமிடங்கள் சென்றாலும் அதனுள் இருந்து வந்த உணவு வாசனை கம கமத்துக் கொண்டேயிருக்குமாம். அதன் பணியாளர்கள் நேர்த்தியான உடையுடன் காணப்படுவார்கள். மற்றய ரயில்களின் பணியாளர்களின் சேவைத் தூரம் அதிகபட்சம் அநுராதபுரம் மட்டுமே. அதற்கப்பால் வேறு பணியாளர்கள் பொறுப்பெடுப்பார்கள் ஆனால் யாழ்தேவியின் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வேலையை முடிப்பது கொழும்பில் மட்டுமே. இதனால் பயணிகளுடனான தேவைகளை உனர்ந்தவர்களாகவும் உடனுக்குடன் நிறைவேற்றுபவர்களாகவும் அக்கால கட்டத்திலேயே அவர்கள் காணப்பட்டது ஆச்சரியமான உண்மை. கொழும்பு கோட்டையில் இருந்த்து புறப்படும் இந்த ரயில் 256 மைல்களைக் கடந்து ( 409 கி.மி.) தனது இலக்கை அடையும். இடையில் காணப்படும் : ராகம, பொல்காவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம், இறுதியாக கே.கே.எஸ்.என்றழைக்கப்படும் காங்கேசந்துறையில் தனது பயணத்தை, காலங்காலமாக முடித்த யாழ்தேவியின் எஞ்ஞினின் உறுமல் சத்தம் வலிகாமத்தில் இருந்த எங்களின் வீட்டில் மெதுவாகவும் ஆனால் இனிமையாகவும் கேட்டது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. விடுமுறையில் வந்துசெல்லும் அப்பாவிற்கும், மாமாமார்களுக்கும், கட்டுச்சோறையும், கறிகளையும், அவித்த முட்டையுடன் சேர்த்து, வெப்பமாக்கியதால் நினைத்தபடி வளைக்கக்கூடியதாக மாறிய வாழையிலையால் சுற்றிக்கட்டி, மணக்க மணக்க அம்மா கொடுத்துவிட்டது கண்முன்நிழலாடி அவர்களின் இளமை முகம் அப்படியே முன்னேவருகிறது. இளைஞனாகப் புலம்பெயர்ந்து, பலவருடங்களின் பின் பெரியவனாக தாயகம் சென்றதும் தேடிச் சென்று பார்த்ததில் இந்த யாழ்தேவியும் ஒன்று. இப்போதும் யாழ்தேவி என்ற பெயருடன் ஏதோவொரு இயந்திரம் முக்கி முனகியபடி அனேகமான சின்னத்தரிப்பிடங்களில் நின்றபடி, கொழும்பிலிருந்து புறப்பட்டு வவுனியாவுடன் தனது சேவையை முடிக்கிறது.. முன்பெல்லாம் சிரித்துக்கதைத்தபடி முட்டி மோதிய மகிழ்ச்சியான மக்கள் கூட்டத்தை அதில் காணமுடியவில்லை. எங்கோ ஒன்றிரண்டுபேரைக் காணமுடிந்தது. மிகச் சுத்தமாகவும் புதிதாகவும் பேணப்பட்ட பெட்டிகள் பழையனவாகியும், மலசலகூடங்கள் கேட்பாரற்றும் காணப்படுகின்றன. ஒருகாலத்தில் அது தாண்டிய இடமெல்லாம் கமகமத்து வாயூறவைத்த உணவுக் கன்ரீன் இல்லாதுபோய், உள்ளே, கையேந்திபவன் மாதிரி ஏதோவொன்று பேருக்கு இருக்கிறது. பிறந்துள்ள இந்த 2013 இலாவது எமது மக்களும் இந்த யாழ்தேவியும் பழைய பொலிவைப்பெற்று காங்கேசந்துறைவரை செல்ல வேண்டும். கட்டுநாயக்காவிலிருந்து யாழ்தேவிமூலம் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு சென்று, கிணத்தில் அள்ளிக் குளித்துவிட்டு, அம்மாவின் கையால் பிட்டும் முரல்கருவாட்டுச் சொதியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் வாங்கிச் சாப்பிட வேண்டும். இந்த 2013ல் அதுதான் எனது புதுவருடத்தீர்மானம். (நன்றி & தகவல் உதவி கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள்) நன்றி-முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது)

Sunday, December 30, 2012

Monday, December 24, 2012

கார்ப்பரேட் உலகத்தில் இருந்து தப்பியோடி விவாசாயாகி மகிழ்வானவர்-வீடியோ

Friday, December 21, 2012

உலகத்தின் முடிவு 2012 இன் முன்னூட்டம்-வீடியோ

Friday, December 14, 2012

இலங்கையின் வானில் இனம் தெரியாத???????????-வீடியோ

Tuesday, December 11, 2012

ரஜனியின் திரைகதை வசனத்தில் உருவான திரைபடம் வள்ளி-வீடியோ

Friday, December 07, 2012

ஆங்கில பாதிரியார் ஒருவர்.. அழகான தமிழில் அளித்த நேர்முகம்-வீடியோ

Wednesday, December 05, 2012

Tuesday, December 04, 2012

தானா ஆடுமாம் கால்,,,ஓன்று ,இரண்டு ,மூன்று சொன்னால்-வீடியோ

Sunday, December 02, 2012

மனிதாபிமானமே குறைவான இடத்தில் ஒரு மிருகமிபானம்-வீடியோ

எப்படி சொல்லுறது....பின்னி எடுக்குதுகள் ..பாருங்களேன்-வீடியோ

Thursday, November 29, 2012

சிறுசுகளின் ஒரு சூப்பரானா ஆட்டம்-வீடியோ

Wednesday, November 28, 2012

இந்த வெள்ளைச் சாமிக்கும் சும்மா அதிருதில்லே- வீடியோ

Monday, November 19, 2012

தமிழ்நாட்டில்- சமூக வலைதள கைதுகள்...தூண்டும் விவாதங்கள்-வீடியோ

பிரபல வலைபதிவளார் லக்கிலுக் அல்லது யுவகிருஸ்ணா உட்பட உரையாற்றிய வீடியோ துண்டங்களை மேலே பார்க்கிறீர்கள்

மேலும் விபரங்கள் அறிய விரும்பின்

கீழே உள்ள இணைப்பகை அழுத்தவும்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21970:2012-11-16-04-01-17&catid=1:articles&Itemid=264

Wednesday, November 14, 2012

வெளிநாட்டு வாழ்க்கை வேதனைக்கு மத்தியிலும் சாதனையாம்-வீடியோ

Tuesday, November 13, 2012

டைரக்டர் ANG LEE ஜை பேட்டி எடுத்த கமல்-வீடியோ

Monday, November 12, 2012

ஹாட்லி- மைக்கல் ஜக்சனின் மேலும் சில மேடை காட்சிகள் -வீடியோ

ஹாட்லி கல்லூரியில் படித்த முரளிதரனின் மகனின் நடனங்கள் தான் மேலே உள்ள வீடியோவில் இருப்பது.முரளிதரன் ஹாட்லியில் படித்த காலத்தில் நல்ல தொரு ஸ்போர்ட்ஸ்மானாக திகழ்ந்தான்..அவனது மகனின் பலராலும் பாராட்டு பெற்ற சில மேடை அரங்கேற்ற காட்சிகளை சின்னக்குட்டியின் வலைபதிவும் பதிவு செய்வதில் சந்தோசம் கொள்ளுகிறது

வாழ்த்துக்கள் MANOJJ முரளிதரன்

http://www.thenationalstudent.com/News/2011-03-21/Cityanddance_.html manojj முரளிதரனை பற்றிய பத்திரிகை குறிப்பின் ஒரு பகுதி கீழே இருப்பது

Manojj Muraleetharan, who played the role of MJ on the night, said he never imagined that they had a chance of winning, but the cheers and motivation from the judges gave them hope. Muraleetharan said: “The vibe and atmosphere was incredible when we performed our routine. I just knew we were going to win, I could feel it.”

Sunday, November 11, 2012

மைக்கல் ஜக்சன் -ஹாட்லி கல்லூரி லண்டன் இராப்போசன விருந்தில்-வீடியோ


 10.11.12  அன்று நடைபெற்ற ஹாட்லி கல்லூரியின் இராப்போசன விருந்தில் அமெரிக்காவில் இருந்து பேராசிரியர் தேவநாயகமும் இலங்கையில் இருந்து தற்போதைய ஹாட்லி கல்லூரி அதிபர் தெய்வேந்திர ராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் .

25 வருடங்களின் பின்னர் எனது நெருக்கமான வகுப்பு தோழன் முரளிதரனை (நெல்லியடி முரளி ) சந்திக்கும் சந்தர்ப்பம்இந்த வைபவத்தின் மூலம் கிடைத்தது.


அவனது மகன் மைக்கல் ஜக்சன் போல ஆடி அங்குள்ளோர் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தான் ..வலைபதிவர் வந்தியதேவன் அல்லது மயூரன் பேரி என்பவரை சந்திக்க கிடைத்தது....மேலும் பல காலம் சந்திக்காத நண்பர்களை கண்டு களிக்க களம் அமைத்து கொடுத்தது இந்த இராப்போசன விருந்து.

Friday, November 09, 2012

Wednesday, November 07, 2012

Tuesday, November 06, 2012

கமல் எழுதி பாடிய கானா கவி கேளுங்கோ-வீடியோ

எம் ஆர் ராதாவின் இந்திய நடனம் Vs ஆங்கிலேய நடனம்-வீடியோ

Tuesday, October 30, 2012

சூறாவளியினால் நியூயோர்க் தெருக்களில் சுறாக்கள் ,,-வீடியோ


america puyal by w3tamilan

Thursday, October 25, 2012

இந்திய சினிமாவின் நூறு வருடங்கள் -வீடியோ

ஓரு கம்னீயூசிய போராளியின் அரசியல் நினைவுகள்-வீடியோ

Friday, October 19, 2012

குத்து விளக்கு-70 களில் வந்த இலங்கை தமிழ் திரைபடம் -வீடியோ

70 களில் வெளியான குத்து விளக்கு திரைபடத்தை பார்க்க இங்கே அழுத்தவும்


குத்துவிளக்கு (திரைப்படம்) -Srilankan Film 1972
--------------------------------------------------------------------------------­---------------
குத்துவிளக்கு 1972ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படம் ஆகும். பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ்.ரத்தினம், எஸ். ராம்தாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள். டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார். அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.

இயக்குனர் டபிள்யூ. எஸ். மகேந்திரன்
தயாரிப்பாளர் வீ. எஸ். துரைராஜா
கதை வீ. எஸ். துரைராஜா
நடிப்பு ஆனந்தன்
ஜெயகாந்த்
லீலா நாராயணன்
பேரம்பலம்
யோகா தில்லைநாதன்
எம். எஸ். ரத்தினம்
எஸ். ராம்தாஸ்
சிசு. நாகேந்திரா
இந்திராதேவி
திருநாவுக்கரசு
நடராஜன்
பரமானந்த
ஸ்ரீசங்கர்

இசையமைப்பு ஆர். முத்துசாமி
ஒளிப்பதிவு டபிள்யூ. எஸ். மகேந்திரன்
விநியோகம் வீ. எஸ். ரி. பிலிம்ஸ்
வெளியீடு 1972
நாடு இலங்கை
மொழி தமிழ்
திரைக்கதை ஈழத்து இரத்தினம்


*குத்துவிளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது.

----------------------------------------------------------------------------------------------------


இந்த திரைபடத்தை பற்றிய எனது நினைவு குறிப்புகள் சிலவற்றை சொல்ல முடியுமென்றால் ...இத்திரைபடத்தில் அதிகமான வீட்டு காட்சிகள் வடமராட்சியிலுள்ள ஓராங்கட்டை என்ற இடத்தில் படமாக்கபட்டிருந்தது

இது நடித்த கதாநாயகி லீனா நாரயாணன் தென்னிந்திய கதாநாயகி மாதிரி இருப்பதாக பலராலும் விதந்துரைக்கப்பட்டது .

வல்லிப்புர கோவில் பகுதிகளில் படமாக்க பட்டது ...அதிக மணல் திட்டுக்கள அப்போது இருந்ததை காணலாம். மீன் விற்கும் பெண்கள் தலையில் மீன் கூடையுடன் ஒரு வித பாவனை ஓட்டத்துடன் ஓடுவது வழமை அந்த காட்சியை இந்த படத்தில் காட்டும் பொழுது ஒரு கேலித் தனமான இசை இசைக்க பட்டமையால்  அப்பொழுது ஒரு சர்ச்சை எழும்பி அடங்கியது நினைவுக்கு வருகிறது

யாழ்ப்பாணத்தில்  பாரம்பரிய முறையில் அப்பம் சுடும் முறை  இதில் இப்பொழுது பார்க்கும் பொழுது நினைவுகள் திரும்பு கின்றன்

இத்திரைபடத்தை பாரக்க பொழுது 70 களின் ஞாபகத்தை ஓரளவு கொண்டு வர முயற்சிக்கலாம்

Tuesday, October 16, 2012

சக வலை பதிவர் விசரனின் பேட்டி லண்டன் தொலைக்காட்சியில்-வீடியோ


விசரன் என்ற புனைபெயரில்  அவர் வலைபதிவு வைத்திருந்த தருணத்தில் சில காலங்களுக்கு முன்பு லண்டனில் தற்சயலாக சந்திக்க நேர்ந்தது.அப்பொழுது ஒரு பதிவு போட்டிருந்தேன் .அந்த பதிவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தி பார்க்கவும்

Sunday, October 14, 2012

20 வருடங்களாக தொலைந்த 95 வயது தாயும் 65 மகனும் சந்தித்த பொழுது-வீடியோ


கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித் தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம் பெற்றுள்ளது.


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்தஈஸ்வரன் (வயது65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.
ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்தஈஸ்வரனுக்குத் தெரியாது.
இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.
பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்தஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.
நன்றி-ஈழநாதம்

Monday, October 08, 2012

''just for laughs '' போல தமிழில் ஒரு நிகழ்ச்சி -வீடியோ

Monday, October 01, 2012

புலம் பெயர் தமிழ் குஞ்சுகளின்.. ஓட்டை உழுந்து வடை -வீடியோ

மேலே உள்ள பாடல் லண்டன் குட்டி hari யின் உடையது .நகல் வடிவம் ...

 

கீழே அந்த பாடலின் அசல் வடிவம்

நடிகர் திலகம் சிவாஜி பெண் வேடத்தில் -வீடியோ

Saturday, September 29, 2012

கூடங்குளம் ;.. சூப்பர் குறும்படம்;... கூடங்குளம் ;-வீடியோ

Tuesday, September 25, 2012

இணைய தமிழும் இந்த ஜெர்மானிய பெண்மணியும்-வீடியோ

Saturday, September 22, 2012

இப்ப இல்லை அப்ப ...கமல் மற்றும் சினிமா பிரபலங்கள்-வீடியோ

Thursday, September 20, 2012

இயேசு பற்றிய தற்போதைய கிசு கிசு-வீடியோ


ஏசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், ஏசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ஏசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்டு அவர் கூறியதாவது:-


மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப்படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஏசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.

பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், ஏசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் ஏசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.


ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று ஏசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்துப்படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும், அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்

ஏற்கனவே மேரி மெகதலீனும், ஏசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது 'தி டாவின்சி கோட்' நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் மேரி மெகதலீன், ஏசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.

மேரி மெகதலீன் ஏசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் ஏசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து ஏசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய்விட்டனர். ஜான் மட்டுமே இருந்தார். மேரி மெகதலீனும் அவருடன் இருந்தார்.

இதேபோல ஏசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன்.

இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


நன்றி -மாலை மலர்

Saturday, September 15, 2012

தமிழகத்திலும் அடிமைகளாவுள்ள ஈழத் தமிழர்கள் -வீடியோ

Thursday, September 13, 2012

ஆஸி செல்லும் இலங்கை BOAT PEOPLE பற்றிய விவரணம் -வீடியோ

Monday, September 10, 2012

இந்த தெரு குழந்தை தொழிலாளி ..பள்ளிக்கு சென்றிருந்தால்-வீடியோ

கூடங்குளத்தில் போலீஸ்- நிராயதபாணிகள் மீது தாக்குதல் -வீடியோ

Sunday, September 09, 2012

பனை மரங்களும் சில அடையாளங்களும்-வீடியோ

Tuesday, September 04, 2012

அப்பாவி சிங்களவர் மீது வீர்ம் காட்டும் தமிழக அரசியல் கட்சிகள் சில-வீடியோ
அப்பாவி சிங்களவர் மீது தமிழ் வீரம் காட்டி என்ன பயன்? ...77, 83 கலவரங்களின் பொழுது ஒட்டு மொத்தம் சிங்களவனும் எதிரியாக இருந்திருந்தால் ..ஒரு தமிழனும் வடக்கு கிழக்குக்கு பத்திரமாக திரும்பி வந்திருக்க முடியாது . இந்த வீடியோவில் ஒரு சிங்கள பெண் அழுது கொண்டு குமிறுகிறாள் . உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று ...அந்த கேள்வி நியாயமாகாதானே படுகிறது .சிங்கள் பேரினவாத அரச யந்திரம் செய்யும் தவறுகளுக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?

Saturday, September 01, 2012

ஒரு கேரள பெண்ணும் ..ஏமாற்றப்பட்ட சென்னை இளைஞர்களும் -வீடியோ

solvathellam by msmorethan143
solvathellam 2 by msmorethan143

தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார்.

இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது.

சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சஹானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக பலர் புகார் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சஹானாவைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.-நன்றி- வீரகேசரி

Friday, August 31, 2012

.சிறீதேவி vs ஆங்கிலம் -வீடியோ

Tuesday, August 28, 2012

மதுரையில் அகப்பட்ட ஆதி மனிதன் விருமாண்டி-வீடியோ

Monday, August 27, 2012

நோய் தீர்க்கும் எளிய முறை உடற் பயிற்சி -வீடியோ

நன்றாக தமிழ் பேசும் யப்பானியர் -வீடியோ

Thursday, August 23, 2012

சித்தர்களின் மனோவசியக் கலை (HYPNOTISM AND MESMERISM)- வீடியோ

Wednesday, August 22, 2012

(MADRAS DAY-22 AUGUST)-மட்ராஸ்.. இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லை-வீடியோ

Tuesday, August 21, 2012

ஹிந்து ராம் ..புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சையில்-வீடியோ

Monday, August 20, 2012

யாழ்ப்பாணத்தின் சின்னம் பனையாம்-வீடியோ

Wednesday, August 15, 2012

ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்.. கண் திறந்தோம்-வீடியோ

Tuesday, August 14, 2012

ஜெயமோகனின்-யானை டாக்டர் (சிறுகதை ) ஒலி வடிவம்-வீடியோ

Sunday, August 12, 2012

டெசோ நாடகத்தின் ஆரம்ப நிகழ்வு ஆரம்பம்-வீடியோ

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120812_voxonteso.shtml டெசோ மகாநாடு குறித்து வட இலங்கை மக்கள் அதிருப்தி -பிபிசி தமிழ்

Monday, August 06, 2012

இணைய தளம் தொடர்பாடலில் முக்கிய சாதனம்-வீடியோ

Saturday, August 04, 2012

தடி ஊன்றி பாய்ந்து(pole vault) சாதனை படைக்கும் 90 வயது தாத்தா-வீடியோ

Tuesday, July 31, 2012

இப்படியே விட்டால் சாமி குத்தமாயிடும் .என்று வீறு கொள்ளும் இவர்கள்-வீடியோ

மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.

இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.

மீடியா கேமராமேனும் உடந்தையா...?

இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.

;நன்றி-

http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html

Saturday, July 28, 2012

மூன்றாம் உலக போர் புத்தக வெளீயீட்டு விழாவில்-வீடியோ

moondram by rakshidha
moondram_0 by rakshidha
moondram 4 by rakshidha

லண்டன் ஒலிம்பிக் -ஆரம்ப வைபவத்தில் -வீடியோ

லண்டன் ஒலிம்பிக் தொடக்க வைபவத்துக்கு எலிசபத் மகாரணியை ஜேம்ஸ் பொன்ட் ஹெலிகொபடரில் அழைத்து வந்து ஹெலிகொப்டரிலிருந்தே பாரசூட்டில் இருந்து குதித்து வைபவ இடத்துக்கு வந்த மாதிரி காட்டி இருக்கினம் ....கீழே பாருங்கோ ...ஹி ஹி

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 23 , 1983 அன்று -வீடியோ

Sunday, July 22, 2012

எங்கள் காலத்துக்கு அழைத்து சென்ற நிகழ்ச்சி-வீடியோ

Friday, July 20, 2012

இவ லண்டன் ரமணி அம்மாளோ?

Monday, July 16, 2012

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் (தமிழில்) -வீடியோ

Sunday, July 15, 2012

தோழர் சண்முகதாசன் அவர்களைப் பற்றிய விவரண படம்

யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 1943 இல் பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு (A Marxist looks at the History of Ceylon) என்ற நூலை எழுதினார்.

Friday, July 13, 2012

தாங்கள் கலாச்சார காவலர்களாம் ..இந்த.கேடு கெட்டதுகள் .ச்சீய் -வீடியோ

Friday, July 06, 2012

சேதுராமன் -பொன்னுச்சாமி -தெட்சாணாமூர்த்தி(நாதஸ்வரம் -தவில்)-வீடியோ

தில்லான மோகனம்மாள் திரைபடத்தில் பங்களித்தமையால் அந்த காலத்தில் சேதுராமன் பொன்னுச்சாமி இருவரும் இலங்கையில் பிரபலமாக அறியபட்டார்கள் .

. அதனால் அபபட வந்த காலத்துக்கு பின் யாழ் வடமராட்சி கரவெட்டியிலுள்ள ஏதோ ஒரு கோயில் (யாக்கரு விநாயகர் கோவில் அல்லது கிழவிதோட்ட பிள்ளையார் கோவில்) திருவிழாக்கு இவர்களை இந்தியாவில் இருந்து அழைத்ததாக சிறுவயது ஞாபக பதிவு சிறிதாக வந்து போகிறது . .

அத்தோடு அப்பொழுது இலங்கையில் மட்டுமின்றி இந்தியா மலேசியா போன்ற நாடுகளில் கூட பிரபலமாக இருந்த தவில் வித்துவான்தெட்சாணாமூர்த்தி அவர்கள் இவர்களுக்கு இணையாக தவில் வாசித்ததாக பேசி க்கொண்டார்கள்..


மேலே இணைத்த வீடியோக்களில் முதலாவதாக சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடையதும்

 இரண்டாவதில் தெட்சாணாமூர்த்தி

அவர்களினதும் மூன்றாவது சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடைய பங்களிப்புள்ள தில்லான மோகனாம்பாள் திரைபடத்தில் நாதரஸ்வரத்தில் மேல்நாட்டு சங்கீதத்தை பிரமாதமாக வாசிக்கும் காட்சிகளை காணலாம்

Thursday, July 05, 2012

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி புத்தகமாக -வீடியோ


இதில் தொடர்ந்து வரும் 14 வீடியோக்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலிவடிவத்தில் இருக்கின்றன

முத்துலிங்கம் அவர்களின் மிகுதி கதைகளை பார்க்க அழுத்தவும்மனப் பாடம் செய்வதையே கல்வியாக்கி ,,,பெறுபேறுகளேயே அறிவாக நினைக்கும் பள்ளிகள் (நீயா நானாவில் விவாதம்)-வீடியோ

Tuesday, July 03, 2012

இந்த குரங்கு செய்வதை மனித சேட்டை என்று அழைக்கலாமோ?

Monday, June 25, 2012

மென்பொருள் செய்யும் தொழிலாளி ..மூளையை விற்கும் தினக் கூலி-வீடியோ

இந்த பாடலை பாடி கொண்டு இருப்பவர் சக வலைபதிவர் மயூரன்

தொங்குது தோளில் மடிக்கணினி - செவித்
துளையில் வெள்ளை இசைக்கொழுவி
பிந்திவந்த புதுச் செல்பேசி - கையில்
புதுத் தொடுதிரைத் தாள்கணினி

சந்தைக்கு என்றைக்கும் மின்னணுப் பண்டங்கள்
வந்ததும் வாங்கிச் சுமந்திடும் பாவி

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவள்
மூளையை விற்கும் தினக்கூலி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவன்
மூளையை விற்கும் தினக்கூலி

ஆறு இலக்கத்தில் கூலிகள் வாங்கிடும்
பேறுகள் பெற்ற பெரும் படிப்பாளி

வாட்டிடும் வெயில் தெரியாது - சும்மா
குளு குளுக் குளிர்க் காற்றுவரும்
நாட்டின் வறுமை புரியாது - பள
பள பளத்திடும் வேலைத்தலம்

ஆட்குறைப்புப் பற்றி மேலிடம் சொன்னபின்
நாட்களை எண்ணக் குளிரிலும் வேர்க்கும்

கால்களிருப்பது உள்நாட்டில் - அவர்
மூளை வசிப்பது மேல்நாட்டில்
வாழ்வு தினப்படிச் சம்பளத்தில் - முத
லாளி நினைப்படி உள்மனத்தில்

நடப்பு நிலத்தில் நினைப்பு வானத்தில்
கிடக்கு வாழ்க்கை அந்தர மாயத்தில்

தேயிலைத்தோட்டத் தொழிலாளி - அவர்
நீதிக்குப் போரிடச் சங்கம் உண்டு
ஆடைத்தொழிற்றுறை ஊழியரும் - தொழில்
உரிமை கேட்டார் ஒன்றுபட்டு

நாயென மென்பொருட் கூலிகள் கெஞ்சுவர்
HR ஆண்டையின் காலைத்தொட்டு

நீயும் உழைக்கும் உழைப்பாளி - உண்மை
நினைத்துப் பார்த்தே ஒன்றுபடு
ஓய்வையிழந்த உன் உழைப்பைத் திருடி
உறிஞ்சுவதார் சிந்தித்திடு

உன்னையும் என்னையும் சுரண்டும் அமைப்பை
உடைத்து மாற்றிட வந்துவிடு

மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
உழைக்கும் மக்களின் கூட்டாளி
மென்பொருள் செய்யும் தொழிலாளி - இவர்
மனசு வைத்தால் போராளி

புதிய பூமியை புதிய நீதியை
படைத்திட வா போராடி..

Wednesday, June 20, 2012

கொழும்பில் நடந்த உலக தமிழ் இலக்கிய மகாநாடு 2012-வீடியோ

Monday, June 18, 2012

இளையராஜா -M.I.A-- இரு தமிழர்களின் பாடல்கள் ஒலிம்பிக் தொடக்க விழாவில்?-வீடியோ

லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி.
அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன.
பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.


கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' என்ற படத்தில் வரும் பாடல் இது.
சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.

ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.


இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மிலியனேர்” போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.

அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான “ பேப்பர் ப்ளேன்ஸ்”, (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து.

உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

;நன்றி -பிபிசி தமிழோசை

Sunday, June 17, 2012

சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்த நிகழ்ச்சி ஒன்றில்-வீடியோ

Friday, June 15, 2012

டிவி நிகழ்ச்சி மூலம் தெரியவந்த மறைக்கப்பட்ட மூன்று கொலைகள்-வீடியோ


தொடர்ச்சியாக நான்கு வீடியோ கிளிப்பக்களையும் இதில் பார்க்கலாம்

இவை பற்றி லண்டன் daily mail இல் வந்த செய்தியை அழுத்தி பார்க்கவும்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூன்றுபேரை கொலை செய்து புதைக்கப்பட்ட விவகாரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர்களது எலும்புக் கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்,42; தச்சுத் தொழிலாளி. இவரது மகள் லாவண்யா,19. சேகருடன் பணிபுரிந்த சிலம்பரசன்,27, என்பவருக்கும், லாவண்யாவிற்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த 2008ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
புகார்: பின் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள லாவண்யாவின் உறவினர் முருகன்,45, என்பவரின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். தகவலறிந்த சேகர் கடந்த 2009ம் ஆண்டு எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்றார். பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது கணவர் மற்றும் மகளை காணவில்லை என்று நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் சேகரின் மனைவி ஜீவா புகார் அளித்தார். இந்நிலையில் முருகன் மகள் பார்கவி,20, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சதீஷ் என்பவரை கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தார். இதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தங்கள் காதல் விவகாரம் பற்றி பேட்டி அளித்தனர். பின் முருகன், அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்ற போது, பார்கவி தனது தந்தை முருகன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆதரவு தேடிவந்த மூவரை கொலை செய்ததாகக் கூறினார். அதனை தொடர்ந்து, 29ம் தேதி நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.
மண்டை ஓடு: இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சேகர், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் ராஜேந்திரன், வி.ஏ.ஓ., முத்தையன் முன்னிலையில் முருகன் வீட்டின் அருகே பார்கவி அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் மூலம் தோண்டினர். மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைந்து கிடந்த இருவரது மண்டை ஓடுகளும், உடல் எலும்புகளும் கிடைத்தன. மாலை 5 மணிக்கு முருகன் வீட்டின் அருகே மற்றொருவரது எலும்புத் துண்டுகள் கிடைத்தன. முருகன் வீட்டின் மண் புதரிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகள் சேகர், லாவண்யா, சிலம்பரசன் ஆகியோரின் சடலங்களாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விழுப்புரம் டி.ஐ.ஜி., சண்முகவேல், எஸ்.பி., பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய மனித எலும்புகளை சென்னையில் உள்ள மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். மூன்று பேரை கொலை செய்து புதைத்து விட்டு அங்கேயே குடும்பம் நடத்திய முருகன், திடீரென தலைமறைவான சம்பவம் எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: டி.ஐ.ஜி., சண்முகவேல் பேட்டி: டி.ஐ.ஜி., சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண், கடந்த 1ம் தேதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர், மகளை காணவில்லை எனக் கூறியிருந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இவரின் கணவர், மகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் என்பவரின் வீட்டு முன் புதைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. முருகன் வீட்டு முன் தோண்டப்பட்டதில், சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த எலும்புகளை மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, காணாமல் போனவர்களதுதானா என்பது உறுதி செய்யப்படும். அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்கும் தாலுகா போலீசார் குற்றவாளியை கூடிய விரைவில் கண்டுபிடித்து கைது செய்வர். இவ்வாறு சரக டி.ஐ.ஜி., சண்முகவேல் கூறினார்.
மகள் ஆவேசம்: தனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்து, புதைத்த இடத்தை பார்கவி, போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இறந்தவர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தவுடன், பார்கவி, ஆதங்கத்துடன் போலீசாரிடம் கூறுகையில், "ஆரம்பத்தில், எனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்ததாக நான் கூறியதை யாரும் நம்பவில்லை. ஏற்கனவே நான் கூறியபடி தற்போது மூன்று பேரின் எலும்புகள் கிடைத்துள்ளன பார்த்தீர்களா... இப்போது நான் கூறியது உண்மை தான் என, நிரூபணமாகியுள்ளது' என்றார்.
நன்றி -தினமலர்

Thursday, June 14, 2012

கமலின் விஸ்வரூபம் பார்த்த பாலசந்தர்-வீடியோ

Tuesday, June 12, 2012

Sunday, June 10, 2012

பாதிக்கபட்டவரின் நேர்முகம் தமிழில்-Nithyananda Latest Sex Scandal 2012-வீடியோ


1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ

இந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற இன கலவரத்தின் பின் காமினி பொன்சேகா கதாநாயகனாக நடித்த இந்த படம் சிங்கள தமிழ் ஒற்றுமையை மையபடுத்தி எடுக்கப்படம் .

 .முதல் ஒரு திரைபட சூட்டிங்கை சிறுவயதில் பார்க்க கிடைத்தது என்றால் இந்த படத்தின் சூட்டிங் தான்.

.பாடலின் முடிவில் வரும் இந்து கோயில்  முன்னால் உள்ள கேணி யாழ்-வடமராட்சி பகுதியிலுள்ள கரவெட்டி நுணுவில் பிள்ளையார் கோவில்.

..இந்த படத்தின் அநேகமான காட்சிகள் யாழ்ப்பாணத்தில படமாக்க பட்டிருந்தன,


கரவெட்டியை சேர்ந்த முன்னாள வானொலி தொகுப்பாளர்  யோகா பாலசந்திரன் அவர்களால் இந்த திரைபடத்தின் தமிழ் பகுதிக்கு கதை வசனம் எழுதப்பட்டது

இந்த படத்துக்கான பாடல்களும் எழுதியுள்ளார்இந்த வீடியோ காட்சியில்  அந்த காலம் நெல்லியடியில் இருந்த சத்தியமூர்த்தி தவில் கோட்சியில் இருந்த ஒருவரையும்  நுணவில் பிள்ளையார் கோயில் ஜய்யரையும் என்னால் அடையாளம் காண முடிகிறது

Friday, June 08, 2012

நித்தியானந்தா மீண்டும் பாலியல் சர்ச்சையில்-வீடியோ


அண்மையில் கன்னட தொலைக்காட்சியில் நித்தியானந்தவின் பாலியல் தொல்லை பற்றி ஒரு பெண்ணின் பேட்டி வெளியானது ..அதை தொடர்ந்து நித்தியானந்தா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருந்தார் . அதில் நடந்த களேபரம் தான் மேலே பார்ப்பது

Tuesday, June 05, 2012

முட்டாள் பயல்கள்...இதுக்கு பெயர் பகிடி வதையாம்-வீடியோ

இலங்கை பல்கலைகழகமொன்றில் புதிதாக வந்த மாணவர்களை பழைய மாணவ மாணவிகள் பகிடி வதை (றாக்கிங்) என்ற போர்வையில் ஒரு வித குரூர மனப் பான்மையுடன் வரவேற்பதை மேலுள்ள வீடியோவில் காணலாம்

Monday, June 04, 2012

தமிழ் நடிகர்களின் சாதி பற்றிய கலந்துரையாடல் மாதிரியாம் -வீடியோ

Friday, June 01, 2012

ஒரு நூலகத்தின் கதை இது-வீடியோ

Wednesday, May 30, 2012

இலங்கை கடைசி தமிழ் அரசன் ராஜசிங்கனின் சிம்மாசனம் ,முடி -வீடியோ

இலங்கையை கடைசி வரை ஆண்ட கண்டி மன்னன் நாயக்கர் வழி வந்த தமிழ் அரசன் என்பது யாவரும் அறிந்ததே, மேல் இருக்கும் வீடியோவில் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் விக்கிரம ராஜசிங்கனின் சிம்மாசனம் முடி போன்றவற்றை பார்க்கலாம் . இதே நூதன சாலையில் முன்பு பார்க்கும் பொழுது ராஜசிங்க குடும்ப பெண்மணி ஒருவருடைய பெருவாரியாக ரத்த கறைகள் உள்ள மேல சட்டை ஒன்று இருந்தது. வெள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்டதாம்.இந்த வீடியோவில் அதை காணவில்லை எடுத்துவிட்டார்கள் போலும் நாகரிகம் கருதி..

Sunday, May 27, 2012

அப்பாடா ...பழையபடி நான் கறுப்பியானேன்-வீடியோ

பேராசிரியர் சிவத்தம்பி ..ஒரு மானுட ஆவணம் -வீடியோ

Friday, May 25, 2012

Che Guevara வின் வாழ்க்கை சரிதம் தமிழில் -வீடியோ

Thursday, May 24, 2012

இந்த பிரெஞ்சு பாடலை ரசிப்பதுக்கு மொழி தேவை இல்லை -வீடியோ

நூறுவருடங்கள் பத்து நிமிடத்தில்(1911-2011) -வீடியோ

நோர்வே பழங்குடி இசை ....இலங்கை தமிழர் மீது பழி ...தமிழ் திரைபடத்தின் திருட்டினால்-வீடியோ

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/220-2012/1257-2012-05-23-20-40-40

Friday, May 18, 2012

கார்ட்டூன் மதனிடம் -காலில் விழுவது எப்பொழுது ஆரம்பிக்க பட்டது? -வீடியோ

Wednesday, May 16, 2012

உலக கின்னஸ் சாதனை -90 வயதை கடந்த யோகா டீச்சரின் -வீடியோ

Tuesday, May 15, 2012

மூன்று வயது சிறுவனின் ஈவ் டீசிங்...இல்லை இது அதுக்கு மேலை-வீடியோ

Sunday, May 13, 2012

லண்டனில் நடைபெற்ற..ஆறா வடு நாவல் விமர்சன அரங்கில்-வீடியோ


ஆறாவடு நாவல் விமர்சன அரங்கு 12.05..12 லண்டனில் நடைபெற்றது..அதில் சில காட்சிகள் ..இதில் வலை பதிவர்களுமான முறையே சசீவன்,சயந்தன் உரையாற்றி இருந்தார்கள் அவற்றில் சில மணித்துளிகள்
http://www.youtube.com/embed/6VRbu4I9cWc?rel=0"

Tuesday, May 08, 2012

எந்த ஊரில் ..எந்த நாட்டில் எங்கு காண்போமோ?-வீடியோ

Monday, May 07, 2012

கே.பி சுந்தரம்பாள் -வாழ்க்கை குறிப்புக்கள் -வீடியோ

மூவினமும் ஒன்று சேர்ந்து.. ஒரே மலேசியா என்று பாடுகிறார்களாம்-வீடியோ

Saturday, May 05, 2012

கார்ல் மாக்ஸின் படைப்புகளுக்கு இப்ப புதிய மவுசு -வீடியோ

Wednesday, May 02, 2012

தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான எழுத்தோட்டம்-வீடியோ

Tuesday, May 01, 2012

தமிழ் சினிமா ஒன்றில் மே தினம் -வீடியோ

Monday, April 30, 2012

உழைக்கும் கைகளே ...உலகை புதிதாக உருவாக்கும் கைகளே-வீடியோ

Sunday, April 29, 2012

தமிழ் சினிமா -ஊமைப் படக்காலமும் பேசும் பட ஆரம்பமும்-வீடியோ

Saturday, April 28, 2012

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி -நவீன நாடகக் கலைஞன்-வீடியோ

Wednesday, April 25, 2012

எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய விவரண படம்-வீடியோ

Tuesday, April 24, 2012

Tuesday, April 17, 2012

பழம் பெரும் நடிகை பத்மினி அமெரிக்காவில் கொடுத்த பேட்டி -வீடியோ

Saturday, April 14, 2012

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ

டைட்டானிக் கப்பலினுள் -அகப்பட்ட உண்மை வீடியோ காட்சி -வீடியோ

Friday, April 13, 2012

ஹிப்னோடிசம் தமிழில் ஒரு அறிமுகம் -வீடியோ

Thursday, April 12, 2012

இந்த இசை மழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்-வீடியோ

Wednesday, April 11, 2012

பூமி அதிர்ச்சி -கொழும்பு இந்து சமுத்திரபிராந்தியத்தில் -சுனாமி எச்சரிக்கை -வீடியோ


கொழும்பு மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முழுக்க நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பாத்மென்கள் கட்டில்கள்,கதிரைகள் ஆடியதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்...சில இடங்களில் அலை பேசியும் வேலை செய்யவில்லை...தமிழ் நாட்டில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது...கொழும்பு மற்றும் சென்னையில் பல இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து கூட்டமாக வெளியே வந்து நிற்பதா சொல்கிறார்கள்..இலங்கை நேரம் இன்று நண்பகல் 2.15 மணியளவிலேயே இந்த சிறியளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...பயப்படும் படியாக் எதுவும் இல்லை என்றும் இலேசான நிலா நடுக்கம் என்றும் அறியப்படுகிறது...

அந்தமான் , நிக்கோபார் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது...

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட 8.9 அளவிலான பூமி அதிர்ச்சியின் தாக்கமே இங்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

எம்.ஜீ.ஆர் கட்டிலில்இருந்து கொண்டு ஜெயித்த விவரணம் -வீடியோ

Saturday, April 07, 2012

இலங்கை வானொலி புகழ் கோமாளிகள் திரைபட பாடல்கள் -வீடியோ


கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.
கீழே உள்ள வீடியோ துண்டத்திலுள்ளவை யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாரய்ச்சி மகாநாட்டில் அரங்கேற்றப்படது..இந்த வீடியோவில் கோமாளிகள் புகழ் மரிக்கார் ராம்தாஸ் உபாலி செல்வசேகரன் அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோர் பங்கு பற்றினர்

Tuesday, April 03, 2012

லண்டனில் ரஜனி காந்த் -வீடியோ

Monday, April 02, 2012

அறுசுவையுடன் சாப்பிடுங்க,,,உணவே மருந்து,,,என்று இவர் -வீடியோ

நாம் தண்ணீர் குடிக்கிறோம். தண்ணீர் குடிக்கும்போது இது கைக்காக அல்லது கழுத்துக்காக என்று தனியாகத் தண்ணீர் குடிப்பதில்லை. சாப்பிடுகிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகச் சாப்பிடுவதில்லை. உடல் முழுவதற்கும்தான் சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவம் மட்டும் கண்ணுக்கு என்றும், இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும், தலைக்கு என்றும் தனித்தனியாகப் பார்க்கிறோம். இது எப்படிச் சரியாகும்?'' என்று கேட்கிறார் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக "செவி வழி தொடு சிகிச்சை' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க தனது மருத்துவமுறையைப் பிரசாரம் செய்து வருகிறார் பாஸ்கர். ஹோமியோபதி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்துக்கான பட்டயப் படிப்பு முடித்தவர் பாஸ்கர். செவி வழி தொடு சிகிச்சை பற்றி கூட்டங்களில் பேசுவதோடு, அது தொடர்பான டிவிடிகளையும் வெளியிட்டு அச் சிகிச்சை
முறையைப் பரப்பி வருகிறார். அவரிடம் செவி வழி தொடு சிகிச்சையைப் பற்றிக் கேட்டோம்.

""நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப் போவது ஒரு காரணம். ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம்.
நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.
இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானாகவே சரியாகிவிடும்.

அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துகளைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.
அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கும் என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழி தொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை எப்படி அளிப்பது?
நாம் உண்ணும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும். அப்படியானால் எதை உண்ணுவது? எப்படி உண்ணுவது?
முதலில் பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.

அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும்.
வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.
உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.
தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.
எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். இதுதான் நான் கூறும் எளிய மருத்துவமுறை.
உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிறுவயது முதல் தீராத தலைவலி, உடலெங்கும் புண்கள், வயிற்று வலி, மலச் சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்; எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நொந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டேன். உடல் நோய் காரணமாக எந்த இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அதன் பிறகு, நானே எனக்குச் செய்து கொண்ட மருத்துவம்தான் இது.
ஆனால் வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக் கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரி செய்ய முடியும்'' என்றார்.


(நன்றி -தினமணி )Sunday, March 25, 2012

நித்தியானந்தாவின் பில்டப்பும் பீலாவும் அதற்கான காமடி பதிலும்-வீடியோ

Friday, March 23, 2012

குயிலின் பயணம் முடிவுற்றது -அஞ்சலி கே.எஸ் ராஜாவுக்கு செலுத்திய பொழுது-வீடியோ


பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்
நன்றி- தமிழ்மிரர்.

Wednesday, March 21, 2012

கையால் ஊட்டி விட்ட நோர்வே இந்தியா சர்ச்சை-வீடியோ

நார்வேயில் வாழுகின்ற இந்திய பெற்றோர் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு விவகாரம் இருநாட்டு அதிகாரிகளிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
நார்வேயில் இப்போது அந்நாட்டு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் இருக்கின்ற இரண்டு குழந்தைகளையும் எப்படியாவது கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை
இந்தக் குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர் போதுமான கரிசனையைக் காட்டவில்லையென்ற குற்றச்சாட்டில் நோர்வே அரசின் குழந்தைகள் நலன்புரிப் பணியகம் குழந்தைகளுக்கான பராமரிப்பை பொறுப்பேற்றது.
ஆனால் தாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று வாதிடுகின்ற குழந்தைகளின் பெற்றோர், கலாசார ரீதியான வேறுபாடுகளே இந்தப்பிரச்சனைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகளுக்கு கைகளால் உணவூட்டுவதும், குழந்தைகளை பெற்றோருடனேயே படுக்கவைப்பதும், குழந்தைகள் அழும்வேளைகளில் தாய்ப்பால் கொடுப்பதும் இந்திய பின்புலங்களில் வளரும் குடும்பங்களில் நிலவும் வழக்கம் என்பதை நோர்வே குழந்தைகள் நலன்சார் அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது இந்தியப் பெற்றோரின் வாதம்.
ஆனால், குழந்தைகள் பராமரிப்பில் இந்தப் பெற்றோர் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பராமரிப்பை தாங்கள் பொறுப்பேற்க நியாயமான காரணங்கள் இருந்தன என்றும் பிபிசியிடம் பேசிய நார்வே ஸ்டேவேஞ்சர் நகரிலுள்ள சிறார் பாதுகாப்பு பணியகத்தின் தலைவர் கன்னர் டொரேஸன் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் இந்திய ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டுள்ளதுடன் ஆத்திரம் கலந்த கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த விவகாரம் குறித்து தாங்கள் ஒரு இணக்கப்பாடான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று கூறியிருந்தார்.
முன்னதாக, பெற்றோரின் உறவினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலைச் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவும்படி கோரியிருந்தனர்.
மூன்று வயதான அபிக்ஞான் பட்டாச்சார்யா மற்றும் அவனது ஒருவயது தங்கை ஐஸ்வர்யா ஆகியோர் இப்போது நார்வேயிலுள்ள குழந்தைகள் காப்பக இல்லத்தில் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக ஆஸ்லோவிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.
எனினும் அவர்கள் சொந்தப் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்தியா நார்வேக்கு எடுத்துக்கூறியுள்ளது.

Thursday, March 15, 2012

மூன்று வயது குழந்தை சொல்லும் திருக்குறளும் தமிழ் மாதங்களும்-வீடியோ

Thursday, March 08, 2012

Battle of The North 1980- யாழ் மத்திய கல்லூரி Vs யாழ் சென் ஜோன்ஸ் BIG MATCH -வீடியோ

பீடியில் பெண்களின் வாழ்க்கை -வீடியோ

Tuesday, March 06, 2012

சராசரி அமெரிக்கர்கள் இவ்வளவு முட்டாள்களா?

Friday, March 02, 2012

மெதுவான அசைவு- நிஜமும் நிழலும்-வீடியோ

Thursday, March 01, 2012

நான் உலகம் ..தொழிலாளி.. ..நானே உலகம் -வீடியோ

Wednesday, February 29, 2012

புதிய தலைமுறை டிவியில் விவாதம் -ஜெனிவா மனித உரிமை மாநாடு பற்றி -வீடியோ

Tuesday, February 28, 2012

அறிவியல் தமிழை எளிமை படுத்தியவர் இவர் -வீடியோ

writer sujatha from guru on Vimeo.

Friday, February 24, 2012

எம்ஜியாரின் பகுத்தறிவு கதாபிரசங்கமாம் -வீடியோ

Wednesday, February 22, 2012

என்னத்தை சொல்லுறது ......சினிமா மோகத்துக்கு ஒரு அளவில்லையே- வீடியோ

Friday, February 17, 2012

தொலைந்து போகுமோ தூர தேசத்தில்-வீடியோ

Wednesday, February 15, 2012

உடனடி ஆனந்தம் தரும் சத்தம்-வீடியோ

Monday, February 13, 2012

உலக மொழியாம் இது? -யாழ் மற்றும் மலேசியாவிலிருந்து-வீடியோ

கீழே இருப்பது யாழ்ப்பாணத்திலிருந்து

கீழே இருப்பது மலேசியாவிலிருந்து

Saturday, February 11, 2012

வட துருவ எக்ஸீமோவரின் பனி வீடு லண்டனிலும் -வீடியோ


லண்டனில் அண்மையில் பெய்த ஸ்னோ மூலம் சிறுசுகள் கட்டிய பனிவீடு தான் மேலே பார்ப்பது .வடதுருவ எக்சீமோவர் மட்டும் தானா ஸ்னோ வீடு கட்டுவார்கள் நாங்கள் கட்டுவோம் என்று கட்டிக்காட்டிய சிறுசுகள்

Tuesday, February 07, 2012

சாரு நிவேதிதா-எக்ஸைல் விமரிசனக் கூட்டம்-வீடியோ

Sunday, February 05, 2012

TOOTING BROADWAY -பிரித்தானிய தமிழர்- முழு நீள ஆங்கிலப் பட முன்னோட்டம் -வீடியோ

Friday, February 03, 2012

ரஜனியின் தெலுங்கு -தெய்வம் தந்த வீடு வீதியில் இருக்கு -வீடியோ


அவள் ஒரு தொடர்கதை என்ற பாலசந்தர் படத்தில் ஜெய் கணேஸ் நடித்த வேடத்தை தெலுங்கில் ரஜனி காந்த் நடித்திருந்தார் .ஜெய் கணேஸ் நடித்த பாடல் தெய்வம் தந்த வீடு ...அந்த தெலுங்கு பாட்டுக்கு ரஜனி நடிப்பது தான் மேலே நீங்கள் பார்ப்பது...

Thursday, February 02, 2012

எழுத்தாளர் எஸ் .ரா வின் விழாவில் ரஜனி -வீடியோ

Wednesday, February 01, 2012

விஜயகாந்த் Vs ஜெ,, பைட் தமிழ்நாட்டு சட்டசபையில் -வீடியோ

Tuesday, January 31, 2012

நரகத்துக்கு கூட்டி வரப்பட்டவர்கள் -வீடியோ

Monday, January 30, 2012

சக வலைபதிவர் நண்பர் கலையரசன் லண்டனில்-வீடியோ

இன்று சக வலைபதிவர் கலையரசனின் புத்தக வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது. அவர் எழுதிய தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா என்ற புத்தகத்தின் மேல் அங்கு வைத்த விமர்சன உரைகளுக்கு பதில் அளித்து கலையரசன் பேசிய வீடியோ காட்சியே மேலே உள்ளவை

Friday, January 27, 2012

சூப்பர் கிளாமாக்ஸ்-வீடியோ

Thursday, January 26, 2012

நீயா நானா --தனிபர் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக இருக்க முடியாது-வீடியோ

Tuesday, January 24, 2012

சினிமாவுக்கு போகலாம் வாங்க -வீடியோ

Monday, January 23, 2012

சார் ...அடி வாங்காத குறை ஒன்று தான் தப்பீட்டீங்க -வீடியோ

கம்யூனிஸியமும் அது தான் -கமலஹாசன் -வீடியோ

Sunday, January 22, 2012

தற்போதைய பொருளாதர நெருக்கடி..முதலாளித்துவத்தின் தோல்வி- ஒலி வடிவம்

Tuesday, January 17, 2012

டயானாவின் ஆவியாம் ...இங்கை ஜரிஎன்லை கூட சொல்லுறாங்கள்-வீடியோ

Sunday, January 15, 2012

பாகிஸ்தானியர் தேடும் ஜனநாயகம் -கொலை வெறி பாடல் மூலம் -வீடியோ

ஜரோப்பியரின் ஆசியாவின் ஆனந்த பூமியாம் -வீடியோ

எதுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லணும்? சமூக அக்கறையற்ற சமூகத்துக்கு -வீடியோ

Friday, January 13, 2012

எழுத்தாளர்கள்- 35 வது சென்னை புத்தக கண்காட்சியில் -வீடியோ

Wednesday, January 11, 2012

அம்மாவென்றால் சும்மாவா.?..நக்கீரன் பதை பதைத்த அந்த நிமிடங்கள்-வீடியோ

Tuesday, January 10, 2012

Monday, January 09, 2012

சமூக வலை தளங்களுக்கு கட்டுபாடு அவசியம் (ஒரு விவாதம்)-வீடியோ

Saturday, January 07, 2012

நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல் -வீடியோ

Tuesday, January 03, 2012

கண் சிவந்தால் மண் சிவக்கும் (,குருதிப் புனல் நாவல் மூலம்?) (full movie) -வீடியோ

இந்த திரைப்படம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை அடிப்படையாக கொண்டதாய் இருக்க வேணும் .குருதிப்புனல் நாவல் கீழ்வெண்மணி சம்பவத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட நாவல் என கூறப் படுகிறது

Sunday, January 01, 2012

கொலை வெறி டா -இது யாழ்ப்பாணத்தில் இருந்து என்றினம்-வீடியோ

2012 -வாண வேடிக்கையுடன் லண்டனில் -வீடியோ